Tuesday, December 18, 2012

‘ஜென்டில்மேன்’ ஆவது எப்படி?


                
இதற்கு விடை தேடும் முன் 
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.

யார் ஜென்டில்மேன்?’
ஜென்டில்மேன் பற்றிய விளக்கத்தை 
இரண்டு கோணங்களில் அணுகலாம். 
ஒன்று - "இது இல்லை, அது" என்ற 
தத்துவ ஆசிரியர்கள் அணுகும் முறை. 
அதாவது
இந்த மாதிரி குணங்கள் உள்ளவர்கள்
ஜென்டில்மேனாக இருக்க மாட்டார்கள்’ 
என்ற விளக்கம். 

இரண்டாவது
பாஸிடிவ்வாக
ஜென்டில்மேன் என்பவர்கள்
"இப்படித்தான் நடந்துகொள்வார்கள்" 
என்ற விளக்கம்.
முதலாவது விளக்கத்தைத் 
தினசரி வாழ்க்கையில் 
அன்றாடம் சந்திக்கிறோம். 
இதோ சில காட்சிகள்.

சீன் 1:
வீட்டு டைனிங் டேபிளில் - 
சாப்பாட்டு நேரம். 
எல்லோரும் சாப்பிட 
உட்கார்ந்திருக்கிறார்கள். 
மகன், வாயில் உணவை வைத்துக்கொண்டு 
அதிகார தோரணையில் சத்தம்போட்டு 
ஏதோ உத்தரவு போடுகிறான். 
மகள் செல்போனில் யாருடனோ 
இரைந்து பேசிக்கொண்டு 
சாப்பாட்டில் அரைகுறை கவனத்தோடு 
செயல்படுகிறாள். 
அப்பாக்காரர் ஏதோ தீவிரமாக 
ஆபிஸ் பேப்பரில் மூழ்கியிருக்கிறார். 
அம்மாக்காரிக்குக் 
கோபம் பொத்துக்கொண்டு 
வருகிறது. கத்துகிறாள். 
"இது என்ன சாப்பாட்டு இடமா
சந்தைக் கடையா
மகனே, உனக்கு manners இல்லையா
எத்தனை தடவை சாப்பாட்டை 
வைத்துக்கொண்டு பேசாதே 
என்று சொல்லியிருக்கிறேன். 
நீ என்றுதான் 
ஒரு ஜென்டில்மேன் 
ஆகப்போகிறாயோ! 
மகளே, உன் செல்போன் 
manners சகிக்கலை. 
ஒரு பொறுப்புள்ள பெண்ணாக 
இரு. இல்லையானால் செல்போனைப் 
பிடுங்கிவிடுவேன். 
பெரியவரே
ஆபிஸ் மூட்டையை 
ஒதுக்கிவைத்துவிட்டு
ஒரு லட்சணப் புருஷனாகச் 
சாப்பிடுங்கள். 
கஷ்டப்பட்டு சமைத்த 
என் சாப்பாட்டை ஒருமனதாக 
ரசித்து சாப்பிட்டு 
நீர் ஒரு ஜென்டில்மேன் 
என்று நிரூபித்து
உங்கள் பிள்ளைகளுக்கு 
ஒரு எடுத்துக்காட்டாக இரும்" 
என்றாள்.

சீன் 2:
காலேஜ் லெக்ஸர் ஹால்.
புது வாத்தியார் - ஒரே ரகளை - 
கூச்சலும் கும்மாளமும். 
வாத்தியார் கத்துகிறார்.
"Shut up. Behave yourself. 
பொறுக்கித்தனமாக 
நடந்துகொள்ளாதீர்கள். 
ஜென்டில்மேனாக இருக்க 
முயற்சி பண்ணுங்கள். 
நீங்கள் காலேஜ் மாணவர்கள். 
தெருப் பொறுக்கிகள் இல்லை."
சீன் 3:
ஒரு வியாபாரிக்கும் 
அவருடைய வாடிக்கையாளருக்கும் 
நடக்கும் உரையாடல்.
வாடிக்கையாளர்:  என்ன சார்
account statement 
அனுப்பவில்லையே
பணம் வேண்டாமா?
வியாபாரி: சார், நாங்கள் 
எப்பொழுதும் ஜென்டில்மேனிடம் 
பணம் கேட்டுத் தொந்தரவு 
செய்ய மாட்டோம்.
வாடிக்கையாளர்: அப்படியா
அவர் பணம் செலுத்தவில்லை
என்றால் எப்படிச் சமாளிப்பீர்கள்?
வியாபாரி: அது ஒன்றும் பெரிய 
விஷயம் இல்லை. 
கொஞ்ச நாளில் பணம் 
வரவில்லையானால் 
அந்த நபர் gentleman இல்லை 
என்று முடிவுசெய்து பணத்தைக் கேட்டு 
ஆள் அனுப்புவோம்.
வெவ்வேறு விதமான 
மனிதர்கள்
எப்படியெல்லாம் ஜென்டில்மேன்’ 
தகுதியை இழக்கிறார்கள் 
என்பதற்கான விளக்கங்கள்தான் 
மேலே சொன்ன காட்சிகளிலிருந்து 
தெரியவருகிறது.