Wednesday, June 19, 2013

காப்பி அடிப்பதில் தவறில்லை என்கிற சில அமெரிக்க நாகரீகங்கள் -அமெரிக்கத் திருமணங்கள்

திருமணம் - கல்யாணம் - 
விவாகம் - Shadi (Hindi) - 
Boda (Spanish) - 
Wedding (English) -
என்ற வார்த்தையை 
எந்த மொழியில் சொன்னாலும் 
ஆண், பெண், பெரியவர்
சிறியவர், குழந்தைகள் என்று 
வித்தியாசம் பாராமல் 
எல்லோருடைய 
மனதில் தோன்றுவது
ஒரு இன்பமயமான உணர்வு. 
கொண்டாட்டம், குதூகலம்
கும்மாளம், தமாஷ்
உறவாடல் என்று எல்லாமே 
ஒரு சந்தோஷமான 
உணர்வாகத்தான் இருக்கும்.
ஆண் - பெண் உறவுகளை 
முறைப்படுத்த ஏற்பட்ட 
இந்தத் திருமணம் ஆண்டாண்டு 
காலமாக எல்லா நாகரீகங்களிலும் நடந்துவந்திருக்கின்றன.
எல்லா நாகரீகங்களிலும் 
இருக்கும் ஒரே ஒற்றுமை — 
ஆண் - பெண் இருவரும் 
ஆண்டவன் முன்னிலையிலும் 
பெற்றோர், சுற்றத்தார் முன்பும் எடுத்துக்கொள்ளும் 
உறுதிமொழிதான். 
இந்த நிகழ்ச்சி நடத்தும் விதம் 
நாட்டுக்கு நாடு
கலாச்சாரத்திற்குக் 
கலாச்சாரம் வேறுபட்டு 
நிற்கிறது.
நம்முடைய கட்டுரை 
அமெரிக்கத் திருமணங்களைப் 
பற்றியது. 
அவற்றைப் பற்றிக் கொஞ்சம் 
அலசிவிட்டு, அவற்றிலிருந்து 
நாம் நம்முடைய இந்தியத் திருமணங்களுக்காக 
ஏதாவது காப்பி அடிக்க விஷயம் 
இருக்கிறதா என்று பார்ப்பதே 
இந்தக் கட்டுரையின் நோக்கம்.