Monday, April 22, 2013

ஞமலி (நாய்) புராணம் தொகுத்தவர்: வேதவியாச தாசன் தி.சு. பாம்பரசனார் பகுதி - 3


பிரபா -நாகராஜன் 
உறையாடல் தொடர்கிறது...
பிரபா: Build-up பண்ணியது 

போதும் என்று நினைக்கிறேன். 
விஷயத்திற்கு வரலாமே?
நான்: கொஞ்சம் எனக்கு நானே 
அட்சதை போட்டுக்கலாம் 
என்று நினைத்தேன். 
அது உனக்குப் பொறுக்கவில்லை. 
சரி,புராணத்தைத் தொடர்கிறேன். 
ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். 

நாய் கடவுள்களால் மனிதனுக்காகப் படைக்கப்பட்ட ஒரு ஜந்து. 
ரொம்பரொம்பப் பழைமையான 
ரிக் வேதத்திலேயே நாயைப் 
பற்றிப் பேசப்பட்டிருக்கிறது.
 ‘சரமா’ என்ற பெண் நாயைப் 
பற்றி ரிக் வேத ஸ்லோகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 
‘சரமா’ தேவேந்திரனுக்குச் 
சொந்தமான நாய். 
இதுதான் எல்லா நாய்களுக்கும் 
தாயார். தேவ-ஷூனி (Shuni) 
என்ற பெயரும் உண்டு. 
ஒரு சமயம்,அரக்கர்கள் 
தேவலோகப் பசுக்களைக் 
களவாடிச் சென்றபோது, 
சரமாதான் அந்தப் பசுக்களின் 
இடத்தைக் கண்டுபிடித்து 
அவற்றை மீட்டது. 
பின்னால் எழுதப்பட்ட  
தைத்ரேய பிராமணா, 
ஆபத்ஸம்ப சூத்ரங்கள் - 
சரமா, நாய் உருவத்தில் இருக்கும் 
ஒரு பெண் தெய்வம் 
என்று எழுதியிருக்கிறார்கள்.
இந்த நாய் தெய்வம், 

இந்திரனால் உலகத்தைச் 
சுற்றிவர அனுப்பப்பட்டதாம். 
அச்சமயம் மக்கள் பசியால் 
வாடுவதைப் பார்த்து, 
சரமா தண்ணீரை உண்டுபண்ணி வயல்களில் பாய்ச்சி மக்களுக்கு 
உணவு அளித்ததாம். 
மனிதர்களுக்குப் பால் கிடைக்கும் 
வகையில் பசுக்களையும் 
சிருஷ்டித்ததாம்.
வராஹ புராணத்தில் சரமாவைப் 
பற்றி அவ்வளவு உயர்வாகச் சொல்லப்படவில்லை. 















இந்திரன்,ஒரு சமயம் அசுரர்களிடம் 
தோல்வி அடைந்து தேவ பதவியை 
இழந்து விட்டான்.
அந்த பதவியை மீண்டும் அடைய
ஒரு பசு யாகம் பண்ண நினைத்தான். 
‘பானி’ என்ற அசுரர்கள் தேவலோகப் பசுக்களைக் கவர்ந்துவிட்டார்கள். 
சரமா, பசுக்களைத் தேடிச் 
சென்றது. 
அசுரர்கள் சரமாவுக்குப் 
‘பால் கொடுத்து’ தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டார்கள். 
(இதுதான்  first recorded 
லஞ்சம் - அதுவும் after all milk 
என்று நினைக்கிறேன்) 
சரமாவும் வாங்கின லஞ்சத்திற்கு 
நேர்மையாக இருக்க தேவேந்திரனிடம் சென்று தனக்கு ஒன்றும் தெரியாது 
என்று "உண்மையை" பேசிவிட்டது.