Wednesday, May 29, 2013

பண்போடும் மரியாதையோடும் நடந்துகொள்ள ஜார்ஜ் வாஷிங்டன் கூறும் சில விதிமுறைகள்














ஜார்ஜ் வாஷிங்டன் - 
George Washington 
(1732 - 1799) -  
யார் இவர்?
அநேகமாக எல்லோருக்கும் 
தெரிந்த விஷயம் -  
இவர் அமெரிக்க நாட்டின் 
முதல் ஜனாதிபதி என்பது. 
இவரைப் பற்றி விஷயம் 
தெரிந்தவர்கள், கொஞ்சம் 
நிறையவே சொல்வார்கள். 
அமெரிக்க சுதந்திரப் 
போராட்டத்தில் 
இவர் தலைமை தாங்கி 
வெற்றிக்கு வழிசெய்தவர். 









புதிதாக உருவான அமெரிக்கா 
நாட்டை நிறுவினவர்களில் 
இவர் தலையானவர். 
அமெரிக்க அரசியல் சட்டம் உருவாக்கியவர்களில் 
இவரும் ஒருவர்.
8 ஆண்டுகள்(1789 - 1797) - ஜனாதிபதியாக இருந்தவர்.
இவருடைய சாதனைகள் 
ஏராளம். அதனால்தான் 
அமெரிக்கா உருவாகி 
200 ஆண்டுகளுக்கு மேலாக 
ஆனாலும், எத்தனையோ 
ஜனாதிபதிகள் வந்து போனாலும். இவருடைய பெயரை 
இன்னும் அமெரிக்கர்கள் 
ஞாபகத்தில் வைத்துப் போற்றிவருகிறார்கள்.
இவரைப் பற்றியும் இவருடைய சாதனைகளைப் பற்றியும் 
"எக்கச்சக்கமான" புத்தகங்கள்
கட்டுரைகள், மீடியா பேச்சுகள்
சினிமாக்கள் வந்துவிட்டன. 
இன்னும்,அவரைப் பற்றிப் பேசி, எழுதிவருகின்றனர். 
பத்திரிகை படிப்பவர்களுக்கும்
டி.வி. சினிமா பார்க்கிறவர்களுக்கும் 
இது தெரிந்ததாக இருக்கும்.
பல பேருக்குத் தெரிந்திராத
தெரிந்திருக்க வாய்ப்பில்லாத 
ஒரு விஷயத்தைப் பற்றித்தான் 
இந்த வாரக் கட்டுரை.

அது என்ன பிரம்ம ரகசியம்?

ஜார்ஜ் வாஷிங்டன் 
தன்னுடைய 16ஆவது வயதில் 
ஒரு புத்தகம் எழுதினார். 
1747இல் எழுதிய இந்தப் 
புத்தகம்முதலில் வெளிச்சத்திற்கு 
வந்தது 1834ஆம் ஆண்டு. 
அதுவும், ஒரு பகுதிதான். 
முழுவதுமாக
உலகத்தாருக்குத் 
தெரிந்தது.1888ஆம் 
ஆண்டுதான் 
அவர் எழுதிய புத்தகம் - 
George Washington's 
Rules of Civility 
& Decent Behaviour 
in Company 
and Conversation.













இதில் 110 விதிமுறைகள் கொடுத்திருக்கிறார்.
இந்தப் புத்தகம்
இவருடைய பள்ளிக்கூட 
ப்ராஜக்ட்டுக்காக எழுதப்பட்டது. 
இந்தப் பிரதியில் 
இவர் எழுதிய கையெழுத்து 
குழந்தைத்தனமாக இருக்கிறது. 
இலக்கணப் பிழைகளும் 
இருக்கின்றன, வார்த்தை 
பிழைகளும் இருக்கின்றன. 
ஆனால் இதில் சொல்லப்பட்ட 
code of conduct மனிதர்களின் 
நடத்தையை மாற்றக் கூடியதாக 
இருக்கிறது.
இதில் சொல்லப்பட்டதை
எழுத்து பிசகாமல் சிறு 
வயதிலிருந்தே வாஷிங்டன் 
பின்பற்றி வந்திருக்கிறார்.
அவர் அடைந்த உயர்ந்த 
நிலைக்கு இந்த விதிமுறைகள் 
உண்மையிலேயே 
பயன்பட்டிருக்கின்றன.
வாஷிங்டன் இந்தப் புத்தகத்தை 
எழுதத் தூண்டியது 
ஒரு 17ஆம் நூற்றாண்டு 
புத்தகம். 
Youth’s Behaviours or 
Decency in Conversation 
Amongst Men 
by Francis Hawkins. 
Hawkins, தன்னுடைய 
8ஆவது வயதில் 
16 நூற்றாண்டின் 
French Jesuitsகளினால் 
எழுதப்பட்ட விதிகளை 
ஆங்கிலத்தில் 
மொழிபெயர்த்திருக்கிறார். 
Hawkins புத்தகத்தில் 
சொல்லப்பட்ட 
code of conductஐ 
பள்ளிகூட மாணவன்
வாஷிங்டன் எளிதாக்கி 
நல்ல முறையில் கோர்வையாகக் கொடுத்திருக்கிறார். 
இந்தப் புத்தகம் 
Library of Congressஇல் 
பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது.
சரித்திர ஆசிரியர்களின் 
ஒருமித்த அபிப்பிராயம்
வாஷிங்டன் தன் வாழ்நாள் 
முழுவதும் Hawkins சொன்ன விதிமுறைகளைப் பின்பற்றி 
மேன்மை அடைந்தார் என்பது.
பிரான்ஸில் எழுதப்பட்டது 
பிரான்ஸ் தேச அரச சபையில் 
எப்படி நடந்துகொள்ள வேண்டும் 
என்பதற்காக. அதைப் 
புது உலகத்திற்கு 
அறிமுகப்படுத்திய பெருமை 
வாஷிங்டனைச் சேரும். 
பெண்களைப் பற்றி 
சொல்லப்படவில்லை 
என்ற குற்றச்சாட்டு 
இருந்தாலும்
வாஷிங்டன் பெண்களை 
மிகவும் உயர்வாகவும் 
கண்ணியமாகவும் நடத்தினார். 
16ஆவது வயதில்
அவர் பொருளாதாரச் 
சூழ்நிலை காரணமாகத் 
தன் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு 
உள்ளானார். 
எழுத படிக்கத் 
தெரியாத விதவைத் 
தாயாரையும் தன்னுடைய 
4 சகோதரசகோதரிகளையும் 
கஷ்டப்பட்டு காப்பாற்றினார். 
108ஆவது விதியைக் 
கடைசிவரை பின்பற்றி 
மற்றவரையும் 
அதை மறக்கக் கூடாது 
என்று வேண்டிக்கொண்டார். 
அது 
"Honour & obey 
your natural parents 
altho they be poor". 
ஏழையானாலும் 
உங்கள் பெற்றோர்களை 
எப்போதும் கெளரவித்து 
அவர்கள் சொற்படி 
நடக்க வேண்டும்.
இவருடைய வாழ்க்கையில் 
பண்பாடும் ஒழுக்க நெறியும் 
(morals and manners) 
ஒன்றுக்கொன்று 
இணைந்து செயல்பட்டன. 
இவர் வாழ்ந்த காலத்து 
வாழ்க்கை, அவ்வளவு 
சிக்கலானதாக இல்லை. 
வாழ்க்கை எளிமையாகத்தான் 
இருந்தது. 
குடும்பம்தான் பிரதானம். 
எதிலும் ஒரு modesty, அடக்கம்
self restraint (சுயக்கட்டுப்பாடு).
இன்றைய சூழ்நிலை வேறு 
மாதிரியாக அமைந்திருக்கிறது. 
முன்பைவிட இப்போதுதான் 
கட்டுப்பாடும் 
மற்றவர்களை மதிக்கும் 
தன்மையையும் மக்கள் 
வளர்த்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் இன்னும் 
இந்தப் புத்தகத்தில் 
சொல்லப்பட்ட விதிமுறைகள் எல்லோருக்கும்
எந்தக் காலத்துக்கும் 
பொருந்தும் அந்தஸ்த்தைப் 
பெற்றிருக்கிறது.
தான் எழுதியதைப் பின்பற்றி 
நடந்த ஜார்ஜ் வாஷிங்டன் 
பிற்கால இளைஞர்களுக்கு 
ஒரு role modelஆக இருந்ததில் ஆச்சரியமில்லை.
அந்தப் புத்தகத்திலிருந்து 
சில விதிமுறைகளை 
உங்களுடன் பகிர்ந்து
கொள்ளுவதில் 
மிக்க மகிழ்ச்சி. 

விதிகள்:

நாலு பேர் கூடியிருக்கும் சபையில் 
எந்தச் செய்கையில் ஈடுபட்டாலும் கூடியிருப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையில் 
குறை வைக்கக் கூடாது.

மற்றவர்கள் பார்வையில் 
தெரியும்படி உங்கள் கைகளை வைத்துக்கொள்ளுங்கள்.

மற்றவர்கள் மத்தியில் 
உங்களுக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டோ
கை விரல்களினால் தாளம் போட்டுக்கொண்டோ இருக்காதீர்கள்.

மற்றவர்கள் பேசும்போது 
தூங்காதீர்கள்
மற்றவர்கள் நிற்கும்போது 
உட்காராதீர்கள்
மற்றவர்கள் பேசும்போது 
குறுக்கே பேசாதீர்கள்
மற்றவர்கள் நிற்கும்போது நடந்துகொண்டிருக்காதீர்கள்.

இருமும்போதோ, தும்மல் 
வரும்போதோ, பெருமூச்சு 
விடும்போதோ, கொட்டாவி 
விடும்போதோ கைக்குட்டையினால் 
வாயை மறைத்துகொள்ளுங்கள் 
அல்லது உங்கள் முகத்தில் கையை 
வைத்து வேறுபுறம் 
திரும்பிக்கொள்ளுங்கள்.

நெருப்பில் துப்பாதீர்கள்.

மற்றவர்கள் பேசும்போது 
முதுகைக் காட்டாதீர்கள். 
மற்றவர்கள்மேல் சாய்ந்து 
நிற்காதீர்கள். மற்றவர்கள் படித்துக்கொண்டிருந்தாலோ எழுதிக்கொண்டிருந்தாலோ  
தொந்தரவு செய்யாதீர்கள்.

மற்றவர்கள் மத்தியில் 
புத்தகங்களையோ 
பத்திரிகைகளையோ 
படிக்காதீர்கள். 
படிக்க வேண்டிய அவசியம் 
ஏற்பட்டால் அனுமதி பெற்று 
வெளியே செல்லுங்கள்.

மற்றவர்களின் கடிதங்களை 
அவர்கள் அனுமதியின்றிப் 
படிக்காதீர்கள்.

மற்றவர்கள் துக்கத்தைப் 
பார்த்து சந்தோஷப்படாதீர்கள்.

உங்களைவிடப் பெரியவர்களிடம் விவாதிக்காதீர்கள். 
உங்கள் அபிப்பிராயங்களைப் 
பணிவுடன் எடுத்துச் சொல்லுங்கள்.

நல்ல மனிதர்களின் சகவாசத்தைத் தேடுங்கள். 
கெட்டவர்கள் மத்தியில் 
இருப்பதைவிடத் தனிமை மேல்.

4 பேர் கூடியிருக்கும் சபையில் 
உங்கள் மொழி ஒருவருக்கு மட்டுமே தெரியாமல் இருந்தாலும் 
அதில் பேசுவதைத் தவிருங்கள். 
அதே சமயம் ஆபாசமான பேச்சைத் தவிருங்கள்.

பேசுவதற்கு முன் நன்றாக 
யோசியுங்கள். யோசிக்காத 
பேச்சு சங்கடத்தை விளைவிக்கும்.

ஒருவரைப் பாராட்ட வேண்டிய 
நிலையில் மற்றவர்களை 
ஒப்பிட்டுப் பாராட்டாதீர்கள்.

மற்றவர்கள் விஷயத்தைத் 
தெரிந்துகொள்ள ஆசைப்படாதீர்கள். 
2 பேர் தனிமையில் உரையாடிக்கொண்டிருக்கும்போது 
அவர்கள் பக்கம் செல்லாதீர்கள்.

உங்களால் முடியாத காரியத்தை 
எடுத்துச் செயல்பட முயற்சிக்காதீர்கள். அதே சமயம் வாக்குக் கொடுத்தால் 
அதை எப்படியாவது நிறைவேற்றுங்கள்.

உங்களைவிடப் பெரியவர்கள் 
மத்தியில் பேசச் சொன்னால் ஒழிய, பேசாதீர்கள். உங்களைக் கேள்வி 
கேட்டால் நேராக நின்று ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்லுங்கள்.

மற்றவர்கள் பேசும்போது 
அடிக்கடி குறுக்கே புகுந்து 
உங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லாதீர்கள்.

உங்கள் பேச்சு போரடிக்காமல் 
இருக்க முயற்சிபண்ணுங்கள். எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து விலகாதீர்கள். சொன்னதையே 
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.

சபையில் இல்லாதவர்களைப் 
பற்றி அவதூறாகப் பேசாதீர்கள்.

சாப்பாட்டு மேஜையின் மேலே 
சாயாதீர்கள். ரொட்டியைக் 
கத்தியினால் வெட்டுங்கள். 
என்ன சாப்பிடுகிறோமோ 
அதைக் குறை சொல்லாமல் 
சாப்பிடுங்கள்.

எண்ணெய்ப் பிசுக்கு உள்ள
கத்தியால் உப்பை எடுக்காதீர்கள்.
அந்தக் கத்தியை ரொட்டி வெட்ட உபயோகிக்காதீர்கள்.

ஒரு வாய்க்குள் எவ்வளவு போகுமோ 
அந்த அளவு ரொட்டியைத்தான் 
சாஸில் தோய்க்க வேண்டும்.

சூடான சூப்பை வாய்விட்டு 
ஊதாதீர்கள். அதன் சூடு 
குறையும்வரை பொறுத்திருங்கள்.

வாயில் போட்ட உணவு 
விழுங்கப்படும் முன் 
இன்னொரு கவளத்தைப் போட்டுக்கொள்ளாதீர்கள்.

வாயில் தண்ணீரோ, உணவோ இருக்கும்போது பேசாதீர்கள்.

ரொம்ப மெதுவாகவோ
ரொம்ப அவசரமாகவோ 
தண்ணீரைக் குடிக்காதீர்கள். 
குடித்தபின் கைக்குட்டையினால் 
வாயைத் துடைத்துக்கொள்ளுங்கள். சத்தத்தோடு தண்ணீரையோ
சூப்பையோ சாப்பிடாதீர்கள்.

பற்களை மேசை விரிப்பாலோ 
கத்தியாலோ சுத்தம் செய்யாதீர்கள்.

மற்றவர்கள் மத்தியில் வாயைக் கொப்பளிக்காதீர்கள்.

என்ன காரணத்தைக் கொண்டும் சாப்பிடும்போது உங்கள் 
கோபத்தைக் காட்டாதீர்கள்.

கடவுளைப் பற்றியும் அவர் 
குணங்களைப் பற்றியும் 
பேச வேண்டி வந்தால் 
அதில் ஒரு மரியாதையும் 
Seriousnessம் இருக்க வேண்டும்.

உங்கள் பெற்றோர்கள் எவ்வளவு 
ஏழையாக இருந்தாலும் எப்போதும் மரியாதையுடன் நடத்துங்கள்.

உங்கள் கோரிக்கைகள் 
மனிதத்தன்மை உடையதாக 
இருக்க வேண்டும். 
பாவக் காரியங்களாக 
இருக்கக் கூடாது.

எப்போதும் மனச்சாட்சி என்ற 
சிறு தெய்வீக ஒளி உங்கள் மனதில் 
இருக்க பாடுபடுங்கள்.

கிளறல் தொடரும்...






2 comments:

வழிப்போக்கன் said...

நமது ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை போன்ற நீதிநூல்களையும், பர்த்ருஹரியின் நீதி சதகத்தையும் நினைவூட்டுகிறது.
தொடரும் போட்டு ‘சர்ப்ரைஸ்’ வைத்து விட்டீர்கள்.

வழிப்போக்கன் said...

நமது ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை போன்ற நீதிநூல்களையும், பர்த்ருஹரியின் நீதி சதகத்தையும் நினைவூட்டுகிறது.
தொடரும் போட்டு ‘சர்ப்ரைஸ்’ வைத்து விட்டீர்கள்.