Tuesday, September 24, 2013

வியாசரின் கருட புராணமும் டான்டேயின் நரகமும் (Inferno)


தலைப்பைப் பார்த்தவுடன்,
"அப்துல் காதருக்கும் 
கோகுலாஷ்டமிக்கும் 
என்ன சம்பந்தம்?" என்று 
கேட்கத் தோன்றுகிறதா
கேள்வி நியாயமானதுதான்... 
கருட புராணம் 
ஒரு இந்துப் புராணம். 
டான்டேயின் Inferno 
ஒரு கிறிஸ்தவக் காவியம். 
இரண்டும் இரு துருவங்களாயிற்றே! 
எப்படிச் சம்பந்தமிருக்கும்?

சம்பந்தம் இருக்கிறது...

நரகம் -Hell-Inferno -என்பதுதான். 











இந்த இரண்டு மதங்களுக்கு மாத்திரமல்லாமல் மற்ற 
மதங்களுக்கும் உண்டான 
தொடர்பு சித்தாந்தம்.

எல்லா மதங்களும் 
ஒப்புக்கொண்ட 
ஒரு நம்பிக்கை -
பாவம் செய்தவர்கள் 
தங்கள் மரணத்திற்குப் பிறகு 
நரகத்திற்குச் சென்று 
தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தண்டனைகளை அனுபவிப்பார்கள்.

Linearமதங்கள் என்று 
சொல்லப்படும் இஸ்லாம்
கிறிஸ்துவ மதங்கள் 
நரகம் என்பது ஒருமுடிவில்லாத 
இடம் என்று நம்புகிறார்கள்.

Cyclic என்று சொல்லப்படும் 
மதங்கள், குறிப்பாக 
இந்து மதம், தண்டனைகளை 
நரகத்தில் அனுபவித்த பிறகு 
மானிடப் பிறவி மறுஜென்மம் 
எடுத்து மீண்டும் 
பிறக்கிறான் என்று 
சொல்கிறது.

எப்படிப் பார்த்தாலும்
நரகம் என்பது ஒருகொடிய இடம். அங்கேதான் இறந்தவர்களின் 
பருஉடல் (gross body) சரீரம் 
செல்கிறது என்பது 
ஒப்புக்கொள்ளப்பட்ட 
கருத்து.

"பாவிகள் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள்" 
என்பது உலக நியதி.

இதற்கு விதிவிலக்கு
மெகா டி.வி. சீரியல் எழுதும் 
ஆசிரியர்கள். 
365 எபிசோடுகளில் 
364 எபிசோடுகள் வில்லி 
கதாநாயகியைக் கொடுமைப் 
படுத்துவதாகக் காட்டுவார்கள். 
365 ஆவது எபிசோடில் வில்லி
தன் தவறுகளை உணர்ந்து 
கதாநாயகியிடம் ஒரு "sorry" 
கேட்பாள். கதாநாயகியும் 
"எதற்காக இப்படிபட்ட 
பெரிய வார்த்தைகளைச் 
சொல்லுகிறீர்கள்?" என்பாள். 
சீரியல் முடியும்.

எனக்கு ரொம்ப நாள் கனவு. 
ஏன் கடவுள் இப்படி நடந்து
கொள்ளக் கூடாது
ஒரு "சாரி" போதுமென்றால்
நாமெல்லாம் ஜாலியாகத் 
தப்புத்தண்டாவே 
பண்ணிக்கொண்டு 
காலம் கழிக்கலாமே
கடவுள் கொஞ்சம் கறாரான 
பேர்வழி. 
யாரையும் தண்டனையிலிருந்து 
தப்பவிட மாட்டார்.

அதற்காக ஒரு eloborate plan 
பண்ணி அதை ஒரு துல்லியமான 
சாஸ்திர விதிகளாக 
அமைத்திருக்கிறார்.

நரகத்தைப் பற்றியும் 
அதில் கொடுக்கப்படும் 
தண்டனைகளைப் 
பற்றியும் எல்லா மதங்களிலும் 
விவரமாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இரண்டு காவியங்களில் 
எப்படி நரகம் 
வர்ணிக்கப்பட்டிருக்கிறது 
என்பதை இப்போது பார்ப்போம்.

இந்த வாரம் கருட புராணத்தைப் 
பற்றியும்
அடுத்த வாரம் 
டான்டேயின் Inferno பற்றியும் 
கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

முதலில் கருட புராணம்....

ஒரு சில பேருக்கே தெரிந்த 
கருட புராணம் "அந்நியன்" திரைப்படத்திற்குப் பிறகு 
ஒரு celeberity statusஐ 
அடைந்திருக்கிறது. 
"கும்பிபாகம்", "கிருமிபோஜனம்" - 
என்றால் என்ன என்று கேட்டால், "அந்நியன்" சினிமா ரசிகன் 
நூறறுக்கு நூறு மார்க் 
வாங்கிவிடுவான்.

வேத வியாசரின் கருட புராணம் 
பாப்புலர் ஆவதற்கு ஒரு சினிமா 
தேவையாக இருக்கிறது. 
நூற்றாண்டு விழா கொண்டாடும் சினிமாவுக்கு ஒரு ஜே!

வேத வியாசர் எழுதிய 
18 புராணங்களில் 
கருட புராணமும் ஒன்று.

இதை ஒரு சாத்வீகப் 
புராணமாகச் சொல்வார்கள். 
மற்ற சாத்வீகப் புராணங்கள்
விஷ்ணு புராணம்
நாரத புராணம்
பாகவத புராணம், etc
கருட புராணம், 19,000 
ஸ்லோகங்களை உடைய 
medium sized புராணம். 
இரண்டு பகுதிகளானது 
பூர்வ காண்டம், உத்திர காண்டம் 
என்று. 
அந்தப் புராணம் கருடனுக்கும் விஷ்ணுவுக்கும் நடந்த சம்பாஷனை வடிவமாக அமைக்கப்பட்டிருக்கிறது. 
கருடனுக்கு எழுந்த சந்தோகங்களை 
விஷ்ணு பகவான் விளக்குவதுதான் 
இந்தப் புராணத்தின் மையக் கருத்து.

இந்தப் புராணத்தின் இரண்டாவது 
பகுதி மரணத்திற்குப் பின் 
உண்டான வாழ்க்கையைப் பற்றி 
விவரமாகச் சொல்கிறது.

கருட புராணத்திலிருந்து 
சில பகுதிகளை மரணத்திற்கு 
10ஆவது நாள் வீடுகளில் 
வாசிப்பது வழக்கம். 
இதனால் கருட புராணத்தை 
மற்ற நாட்களில் வாசிப்பது 
அபசகுனம் என்ற தப்பான 
அபிப்பிராயம் இருக்கிறது. 
ஆனால், இதில் பல 
நல்ல விஷயங்கள் 
சொல்லப்பட்டிருக்கின்றன.

அத்தியாயங்கள் 1 - 7 நரகங்களைப் 
பற்றி விவரமாகச் சொல்கின்றன. 
ஒரு மானிடன் இறந்தபோது 
யமதூதர்கள் அவனை யமனிடம் 
ழைத்துச் செல்ல வருவார்கள்.
ஆத்மா உடலை விட்டு விலகி 
கையளவு இருக்கும் உருவத்தை எடுத்துக்கொள்கிறது.
இந்த உருவத்தில்தான் 
யமலோகத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறான்.
மனிதன் இறந்து 10 நாள்வரை 
அவனுடைய சந்ததியார்கள் 
ஒவ்வொரு நாளும் பிண்டம் 
கொடுக்க வேண்டும். 
ஒவ்வொரு நாள் பிண்டமும் 
பிரேதத்திற்கு வெவ்வேறு 
அங்கங்களைக் கொடுக்கிறது. 


11ஆம் நாள் திவசத்திற்குப் 
பிறகு 13ஆம் நாள் யமதூதர்கள் 
பிரேதத்தைக் கொண்டுசெல்ல 
வருவார்கள். 
பிரதேத்திற்கு இப்போது 
ஒரு சரீரம் உண்டு. 
யமலோகத்திற்குச் செல்ல 
348 நாட்கள் ஆகும். 
இந்தப் பிரயாணத்தின்போது 
பிரேதத்திற்குத் தண்ணீர்
உணவு கிடைக்காது. 
சந்ததியார்கள் 
மாதா மாதம் கொடுக்கும் 
பிண்டத்தில்தான் வாழ்கிறது.

யமலோகத்திற்குச் செல்லும் 
வழியில் 16 நகரங்களைக் 
கடக்க வேண்டியிருக்கும். 
வழியில் வைத்தரணி நதியைக் 
கடக்க வேண்டும். 
இதன் தண்ணீர் ரத்த மயமாக 
இருக்கும். இதைக் கடக்க 
ஓடம் தேவை. 
பசு தானம் பண்ணியவர்களுக்கு 
ஓடம் கிடைக்கும். 
மற்றவர்கள் தண்ணீரில் 
இழுத்துச் செல்லப்படுவார்கள்.

ஒரு வழியாக யம லோகத்தைப் 
பிரதேம் அடைகிறது.

யமதர்ம ராஜன் வாயிற்காப்போன், 
வந்த நபரின் பாவ புண்ணியக் 
கணக்கைச் சித்திரகுப்தனிடம் 
சொல்வார். 
சித்திரகுப்தன் அதை யமதர்ம 
ராஜனிடம் விவரிப்பார்.

யமதர்ம ராஜன் அவரவர் 
குற்றங்களுக்கு ஏற்பத் தண்டனை வழங்குவார்.

தண்டனைக்குள்ளானவர்களை 
யமதூதர்கள் வெவ்வேறு 
நரகங்களுக்கு எடுத்துச் 
செல்வார்கள். 
கணக்கில்லாத நரகங்கள் இருக்கின்றனவாம்.

அவைகளில் சிலவற்றைப் 
பற்றிக் கொஞ்சம் 
தெரிந்துகொள்ளலாமா?

ரூர்வா (Rourva) என்ற நரகம்.

பொய் சொன்னவர்களுக்கும் 
பொய் சாட்சி சொன்னவர்களுக்கும் 
ரிசர்வ் செய்யப்பட்டிருக்கிறது. 
பிறர் குடும்பத்தை அழிப்பவர்களும் 
இங்கே தள்ளப்படுவார்கள்.


ம ஹாரூர்வா

மூர்க்கத்தனமாக மற்றவர்களுடைய சொத்துக்களைப் பிரித்து அழித்தவர்களுக்காக இந்த நரகம்.





அதிர்ஷிடா (Atirshita)

இது ஒரு கடுமையானக் 
குளிர் நரகம். வெளிச்சம் 
கிடையாது. 
மகா பாவிகளுக்கு என்று 
special place.

தாமிஸ்ரா

மற்றவர்களுடைய சொத்தை 
அபகரிப்பது-
தண்டனை- ஆயுதத்தினாலோ கதையினாலோ விளாசுவது.

கும்பிபாகம்

(அந்நியன் படம் ஞாபகம் 
இருக்கா?) 
உணவுக்காக மற்றவர்கள் 
வாழ்க்கையை அழிப்பது. 
எண்ணெய்க் கொப்பரையில் 
வறுத்து எடுப்பார்கள்.

காலசூத்திரா

முதியோரையும் 
பெற்றோர்களையும் 
துன்புறுத்திப் பட்டினிபோடுவது. 
அதே தண்டனை நரகத்தில்.

ஆசிபத்ரா

தர்மத்திலிருந்து வழுவிக் 
கடவுளை நிந்திப்பது.

கெட்ட தேவதைகள் 
துன்புறுத்தி 
பயத்தில் ஆழ்த்துவார்கள்.

பன்றிமுக

அப்பாவிகளைத் தண்டிப்பது. 
பன்றி போன்ற மிருகத்தின் 
பற்களில் அகப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாவது.

அந்தகூப

மனிதர்களைத் துன்புறுத்தி மனிதாபிமானமில்லாத 
செயல்களில் ஈடுபடுவது.
கொடிய மிருகங்கள் கடிக்கும்

கிருமிபோஜனம்

சுயநலவாதி, மற்றவர்களின் 
வேலையைத் திருடுவது.

தண்டனை - 
தேகத்தின் மேலே 
கிருமிகளை விட்டு 
சித்திரவதை 
செய்வது.

மேலும்,

அக்னிகுண்ட, வஜ்ரகண்டக
சாமாலி, வைத்தரணி
பூயோகா, ப்ரயான்யோகா
பசு சவா, ஆவிசி
பரிபத்ன
(குடிப்பது, மற்றவர்களைக் 
குடிக்கச் செய்வது)
சுக முக etc etc...

இதற்கெல்லாம் கிடைக்கும் 
தண்டனைகள்
கையில் விலங்கிட்டு
தீயில் பொசுக்குதல்
நெருப்புக் குழம்பைக் 
குடிக்க செய்வது
பிரம்படி
விஷ ஜந்துக்களால் 
கடிக்கச் 
செய்வது.

இந்த லிஸ்டை 
படித்த பிறகும் 
கெட்ட நடவடிக்கைகளில் 
ஈடுபடலாம் என்று 
சிறு நப்பாசை இருந்தாலும் 
இன்றே இப்பொழுதே 
அதை விட்டுவிடுங்கள்.

இந்தச் சிறு "தண்டனை"யை 
அனுபவித்த மானிடன் 
மறுபடி பூலோகத்திற்கு 
அனுப்பப்படுகிறான். 
முந்தின ஜன்மத்தில் செய்த 
கர்மாவின் தன்மைப்படி 
அவன் மறுபடியும் 
ஏதோ ஒரு ஜந்துவாகப் 
பிறக்கிறான். 
எவ்வளவுக்கெவ்வளவு 
பாவங்கள் செய்திருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு 
கீழ்மட்ட ஜந்துவாகப் 
பிறக்க நேரிடும். 
இந்த பிறப்பு/ இறப்பு/பிறப்பு... 
தொடரும்.

திருந்தி வாழ்ந்தால்
சுவர்க்கத்திற்குப் போகலாம்.

இல்லையெனில் 
மறுபடியும் 
நரகம்தான்.

முடிவு - 
நம் கையில்தான்.

இனி டான்டே என்ன 
சொல்கிறார் என்பதைப் 
பார்ப்போம்...



கிளறல் தொடரும்...





No comments: