Saturday, June 08, 2013

காப்பி அடிப்பதில் தவறில்லை என்கிற சில அமெரிக்க நாகரிகங்கள் :1-வீட்டோடு அப்பா


மேல்நாட்டு நாகரிகத்தின் 
தாக்கம் இந்தியர்கள் வாழ்க்கையில் 
புதியதல்ல. வெள்ளைக்காரனிடம் அடிமைகளாக இருந்தபோது வெள்ளைக்காரர்கள், 
எப்படித் திட்டமிட்டு, 
இந்தியக் கலாச்சாரத்தைச் 
சீரழித்தார்கள் என்பது சரித்திரம் 
படித்தவர்களுக்குத் தெரிந்த விஷயம். 
வெளிநாட்டு மோகத்தைக் 
கண்டித்துப் போராட்டங்கள் 
நடத்தப்பட்டன என்பதும் 
தெரிந்ததுதான்.
"டமிலில்" பேசுவது அநாகரிகம் 
என்ற காலம் இருந்தது. 
சுதந்திரம் வந்தவுடன் இந்தியக் கலாச்சாரத்தின் அருமை புரிந்து 
மக்கள் செயல்பட ஆரம்பித்தார்கள். 
ஆனால், மேல்நாட்டு நாகரிகம், 
நாம் கேட்காமலேயே மறுபடியும் 
நம் வாழ்க்கையில் விளையாட 
ஆரம்பித்தது. 
உலகமயமாதல் (Globalisation) 
என்றபடி உலகத்தின் வெவ்வேறு பகுதிகளின் நாகரிகங்கள், 
உலக மீடியாக்கள் மூலம் 
இந்தியாவைத் தாக்க ஆரம்பித்தன.

புத்தாண்டுக் கொண்டாட்டம், 
காதலர் தினம், அன்னையர் தினம், டிஸ்கோ, social drinking, 
புகைபிடித்தல், Drugs, reality shows 
in T.V., பெண்கள் உரிமை, 
விவாகரத்து ரத்து, நாகரிக உடைகள், சுதந்திரமாக வாழ ஆசை, 
கூட்டுக் குடும்பத்தின் மேல் 
வெறுப்பு... 
இப்படி நிறைய விஷயங்கள் 
நம்மிடையே, குறிப்பாக நகர்ப்புற வாசிகளிடம் அதிகம் பரவிவருகின்றன.

இவை நல்லதா? கெட்டதா? 

என்று பட்டிமன்றம் போட்டு 
விவாதிக்க வேண்டிய 
அவசியத்திற்காக 
இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. 
காப்பி அடிப்பது என்று தீர்மானித்துவிட்டோம். 
அதில் என்ன "கொசுறு" 
வைக்க வேண்டும்? 
அப்படி காப்பி 
அடிக்கத் தகுதிபெற்ற 
சில நாகரிகங்களை, 
குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து 
நாம் ஏன் பின்பற்றக் கூடாது? 
உதாரணத்திற்கு, 
வீட்டோடு அப்பா 
(Stay Home Dads), 
Single Mom, கல்விமுறை, 
அமெரிக்க கல்யாணங்கள் etc. 
இவற்றைப் பற்றிக் கொஞ்சம் 
அலசி, இந்தியாவிற்கு 
அவை பொருந்துமா? 
என்று பார்க்கும் நோக்கத்தோடு 
இந்தக் கட்டுரைத் தொடர் 
எழுதப்படுகிறது. 

முதலில் காப்பி அடிக்க 
வேண்டிய விஷயம் - 

வீட்டோடு அப்பா.
வீட்டோடு மாப்பிள்ளை கேள்விப்பட்டிருக்கிறோம். 
இதென்ன வீட்டோடு அப்பா?
வேலை செய்யும் அப்பாவின் 
"தோற்றம்" (profile) 
எப்படி இருக்கும் என்பது 
எல்லோருக்கும் தெரிந்திருக்கும். 
நாள் பூரா ஆபிஸில் வேலை 
பார்த்துவிட்டுக் களைப்பாக 
வீடு திரும்புவார். குழந்தைகளைச் 
செல்லமாகத் தட்டிவிட்டு, 
சாப்பாடு என்ன? என்று கேள்வி கேட்டுவிட்டு, T.V.க்கு முன்னால் 
(முடிந்தால் ஒரு drinks உடன்) 
ரிலாக்ஸ் பண்ணுவார். 
இதுதான் "சுகம்" என்று 
நினைப்பவர் 
தனக்கு இது தேவையான, 
சரியான வாழ்க்கைதான் 
என்று நினைப்பவர். 
சமீப காலம்வரை இருந்த 
அருமையான வாழ்க்கை 
குடும்பத்திலும் பொருளாதாரத்திலும் ஏற்பட்ட மாறுதல்களினால் 
மிகவும்  பாதிக்கப்பட்டிருக்கிறது. இவருக்குக் கிளம்பியிருக்கும் 
புதிய எதிரி—வேலை செய்யும் அம்மாமார்கள்—working Moms. அமெரிக்கப் பொருளாதாரச் 
சூழ்நிலையில், ஆணும் பெண்ணும் வேலைக்குச் சென்று சம்பாதிக்க 
வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 
ஆணும் பெண்ணும் வேலைக்குச் 
செல்லும் வீட்டில், வாழ்க்கை பிரச்சினையில்லாமல் 
ஓடிக்கொண்டிருக்கும்—
குழந்தை வேண்டாம் என்ற 
முடிவில் உறுதியாக இருக்கும்வரை. 
குழந்தை வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், 
பிரச்சினை வந்துவிடும். 
குழந்தைப்பேறு லீவு முடிந்து 
பெண் வேலைக்குப் போகத் தயாராகும்போது, 
குழந்தை பராமரிப்பை 
யார் பார்த்துக்கொள்வது 
என்று விவாதிக்க வேண்டிய 
நிலை ஏற்படும். 
இந்தியா போன்ற நாடுகளில் 
ஓசிக்குக் கிடைக்கும் 
extended family என்ற 
concept எல்லாம் அமெரிக்கக் குடும்பங்களுக்குக் கிடையாது. 
Day careஇல் தான் 
குழந்தைகளை 
விட வேண்டும்.
பெண்ணும் தன்னுடைய 
careerஇல் உயர வேண்டும் 
என்று நினைக்கும்போதும், 
ஆணைவிட அதிகம் சம்பளம் வாங்கும்போதும், working moms, 
தான், ஏன் டயப்பரை கட்டிக்கொண்டு 
அழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த மாதிரி குடும்பங்களில், 
நிறைய கணவன்மார்கள் மனைவி வேலைக்குச் செல்லும் போது 
குழந்தைகளை வீட்டிலிருந்து 
கவனிக்கத் தயங்குவதில்லை. 
இவர்கள்தான்—
வீட்டோடு அப்பாக்கள்-
stay at home dads. 
இவர்களுடைய எண்ணிக்கை 
கணிசமான அளவில் அமெரிக்கா, 
கனடா, பிரிட்டன் நாடுகளில் பெருகிவருகிறது. 
மனைவி வேலைக்குச் செல்லும்போது கணவன் வீட்டைப் பராமரிப்பதில் 
எந்தத் தவறும் இருப்பதாகக் கருதப்படவில்லை. 
வழக்கமாக, ஆண்களுக்கு கிடைக்கும் வேலையான, white collar jobs 
குறைவாக இருக்கின்றன. 
நடுத்தர வயது ஆண்களுக்கு  
வேலை கிடைப்பது கஷ்டம். 
அதனால்தான் role reversal நடக்கிறது. இதைக் கேவலமானதாகவோ, 
கெளரவக் குறைவானதாகவோ, 
எந்த வீட்டோடு அப்பாவும் நினைப்பதில்லை. சில வீட்டோடு அப்பாக்கள், வீட்டிலிருந்தே 
வேலை செய்யும் வேலைகளைத் 
தேடி வருமானத்தைப் பெருக்கிக்கொள்கிறார்கள்.
இது ஒரு வரவேற்க வேண்டிய 
விஷயம். 
Robert Franks என்பவர் ,ஒரு
‘வீட்டோடு அப்பா’ 
ஒரு சர்வே நடத்தி இருக்கிறார். 
இவருடைய மனைவி 
தன் உத்தியோகத்தில் உச்ச நிலை 
அடைய முயற்சிகள் செய்யும்போது, 
இவர் தன் குழந்தைகளை வீட்டிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தார். 
இவர், இவரை மாதிரி "வீட்டோடு அப்பாக்களை"  இண்டர்வீயு பண்ணி அதையே தன் டாக்டர் பட்டத்துக்குச் சமர்ப்பித்து, அதில் பட்டம் 
பெற்றிருக்கிறார்.
அவருடைய சர்வேபடி வீட்டோடு அப்பாக்கள் ஒரு வழக்கமான 
(traditional) அம்மா என்ன 
காரியங்கள் செய்வார்களோ, 
அவை அனைத்தையும் 
செய்துவருகிறார்கள். 
குழந்தைகளுக்குச் சாப்பாடு 
போடுவது, 
potty டிரெயினிங், 
பாத்ரூம்களைக் 
கழுவுவது என்று வேலைகளைச் சளைக்காமல் செய்துவருகிறார்கள்.
வேலை செய்யும் அம்மா, 
வேலையிலிருந்து வீடு 
திரும்பியவுடன் வீட்டு வேலையை 
அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். 
இரவு சாப்பாடு பண்ணுவது, குழந்தைகளைத் தூங்க வைப்பது, 
லீவு நாட்களில் வீட்டு வேலைகளைச் செய்வது என்று தன் பங்கைச் செய்கிறார்கள்.

இந்தப் பரஸ்பர உதவி 

மனப்பான்மை, 
மண வாழ்க்கையைப் 
பிரச்சினையில்லாமல் 
நடத்திச் செல்லுகிறது.

இப்போது இந்தியாவிற்கு 
வருவோம்.

"வீட்டோடு மாப்பிள்ளை"யையே கேவலமாகப் பார்க்கும் 

இந்தியச் சமூதாயத்தில்
 "வீட்டோடு அப்பா" என்பது 
ஜீரணிக்க முடியாத விஷயம்.
"வேலைக்குப் போவது புருஷ லட்சணம்", 
"பெண்டாட்டி சம்பாத்தியத்தில் 
வாழ்வது எல்லாம் ஒரு வாழ்க்கையா?", "ஆண் சம்பாதித்துப் பெண்ணைக் 
காப்பாற்ற வேண்டும்" என்று காலம்காலமாகப் பழமொழிகளைக் 
காட்டிப் பழக்கப்பட்ட சமுதாயம் 
வீட்டில் உட்கார்ந்துகொண்டு குழந்தைகளைப் பார்த்துகொண்டால், பாராட்டு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்தச் சமூகம் பேசியே 
அந்த அப்பாவைக் கொன்றுவிடும்.

இந்த நிலை மாற வேண்டும். 
மாறி வருகிறது. பொருளாதார நிலையினாலும், பெண்ணும் 
நிறைய படிப்பதாலும் ஆண், பெண், 
இரண்டு பேரும் வேலைக்குப் 
போகிறார்கள். குழந்தைகள் பெற்றுக்கொண்டாலும், 
அவர்களைப் பார்த்துக்கொள்ள 
தாத்தா, பாட்டி, அத்தை, மாமா 
என்று ஒரு பெரிய 
extended family 
இருக்கிறது.
கணவன்-மனைவி இரண்டு 

பேரும் வேலைக்குச் சென்றாலும், 
இன்னும் அநேகக் குடும்பங்களில் கணவனுடைய வேலை 
முக்கியத்துவத்தைத்தான் 
பெரிதாக நினைக்கிறார்கள். 
எத்தனை கணவன்மார்கள் 
குடும்ப வேலைகளிலும் 
குழந்தைகள் பராமரிப்பிலும் 
மனைவிகளுடன் வேலைகளைப் 
பகிர்ந்து கொள்ளுகிறார்கள் 
என்பது சர்வே பண்ணித் 
தெரிந்துகொள்ள வேண்டியது. 
Frank சொல்கிறார் 
"மனிதன் வேலையிலிருந்து 
வீட்டுக்கு வந்து குழந்தைகளை 
ஆகாயத்தில் தூக்கிப்போட்டுக் 
கொஞ்சிவிட்டு,
டி.விக்கு முன்னால் உட்கார 
வேண்டிய அவசியமில்லை." 
இது இந்தியாவிற்குப் 
பொருந்தும். 
இது மாற வேண்டும்.
அமெரிக்க நாகரிகங்களிலிருந்து 
நாம் காப்பி அடிக்க வேண்டியது - 
அங்கே நிகழும் கணவன்-மனைவி 
பரஸ்பர உதவி மனப்பான்மை. 
Share - பகிர்ந்துகொள்வது - 
என்பதற்கு அர்த்தம் அங்கு 
பார்க்கலாம். 
வீட்டோடு அப்பாவாக இருக்க
வேண்டும் என்று சொல்ல வரவில்லை.
2 பேரும் வேலைக்கு போக நேர்ந்தா ல்
கணவன் மனைவிக்கு ஒத்தாசயாக
வேலைகளை பகிர்ந்து கொள்ளலாமே?

Extended family இருக்கிறது 
என்ற நினைப்பு, 
நம் பழக்கவழக்கங்களையும் 
மனைவிபால் 
உள்ள எண்ணங்களையும் 
புது நோக்கத்துடன் 
பார்கக் தடையாக இருக்கிறதோ? 
என்று நினைக்க தோன்றுகிறது.

....கிளறல் தொடரும்.


No comments: