Sunday, April 22, 2012

“ஓம் (Om) - காஃபிர் (Kafir)”



இது என்ன புதுமையான தலைப்பு.

ஒன்று — “கோகுலாஷ்டமி
மற்றது — “அப்துல் காதர்

இரு துருவங்களான இரண்டு விஷயங்களில் 
என்ன சம்பந்தம் இருக்கிறது...  
இருக்கிறது. நான் சொல்லவில்லை. 
சொன்னவர், ஒரு பெரிய மகான், யோகி. 
சுவாமி விவேகானந்தரால் 
அத்வைத சித்தாந்தத்தின் வழிகாட்டி" 
(Torch Bearer) என்று அழைக்கப்பட்டவர். 
இந்தியாவின் Noblest Soul என்று 
மகாத்மா காந்தியால் வர்ணிக்கப்பட்டவர். 

சஸ்பென்ஸ் போதும்.

அவர் பெயர் சுவாமி ராமா தீர்த்தர். 
காலம் 1873 - 1906. 
பிறந்த ஊர் - குஜரன் வாலா கிராமம், பஞ்சாப். 
பூர்வாசிரமப் பெயர் - கோஸெயின் தீர்த்த ராமா.




நன்றாகப் படித்துக் கணிதப் பேராசிரியராகப் 
பணியாற்றியிருக்கிறார். 
சுவாமி விவேகாந்தரைச் சந்தித்த பிறகு 
வாழ்க்கையில் ஒரு திருப்பம். 
சந்நியாசம் வாங்கிக்கொண்டு 
நாடு முழுவதும் பிரயாணம்செய்து 
அத்வைத வேதாந்தத்தைப் பரப்பினார். 
அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுக்கு 
விஜயம்செய்து பாரதத்தின் இந்து தர்மத்தை 
விளக்கிச் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். 
தன்னுடைய வேதாந்தக் கொள்கையை 
Practical Vedanta என்று அழைத்தார். 
தன்னுடைய 33ஆவது வயதில் 
இவ்வுலகத்தைவிட்டுச் சென்றுவிட்டார். 
இவருடைய முழு சரித்திரத்தைப் படிக்க 
விரும்புகிறவர்கள் www.ramatirtha.org 
என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இவர் ஒரு மிருதுவான மென்மையான 
யோகி. எல்லா மதத்தினரும் இவரிடம் 
பிரியமாக இருந்தனர். 
எல்லோரிடமும் அன்பும் கருணையும் 
காட்டி அன்பு மார்க்கத்தைப் போதித்தார்.

1905ஆம் வருடம், ஒரு நாள் 
சில முஸ்லீம் பெரியவர்கள் இவரைச் 
சந்தித்து உரையாட வந்தனர். 
அவர்கள் ராமா தீர்த்தர் இருக்கும் 
அறையில் நுழைந்தவுடன் 
சுவாமிஜியை முஸ்லீம் வழக்கப்படி 
“Adab Arz'' ‘ஆதாப் ஆர்ஸ்என்று சொல்லி 
வாழ்த்து சொன்னார்கள். 
சுவாமிஜி, அவர்களை ஓம் என்று 
சொல்லி அன்புடன் வரவேற்றார். 
வந்திருந்த பெரியவர்கள், ஏன் 
சுவாமிஜி வழக்கத்திற்கு மாறாக 
தங்களை வரவேற்றார் என்று கேட்டார்கள். 
சுவாமிஜி அன்புடன் பெரியவர்களே
இதற்கு ஒரு காரணமோ ரகசியமோ இல்லை. 
ராமாவிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் 
உங்களுக்கு தந்தேன். என்னிடம் இருப்பது 
ஓம் ஒன்றுதான்என்றார்.

பெரியவர்கள் விளக்கம் கேட்டார்கள். 
சுவாமிஜி சொன்னார்:-

கடவுளுக்குப் பெயர் கிடையாது. 
வெவ்வேறு மக்கள் வெவ்வேறு 
பெயரில் அவரை அழைக்கிறார்கள். 
வெவ்வேறு மதத்தினர் கடவுளுக்கும் 
தங்களுக்கும் ஒரு உறவை ஏற்படுத்திக்
கொண்டால் கடவுளுடன் ஒன்றுபட 
முடியும் என்று நினைக்கிறார்கள். 
அந்த உறவு எப்படி வேண்டுமானாலும் 
இருக்கலாம். 
ஆனால் உண்மை ஒன்றுதான். 
அவரை வார்த்தைகளால் வர்ணிக்க 
முடியாது. 
ஆனால் இந்திய யோகிகள் 
அவரை ஓம்’ என்ற அடையாளம் 
மூலம் நெருங்க முடியும் என்று 
சொல்லியிருக்கிறார்கள்என்றார்.

சுவாமிஜி, மேலும் ஓம் என்பது 
ஒரு பொதுச் சொத்து. 
உலகத்தில் உள்ள எல்லோருக்கும் 
சொந்தமானதுஎன்றார்.

இதை முஸ்லீம் பெரியவர்கள் ஆட்சேபித்து 
தங்கள் மதப் புத்தகங்களில் ஒரு இடத்திலும் 
ஓம் பற்றிச் சொல்லப்படவில்லை என்றார்கள்.

சுவாமிஜி கருணையுடன் சொன்னார்:

நான் இப்பொழுது சொல்லப் போவதைக் 
கவனமாகக் கேளுங்கள். உங்கள் குர்ரான் 
ஆரம்பத்தில் மேல் பக்கத்தில் உள்ள 
மூன்று எழுத்துக்கள்

alif (A) அலிஃப், lam (L) லேம், Mim (M) மிம்.

உங்களில் படித்த யாராவது இந்த எழுத்துகளின் 
விளக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?” என்றார். 
அதற்கு ஒரு முஸ்லீம் பெரியவர்
அது ரகசியம். அல்லா தன் வசமே 
வைத்துக்கொண்டார்என்று சொன்னார்.

சுவாமிஜி, சிரித்துக்கொண்டே 
உங்கள் மதப்படி கடவுள் மனித 
சமுதாயத்தின் நன்மைக்காக 
குர்ரான் முழுவதையும் சொன்னார். 
அப்படியானால் இந்த மூன்று 
விஷயங்களை மட்டும் ஏன் 
ரகசியமாக வைத்துக்கொண்டிருக்கிறார்
அது அப்படியில்லை. 
குர்ரானில் முழு நம்பிக்கை 
வைத்து இருக்கும் முஸ்லீம்களில் 
பெரும்பான்மையோருக்கு இதன் 
விளக்கம் தெரியாது.

Alif (A) அலிஃப், Lam (L) லேம்
Mim (M) மிம் மூன்றும் 
Alif (A), Wao (L), mim (M) 
அதாவது A, O, M or OM  - 
, , ம், ஓம்என்றார்.

இதற்கு முஸ்லீம் பெரியவர்கள் 
L எழுத்தும் எழுத்தும் ஒன்றாகாது 
என்றார்கள்.

இதற்கு சுவாமிஜி, அரேபிய இலக்கணப்படி 
L என்ற எழுத்தை O என்று 
உச்சரிக்கலாம் — 
அது ஒரு உயிர் எழுத்துக்கும் மெய் 
எழுத்துக்கும் நடுவில் வந்தால். 
உதாரணம்.

Shamsuddin எழுதுவது Shamsaldin
Nizammudin  எழுதுவது Nizamaldin
அதனால் ALM என்பதில் ஒரு ரகசியமும் 
இல்லை” என்றார். 
இது ஓம்தான். 
ரகசியமாக வைத்ததற்காகக் 
கடவுளை நிந்திப்பவர்கள் 
“Kufra” (குஃப்ரா) என்றார்.

அரபிய இலக்கணம் தெரியாத 
முஸ்லீம் பெரியவர்கள் சுவாமிஜி 
விளக்கத்தைக் கேட்டு மகிழ்ச்சி 
ஆராவாரம் செய்தார்கள். 
அவர்கள், சுவாமிஜியிடம் 
“Kufra”க்கும் “Kafir” க்கும் 
உள்ள வித்தியாசத்தை விளக்கச் 
சொன்னார்கள்.

சுவாமிஜி சொன்னார் இந்த இரண்டு 
வார்த்தைகளையும் முஸ்லீம்கள் 
தவறாக உபயோகப்படுத்துகிறார்கள். 
இஸ்லாம் சாந்தியை போதிக்கும்ஒரு மதம். 
கடவுளின் அன்பைப் போதிக்காமல் 
சில சுயநலவாதிகள் விரோதத்தைப் 
பரப்பிவருகிறார்கள். 
இது தவறு. 
குப்ரா என்றால் மறைப்பது’ (Hide). 
எதை மறைப்பது - உண்மையை. 
உண்மையை மறைப்பவன் ‘Kafir' (infidel). 
தன்னுடைய அகம்பாவத்தினாலும் 
சுயநலத்தினாலும் சில மனிதர்கள் 
இஸ்லாம் மதத்தின் சாத்வீகத் தன்மையை 
மறைத்து விரோத மனபான்மையை 
வளர்த்து ‘Kafir’ — பாவிகளாக 
ஆகிறார்கள்” என்றார்.

கடவுளை எல்லாப் பெயர்களிலும் 
எல்லா உருவங்களிலும் காண்கிற 
சுவாமி ராமா தீர்த்தரின் 
போதனைகளைப் 
பின்பற்றி அமைதி பெறுவோம்.

ஓம் சாந்தி.

Souce: 
Self Knowledge Journal                                           


...கிளறல் தொடரும்



No comments: