Sunday, April 01, 2012

உடற்பயிற்சி செய்யாததற்கு Ready-made நொண்டிச் சாக்குகள்.


சாப்பிடுவது, தூங்குவது போன்று உடற்பயிற்சியும் 
நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கம் என்று 
நம்மில் பல பேர் நினைப்பதில்லை.

உடலில் வியாதியின் அறிகுறி தெரிந்த பிறகு 
டாக்டர் அட்வைஸ்பேரில், அநேகர் 
உடற்பயிற்சி  செய்ய ஆரம்பிக்கிறார்கள். 
ஏன், உடற்பயிற்சியை ஒரு அன்றாடச் 
சமாசாரமாக நினைப்பதில்லை என்ற 
கேள்விக்குக் கிடைத்த பதில்கள் 
கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. 
பெரும்பாலான பதில்கள்
தமிழ் அகராதியில் இருக்கும், 
நொண்டிச் சாக்கு’ என்ற வார்த்தைக்கு 
உதாரணங்கள்.


நொண்டிச் சாக்கு 1
நான் பருமனாக இருக்கிறேன். 
எனக்கு உடற்பயிற்சிச் செய்ய 
ஊக்கம் இல்லை.

இப்படி ஒரு எண்ணம், உங்களுக்கு இருந்தால் 
அதை உடனே மாற்றிக்கொள்ளவும். 
ஒரு அமெரிக்க ஆராய்ச்சிப்படி
குண்டாக இருப்பது (obesity), 
அதிக எடை (over weight).  
இந்த இரண்டுதான் புகைபிடிப்பதைவிட 
மரணத்தைக் விளைவிக்கும் வியாதிகள் 
என்று கணித்திருக்கிறார்கள்.
இந்த சர்வேபடி, இருதய நோய், நீரிழவு
மார்பகப் புற்றுநோய் என்று ஊரில் இருக்கும் 
எல்லா வியாதிகள் வருவதற்கும் 
வாய்ப்புகள் உண்டு. 
அளவாகச் சாப்பிட்டு, தினசரி உடற்பயிற்சி 
தொடர்ந்து செய்துவந்தால் உங்கள் 
எடையைக் குறைக்கலாம்.
நோயற்ற ஒல்லியான உடல் வாகுக்கு தினசரி 
30 நிமிட நடைபயிற்சி (walking)  செய்யுங்கள். 
அது போதும்.

நொண்டிச் சாக்கு - 2
நான் ரொம்ப ‘busy’;  
உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை.

நேரம் என்பது நாம் உருவாக்கிக்கொள்வது. 
நேரத்தை எப்படி வெவ்வேறு காரியங்களுக்குப் 
பகிர்ந்து செலவழிப்பது என்பது கற்றுக்கொள்ள 
வேண்டிய ஒரு கலை (Time Management).

நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் 
உடற்பயிற்சி ஏதாவது ஒரு வகையில் பாதிக்கிறது. 
உங்கள் செயல்பாடுகளைத் திறம்படச் செய்ய 
அது உதவுகிறது. 40, 60 நிமிடத் 
தீவிர உடற்பயிற்சி தேவையில்லை. 
தீவிரமான 20 நிமிட உடற்பயிற்சி 
செய்ய நேரத்தை ஒதுக்குங்கள். 
அது உங்களால் முடியும்.
ஒரே இடத்தில் உட்காராமல் தொடர்ந்து 
நடந்துகொண்டிருங்கள். லிப்ட்களை 
உபயோகிக்காமல் மாடிப்படிகளை 
உபயோகியுங்கள். 
சைக்கிள் உபயோகிக்கச் சந்தர்ப்பம் 
இருந்தால் காரை உபயோகிக்காதீர்கள்.

நொண்டிச் சாக்கு - 3
Gymல் போய் உடற்பயிற்சி செய்ய 
எனக்கு வசதியில்லை.

உடற்பயிற்சி செய்ய club, gym, YMCA 
என்று காசு செலவழித்துச் செல்ல 
வேண்டியதில்லை.

வசதியுள்ளவர்கள், ஒரு treadmill அல்லது 
சைக்கிள் வாங்கி வீட்டிலேயே 
உடற்பயிற்சி செய்யலாம். 
வசதியில்லாதவர்கள், விலைகுறைவான 
மெடிஸன் பந்துகள்டம்ப்பெல்ஸ் 
வாங்கி உபயோகிக்கலாம். 
அதுவும் முடியாதவர்கள், யோகா, பிலாடிஸ் 
போன்ற aerobic உடற்பயிற்சிகள் 
செய்யலாம்.

நொண்டிச் சாக்கு - 4
உடற்பயிற்சி மூலம் எனக்கு 
முழுவதுமான பலன் கிடைப்பதில்லை.

பொறுமை அது நிறையவே தேவை. 
ஒரு பவுண்ட் தசையைத் தயார்பண்ண 
6 வாரம் ஆகும். அதைக் கண்கூடாகப் 
பார்க்கும்வரைஇடையில் நிறைய பலன்கள் 
ஏற்படும். 
நல்ல தூக்கம், தன்னம்பிக்கையில் 
நல்ல மாற்றம்- என்று பல மாற்றங்களை 
நீங்கள் உணரலாம். 
பட்டினி கிடக்காதீர்கள். சிறு அளவுகளாக
4,5 தடவை சாப்பிடுங்கள்.

நொண்டிச் சாக்கு - 5
உடற்பயிற்சி எனக்கு ஏதாவது 
‘injury’ஐ கொடுக்கும். 
அதைக் கண்டு எனக்கு பயம்.

இது ஒரு தவறுதலான எண்ணம். 
எதிலும் நிதானத்தோடு செயல்படுங்கள். 
கொஞ்சம்கொஞ்சமாக உடற்பயிற்சியின் 
காலத்தையும் உடற்பயிற்சியின் 
தன்மையையும் அதிகரித்துக்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் முன் 
உங்கள் உடலின் வெப்பத்தை 
warm up மூலம் அதிகரித்துக்கொள்ளுங்கள். 
stress exercise பண்ணாமல் 
உடற்பயிற்சி செய்யாதீர்கள். 
எதையும் அளவோடு செய்யுங்கள். 
உங்கள் சரீரத்தைக் கேட்டு” 
நடந்துகொள்ளுங்கள்.

நொண்டிச் சாக்கு - 6
நான் பருமனாக இல்லை. 
நான் ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

உங்கள் “waist size” குறைப்பதுதான் 
உடற்பயிற்சியின் நோக்கம் இல்லை. 
வருமுன் காப்பதுதான் உடற்பயிற்சியின் 
லட்சியம். 
ஒரு நாளில் 20/30 நிமிட உடற்பயிற்சி 
உங்களுக்கு எத்தனையோ நன்மைகளைச் 
செய்யும். 
வியாதிகளின் பாதிப்புக் குறைவது ஒரு புறம். 
உங்கள் தன்னம்பிக்கை, மன அழுத்தம் 
இல்லாத வாழ்க்கை என்ற அளந்து 
சொல்ல முடியாத பலன்கள் எத்தனையோ.

உடற்பயிற்சி உங்கள் மேனி அழகை 
பிரகாசிக்கச் செய்யும். 
உங்கள் metabolism  நன்றாக செயல்படும். 
உங்கள் தசை நார்கள் செழிப்பாக இருக்கும். 
நோயற்ற வாழ்விற்கு உடற்பயிற்சி 
அவசியம் தேவை.

நொண்டிச் சாக்குகள் சொல்வதைத் தவிர்த்து
செயல்பட ஆரம்பியுங்கள்.

It's never too late.

... கிளறல் தொடரும்.

No comments: