Monday, November 26, 2012

சாணக்கிய நீதி



சாணக்கியர்’-
என்று சொன்னவுடன்
நம்மில் பலர் மனதில் 
தோன்றுவது
அவருடைய அவிழ்ந்த குடுமியும் 
அவர் எடுத்த சபதமும்தான்.
பாஞ்சாலிசபதத்திற்குப் பிறகு 
வரலாற்றுப் பெயர் பெற்ற சபதம் - 
சாணக்கிய சபதம்தான்.
கெளரவ சாம்ராஜ்யத்தை அழித்து
தர்மருடைய ஆட்சியை ஏற்படுத்தியது - 
பாஞ்சாலி சபதம். 
நந்தர்களின் ஆட்சியை அழித்து
சந்திரகுப்தரை மன்னராக்கி
குப்தர் பொற்காலத்திற்கு 
அடிகோலியது - 
சாணக்கிய சபதம்’.
சாணக்கியருடைய சபதம் போல்
அவர் எழுதிய அர்த்த சாஸ்திரமும் 
உலகப் பிரசித்தி பெற்றவை.
அர்த்த சாஸ்திரம், ஒரு statecraft 
புத்தகம். 
அதாவது அராசங்கமும் அரசனும் 
எப்படி நல்ல ஆட்சி செய்ய வேண்டும் 
என்பதை விளக்கும் நூல்.
இது சரித்திரம் படித்த 
எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
பல பேருக்குத் தெரிந்திருக்க 
வாய்ப்பில்லாத விஷயம் — 
இதே சாணக்கியர், மனிதனுடைய 
வாழ்வு வளம்பெற, ஒரு நீதி சாஸ்திர 
நூலையும் இயற்றியிருக்கிறார். 
அதுதான் சாணக்கிய நீதி’ என்ற நூல்.
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் 
வெவ்வேறு சமயங்களிலும் 
பெரிய மஹான்கள்,
மானிடர்கள் நலம்பட
நல்ல கருத்துக்களை
போதித்திருக்கிறார்கள்.
தமிழில் திருக்குறள்
ஒளவையாரின் நல்வழி
மூதுரை ஆகிய நூல்கள்
உலக நீதி போன்றவை 
பிரசித்தம். 
வடமொழி இலக்கியத்தில்,  
சுக்ரநீதி, மனுநீதிவிதுரநீதி 
என்று பல நூல்கள் உள்ளன. 
அவற்றில் சாணக்கிய நீதியும் 
ஒரு சிறந்த நூலாகப் புகழப்படுகிறது. 
இதில், இன்னொரு விஷயம்
மற்ற நீதிகளின் ஆசிரியர்கள் 
புராண, இதிகாச மனிதர்கள். 
ஆனால் சாணக்கியர்
ஒரு சரித்திர கால புருஷர். 
2500 ஆண்டுகளுக்கு 
முன் வாழ்ந்தவர். 
அவரைப் பற்றிய கதைகள்
சரித்திர நிரூபணம் 
இல்லாத கதைகளாக இருந்தாலும்
அவர் வாழ்ந்த காலம்
அவர் ஈட்டிய பணிகள்
அவர் எழுதிய காவிய நூல்கள் 
சரித்திர ஆசிரியர்கள் 
ஏற்றுக்கொண்டவை.
சாணக்கிய நீதியில் என்ன 
நல்ல விஷயங்கள் 
சொல்லப்பட்டிருக்கின்றன
என்பதைப் பார்க்கும் முன் 
அதன் ஆசிரியர், சாணக்கியரைப் 
பற்றிக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக்
கொள்வோம்.