Wednesday, June 19, 2013

காப்பி அடிப்பதில் தவறில்லை என்கிற சில அமெரிக்க நாகரீகங்கள் -அமெரிக்கத் திருமணங்கள்

திருமணம் - கல்யாணம் - 
விவாகம் - Shadi (Hindi) - 
Boda (Spanish) - 
Wedding (English) -
என்ற வார்த்தையை 
எந்த மொழியில் சொன்னாலும் 
ஆண், பெண், பெரியவர்
சிறியவர், குழந்தைகள் என்று 
வித்தியாசம் பாராமல் 
எல்லோருடைய 
மனதில் தோன்றுவது
ஒரு இன்பமயமான உணர்வு. 
கொண்டாட்டம், குதூகலம்
கும்மாளம், தமாஷ்
உறவாடல் என்று எல்லாமே 
ஒரு சந்தோஷமான 
உணர்வாகத்தான் இருக்கும்.
ஆண் - பெண் உறவுகளை 
முறைப்படுத்த ஏற்பட்ட 
இந்தத் திருமணம் ஆண்டாண்டு 
காலமாக எல்லா நாகரீகங்களிலும் நடந்துவந்திருக்கின்றன.
எல்லா நாகரீகங்களிலும் 
இருக்கும் ஒரே ஒற்றுமை — 
ஆண் - பெண் இருவரும் 
ஆண்டவன் முன்னிலையிலும் 
பெற்றோர், சுற்றத்தார் முன்பும் எடுத்துக்கொள்ளும் 
உறுதிமொழிதான். 
இந்த நிகழ்ச்சி நடத்தும் விதம் 
நாட்டுக்கு நாடு
கலாச்சாரத்திற்குக் 
கலாச்சாரம் வேறுபட்டு 
நிற்கிறது.
நம்முடைய கட்டுரை 
அமெரிக்கத் திருமணங்களைப் 
பற்றியது. 
அவற்றைப் பற்றிக் கொஞ்சம் 
அலசிவிட்டு, அவற்றிலிருந்து 
நாம் நம்முடைய இந்தியத் திருமணங்களுக்காக 
ஏதாவது காப்பி அடிக்க விஷயம் 
இருக்கிறதா என்று பார்ப்பதே 
இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அமெரிக்கத் திருமணங்கள்
பெரும்பான்மை 
white wedding typeஐ 
சேர்ந்தவை. 
இதற்கு மூலம் கல்யாணப் 
பெண் அணியும் 
white wedding dress. 
பழக்கவழக்கங்கள் மாறுபட்டாலும் 
எல்லாக் கல்யாணங்களிலும் 
பொதுவான விஷயங்கள் 
சில உண்டு.
99.999% கல்யாணங்கள் 
"Arranged Marriage" இல்லை. 
ஆணும் பெண்ணும் பேசி
பழகிமனம் ஒத்த பிறகு 
கல்யாணம் பண்ணிக்கொள்கிறார்கள். 
கல்யாணமும் ஒரு முதிர்ந்த 
வயதில்தான் (27 / 30வரை).
இரண்டு பேரும் சம்பாதிப்பதால் 
கல்யாணச் செலவுகளுக்காகப் 
பெற்றோர்கள் தயவை நாட 
வேண்டிய அவசியமில்ல. 
கூடிய மட்டும் தங்கள் 
சொந்த காலில் 
நின்று திருமணத்தை 
நடத்த ஆசைப்படுகிறார்கள். 
வரதட்சணை என்ற 
பேச்சுக்கே இடம் இல்லை.
கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் 
கூட்டு ஏற்பாடு. 
அதனால் ,
ஆரம்ப வார்த்தையே 
சிக்கனம். 
அடுத்தது எளிமை. 
ஆடம்பரக் கல்யாணங்கள் நடந்துகொண்டுதான் 
இருக்கின்றன. 
ஆனால், அவை பண வசதி 
படைத்தவர்கள் பண்ணுவது. பெரும்பான்மையான 
கல்யாணங்கள் சிக்கனத்தை அடிப்படையாகக் கொண்டவைதான்.
எல்லாக் கல்யாணங்களிலும் 
பொதுவான சிலவற்றைப் 
பார்ப்போம்.
கல்யாணத்திற்கு முன்
வரும் விருந்தினருக்கு 
அழைப்பிதழ்கள்
2 மாதத்திற்கு முன்பே 
பட்டியல் தயார்செய்யப்பட்டு அனுப்பப்படும். 
மிகமிக வேண்டியவர்களுக்கு 
மாத்திரம்தான் அழைப்பிதழ் 
அனுப்பப்படும். 
அழைப்பிதழ் 
பெறுபவர்கள் தவறாமல் 
RSVP அனுப்புவார்கள். 
வருகிறேன், வரவில்லை 
என்று சொல்வதை 
ஒரு பண்பாக 
நினைக்கிறார்கள். 
கடைசி நிமிட gate crashing 
எல்லாம் நடக்காது. 
பரிசுகள் கொடுப்பது 
நிர்ப்பந்தம் இல்லை. 
ஆனால் கல்யாணத்திற்கு 
வரும் ஒவ்வொருவரும் 
ஏதாவது பரிசைக் 
கொண்டுவருவார்கள். 
அநேக கல்யாணங்களில் 
பரிசுப் பொருள்களை முன்கூட்டியே 
மாப்பிள்ளை / பெண் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
பெரும்பாலான தம்பதிகள்
ஒரு பெரிய கடையில் தங்கள் 
குடும்பத்துக்கு வேண்டிய 
சாமான்களை - 
வீட்டுச் சாமான்கள்
சமையல் பாத்திரங்கள்
silverwave, linens etc - பதிவுசெய்துகொள்வார்கள்.
அழைப்பு பெற்றவர்கள்
phone பண்ணி எங்கே பதிவுசெய்திருக்கிறீர்கள் 
என்று கேட்டுத் 
தெரிந்துகொள்வார்கள். 
அந்தக் கடைக்குச் சென்று
அந்தப் பட்டியலில் தங்கள் 
சக்திக்கு ஏற்றவாறு இருக்கும் 
பொருளைப் பரிசாகக் 
கொடுப்பார்கள். 
எல்லா itemsகளையும் 
வேறு யாராவது 
எடுத்துக்கொண்டுவிட்டால்
ஒரு gift chequeஐ 
கொடுத்துவிடுவார்கள். 
Duplicate என்ற 
பிரச்சினைக்கே 
இடமே கிடையாது.
ஒரு சிறு flashback: 
என்னுடைய கல்யாணத்திற்கு 
1962இல் 4 suitcase, 
8 வெட்கடாசலபதி 
படங்கள், 2 கிருஷ்ணன் 
பொம்மை 
இன்னும் பல 
duplicates,,
உங்கள் அநுபவம் எப்படி? 

Registery,ஒரு
அருமையான திட்டம். 
நாம் கட்டாயம் 
வெட்கம் இல்லாமல் 
காப்பி அடிக்கலாம்.
கல்யாண நாள்:
கல்யாணம் ஆலயத்திலோ 
ரிஜிஸ்டர் ஆபிசிலோ 
அல்லது திறந்தவெளி 
மைதானத்திலோ 
நடக்கலாம். தம்பதிகளின் 
மதக் கலாச்சாரத்தின்படி 
சடங்குகள் மாறலாம். 
பெரும்பான்மையான 
கல்யாணங்கள்
simple Anglican ceremony 
முறையில்தான் நடைபெறுகின்றன. 
10 நிமிடங்கள் மேலே நடக்காது. 
நடுவில் பாட்டு, பேச்சு என்று 
நடத்தி விழா நேரத்தை அதிகப்படுத்துவார்கள்.
விக்டோரியா ராணி 
காலத்திலிருந்து பேசப்படும் 
ஒரு கவிதை.
Something Old,
something New,
something Borrowed,
something Blue,
and a silver six pence 
in her shoe.

இதன் விளக்கம். 
Something Old - ஏற்கனவே 
திருமணமான விருந்தாளிகள். 
Something New - 
புதுத் தம்பதிகள். 
Something Borrowed - 
கடன் வாங்கியதைத் 
திருப்ப கொடுக்க வேண்டும். 
அது முக்காடானாலும்
அம்மாவுடைய wedding gown 
ஆனாலும் சரி. 
Something Blue - 
பெண்ணினுடைய கற்பு
புனிதத் தன்மை. 
A six pence - பணத்தையும் 
சுபிட்சத்தையும் குறிக்க 
ஒரு வெள்ளி நாணயத்தை 
shoeக்கு அடியில் வைப்பது.

Wedding Dress ரொம்ப
ரொம்ப முக்கியம். 
நிறையவே 
மூட நம்பிக்கைகள் உள்ளன. 
கல்யாண தினத்திற்கு முன் 
மணமகன் மணமகளை 
wedding dressஇல் 
பார்க்கக் கூடாது. 
அதே மாதிரி, மணமகளும் 
கல்யாணத் தேதிக்கு முன் 
அந்த ஆடையை அணிந்து 
கண்ணாடிமுன் நிற்கக் கூடாது. 
அப்படிச் செய்தால் கல்யாணம் தடைபடுமாம்.
இது கொஞ்சம் சங்கடமான சமாச்சாரம்தான். 
ஆடை சரியாக 
fit ஆகிறதா என்பதை 
எப்படித் தெரிந்துகொள்வது
சில தையல்காரர்கள் 
ஆடைகளில் 
சில இடத்தில் தையலை 
loose ஆக வைத்திருப்பார்கள்.
இந்த wedding dressஐப் 
பற்றி இன்னொரு பாடல்.
Married in White, 
you have chosen right
Married in Grey, 
you will go far away
Married in Black, 
you will wish yourself back
Married in Red, 
you will wish yourself dead
Married in Green, 
ashamed to be seen
Married in Blue, 
you will always be true
Married in Pearl, 
you will live in a whirl
Married in Yellow, 
ashamed of your fellow
Married in Brown,
you will live in the town
Married in Pink, 
you spirit will sink
எக்காலத்திலும், எக்காரணம் 
கொண்டும் தவிர்க்கப்பட 
வேண்டிய நிறம் கறுப்பு. 
அது மேல்நாட்டுக் 
கலாச்சாரத்தில் துக்க 
சமயத்தில் உபயோகிக்கும் 
நிறம். 
Wedding Ring ஒன்றுதான் 
ஆடம்பரமான ஆபரணம்.

கல்யாணம் முடிந்தவுடன் 
அரிசியை  மணமக்கள் மேல் 
தூவுவார்கள். 
சில கல்யாணங்களில் 
ஆலய சம்பிரதாயங்கள் 
முடிந்தவுடன் விருந்து 
கொடுப்பது உண்டு. 
மணமக்கள் ஒவ்வொரு 
மேஜையாக சென்று வாழ்த்துகளைப் பெறுவார்கள். 
இன்னும் சில கல்யாணங்களில் ஆலயத்திற்கு வெளியே 
ரிசப்ஷன் வைப்பார்கள். 
சில இடங்களில் நடனம் 
நடப்பது உண்டு. 
நடனம் தெரிந்தவர்கள் 
புது தம்பதிகளுடன் நடனம் 
ஆடுவது வழக்கம்.
Light music, கச்சேரி என்ற 
ஆர்ப்பாட்டம் எல்லாம் கிடையாது. 
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் 
அமெரிக்க நடுத்தர வர்க்கத் 
திருமணங்கள் எளிமைக்குப் 
பேர் போனவை.
Meticulous planning by the 
Bride and Bridegroom. 
Keeping in mind their future. 
எதிர்கால வாழ்க்கையை 
நினைத்து 
எல்லா ஏற்பாடுகளும் 
கனகச்சிதமாகத் திட்டமிட்டு 
மணமக்கள் செய்கிறார்கள். 

இப்போது, நம்ம வீட்டுக் 
கல்யாணங்களைப் பற்றிப் 
பார்க்கலாமா?
நல்ல வேளை
5 நாள் கல்யாணம்
1 நாளாக ஆகிவிட்டது.
என் சிறு வயதில் நடந்த 
ஒரு சம்பவம: என் வீட்டுக்கு 
எதிரில் வசிக்கும் அய்யர் 
தன் பெண் கல்யாணத்தை 
நடத்தினார். பெண் வீடு — 
திருநெல்வேலி டவுன். 
மாப்பிள்ளை வீடு — 
ரங்க சமுத்திரம் கிராமம் — 
10 மைல் தூரம் — 
2, 3 தெருக்கள் பிராமண 
அக்கிரஹாரங்கள்.
கல்யாணத்திற்கு முந்தின நாள்
கூரை போட்ட பெரியபெரிய 
வண்டிகள், அவர் வீட்டு வாசலில் 
இறங்கின. நம்பினால் நம்புங்கள்
ரங்க சமுத்திரத்தில் உள்ள 
அவ்வளவு பிராமணக் 
குடும்பங்களும் 
கல்யாணத்திற்கு வந்தன. 
எல்லார் வீடுகளிலும் 
விருந்தாளிகளைத் தங்க 
வைத்தார்கள். சாப்பாடும் 
வீடு வீடாகப் போட்டார்கள். 
5 நாள் கல்யாணம். 
தெருவில்,யார் வீட்டிலும் 
உலை போடவில்லை. 
அது நடந்தது 1942இல். 
ரூபாய்க்கு 10 படி அரிசி. 
அது சுபிட்சமான காலம். 
அமர்க்களமாகக் கல்யாணங்கள் 
நடந்தன.
இப்போது பொருளாதார 
நெருக்கடி. ஆனால் ஆடம்பரக் கல்யாணங்கள் நடைபெறுவது 
குறையவே இல்லை.
பண வசதி படைத்தவர்கள்
1000, 2000 பேரை அழைத்துச் 
சாப்பாடு போட்டால் 
தப்பில்லை என்று 
எடுத்துக்கொள்ளலாம் 
(பணம் கரைவது நல்லதுதானே). 
பண வசதி இல்லாதவர்களும் 
நடுத்தர வர்க்க மக்களும் 
அல்லவா தாம்தூம் என்று 
செலவழிக்கிறார்கள்
கேட்டால் கல்யாணம் ஒரு தரம்
தானே வருகிறது
பெண்ணுக்குச் 
செய்தால் என்ன?
சமஸ்கிருதத்தில் ஒரு 
பழமொழி உண்டு. 
பெண்ணுக்கு மாப்பிள்ளையின் 
அழகுதான் முக்கியம். 
அம்மாவுக்கு மாப்பிள்ளை 
நன்றாகச் சம்பாதிக்கிறாரா 
என்றுதான் கவலை. 
அப்பாவுக்கு மாப்பிள்ளை 
நன்றாகப் படித்திருக்கிறாரா 
என்று கவலை. 
உறவினர்களுக்கு மாப்பிள்ளை 
நல்ல குடும்பத்திலிருந்து 
வந்தவரா என்ற கேள்வி. 
மற்றவர்களுக்கு, நன்றாகச் 
சாப்பாடு போடுவார்களா? 
என்ற கவலை.
இன்றைய நிலையில் 
நம் கல்யாணங்களில் மிக 
அதிகமாகச் செலவழிக்கப்படுவது உணவுக்குத்தான். 
இது அத்தியாவசியமான 
செலவா?
1960களில் நாட்டில் உணவு 
நெருக்கடி ஏற்பட்டது. 
சர்க்கார் Food Control Act 
என்ற சட்டத்தைக் கொண்டு
வந்தார்கள். கல்யாணங்களில் 
50 பேருக்கு மேலே சாப்பாடு 
போடக் கூடாது என்று சட்டம். 
சட்டத்தை மீறி எத்தனையோ 
பேர் செயல்பட்டார்கள். 
"Something" கொடுத்து நிறைய 
பேருக்குச் சாப்பாடு போட்டார்கள். 

ஒரே ஒரு பெரிய மனிதர் 
அந்தச் சட்டத்தை முழுவதுமாகக் கடைபிடித்தார்.
முன்னாள், (காலஞ்சென்ற) 
நீதிபதி அழகிரிசாமி தன் 
பெண்ணுக்குக் கல்யாணம் 
பண்ணினார். 
கல்யாண முகூர்த்தம் முடிந்து 
2 வீட்டு சம்பந்திமார்களையும் 
சேர்த்து 43 பேருக்குத்தான் 
சாப்பாடு கொடுத்தார். 
அந்தக் கல்யாணத்திற்காக 
உழைத்தவர் என் நண்பர்
அவருடைய உதவியாளர். 
முகூர்த்தம் முடிந்தவுடன்
 "ரங்கா, சாப்பிட்டுவிட்டு 
3 மணிக்குள் வந்துவிடு. 
ரிசப்ஷன் ஏற்பாடுகள் செய்ய 
வேண்டும்."  
மற்றவர்களுக்கு இது 
அதிர்ச்சியாக இருக்கலாம். 
ஆனால், அவர் செய்தது 
சட்டத்தை மீறாமல் 
குடும்பத்தினருக்கு 
மாத்திரம் சாப்பிட வைத்தது.
ரிசப்ஷனுக்கு 900 பேர் 
வந்திருந்தார்கள். 
பெரியபெரிய மனிதர்கள். 
எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது 
ஒரு கோக்கோ கோலாதான்.

எத்தனை பேருக்கு இந்த 
"guts" வரும்
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு 
அந்தச் சட்டம் குப்பைக்குப் 
போயிற்று.
1942ஐவிட மோசமான நிலை.
இன்று.......... 

இது ஒரு சாம்பிள் தான்.
யோசித்துபார்த்தால்,
எத்தனை செலவுகள்
அநாவசியம்...ஆடம்பரம்
மற்றவர்கள் போல வாழ 
ஆசைப் படாமல்,
நம் சக்திக்கு ஏற்ப 
திருமணம் நடத்தாலமே?
எத்தனை பேர்கள்(நீங்கள் உட்பட)
நினைக்கிறார்கள்
"கல்யாணத்துக்கு கூப்பிடாமல் 
இருந்தாலே நல்லது"
அப்படி இருக்கும் போது,
எதற்காக ஜம்பத்திற்காக அழைக்கவேண்டும்?
Very Very Close 
Family Relation 
மட்டும் கூப்பிட்டு 
திருமணம் நடத்த
யோசிக்கலாமே?
கல்யாணம் ஆகி,
அமெரிக்காவுக்ககு 
குடியேற போகும் 
மண மக்களின் 
பெற்றோர்கள் 
கவனத்திற்கு:
"ஆசை,ஆசையாக,
பட்டு புடவையும் 
வைர தோடு,
தங்க ஒட்டியாணம்,
100 பவுன் நகை 
எல்லாம் பண்ணினே.
ஒரு தாலியோடும்,
2ஜீன்ஸோடும் 
போகிறாளே!
எல்லாம் பாங்க் 
லாக்கரில் வைக்கவா 
செலவழித்தேன்"

இப்படி புலம்ப வேண்டியது
தேவை தானா?
கல்யாணம் கடனாளிகளை 
உருவக்க கூடாது.
சிக்கனம் என்பது 
ஒரு வேண்டப்படாத 
வார்த்தையாக 
ஆகிவிட கூடாது. 
அமெரிக்காவைப் பார்த்து 
அவர்கள் கல்யாணச் 
சிக்கனத்தை 
காப்பி அடிப்பதில் 
என்ன தவறு?

... கிளறல் தொடரும்.


No comments: