Monday, December 10, 2012

வயதான பெற்றோர்களை அலட்சியப்படுத்துவது, துன்புறுத்துவது (Parent Abuse) - ஒரு மன்னிக்க முடியாத குற்றம்.



அநேகமாக, நம்மில் எல்லோருமே, சீக்கிரமாகவோ, கொஞ்ச நாள் கழித்தோ, சந்திக்க வேண்டிய நிலைமை 
நம் வயதான பெற்றோர்களை 
எப்படிப் பார்த்துக்கொள்ளப்
போகிறோம் என்பது.
பொருளாதார வளர்ச்சியினாலும், மருத்துவத் துறையில் ஏற்பட்ட 
மகத்தான மாறுதலினாலும், பெரும்பான்மையான மக்கள் 
நீண்ட நாட்கள் வாழும் 
வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். 
அதே பொருளாதார வளர்ச்சி
மக்கள் மனத்தையும் ஓரளவு பாதித்திருக்கிறது.

வயதான பெற்றோர்களை 
ஒரு பாரம்என்று நினைக்கும் 
ஒரு மனநிலை இன்றைய 
இளைய தலைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது 
என்பது ஒரு வெட்கப்பட 
வேண்டிய விஷயம்.

மாமியார் கொடுமை’, 
குழந்தைகள் கொடுமைபற்றி 
நிறையவே மீடியாக்களில் 
பேசப்பட்டு, எழுதப்பட்டுவருகின்றன. 
ஆனால் parent abuse - 
பெற்றோர்களைக் 
கொடுமைப் படுத்துவது 
என்பது அவ்வளவாக வெளிச்சம் 
போட்டுக் காட்டப்படவில்லை. 
ஆனால், அந்த மாதிரி 
பெற்றோர் கொடுமைநடந்துகொண்டிருக்கிறது 
என்பது தான் உண்மை. 

Helpage India என்ற ஸ்தாபனம் 
நடத்திய ஒரு சர்வே
இது இவ்வளவு தூரம் 
பரவியிருக்கிறது என்பதை 
வெளிச்சத்திற்குக் கொண்டு
வந்திருக்கிறது. 
அந்த சர்வேயில்
இன்றைய இளைய சமுதாயம்
வயதான பெற்றோர்களை 
அதிகமாக உடல்ரீதியாக 
(physical abuse) செய்வதில்லை. 
-அதாவது,அடிப்பதுபோன்ற செய்கைகள் 
ஆனால் மன உளைச்சல் தரும் எல்லாவிதமான செயல்களிலும் 
இளைய தலைமுறையினரில் 
சில,பல பேர் ஈடுபடுகிறார்கள் 
என்பது அந்த சர்வேயின் கணிப்பு. 
நாட்டில் "பெற்றோர் கொடுமை"யைத் தண்டிக்கும் சட்டங்கள் 15க்கு மேல் இருந்தாலும், கொடுமை தண்டிக்கப்படுவதில்லை. 
அதற்கு முக்கியக் காரணம்
பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் 
தங்கள் வாரிசுகளின் மேல் 
புகார்செய்ய முன்வராமல் 
இருப்பதுதான். 
இந்த நல்லெண்ணத்தை 
இளைய தலைமுறையினர் 
தவறாகப் பயன்படுத்திக்
கொள்கிறார்கள்.

சமீபத்தில் வந்த பத்திரிகைச் 
செய்திகளில் வட இந்தியாவில் 
அநேக வயதான பெண்மணிகள், டி.வி.யிலும் பத்திரிகைகளிலும் 
வயதான பெண்மணிகளை 
"வில்லி"களாகச் சித்தரிப்பதைக் 
கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். மாமியார் கொடுமையை 
விளாவரியாகச் சித்தரிக்கும் 
மீடியாக்கள்
ஏன் "மருமகள் மகன்கள்" 
பெற்றோர்கள் கொடுமைப்
படுத்துவதை வெளிப்படுத்துவதில்லை 
என்பதுதான் அவர்களின் 
புகாருக்குக் காரணம்.
அநேக சமுதாயப் பிரச்சினைகள் 
போல், இந்தப் பிரச்சினைக்கும் 
ஒரு மனமாற்றம் மூலம்தான் 
தீர்வுகாண முடியும். 
சட்டங்கள் இருக்கிறன்றன. மதபோதனைகள் இருக்கின்றன. 
செயலாக்க வேண்டியது, 
இன்றைய "மகன்-நாளைய பெற்றோர்". இன்றைக்குப் பெற்றோரைச் சரியாக நடத்தாத இளைஞன், 
தனக்கு வயதான காலத்தில் 
தன் குழந்தைகள் தன்னைப் 
பேணிக்காக்க வேண்டும் என்று 
நினைப்பது ஒரு வேடிக்கையான 
விஷயம். 
கானா நாட்டைச் சேர்ந்த 
ஒரு Akan பழமொழி.
"If your parents take care of you 
up to the time you cut your teeth, 
you take care of them when 
they lose theirs."
இன்னொரு பெரியவர் 
சொல்கிறார்:
Your Lord has decreed that 
you be kind to your parents. 
Whether one or both of them 
attain old age in your time, 
do not say to them a word of 
contempt, not repel them, 
but address them in terms 
of honor. 
And out of kindness, 
lower to them 
the wing of humility and say, 
"My Lord! Bestow on them 
Your Mercy even as they 
cherished me in childhood."
எத்தனையோ கதைகள்... எல்லா மதங்களிலும் - எல்லாம் ..
வயதான பெற்றோர்களுக்குச் சேவைசெய்வது, கடவுளுக்குச் 
சேவை செய்வதற்குச் 
சமம் என்கின்றன.
இதோ ஒரு வயதான தாயாரின் சிந்திக்கவைக்கும் அறிவுரை:-
கலிபோர்னியாவைச் சேர்ந்த 
Virginia Bass  என்ற பெண்மணி 
San Diego Union - Tribune என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதம்.
முதலில் ஒரு சரளமான நடைத் 
தமிழாக்கம், பிறகு அதனுடைய 
ஆங்கில மூலம்.
"நான் என்னுடைய தாயாருக்கும் அவர்களுடைய இரட்டைச் 
சகோதரிக்கும் caretaker. 
அவர்கள் இரண்டு பேரும் 95, 96 
வயதுவரை வாழ்ந்தார்கள். 
இப்பொழுது நான் இந்தக் 
காட்சியின் மறுபக்கத்தில் 
இருக்கிறேன். 
எனக்கு வயது 71. 
எனக்கு 3 குழந்தைகள் - 
45, 43, 34. அவர்கள் என்னிடம் 
எப்படி நடந்துகொள்ள வேண்டும் 
என்பதை அவர்களுக்கு ஒரு கடிதம் 
மூலம் தெரிவித்து 
ஒவ்வொருவரிடமும் 
ஒரு copyஐக் கொடுத்து 
‘I mean it’ என்று சொன்னேன். 
அதன்படி அவர்கள் நடப்பார்கள் - 
என்று நான் நம்புகிறேன். 
இதுதான் நான் எழுதிய கடிதம்:-
என் அருமைக் குழந்தைகளே!
என்னுடைய சுத்தமான ஆடையில் 
உணவு பதார்த்தங்களைச் 
சிந்தினாலோ, என்னுடைய 
shoe laceஐக் கட்ட மறந்தாலோ, தயவுசெய்து பொறுமையாக,  
நான் உங்களிடம் மணிக்கணக்காகச் செலவழித்த நேரங்களை எண்ணிப்பாருங்கள். 
நீங்கள் எப்படிக் கவனமாகச் 
சாப்பிட வேண்டும்
எப்படி உங்கள் shoe laceகளைக் 
கட்டிக்கொள்ள வேண்டும்
எப்படி உங்கள் கணக்குப் 
பாடங்களைச் செய்ய வேண்டும்
உங்களுக்குத் தலைவாரி
நன்றாக உடை உடுத்தியதையும், ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். அதெல்லாம், நான் உங்களுடன் செலவழித்த பொன்னான நேரங்கள்.
அதனால், நான் என்ன சொல்ல 
வேண்டும் என்பதை மறந்துவிட்டால்
ஒரு நிமிஷமோ, 2 நிமிஷமோ 
எனக்குக் கொடுங்கள். 
அது ஒரு முக்கியமான விஷயமாக இல்லாமல் இருக்கலாம். 
நான் பேசுவதை விட உங்கள் 
பேச்சைக் கேட்பதில்தான் எனக்கு 
அதிக விருப்பம்.
நான் ஒரு கதையை மறுபடியும் 
திருப்பிச் சொன்னால் (உங்களுக்கு அதனுடைய முடிவு அத்துப்படியாக இருக்கலாம்) தயவுசெய்து
உங்களுடைய முதல் நர்ஸரி பாட்டை 
நான் உங்களுடன் 100 தடவைக்கு மேல் ஒத்திகைபார்த்ததை ஞாபகத்திற்குக் கொண்டுவாருங்கள்.
என் கால்கள் சோர்ந்துவிட்டன. 
நிற்பது கஷ்டமாக இருக்கிறது. 
திடமாக அடி எடுத்து நடக்க ஆசை. 
என்னைக் கவனமாக என் கைபிடித்து
நான் உங்களை நடத்திச்சென்ற 
மாதிரி நடத்திச்செல்லுங்கள்."

An aging mother's thoughtful advice 
to her children:
When I spill some food on my nice clean dress, or maybe forget to tie my shoe, Please be patient and perhaps reminisce about the many hours I spent with you when I taught you how to eat with care. Plus tying laces and your numbers, too. Dressing yourself and combing your hair. Those were precious hours spent with you. So when I forget what I was about to say, just give me a minute -- or maybe two. It probably wasn't important anyway, And I would much rather listen just to you.

If I tell the story one more time, and you know the ending through and through, please remember your first nursery rhyme when I rehearsed it a hundred times with you. When my legs are tired and it's hard to stand or walk the steady pace that I would like to do, please take me carefully by my hand, and guide me now as I so often did for you.
Virginia Bass

Helpage ,20 நகரங்களில் நடத்திய
சர்வே,3ல்1 வயதான பெற்றோர்கள்
கொடுமைப் படுத்தப்படுகிறார்கள்
என்று சொல்கிறது.
இதை நாம் ஒருwarning ஆக 
எடுத்துக் கொள்ள
வேண்டும்.
நமக்கு நடக்க கற்றுக் கொடுத்த
பெற்றோர்கள்,அவர்கள் வயதான
காலத்தில்,ஒரு கௌரவமான
வாழ்க்கை வாழ 
எல்லா முயற்சிகளையும் 
செய்ய வேண்டியது 
நம் கடமை.
இதை மறந்த எந்த மனிதரும்,
எந்த நாடும் உருப்பட்டதாக 
சரித்திரமில்லை.

                                                      
கிளறல் தொடரும்...





1 comment:

Anonymous said...

இன்றைய தலைமுறையினர் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல செயல்களில் இதுவும் ஒன்று. வயதானப் பெற்றோர்களைக் காப்பது ஒவ்வொரு பிள்ளையின் தலையாயக் கடமை.