நெடுநீர் – தீர்கசூத்ரி – ப்ரோக்ராஸ்டிநேஷன்.
நெடுநீர்-அழகான தமிழ்ச் சொல் : குறள் 605.
தீர்கசூத்ரி–சமஸ்கிருதச் சொல்: கீதை 18.28.
ப்ரோக்ராஸ்டிநேஷன் – procrastination – ஆங்கிலம்:
சமீப காலத்தில் மீடியாக்களில் அதிகமாகப் பேசப்படுவது, எழுதப்படுவது.
தீர்கசூத்ரி–சமஸ்கிருதச் சொல்: கீதை 18.28.
ப்ரோக்ராஸ்டிநேஷன் – procrastination – ஆங்கிலம்:
சமீப காலத்தில் மீடியாக்களில் அதிகமாகப் பேசப்படுவது, எழுதப்படுவது.
இவற்றின் அர்த்தம் என்ன?
அர்த்தம் தெரியாமலேயே இந்தவார்த்தைகளின் முழு பரிமாணத்தையும் நம்மில் பல பேர் எல்லா விஷயங்களிலும், சில பேர் சில நேரங்களிலும் கடைப்பிடித்து வந்திருக்கிறோம்.தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம். குழப்பியது போதும் என்று நினைக்கிறேன்… இந்த மூன்று சொற்களும் ஒரே அர்த்தத்தைத்தான் குறிக்கின்றன.
புரியும் தமிழில் சொல்ல வேண்டுமானால்இதன் அர்த்தம் –காலம் தாழ்த்தல், காலம் கடத்தல், ஒத்திப்போடுதல், தள்ளிப்போடுதல், நீடித்துச் செய்யும் இயல்பு………. இப்பொழுது நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்….. guilty ornot guilty? - குற்றவாளியா? நிரபராதியா?
நானும் ஒரு குற்றவாளிதான். இந்தவலைப்பூவுக்குப் பிள்ளையார் சுழி போட்டது 2006ஆம் ஆண்டு. என்னுடைய முதல் கட்டுரை 2011இல் தயாராகிக்கொண்டிருக்கிறது.
So what? இப்ப என்ன நடந்துவிட்டது, குடியா மூழ்கிவிட்டது? என்று சில பேர் கேட்கலாம். விடை தெரியாது. பள்ளி நாட்களிலும்சரி,உத்தியோக நாட்களிலும் சரி. கடைசி நேரம்(deadline)வரை தூங்கிவிட்டுக் கடைசியில் கடுமையாக உழைத்து வேலையைச் செய்து முடிப்பது வழக்கம்.
இது தேவையா? ப்ளான் பண்ணக் கூடாதா? பண்ணவில்லை. யாரும் கண்டிக்கவில்லை. யாரும் சொல்லவில்லை.
நான் பண்ணிய தவறை நீங்களும் பண்ணக்கூடாது என்பதற்காக இந்த கட்டுரை.
மக்கள் திருந்துவார்கள் என்று நம்பிக்கைஇல்லை. ஏனெனில் வேத காலம் முதல் தற்காலம்வரை பெரிய பெரிய மகான்கள், காலம்தாழ்த்தல் ஒரு கெட்ட பழக்கம் என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.அப்படியும் இந்தப் பழக்கம் சீரும் சிறப்புமாகத் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
இருந்தாலும் என் பங்குக்கு ‘சங்கை’ ஊதிவைக்கிறேன்.
இருந்தாலும் என் பங்குக்கு ‘சங்கை’ ஊதிவைக்கிறேன்.
காலம் தாழ்த்தல் ஏன் கெட்ட பழக்கம்என்று சொல்கிறார்கள்? வள்ளுவரிடமிருந்துஆரம்பிப்போம்….நெடுநீர், மறவி, மடிதுயில் – காலம் தாழ்த்தல், மறதி, சோம்பல், நீண்ட துயில் நான்கும் கேட்டை நோக்கிச் செல்பவர்கள் உபயோகிக்கும் படகுகள்.
கிருஷ்ண பகவான் கீதையில் ‘காலம் தாழ்த்தி வேலை செய்பவன் (தீர்கசூத்ரி) தாமஸ குணம் படைத்தவன்’என்கிறார்.
கிருஷ்ண பகவான் கீதையில் ‘காலம் தாழ்த்தி வேலை செய்பவன் (தீர்கசூத்ரி) தாமஸ குணம் படைத்தவன்’என்கிறார்.
மஹாபாரதத்தில் பீஷ்மர் தர்மபுத்திரருக்கு‘3 சகுல மீன்கள்’ என்ற கதை மூலம்
“காரியங்களைத் தள்ளிப் போடுபவர்கள் எப்பொழுதும் கஷ்டத்திற்கு உள்ளாவர்கள்” என்று விளக்குகிறார். (கதை கட்டுரை முடிவில் )
“காரியங்களைத் தள்ளிப் போடுபவர்கள் எப்பொழுதும் கஷ்டத்திற்கு உள்ளாவர்கள்” என்று விளக்குகிறார். (கதை கட்டுரை முடிவில் )
‘காலம் தாழ்த்தல்’ காலத்தின் திருடன் (Edward Young).
காலம் தாழ்த்தல் நம்மை நாமே அழித்துக்கொள்ளும் ஆயுதம் (Selby)
இது தவிர மனோதத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் என்று நிறைய பேர் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுவருகிறார்கள்.
அப்படி என்ன இது ஒரு ‘கொலை குற்றமா’.? அதைவிட மோசம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். இது ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையைமட்டும் பாதிப்பதில்லை. ஒரு சமுதாயத்தைப் பின்னோக்கிச் செலுத்தும் ஆயுதம் இது.
எதனால் மக்கள் காரியங்களை ஒத்திப்போடுகிறார்கள்? எத்தனையோ காரணங்கள்… முக்கியமான சில இதோ…
1. பயம்: வெற்றி,தோல்வியை கண்டு.
2. எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியாத நிலை.
3. குழப்பமான கடினமான வேலை.
4. கவர்ச்சியில்லாத வேலை.
5. “நான் எப்பொழுதுமே நெருக்கடியில் நன்றாக வேலை செய்பவன்” என்ற தவறான நினைப்பு.
6. கவனத்தைத் திருப்பும் அநேக விதமான கவர்ச்சிகள் – டிவி, இண்டர்நெட், யூ ட்யூப், MP3 etc.
7. தன்னுடைய திறமையில் நம்பிக்கையின்மை.
8. தீர்மானமானன முடிவை எடுக்க முடியாத பலவீனம்.
9. ஆர்வத்தைத் தூண்டாத லட்சியங்கள்.
10. லட்சியப் பாதையில் சோர்வு.
11. எதிர்மறை நினைவுகள்.
நமக்கு எதைச் செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தாலும் அதைச் செய்யாமல் தேவையில்லாத காரியங்களில் ஈடுபட்டு முக்கியமான காரியங்களைத் தள்ளிப் போடுகிறோம்.
விளைவு - மனஉளைச்சல், தோல்வி, ரத்தக்கொதிப்பு, சோர்வு, நிறைய எதிர்மறைச் சிந்தனைகள்.
காலம் தாழ்த்தல் மனபான்மையைத் தடுப்பதுஎப்படி?
நிறைய யோசனைகள் கைவசம். அவற்றில் சிலஇங்கே…..
1. யோசித்துகொண்டே இருக்காதே… வேலையைத் தொடங்கு.
எல்லாக் காரியங்களுக்கும் திட்டம் அவசியம்தான். அதற்காக ‘perfect’ plan (அப்பழுக்கு இல்லாதத் திட்டம்) வரும்வரை காரியங்கள் ஒத்திப்போடாதீர்கள்.
2. காரியத்தின் தன்மையை அநாவசியமாகப்பெரிதுபடுத்தாதீர்கள்.
சுருக்கமாக, எலியை மலையாகஆக்காதீர்கள்.
3. சிறு காரியங்களை ஒத்திப்போடாதீர்கள். அவையே பிறகு
வெகு கஷ்டமானதாக மாறிவிடும்.
வெகு கஷ்டமானதாக மாறிவிடும்.
4. முதல்அடியை எடுத்து வையுங்கள்.
மார்டின் லூதர் கிங் சொல்கிறார் “நீ மாடிப் படிகள்அனைத்தையும் பார்க்க முயலாதே. முதல் அடியில் காலை வையுங்கள்."
5. கஷ்டமான வேலையை முதலில் செய்ய ஆரம்பியுங்கள்.
6. எதிலும் முடிவை எடுங்கள் - எந்த முடிவானாலும் சரி. (Take a decision — any decision)
7. ஈஸாப் கதைகளில் இருக்கும் ‘வெட்டுக்கிளியும் எறும்புகளும்’ கதையை அடிக்கடி நினைவுகூருங்கள்.
8. “நாளை நமதே”என்று நினைத்துச் செயல்படாதீர்கள். ‘நாளை’ என்பது ஒருகேள்விக்குறி.
9. ஆங்கிலத்தில்ஒரு பொன்னான வாக்கு “Yesterday was history. Tomorrow is mystery. Present is agift. That’s why it is called present.”
காலம் தாழ்த்தும் மனப்பான்மையை விட்டுவிட்டால் உங்களுக்குக் கிடைப்பது மனஅமைதி. மனத்தில் அமைதி இருந்தால் வாழ்க்கைச் சக்கரம் மிகச் சிறப்பாக ஓடும்.
முடிவாக,
ஒன்றே செய்ய வேண்டும் – அதுவும் நன்றே செய்ய வேண்டும். அதுவும் இன்றே செய்ய வேண்டும்.
…கிளறல் தொடரும்
மஹாபாரதம்: சாந்திபர்வம் Ch. XXXVII
மூன்று சகுல மீன்களின் கதை
தருமபுத்திரரைப் பார்த்து பீஷ்மர்சொல்லுகிறார்:
இந்த உலகத்தில் சந்தோஷத்தைஅனுபவிப்பவர்கள்,இரண்டு விதமான மனிதர்கள்.
முதல்வர்: எதிர்காலத்தைப் பற்றிச்சிந்தித்து உடனுக்குடன் சரியான முடிவை எடுப்பவர் — ‘வருமுன் காப்பவர்’. இரண்டாவது ரகம் – திடச் சித்தத்துடன் சரியானச் சமயத்தில் எதாவது ஒரு வழியையோசித்துச் செயல்படுவர் (presence ofmind).
காரியங்களைத் தள்ளிப்போடுபவர்எப்பொழுதும் கஷ்டத்துக்குள்ளாகிறவர்.
இதற்கு உதாரணம் இந்தக் கதை — :
அதிக ஆழமில்லாத ஒரு ஏரியில் ஒரு மீன்வம்சம் இருந்தது. அதில் மூன்று சகுல மீன்கள். நல்ல நண்பர்கள். முதலாவது — வருமுன் காப்பவன். இரண்டாவது — சரியானச் சமயத்தில் எதையாவது யோசித்துச் செயல்படுபவன்.மூன்றாவது —எதையும் “அப்புறம் பார்த்துகொள்ளலாம்” என்ற “காலம்தாழ்த்தி”.
ஒரு நாள் ஒரு மீனவன் அந்த ஏரியிலிருந்ததண்ணீரை இறைத்துவிட ஆரம்பித்தான்.
‘வரும்முன் காப்போன்’ மீன் தன் நண்பர்களிடம் சொல்லிற்று. “ஆபத்து. இன்னும் சிறிது நேரத்தில் நம்மை எல்லாம் இந்த மீனவன்எடுத்துக்கொண்டு போய்விடுவான். இப்பொழுதே நாம் வேறிடத்திற்குச் செல்வோம்” என்று. ‘சமயோசிதவாதி’ – “அவசரமில்லை. ஆபத்து வந்தால் நான் சமாளித்துக் கொள்வேன்” என்றது. ‘காலம்தாழ்த்தி’ மீன் “வீண் பயம். நமக்குஒன்றும் வராது”என்று அலட்சியமாகச் சொல்லிற்று. ‘வருமுன்காப்போன்’ தன் நண்பர்களை விட்டு ஒரு பாதுகாப்பான வேறு ஒரு ஏரிக்குப்போய்விட்டது.
மீனவன் தண்ணீர் வற்றிவிட்டது என்றுதெரிந்தவுடன் ஒரு கயிற்றில் அந்த மீன்களைக் கட்ட ஆரம்பித்தான். ‘சமயோசித’ மீன் கயிற்றில்கட்டிப்போட்டது போல் ஒட்டிக்கொண்டது. மீனவன் கயிற்றில் கட்டிய மீன்களைச் சிறிதுதண்ணீரில் கழுவ முயற்சிக்கும்போது ‘சமயோசித’ மீன் சரியானநேரத்தில் அந்தக் கயிற்றிலிருந்து தப்பித்துவிட்டது.
‘காலம்தாழ்த்தி’ மீன் ஒரு முயற்சியும் எடுக்காமல் வலையில் மாட்டிக்கொண்டுஉயிரிழந்தது.
1 comment:
A beautiful beginning. I enjoyed reading the three episodes. I feel as if I am hearing you in the Jolleyman Park - so interesting. Anecdotes and related stories add to its management philosophy. Kuupayai Kilariyadhil Manikkam. Continue your spirits and bring them in words.
Venkataraman
Post a Comment