Monday, August 05, 2013

கோயம்புத்தூர், சென்னை விஜயம்- ­சில அனுபவங்கள் -பகுதி-2


கிரிக்கெட் வீரர்களுக்கும்
கிரிக்கெட் ரசிகர்களுக்கும் 
பரிச்சயமான சொற்றொடர் - 
Nervous nineties
ஒரு பாட்ஸ்மேன் 90 ரன்கள் 
எடுத்து சதத்தை நோக்கிச் 
செல்லும்போது அவனுக்கு 
ஏற்படும் டென்ஷன்தான் 
Nervous nineties
அதுவரை அநாயாமாக 
விளையாடி வந்த நபருக்குத் 
தீடிரென்று ஒரு பயம் வந்துவிடும். 
எங்கே சாதனையான சதத்தைக் கோட்டைவிட்டுவிடுவோமோ’ 
என்று. 
அந்த டென்ஷன் அவன் 
ஆட்டத்தில் ஒரு கணிசமான 
மாறுதலை ஏற்படுத்தும். 
எதிர்க் கட்சி ஆட்டக்காரர்களும் 
அந்தப் பதட்ட நிலையைத் 
தங்களுக்குச் சாதகமாகப் 
பயன்படுத்திக்கொள்ள 
எல்லா முயற்சிகளையும் 
எடுப்பார்கள். 
என்னுடைய நிலைமையும் 
கிட்டத்தட்ட கிரிக்கெட் வீரரின் 
Nervous nineties மாதிரிதான் 
இருக்கிறது. 
நான் இந்த blogஐ ஆரம்பித்தபோது இவ்வளவு வாரங்கள் எழுதுவேன் 
என்று நினைக்கவில்லை. 
விளையாட்டுபோல் தடையில்லாமல் 
90 வாரங்கள் எழுதிவிட்டேன். 
இன்னும் 10 தானே நூறுக்கு 
என்ற நினைப்பு எவ்வளவு தவறு 
என்று புரிந்துகொண்டேன். 
உண்மையிலேயே 
Nervous ninetiesதான். 
காரணம்என்னைப் பற்றியதும் 
என் குடும்பச் சூழ்நிலையைப் 
பற்றியதுதான். நிச்சயமாக 
எதிர்க் கட்சியினரின் சதி வேலை’ 
இல்லை.

சதம் அடிக்கத் துடிக்கும் 
கிரிக்கெட் வீரரை எப்படிப் 
பொறுத்துக்கொள்வீர்களோ 
அதே மாதிரிஎன் தாமதத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

மேலே படிக்கவும்...

ஏற்கனவே எழுதியபடி
என் சென்னை விஜயத்தின்போது 
இரண்டு இளைஞர்களைச் சந்தித்தேன். இரண்டு பேருடைய கதையில் 
ஒரே ஒற்றுமை-இருவரும் call taxi ஓட்டிப் பிழைப்பை 
நடத்துபவர்கள். 
மற்றபடி இரண்டு பேரும் 
தனித்தனியாகச் 
சிந்தித்துச் செயல்பட்டுத் 
தங்கள் வாழ்க்கையை 
நடத்திவருகிறார்கள். 
இதோ அவர்களுடைய 
வாழ்க்கைக் குறிப்புகள்...

முதலாமவர்கண்ணன் 
(பெயர் மாற்றம் 
செய்யப்பட்டிருக்கிறது.)

என் சகோதரருக்கு அடிக்கடி taxi கொண்டுவந்து சேவைபண்ணுபவர். 
எனக்கும் ஒருநாள் என் அண்ணா சிபாரிசில் call taxi ஓட்ட 
சம்மதித்து வந்தார். 
கிட்டத்தட்ட 10 மணி நேரம் 
என் கூடவே பல இடங்களுக்கு வந்தார். என்னுடைய கெட்டப் பழக்கம்
சும்மா பின்சீட்டில் உட்கார்ந்து 
வர மாட்டேன். பேச்சுக் கொடுத்துப் பொழுதைக் கழிப்பேன். 
கண்ணன் காரில் விவேகானந்தர் புகைப்படம். பக்கத்தில் அம்பேத்கார் 
படமும் இருந்தது. பெரியார்தன் மானசீகத் தாத்தா என்று சொன்னார். தலைவர் திருமாவளவன் கட்சித் 
தொண்டர் என்றும் சொன்னார். குடும்பத்தைப் பற்றிக் கேட்டேன். மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருப்பதாகச் சொன்னார். 
காலையில் தன் பெண் ஒரு hook 
வாங்கித் தருமாறு கேட்டதாகவும் 
அதற்குப் பணம் இல்லாததால் 
வாங்கித் தர முடியாத சோகத்தோடு இன்றைய சவாரிக்கு வந்ததாகச் சொன்னார். 
நான் ஏன்நேற்று சவாரி ஒன்றும் கிடைக்கவில்லையா?‘ 
என்று கேட்டேன். 
அவர் சொன்னார் 
சார்நான் நேற்றுஎன் தலைவர் அழைப்பில் சாலைமறியல் 
போராட்டத்தில் ஈடுபட்டேன். மற்றவர்களோடு என்னையும் 
போலிஸார் கைதுபண்ணி 
ஒரு கல்யாண மண்டபத்தில் வைத்து 5 மணிக்கு விடுதலை பண்ணினார்கள். 
5 ரூபாய்க்கு ஒரு சாம்பார் 
சாதப் பொட்டலம் கிடைத்தது. 
'மாலை முரசி'ல் படம்கூட வந்தது‘ 
என்றார்.

அவ்வளவுதான். எனக்கு கோபம்
ஆத்திரம் வந்து நன்றாகத் 
திட்டிவிட்டேன்.
 ‘என்னைய்யாபோராட்டம்புண்ணாக்கு
வெங்காயம் (உங்கள் மானசீகத் தாத்தா
இப்படித்தான் சொல்வார்) பிழைக்கத் தெரியாமல் நாள் பூரா waste பண்ணிட்டு வந்திருக்கிறாயே
வெட்கமாயில்லைமுதலில் எது முக்கியம்என்பதை தெரிந்துகொள். உங்கள் தலைவர்கள் எல்லாம் 
முதலில் தங்கள் குடும்பத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். உனக்கு  மட்டும் என்ன
அரசியல் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு நாள் வருமானத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை உன் தலைவருக்குக் காணிக்கையாகச் செலுத்தலாமே
அதை விட்டு உன் பிழைப்பு (கிட்டத்தட்ட 1000 ரூபாய் வருமானம்) பணத்தைத் தியாகம் பண்ணிவிட்டுக் குழந்தைகளுக்கு 
எதுவுமே செய்ய முடியாத 
நிலையில் இருக்கிறாயே
இதுவா தியாகம்?‘
திட்டிய பிறகு கொஞ்சம் 
பயம் வந்தது. நான் கொஞ்சம் 
ஓவராக போய்விட்டேன் என்று. ஆச்சரியம்கண்ணன் பொறுமையாக
 சார் நீங்க சொல்கிறது புரிகிறது‘ என்றார். 
1 வருடத்திற்கு முன் 75 நாள் 
வேலூர் சிறையில் தலைவர் போராட்டத்திற்காக தண்டனை அனுபவித்ததைச் சொன்னார். 

அவருடைய சரித்திரம் 
அவர் வாய் மூலமாக...

நான் தெற்குப் பகுதி கிராமத்தில் பிறந்து 10ஆம் வகுப்புவரை படித்திருக்கிறேன். 
சகோதர சகோதரிகள் உண்டு. 
அம்மா செல்லம். 
அம்மா சீர்திருத்தக் கொள்கைகள் உடையவர்கள். 
எங்கள் சமூகத்திற்குச் செய்யப்படும் கொடுமைகளை நேரில் பார்த்தவன். புத்தகங்கள் படிப்பேன். 
நான் கிராமத்தில் கஷ்டப்படக் கூடாது என்று என் அம்மாகடன் வாங்கி 
எனக்கு ஒரு அம்பாஸிடர் கார் வாங்கி 
taxi ஓட்டி பிழைக்கச் சொன்னார். 
என் மாமா பெண்ணைக் கல்யாணம்பண்ணிவைத்தார்கள். கடுமையாக உழைத்து 4 கார்கள் 
வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தேன். தேர்தலில் நிற்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். 
18 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி. 
7 லட்சம் அம்பேல். 
4 taxi ஒரு taxi ஆயிற்று. 
இதற்கு நடுவில் ஒரு காதலில் சிக்கி எப்படியோ வெளிவந்துவிட்டேன். இன்றைக்கு இந்த ஒரு taxi வைத்துப் பிழைக்கிறேன். 
மனைவி, 2 பெண்கள் வருமானம் 
வருகிறது. ஆனால் தலைவர் 
கூப்பிட்டால் போய்விடுவேன். 
நிறைய நாட்கள் வருமானத்தை 
இழந்து தலைவர் கூப்பிடும் 
போராட்டத்தில் ஈடுபடுவேன் 
என்று முடித்தார்.
என் ஆத்திரம் அடங்கவில்லை.  
33 வயது ஆகிறது. 
பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறாயே
உன் அம்மாவுக்கு செய்யும் 
நன்றிக்கடனா இது
எல்லா மதங்களும் சொல்லியிருக்கிற 
முதல் பாடம்தாய் தந்தையாரை கஷ்டப்படாமல் வைத்துகொள்ள 
வேண்டும். உன் மனைவி மக்களைக் கண்கலங்காமல் வைத்துக்கொள்ள வேண்டும். நீ படித்த தலைவர்களின் சரித்திரம் எல்லாம் இதைத்தானே வற்புறுத்திவருகிறது. 
எந்த அரசியல் தலைவர் தன் 
குடும்பத்தை ஒதுக்கிவிட்டு 
நாட்டுக்குச் சேவைசெய்கிறார்
தலைவரே அப்படி என்றால் 
தொண்டன் நீ  எம்மாத்திரம்? 
நேற்றைய வருமான இழப்பை 
உன் தலைவரா கொடுக்கப்போகிறார்
இப்பக்கூட பேப்பரில் படித்திருப்பாயே 
ஒரு பெரும்தலைவர் தன் மகளுக்காகத் 
தான் திட்டிய கட்சியிடமே 
வேண்டுகோள் விடுத்ததாக
மேலும் நிறைய உதாரணங்களைச் சொல்லி கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா' என்ற கதையையும் சொல்லிஇனிமேலாவது புத்திசாலித்தனமாகப் பிழைத்துக்கொள் என்று சொன்னேன். 
அவனுடைய reaction என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
 சார், 16 வருடம் சவாரி ஓட்டுகிறேன். யாரும் இந்த மாதிரி என்னிடம் பேசியதில்லை. 
எனக்கு ஒரு விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்
நன்றி‘ என்றான். 
நான் ஏர்போர்டுக்கு செல்லும் நாள் 
அன்று தானே வந்து கூட்டிக்கொண்டு போவதாகச் சொல்லிவிட்டு 
விடைபெற்றுச் சென்றான். 

கண்ணனை மாதிரி எத்தனை இளைஞர்களை இன்றைய அரசியல்வாதிகள் தங்கள் 
சுயநலத்திற்காகப் பயன்படுத்தி 
அவர்கள் வாழ்க்கையைக் குட்டிச்சுவராக்குகிறார்கள்! 
ஆண்டவன்தான் இதற்கு ஒரு வழி 
சொல்ல வேண்டும்.

இப்போதுஇரண்டாவது நபரின் 
கதையைத் தெரிந்துகொள்வோம்.

இந்த இளைஞன் பெயர் ராமன் 
(பெயர் மாற்றம்) 24 வயது ஆகிறது. 
10ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஊர்சுற்றிவந்திருக்கிறான். 
என் நண்பன் அவனைக் கட்டாயப்படுத்திதன் ஆபிஸில் 
வேலை கொடுத்து 12ஆம் வகுப்புத் 
தேர்வை எழுதத் தூண்டினான். அவனும் 12ஆவது பாஸ் செய்தான். ராமனுடைய தாயார் என் நண்பர் வீட்டிலேயே ரொம்ப காலம் வேலை பார்த்துவருகிறார்கள். இன்றும் பார்த்துவருகிறார்கள். அவர்களுக்கு ராமன்மற்றும் ஒரு பெண். 
பெண்ணின் கணவரும் என் நண்பன் ஆபிஸில் வேலை பார்க்கிறார். 
இவரும் கண்ணன் மாதிரி 
திருமாவளவன் கட்சி. 
அடிக்கடி ஆபிஸிலிருந்து காணாமல் போய்விடுவார். 
தாயாருக்காக என் நண்பனும் மாப்பிள்ளையைக் கண்டுக்காமல்‘ 
இருந்துவிடுவான்.

என் நண்பனின் மனைவி
சமீபகாலத்தில் காலமாகிவிட்டாள். அவர்கள் ரொம்ப நல்ல குணம் படைத்தவர்கள். 
தான் இறக்கும்போது ஒரு உயிலில் தன்னுடன் இருந்த ராமனின் தாயாருக்கு  ஒரு கணிசமான 
தொகையை ஒதுக்கியிருந்தார். 
இந்த மாதிரி தமிழ் நாட்டில் செய்து இருப்பவர்களை விரல்விட்டு எண்ணலாம். மேல்நாட்டில் இது ஒரு சகஜமான 
நிகழ்ச்சி.
ராமன், 12ஆவது முடித்தவுடன் 
உயிலில் வந்த பணத்தில் என் நண்பன் 
மூலம் ஒரு taxi வாங்கி ஓட்டிவருகிறான். கல்யாணம் ஆகி ஒரு குழந்தை 
இருக்கிறது.  என் நண்பனின் வழிகாட்டலால் அவன் ஒரு நல்ல 
பண்புள்ள call taxi driver 
ஆக இருக்கிறான். 
மாதம் 13,000 வண்டிக்கு 
dues கட்ட வேண்டுமாம். காலை 9 மணியிலிருந்து மாலை 9 மணிவரை 
நேர்மையாக உழைக்கிறான். 
அரசியல் தெரியும். ஆனால் நேரடித் தொடர்பு இல்லை. 
3 வருடத்தில் காரை 
சொந்தமாக்கிகொள்ள வேண்டும் 
என்ற வெறி.
என் சவாரி முடியும்போது 
இரவு மணி 9. ‘வீட்டுக்குத்தானே?‘ 
என்று கேட்டேன். 
இல்லை சார்நாளைக்கு 
வீட்டுக்காக லீவு போட 
வேண்டியிருக்கிறது. 
அந்த இழப்பை ஈடுகட்ட 
இன்றைய ராத்திரி வண்டி ஓட்டப் போகிறேன்' என்றான். 
அவன் பொறுப்புணர்ச்சியை 
நினைத்து மகிழ்ந்து அவனுக்கு அதிகப்படியான பணம் கொடுத்துராத்திரிக்கு ஓட்டி
சென்னை குடி மகன்களிடம் மாட்டிக்கொள்ளாதே
பத்திரமாக வீடு போய்ச் சேர். வாழ்த்துக்கள்‘ என்றேன். 
காலைத் தொட்டு வணங்கி விடைபெற்றான்.

ராமனைப் பார்க்கும்போது 
கண்ணனை நினைக்காமல் 
இருக்க முடியவில்லை.

ராமன் விடைபெறும் முன் 
ஒரு தகவல் சொன்னான். 
தலைவர் ஒரு டி.வி. சேனல் 
ஆரம்பிக்க போவதாகவும்
ஒவ்வொரு மாவட்டமும் 
100 சவரன் தங்கம் வசூலித்து 
கொடுக்க வேண்டும் என்று 
வேண்டுகோள் விடுக்கப்பட்டதாம்.
 நீ ஏதாவது கொடுத்தாயா?‘ 
என்று கேட்டேன். 
சான்ஸே இல்லை‘ 
என்று சொன்னான்.

சொன்னபடி கண்ணன் 
ஏர்போர்ட்டு சவாரிக்கு வந்தான் மகிழ்ச்சியுடன். 
என் மேல் கோபமோ வெறுப்போ இல்லாமல் ஏர்போர்டுக்கு கூட்டிச்சென்றான். 
நான் மெதுவாக கண்ணா, 
தலைவர் T.V. சேனலுக்கு 
நீ எவ்வளவு தங்கம் கொடுத்தாய்‘ 
என்று கேட்டேன். 
அசடு வழிய கண்ணன் சொன்னான். 
‘3 கிராம் கொடுத்தேன்.‘ 
கோபம் மறுபடி ஜிவ்வென்று 
ஏறிவிட்டது. மறுபடியும் திட்டு
யோசனை etc... 
யாருக்கு நல்ல புத்தியைக் 
கொடுக்க ஆண்டவனிடம் 
பிரார்த்தனை செய்ய வேண்டும்
தலைவருக்காதொண்டனுக்கா?


கடைசியாக ஒரு சின்ன 
observation. 
இந்து பத்திரிகை கடந்த 
சில வாரங்களாக தன்னுடைய 
2ஆம் பக்கத்தில் Right to Walk 
என்ற போராட்டத்தைப் புகைப் படங்களுடன் நடத்திவருகிறது. 
வரவேற்க வேண்டிய விஷயம்தான். நன்மைகள் வந்தால் எல்லோரும் சந்தோஷமாக நடைபாதையில் 
நடக்கலாம். நடக்குமா
கேள்விக்குறி.

என்வரைக்கும்இன்றைய 
சென்னையில் மக்கள் போராட வேண்டியது. 
Right to walk அல்ல 
Right to Pee in a neat 
secluded place. 
Besant Nagar கடற்கரையில் 
காலையில் நடக்க முடியவில்லை. காரணம்எல்லோரும் outing 
போகிறார்கள். 
மக்களும் நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறார்கள். 
ஆத்திரத்தை அடக்குவது சுலபம். ஆனால் ‘......‘ அடக்குவது கஷ்டம். 
தேக ஆரோக்கியத்திற்கும் 
நல்லதில்லை. அதனால்இடம்பொருள்ஏவல் பார்க்காமல் நம் கடமையைத் தொடர்ந்துசெய்வோம் 
என்ற நினைப்பில் எல்லாஇடத்தையும் சுத்தம்‘ 
பண்ணிவருகிறார்கள். 

வாழ்க மக்கள் தொண்டு.

இப்படியாகஎன் இந்திய விஜயம் 
இனிதாக நிறைவேறியது.

கொசுறு.

1961 Census படிபத்தில் 
ஏழு இந்தியர்கள் அசைவர்கள் 
(வீட்டுக்கு வெளியே). 
நான் வாழ்ந்த சென்னையில் 
பிரபலமாக புகாரிபிலால்
முனியாண்டி விலாஸ் என்ற அ
சைவ உணவகங்கள் இருந்தன.
ஆனால் இந்தப் பயணத்தின்போது 
ஒரு மாற்றம் தெரிந்தது. 
எங்கே திரும்பினாலும் 
பிரியாணி‘ கடைகள்தான். 
Hydrabad Briyani, Arcot Briyani, 
Kashmir Briyani, Chettinad Briyani 
இப்படி பலபல கடைகள்.
அசைவ உணவு விலை அதிகம் 
என்று சொல்வார்கள். இவ்வளவு ஹோட்டல்கள் தோன்றினால் 
அவற்றுக்கு  patrons இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். 
இந்திய மக்களாஏழைகள்?

வாழ்க இந்திய நாடு.                                 

   

...கிளறல் தொடரும்.1 comment:

பாலாஜி said...

எல்லா அரசியல் கட்சிகளின் "உண்மைத்" தொண்டர்களும் இதே நிலையில் உள்ளார்கள் என்றுதான் நினைக்கிறேன். மற்ற விஷயங்களில் உள்ள ரோஷங்கள் (மனைவி ஒரு எதிர் வார்த்தை பேசினால் கூட திமிறிக் கொண்டு வரும் ரோஷமும் கோபமும்) கட்சித் தலைவர்களின் சுரண்டல் செயல்களைக் கண்டு வாளாவிருப்பது 21ம் நூற்றாண்டின் இந்திய அதிசியம்தான்...