Monday, December 10, 2012

வயதான பெற்றோர்களை அலட்சியப்படுத்துவது, துன்புறுத்துவது (Parent Abuse) - ஒரு மன்னிக்க முடியாத குற்றம்.



அநேகமாக, நம்மில் எல்லோருமே, சீக்கிரமாகவோ, கொஞ்ச நாள் கழித்தோ, சந்திக்க வேண்டிய நிலைமை 
நம் வயதான பெற்றோர்களை 
எப்படிப் பார்த்துக்கொள்ளப்
போகிறோம் என்பது.
பொருளாதார வளர்ச்சியினாலும், மருத்துவத் துறையில் ஏற்பட்ட 
மகத்தான மாறுதலினாலும், பெரும்பான்மையான மக்கள் 
நீண்ட நாட்கள் வாழும் 
வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். 
அதே பொருளாதார வளர்ச்சி
மக்கள் மனத்தையும் ஓரளவு பாதித்திருக்கிறது.

வயதான பெற்றோர்களை 
ஒரு பாரம்என்று நினைக்கும் 
ஒரு மனநிலை இன்றைய 
இளைய தலைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது 
என்பது ஒரு வெட்கப்பட 
வேண்டிய விஷயம்.

மாமியார் கொடுமை’, 
குழந்தைகள் கொடுமைபற்றி 
நிறையவே மீடியாக்களில் 
பேசப்பட்டு, எழுதப்பட்டுவருகின்றன. 
ஆனால் parent abuse - 
பெற்றோர்களைக் 
கொடுமைப் படுத்துவது 
என்பது அவ்வளவாக வெளிச்சம் 
போட்டுக் காட்டப்படவில்லை. 
ஆனால், அந்த மாதிரி 
பெற்றோர் கொடுமைநடந்துகொண்டிருக்கிறது 
என்பது தான் உண்மை.