Monday, November 12, 2012

என்னை நினைவு இருக்கிறதா? நான் தான் உங்கள் தாயின் மணிக்கொடி

பாரத தாயின் அருமை குழந்தைகளே!
நான் தான், உங்கள் தேசிய கொடி.
முதலில், என் தீபாவளி வாழ்த்துக்கள்.
நோய் நொடி இல்லாமல் வாழ, என் ஆசிகள்.

ரொம்ப நாளாகவே என்னுள் ஒரு உறுத்தல்.
உங்களிடம் பேசித்தான் ஆக வேண்டும்-
இது உங்களையும் என்னையும் பற்றியது.
"அதற்கு இது தான் நேரமா? 
நல்ல நாளும் அதுவா?"
என்று கேட்பது,புரிகிறது.
அதற்கு காரணம்,
நான் எப்படி தேசம் பூராவுக்கும் 
சொந்தமோ,அதே மாதிரி,
தீபாவளி ஒன்று தான்,ஒரு தேசிய 
பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
அதனால் தான், இந்த 
சந்தர்ப்பத்தை தேர்ந்தெடுத்தேன்.

எனக்கு நல்ல நினைவு இருக்கிறது..
1947,ஆகஸ்ட் 15,சுதந்திர தினம்.
எப்படி எல்லாம் எனக்கு மரியாதை செய்து
"தாயின் மணிக் கொடி பாரீர் "
என்று கோஷம் போட்டு,என் முன் 
"ஆடுவோமே..பள்ளு பாடுவோமே"
என்று ஆடி பாடி, நீங்கள் மகிழ்ந்தீர்கள்,
என்பது -ஒரு பசுமையான நினைவு.
அதே மாதிரி,
நம்முடைய முதல் குடியரசு தினம்-
ஜனவரி,26,1950.மறக்க முடியுமா?

என்னைப் பற்றிய, அந்த உற்சாகம் ,
உங்களில் எத்தனை பேருக்கு 
இன்னும் இருக்கு?-

சங்கடமான கேள்வி
விடை சுலபம்.
இல்லவே இல்லை.
Zero enthusiasm--
மன்னிக்கவும்..
வருடத்தில் 2 நாட்கள், நீங்கள் 
நிச்சயாமாக என்னை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய 
கட்டாயத்தில் இருக்கிறீர்க்ள்.
சுதந்திர தினம்,குடியரசு தினம்,
சம்பிராதய சடங்குகள்.
அவ்வளவு தானா,என் Roll?
என்னுடைய முக்கியத்துவம் 
குறைந்து கொண்டு வருகிறது 
என்று எனக்கு தெரிகிறது.

பல பள்ளிகளில் கொடி வணக்கம் 
விடப்பட்டு விட்டது என்பது 
வேதனைக்குறிய விஷயம்.

ஆரம்ப காலத்தில்,
சினிமா கொட்டகைகளில்,
படம் முடிந்தவுடன் என்னை காட்டி, 
தேசிய கீதத்தை போடுவார்கள்.
எல்லோரும் இருக்கையிலிருந்து
எழுந்து வணக்கம் செய்யும் காட்சியை 
பெருமையாக நினைத்திருந்தேன்.
அந்த நிலைமை மாறி மக்கள்
என் கொடியை கண்டவுடன் 
walk out பண்ண ஆரம்பித்தவுடன்
"இது எனக்கு தேவை தானா ?
என்று புலம்பினேன்.
நல்ல வேளை..சினிமாக்காரர்கள் 
அந்த"கெட்ட" பழக்கத்தை 
நிறுத்திவிட்டார்கள்..
மிக்க நன்றி.

நான் யார்? நான் எதை குறிக்கிறேன்?
நான் யாருடைய பிரதிநிதி?
என்னை, எதற்காக படைத்தார்கள்?
இந்த கேள்விகளுக்கு விடை வயதான 
பெரியவர்களுக்கு தெரிந்திருக்கும்.
ஏன்,மாணவ்ர்களுக்கு கூட தெரிந்திருக்கலாம்.
அவர்கள்-டி.வியில் பரிசு வாங்க--
Quizக்காக-படித்திருப்பார்கள்.
விடைகள் தெரியும்.
ஆனால் ,அவைகளின் உட்கருத்து
புரிந்திருக்காது..

எல்லோருக்காகவும்,
இதோ என்னைப் பற்றிய 
ஒரு சிறு சுய சரித்திரம்.

சுதந்திர போராட்டத்தின் போதே,
மஹாத்மா காந்தி போன்ற தேசிய 
தலைவர்கள்,வாழ்வதிற்கும்,
போராடி சாவதற்கும்,
ஒரு பொதுவான கொடியின் 
அவசியத்தை உணர்ந்து ஒரு மூவர்ண 
கொடியை காங்கிரசுக்காக 
உருவாக்கினார்கள்.
கொடியின் நடுவில் ஒர் ராட்டினத்தை
வைத்திருந்தார்கள்.








இந்த கொடியை வைத்துக்கொண்டு
எத்தனை போரட்டங்கள்-
வெள்ளயனை எதிர்த்து.
எத்தனை வீரர்கள்,தங்கள் உயிரை 
தியாகம் செய்திருக்கிறார்கள் 
என்பது இந்திய சுதந்திர சரித்திரம் 
படித்தவர்களுக்கு தெரியும்.

இப்போது என் கதைக்கு வருவோம்.

வெள்ளைக்காரர்கள்,இந்தியாவிற்கு 
சுதந்திரம் கொடுக்க நிச்சயிக்கப்பட்டவுடன் 
இந்திய அரசியல் சாஸனத்தை
தயாரிக்க ஒரு அரசியல் நிர்ணய சபை 
அமைக்கப்பட்டது.
இதில்,இந்தியாவின் தலை சிறந்த 
அறிஞர்கள் இருந்தார்கள்.
அம்பேட்கர் தலைமையில் 
Draft Constitution தயாரித்தார்கள்.
பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
அதில் முக்கியமானது-என்னைப் பற்றியும் 
தேசிய கீதத்தையும் பற்றியது.
ஏன் எனில்,சுதந்திர நாள் அன்று 
கட்டாயம் இருக்க வேண்டிய 
2 அம்சங்கள்-
தேசிய கொடியும் தேசிய கீதமும்.

ஜன கண மன -தேசிய கீதம்,

தெரிந்த விஷயம்.

என்னைப் பற்றிய Draft-வறைவு-
பண்டித நேருவால் தாக்கல் 
செய்யப்பட்டது.
22,ஜூலை 1947.
சபையில் தாக்கல் செய்யப்பட்ட 
நான்,காங்கிரஸ் கொடியிலிருந்து
மாறுபட்டவனாக இருந்தேன்.
ராட்டினத்துக்குப் பதிலாக
அசோக சக்கிரத்தை வைத்தார்கள்.
நேருவின் பேச்சு உருக்கமாக இருந்தது.
"இது எல்லோருக்கும்-எல்லா மதத்தினருக்கும்,
எல்லா இந்தியருக்கும் பொதுவானது.
மரியாதைக்கு உரியது",என்று சொன்னார்.

நேருக்கு பிறகு பேச எழுந்தார்-
நம்முடைய முன்னாள் ஜனாதிபதி-
தத்துவ மேதை-சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன்:

என்னைப் பற்றி அவர் கொடுத்த விளக்கம்-
அருமை என்றால் அப்படி ஒரு அருமை-
படிக்க வேண்டிய உறை-
வலை தளத்தில் ஆங்கில உறையை 
படியுங்கள்.
அதன்,தமிழாக்கம் இதோ.
அதற்கு முன்,என்னைப் பற்றிய 
ஒரு வர்ணனை.









நான், ஒரு மூவர்ண கொடியோன்..
ஒரே சம சீரான படுக்கையான அளவில்
3 நிறங்கள்...
மேல் பகுதி-கடும் காவி
கீழ் பகுதி-கடும் பச்சை
நடுப் பகுதி-தூய வெள்ளை 
வெண்பட்டை  நடுவில்-அசோக சக்ரம்-
இந்த சக்ரம்-24  அரும்புகள் கொண்டது.
கடல் நீல நிறம்.இதன் குருக்களவு-
1 அடி 4 அங்குலம்.






இப்போது,நம் தத்துவ மேதை 
என்ன சொன்னார் 
என்பதை பார்ப்போமா?

"காவி நிறம்-நம்முடைய தலைவர்கள் 
-material gains-
பணம்,பதவி ஆசைகளில் நாட்டம் 
செலுத்துவதை தவிர்த்து மக்கள் 
சேவைக்காக தங்களை அர்பணித்துக் 
கொள்ள வேண்டும் என்பதை காட்டுகிறது.

வெள்ளை நிறம்-நாம் எப்படி வாழ வேண்டும் 
என்பதை காட்டும் சத்தியத்தின் பாதையைக் 
காட்டுகிறது.

பச்சை நிறம்-நமக்கும் நம்முடைய மண்ணுக்கும் 
மற்றும் உள்ள தாவர இனங்களுக்கும்-
உண்டான உறவைக் காட்டுகிறது.
அசோக சக்கிரம் தான்,உண்மையின்,
தர்மத்தின் பிரதிபலிப்பு.
இந்த தர்மந்தான்,
இந்த கொடியின் கீழ் வேலை
பார்க்கும் எல்லோரும் 
பின் பற்ற வேண்டிய கோட்பாடுகள்.

மேலும்,இந்த சக்கிரம், 
ஒரு இயக்கத்தை
(Motion)காட்டுகிறது. 
இயக்க முன்னேற்றமில்லாத 
வாழ்க்கை மரணத்துக்கு சமம்.
மாற்றங்களை எதிர்க்காமல்
இந்தியா முன்னேற்றப் பாதையை 
நாடி செல்ல வேண்டும்-
அமைதியான முறையில்."
என்று பேசினார்.

இன்னும் சிலர் ,காவி நிறம்-

தைரியம் மற்றும் தியாகத்தையும்,
வெண்மை-உண்மை மற்றும் அமைதியையும்,
பச்சை நிறம்-நம்பிக்கை மற்றும் வீரத்தையும்-
குறிப்பதாக சொன்னார்க்ள்.
பலத்த கர கோஷத்துடன், என்னை 
ஒரு மனதாக அரங்கேற்றம் செய்தார்கள்.

என்னால்,இந்தியாவிற்கும்,இந்திய 
மக்களுக்கும் மற்ற நாடுகளிடேயும் 
அந்த நாட்டு மக்களிடமும்
ஒரு தனி அடையாளம்(Identity) 
கிடைத்தது என்ற எண்ணம் 
மகிழ்ச்சியானது.
மக்களின் உற்சாகம் என் மேல் 
குறைந்திருக்கிறது என்று வருத்தம் 
இருந்தாலும்,
எத்தனை ராணுவ வீரர்கள்
இந்த நாட்டை காக்க, 
என் கொடி கீழ் போராடி
உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள் 
என்று நினைக்கும் போது 
பெருமையாக இருக்கிறது.

அடுத்த தடவை ,ஏதாவது சந்தர்ப்பத்தில் 
எனக்கு வணக்கம் தெரிவித்தால்,
உண்மையிலே நீங்கள் அந்த வீரர்களை 
வணங்குவதாக எடுத்துக் கொள்வேன்.

என்னை எப்படி நடத்த வேண்டும்,
என்னை அவமதித்தால்
என்ன தண்டனை கிடைக்கும் 
என்று விளாவாரியாக சட்டம்
இயற்றியிருக்கிறார்கள்.

சட்டத்தினால் எல்லாவற்றையும் 
சாதிக்க முடியாது.
மக்கள் என் பெருமையை உணர்ந்து 
செயல் பட வேண்டும்.
மக்கள் யாரையாவது மதித்தால்,
இடம்,பொருள் பார்க்காமல்,
அவர்களுக்கு வார்த்தைகளினாலோ,
செய்களினாலோ வணக்கம் 
தெரிவிப்பார்கள்.
உதாரணத்திற்கு,தெருவில் போகிறோம்.
ஒரு பிள்ளாயார் கோவில் தெரிகிறது.
தெரிந்தோ,தெரியாமலோ ஒரு 
கை சைகையினால் நம் மரியாதயை 
தெரிவிக்கிறோம் இல்லையா?

அதே மாதிரி,என்னையும் நீங்கள் 
உங்கள் தாய்க்கு சமமாக நினைத்தால்,
அடுத்த தடவை என்னை எங்கேயாவது
பார்த்தால்-நிச்சயாமக 
கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள்
என்று சொல்ல மாட்டேன்-
குறைந்த பட்சம்,
உங்கள் மார்பில் ஒரு கையை வைத்துக் 
கொள்ளுங்கள்.
அதேயே ,
நான் உங்கள் வணக்கமாக 
வைத்து கொள்கிறேன்.
நாளாவட்டத்தில் 
இதே பழக்கமாகி விடும்.
என்னையும் நேசிக்க ஆரம்பித்து 
விடுவீர்கள்.

உங்கள் குழந்தைகளிடமிருந்து 
இதை ஆரம்பியுங்கள்.

இன்றே ஆரம்பியுங்கள்---நல்ல  நாள்.

வாழ்க  பாரதம்

இப்படிக்கு,
உங்கள் மணிக்கொடி








Jai Hind



கிளறல் தொடரும்...
















No comments: