Tuesday, September 18, 2012

உங்களை வேலையிலிருந்து தூக்கப்போவதற்கான அறிகுறிகள்


"Hire and Fire"  
வேலை கொடுப்போம் - 
வேலையிலிருந்து நீக்குவோம் - 
என்ற கொள்கையைப் பின்பற்றும் 
அமெரிக்கா மற்றும் 
ஐரோப்பிய நாடுகளில் வேலைபார்க்கும் 
நபர்களுக்காக எழுதப்படுகிற 
கட்டுரை இது. 
இந்தியாவிற்குப் பொருந்தாதா?
என்ற கேள்வி எழலாம். 
ஆனால் இந்தியா 
ஒரு "Hire only" நாடாச்சே
"Fire"  பண்ணுவது என்பது 
எப்போதாவது நடக்கும் 
அதிசய நிகழ்ச்சி அல்லவா?

எப்படியோ"அவரைப் பிடிச்சு
இவரைப் பிடிச்சு 
வேலையை வாங்கிவிட்டால் 
(குறிப்பாகசர்க்காரிலோ,
தொழிற்சாலையிலோ) 
ரிடயர் ஆகும்வரை நிம்மதியாகக் 
காலத்தைக் கடத்திவிடலாம். 
வேலையை விட்டுத் தூக்கிவிடுவார்கள் 
என்ற பயமே இல்லாமல்
அவரவர்கள் தொழில் தர்மத்தை 
நடத்திக்கொள்ளலாம். 
ஏதாவது தப்பு-தண்டா 
பண்ணி மாட்டிக்கொண்டால் 
(operative word -மாட்டிக்கொண்டால்) 
மிஞ்சிமிஞ்சி ஒரு 
தண்ணி இல்லாத காட்டிற்கு  
மாற்றப்படுவார்கள். 
இந்தக் காலத்தில் அது ஒரு 
தண்டனையாகவே கருதப்படுவதில்லை. 
ஏனெனில்எல்லா இடங்களுமே 
தண்ணி இல்லாதக் காடாகத்தானே 
இருக்கிறது! 
புது மொழியில் சொல்ல வேண்டுமானால் 
வசூல் வராத,பண்ண முடியாத 
இலாகாவுக்கு மாற்றல் செய்யலாம்.
தொழிற்சாலைகளைப் பற்றிக் 
கேட்கவே வேண்டாம். 
முதலாளிக்குத் தொழிற்சாலையை 
ஆரம்பித்து நடத்துவதுதான் வேலை. 
நஷ்டம் அடைந்து தொழிலை மூடலாம் 
என்று அவர் நினைத்தால் அது 
மகா பெரிய தேசத் துரோகமாகக் 
கருதப்படும்.
இப்படி  Hire only -No Firing 
என்ற கொள்கையைத் 
தொடர்ந்து ஆதரிக்கும் நாட்டில் 
யாரைஎப்படி வேலையை 
விட்டுத் தள்ளுவது
வேலை போய்விடும் என்ற 
பயமில்லையானால்
accountability - கடமை உணர்ச்சி 
எப்படி வளரும்?
மேல் நாடுகளில் நிலைமை வேறு.