Tuesday, December 18, 2012

‘ஜென்டில்மேன்’ ஆவது எப்படி?


                
இதற்கு விடை தேடும் முன் 
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.

யார் ஜென்டில்மேன்?’
ஜென்டில்மேன் பற்றிய விளக்கத்தை 
இரண்டு கோணங்களில் அணுகலாம். 
ஒன்று - "இது இல்லை, அது" என்ற 
தத்துவ ஆசிரியர்கள் அணுகும் முறை. 
அதாவது
இந்த மாதிரி குணங்கள் உள்ளவர்கள்
ஜென்டில்மேனாக இருக்க மாட்டார்கள்’ 
என்ற விளக்கம். 

இரண்டாவது
பாஸிடிவ்வாக
ஜென்டில்மேன் என்பவர்கள்
"இப்படித்தான் நடந்துகொள்வார்கள்" 
என்ற விளக்கம்.
முதலாவது விளக்கத்தைத் 
தினசரி வாழ்க்கையில் 
அன்றாடம் சந்திக்கிறோம். 
இதோ சில காட்சிகள்.

சீன் 1:
வீட்டு டைனிங் டேபிளில் - 
சாப்பாட்டு நேரம். 
எல்லோரும் சாப்பிட 
உட்கார்ந்திருக்கிறார்கள். 
மகன், வாயில் உணவை வைத்துக்கொண்டு 
அதிகார தோரணையில் சத்தம்போட்டு 
ஏதோ உத்தரவு போடுகிறான். 
மகள் செல்போனில் யாருடனோ 
இரைந்து பேசிக்கொண்டு 
சாப்பாட்டில் அரைகுறை கவனத்தோடு 
செயல்படுகிறாள். 
அப்பாக்காரர் ஏதோ தீவிரமாக 
ஆபிஸ் பேப்பரில் மூழ்கியிருக்கிறார். 
அம்மாக்காரிக்குக் 
கோபம் பொத்துக்கொண்டு 
வருகிறது. கத்துகிறாள். 
"இது என்ன சாப்பாட்டு இடமா
சந்தைக் கடையா
மகனே, உனக்கு manners இல்லையா
எத்தனை தடவை சாப்பாட்டை 
வைத்துக்கொண்டு பேசாதே 
என்று சொல்லியிருக்கிறேன். 
நீ என்றுதான் 
ஒரு ஜென்டில்மேன் 
ஆகப்போகிறாயோ! 
மகளே, உன் செல்போன் 
manners சகிக்கலை. 
ஒரு பொறுப்புள்ள பெண்ணாக 
இரு. இல்லையானால் செல்போனைப் 
பிடுங்கிவிடுவேன். 
பெரியவரே
ஆபிஸ் மூட்டையை 
ஒதுக்கிவைத்துவிட்டு
ஒரு லட்சணப் புருஷனாகச் 
சாப்பிடுங்கள். 
கஷ்டப்பட்டு சமைத்த 
என் சாப்பாட்டை ஒருமனதாக 
ரசித்து சாப்பிட்டு 
நீர் ஒரு ஜென்டில்மேன் 
என்று நிரூபித்து
உங்கள் பிள்ளைகளுக்கு 
ஒரு எடுத்துக்காட்டாக இரும்" 
என்றாள்.

சீன் 2:
காலேஜ் லெக்ஸர் ஹால்.
புது வாத்தியார் - ஒரே ரகளை - 
கூச்சலும் கும்மாளமும். 
வாத்தியார் கத்துகிறார்.
"Shut up. Behave yourself. 
பொறுக்கித்தனமாக 
நடந்துகொள்ளாதீர்கள். 
ஜென்டில்மேனாக இருக்க 
முயற்சி பண்ணுங்கள். 
நீங்கள் காலேஜ் மாணவர்கள். 
தெருப் பொறுக்கிகள் இல்லை."
சீன் 3:
ஒரு வியாபாரிக்கும் 
அவருடைய வாடிக்கையாளருக்கும் 
நடக்கும் உரையாடல்.
வாடிக்கையாளர்:  என்ன சார்
account statement 
அனுப்பவில்லையே
பணம் வேண்டாமா?
வியாபாரி: சார், நாங்கள் 
எப்பொழுதும் ஜென்டில்மேனிடம் 
பணம் கேட்டுத் தொந்தரவு 
செய்ய மாட்டோம்.
வாடிக்கையாளர்: அப்படியா
அவர் பணம் செலுத்தவில்லை
என்றால் எப்படிச் சமாளிப்பீர்கள்?
வியாபாரி: அது ஒன்றும் பெரிய 
விஷயம் இல்லை. 
கொஞ்ச நாளில் பணம் 
வரவில்லையானால் 
அந்த நபர் gentleman இல்லை 
என்று முடிவுசெய்து பணத்தைக் கேட்டு 
ஆள் அனுப்புவோம்.
வெவ்வேறு விதமான 
மனிதர்கள்
எப்படியெல்லாம் ஜென்டில்மேன்’ 
தகுதியை இழக்கிறார்கள் 
என்பதற்கான விளக்கங்கள்தான் 
மேலே சொன்ன காட்சிகளிலிருந்து 
தெரியவருகிறது.

ஒரு ஜென்டில்மேன் 
ஒருபோதும் வாயில் உணவை 
வைத்துக்கொண்டு அதிகாரம் 
பண்ண மாட்டான்.

ஒரு ஜென்டில்மேன் 
ஒருபோதும் செல்போனைக் 
காலம், நேரம், இடம் 
தெரியாமல் உபயோகிக்க மாட்டான்.

ஒரு ஜென்டில்மேன் 
ஒருபோதும் ஆபிஸையும் 
வீட்டையும் போட்டுக் 
குழப்பிக்கொள்ள மாட்டான்.
மனைவியின் கஷ்டத்தைப் 
புரிந்துகொண்டு 
அவளுக்கு அனுசரணையாக 
இருப்பவன்தான் 
ஜென்டில்மேன்.

ஒரு ஜென்டில்மேன் 
ஒருபோதும் 
காலேஜ் லெக்சரரை 
அவமதித்துக் குழப்பம் 
விளைவிக்க மாட்டான்.

ஒரு ஜென்டில்மேன் 
ஒருபோதும் தான் வாங்கிய 
கடனைத் திருப்பிக் கொடுப்பதில் 
நேரம் கடத்த மாட்டான்.

இப்படி நிறைய இருக்கிறது
பிறகு பார்க்கலாம்.

இப்பொழுது 
இரண்டாவது அணுகுமுறைப்படி 
ஜென்டில்மேன்எப்படி இருப்பார் 
என்பதை பார்க்கலாம்.

இதற்கான விளக்கம் 
1852ஆம் ஆண்டிலேயே 
Newman என்ற பாதிரியாரால் 
எழுதப்பட்டுவிட்டது. 
இதற்குப் பிறகு யாருமே 
இதற்கான புதிய விளக்கத்தை 
எழுதியதாகத் தெரியவில்லை. 
இவருடைய முழுப் பெயர்,
அவர் எழுதிய 
கட்டுரை விவரம்
John Henry Newman -
Cardinal Newman. 













The idea of a University, 
a series of lectures 
given in Ireland in 1852.

எனக்கு intermediateஇல் 
இது ஒரு கட்டாயப் பாடம். 
வருடம் 1946. 
அப்பொழுது ஏதோ கடனுக்காக 
மனப்பாடம் பண்ணி 
மார்க் வாங்கியது. 
அதன் அருமை 
இப்பொழுதுதான் தெரிகிறது. 
அதன் முழுப் பகுதியை  
ஆங்கிலத்தில் படிக்க,
இங்கே கிளிக் செய்யவும்:
அதன் சாராம்சம் இதோ:

யாருக்கும் எப்போதும் 
வலியை உண்டுபண்ணாதவர் 
எவரோ, அவர்தான் ஜென்டில்மேன். 
ஒரு ஜென்டில்மேனின் வாழ்க்கை லட்சியம் 
தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் 
வாழ்க்கையில் ஏற்படும் 
இடர்களைக் களைவதுதான். 
அவர் தான் செய்த உதவிகளை 
எப்போதும் பெரிதாகக் 
காட்டிக்கொள்ள மாட்டார். 
கட்டாயப்படுத்தினால் மட்டும் 
தன்னைப் பற்றி பேசுவார். 
கிசுகிசுக்களுக்கு அவருக்கு 
நேரம் கிடையாது. 
எல்லாவற்றையும் நல்லது 
என்ற நினைப்போடு 
அணுகுவார். 
கீழ்த்தரமான சண்டை சச்சரவுகளில் 
நேரத்தை வீணாக்க மாட்டார். 
பேச்சுகளில் கடுமை இருக்காது. 
எதிரிகளிடம் நல்ல முறையில் 
நடந்துகொண்டால் 
அவர்கள் நண்பர்களாக 
மாறுவதற்கு வாய்ப்பு உண்டு 
என்று நம்புகிறவர். 
வசைகள் அவரைப் பாதிக்காது. 
அவருக்கு ஏற்பட்ட அவமானங்களை 
நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார். 
யாரிடமும் விரோதம் பாராட்ட மாட்டார்.
வலியைப் பொறுத்துக்கொள்வார்-      
அது தவிர்க்க முடியாதது.
இழப்பைப் பொறுத்துக்கொள்வார்-     
அது ஈடுபண்ண முடியாதது.
மரணத்தைப் பொறுத்துக்கொள்வார்-   
அது அவருடைய விதி.
எல்லா மதமும் அவருக்குச் 
சம்மதம்தான். 
உண்மையான பக்திக்கும் 
தொண்டுக்கும் எப்பொழுதும் 
தலை வணங்குபவர்.
Cardinal Newman விளக்கத்தை 
ஒட்டி மேலும் 
சில அறிவாளிகள்
ஜென்டில்மேன் குணங்களை 
விளக்கியிருக்கிறார்கள்.

James Russel Lowell 
என்பவர் சொல்லுகிறார்.

ஜென்டில்மேன் ஒரு தைரியசாலி
பொய் பேச மாட்டார்
மற்றவர்களை ஏமாற்ற மாட்டார். 
தானும் வாழ்ந்து மற்றவர்களையும் 
வாழ விடுவார். 
நல்ல பண்பாடுகளை 
உடையவர். 
நேர்மையானவர். 
மனசாட்சிப்படி நடப்பவர். 
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்
ஒரு ஜென்டில்மேன் மற்றவர்களிடம்
காட்டும் 3 முக்கியமான குணங்கள்:
கரிசனம்-மரியாதை-நேர்மை
Consideration - Respect - Honesty.
John Bridges என்பவர் 
2 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
How to be a gentleman - 
A Contemporary Guide to 
Common Courtesy
50 Things every young Gentleman 
should know 
(what to do, when to do it, And why)
(Co-authors : Bryan Curtis)
இந்த புஸ்தகங்களிலிருந்து 
சில உதாரணங்கள்:
1)ஜென்டில்மேன் எப்போதும் - 
"Please" என்று சொல்வார்.
2) அதே மாதிரிதான், 
"Thank you" என்பதையும் 
மறக்க மாட்டார்.- சிறிது, பெரிது 
என்று செய்த உதவி எதுவானாலும்.
3) தும்மினாலோ, ஏப்பம் விட்டாலோ 
"Excuse me" என்று சொல்வார்.
4) ஜென்டில்மேன் ஒருபோதும் 
"Hey, Hey you, Hey dude" 
என்ற சொற்களைப் பயன்படுத்தி 
ஒருத்தரின் கவனத்தை ஈர்க்க 
மாட்டார். 
எப்போதும் "Excuse me" 
என்றுதான் ஆரம்பிப்பார்.
5) தப்பு என்று தெரிந்தால்
மனதார "I am sorry" 
என்று சொல்வார்.
6)அதே மாதிரி, அவருக்கு 
மன்னித்து மறக்கவும் தெரியும்.
7) நண்பர்களின் பழைய தவறுகளை 
அடிக்கடி சுட்டிக்காட்ட மாட்டார்.
8) வயதில் சிறியவரைத்தான்
வயதில் மூத்தோருக்கு 
அறிமுகம் செய்துவைப்பார் 
"அப்பா, இது ஜான்" 
ஒருபோதும் "ஜான், இது என் அப்பா" 
என்று சொல்ல மாட்டார்.
9) மற்றவர்களுக்குச் சொந்தமான 
எந்தப் பொருளையும் 
அவர்கள் அனுமதியின்றி 
உபயோகிக்க மாட்டார்.
10) பாராட்டுக்குரிய எந்த 
விஷயத்தையும் எந்த மனிதரையும் 
மனதாரப் பாராட்டுவார்.
11) யாராவது "ரகசியம்" என்று 
சொல்ல முயன்றால் "ஆம்" என்று 
சொல்ல இரண்டு தடவை யோசிப்பார்.
12) வயதானவர்களிடம் பேசும்போது 
அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுவார்.
13)ஊனமுற்றோர்களைச் சந்திக்க 
நேர்ந்தால் அவர்களைச் 
சங்கடப்படுத்தும் கேள்விகளைக் 
கேட்க மாட்டார். மற்றவர்களுக்குக் 
காட்டும் சலுகைகளை 
அவர்களுக்கும் தயங்காமல் செய்வார்.
14)சாப்பிட்டுக்கொண்டோ, ஏதாவது 
பானம் அருந்திக்கொண்டோ
போனில் பேச மாட்டார். 
நடு இரவிலோ, அதிகாலையிலோ 
போன் பண்ணித் தொந்தரவுச் 
செய்ய மாட்டார். 
சொந்தக்காரர் அனுமதியின்றி 
யாருக்கும் தொலைபேசி 
எண்களைக் கொடுக்க மாட்டார்.
15) போனை எடுத்தால் - 
"Hello, this is John" or 
"This is John's residence" 
என்றுதான் சொல்வார். 
ஒருபோதும் "Hu h? speak to me? 
"what" என்று சொல்ல மாட்டார்.
16)போனில் எடுத்துக்கொள்ள 
வேண்டிய செய்திகளை 
ஒருபோதும் சுவரிலேயோ
மேசைத் துணி மிதோ
நாற்காலியிலேயோ 
எழுத மாட்டார். 
தனக்குச் சம்பந்தமில்லாத 
விஷயத்தைக் கேட்க மாட்டார்.
17) செல்போனை vibration 
modeலேயோ
மூடியோ வைப்பார்
உபயோகத்தில் இல்லாத போது. 
சினிமா, டிராமா, கச்சேரி
பள்ளிக்கூட நிகழ்ச்சி என்று 
எதிலும் செல்போன் மூலம் 
தொந்தரவு ஏற்படுத்த மாட்டார்.
18) செல்போன் ஒரு fashion 
சமாச்சாரம் இல்லை. 
கூடியமட்டும் பையில்தான் 
வைத்திருப்பார். 
Belt Loopல் சொருகித் 
தம்பட்டம் அடித்துகொள்ள மாட்டார்.
19)எவ்வளவு போரடித்தாலும் 
அதை ஒருபோதும் 
வெளிக்காட்ட மாட்டார்.
20) சினிமா தியேட்டரில் 
படம் ஆரம்பித்தவுடன் 
பேச்சை நிறுத்திக்கொள்வார்.
21) விமானத்தில் பயணம் 
செய்யும்போது தன் முன் சீட்டை 
உதைக்க மாட்டார்.
22) வாயில் போட்டுக்கொண்ட 
உணவு பிடிக்கவில்லையானால் 
அதைத் தட்டில் துப்ப மாட்டார்.
23) எல்லோருக்கும் பரிமாறிய 
பிறகுதான் சாப்பிட ஆரம்பிப்பார்.
24) டாய்லெட் உபயோகிக்கும் 
ஒவ்வொரு தடவையும் flush 
பண்ணத் தவற மாட்டார். 
பாத்ரூமையும் சிங்க்கையும் 
கழுவிவிட்டுத்தான் 
வெளியே வருவார்.
டாய்லெட் கவரை மூட 
மறக்க மாட்டார்.
25)மற்றவர்களுக்காகக் கதவைத் 
திறந்து வழிவிடுவார்.

26) தன்னுடைய செல்லப் பிராணிகளுக்கு 
அவரே பொறுப்பெடுத்துக்கொள்வார்.
27) விலை அதிகம் உள்ள பொருளை 
ஒருபோதும் கடனாக 
வாங்கிக்கொள்ள மாட்டார்.
28) மூடியிருக்கும் கதவை 
முதலில் தட்டிவிட்டுத்தான் 
அனுமதியோடு உள்ளே செல்வார்.
29) டையை napkin ஆக 
உபயோகிக்க மாட்டார்.
30) ஜலதோஷம்,சுரம் வந்தால்
எந்தப் பொதுக்காரியங்களுக்கும் 
போக மாட்டார்.
31) வீட்டில் தனியாக 
இருந்தாலும் பாலை அது வரும் 
அட்டைப்பெட்டியிலிருந்து 
அப்படியே அருந்த மாட்டார்.
32) டயட்டில் இருந்தாலும் 
அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க 
மாட்டார்.
33) உணவைச் சுவை பார்க்கும் 
முன் உப்பைச் சேர்த்துகொள்ள 
மாட்டார். அவருக்குத் தெரியும் 
அது உணவு தயாரித்தவரை 
அவமானப்படுத்தும் செய்கை என்று.
34) தற்பெருமை பேச மாட்டார்.

இன்னும் நிறைய இருக்கிறது - 
கற்றுக்கொள்ள வேண்டியது.

ஜென்டில்மேனாக இருப்பது 
ஒன்றும் பகீரதப் பிரயத்தனம் 
இல்லை. 
கஷ்டமானதும் இல்லை. 
கொஞ்சம் முன்யோசனை
மற்றவர்களைப் பற்றி 
நிறைய கரிசனம் - 
அவ்வளவுதான். 
ஜென்டில்மேனாக நடித்தால் 
மட்டும் போதாது. 
மனத்தளவில் 
ஜென்டில்மேனாக 
ஆக வேண்டும். 
மற்றவர்களைப் பற்றி 
அக்கறை இருக்க வேண்டும். 
மற்றவர்கள் உங்களை நேசிக்க 
வேண்டும். 
உங்கள் மேல் நம்பிக்கை 
வைக்க வேண்டும். 
உங்கள் மேல் மரியாதை 
வைக்க வேண்டும். 

அதற்கு நீங்கள் 
ஒரு ஜென்டில்மேனாக 
ஆக வேண்டும். 
அதற்கு நிறையவே விதிகள் 
இருக்கிறன. 
பல உங்களுக்கு ஏற்கெனவே 
தெரிந்தவை. 
மற்றவற்றை 
முயற்சி செய்யுங்கள். 
அப்படி செய்தால்,
நீங்கள்தான், வருங்கால 

"Perfect Gentleman".
                                         

... கிளறல் தொடரும்.

No comments: