Monday, October 03, 2011

பிரும்மோபதேசம்




இது பிராமணச் சிறுவர்களுக்கு உபநயனம் செய்துவைக்கும் போது நடத்தப்படும் முக்கியமான சடங்கைப் பற்றியது அல்ல. பிரும்மாவின் உபதேசம் (அறிவுரை) பற்றிய ஒரு புராணக் கதை.
இந்த கதை ப்ருகத் ஆரண்யக உபநிஷத்தில் (Ch.V: Section 2) இல் இருக்கிறது.
பிரஜாபதி (பிரும்மா) ஒரு நல்ல ஆசிரியர். அவரிடம் தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள். படிப்பு முடிந்து மாணவர்கள் விடைபெறும் காலம்.
முதலில் தேவர்கள், பிரும்மாவை அணுகி ஐயா, எங்களுக்கு கடைசியாக நல்லுரையாக ஏதாவது சொல்லுங்கள்என்று சொன்னார்கள்.
பிரும்மா அவர்களிடம், “” (இது சமஸ்கிருத அகராதியில் மூன்றாவது ’ – ஆங்கிலத்தில் DA என்று எழுதப்படுகிறது) என்று சொன்னார்.
பிறகு புரிந்ததா?” என்று கேட்டார்.
தேவர்களும் புரிந்தது,  ‘தம்ய’ (புலனடக்கம்)வைக் கடைப்பிடிக்கச் சொல்கிறீர்கள் .அப்படியே நடப்போம்என்று சொல்லி விடைபெற்றார்கள்.
அடுத்ததாக மனிதர்கள் வந்தார்கள். அவர்களும் கடைசியாக ஒரு அறிவுரை பெற விரும்பினார்கள். அவர்களுக்கும் அதே ”  என்று சொன்னார். அவர்களும் ஐயா, புரிந்தது .எங்களை தானம்பண்ணச் சொல்கிறீர்கள், அப்படியே நடப்போம்என்று கூறி விடைபெற்றார்கள்.
கடைசியாக அசுரர்கள் வந்தார்கள். அவர்களுக்கும் அதே ” –  வைச் சொன்னார் பிரும்மா. அவர்களும் ஐயா, எங்களை மற்றவர்களிடம் தயை’ –( கருணை) காட்டச் சொல்கிறீர்கள்.
அப்படியே நடப்போம்” என்று கூறி அவர்களும் விடைபெற்றார்கள்.
ஆக மூன்று பிரிவினருக்கும் ஒரே எழுத்து, "த".
ஆனால், மூன்றும் வெவ்வேறு புத்திமதிகள்.
தேவர்கள், ஆடம்பரப் பிரியர்கள். அதனால் அவர்கள் தம்யமாக அதாவது புலனடகத்துடன் வாழவேண்டும் என்பது அறிவுரை.
மனிதர்கள் சுயநலவாதிகள் .அதனால் அவர்கள் தான’ தர்ம காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவிச் செய்ய வேண்டும்.
அரக்கர்கள் மற்றவர்களைத் துன்புறுத்துவதில் மகிழ்ச்சி அடைபவர்கள். அதனால் ,அவர்கள் மற்றவர்களிடத்தில் தயை’ –  காட்ட வேண்டும்.
இதையே பிரும்மா தமிழில் "அ " என்று சொல்லியிருந்தால் , இந்த 3 “அ”களுக்கு  அடக்கம், அறம், அன்பு ' என்று  — என்று சொல்லியிருப்பார்.
ஆதிசங்கரர் தன்னுடைய விரிவுரையில் சொல்கிறார்.
மனிதர்களைத் தவிர தேவர்களோ, அசுரர்களோ கிடையாது.
புலனடக்கத்தோடும் நல்ல குணங்களோடும் வாழும் மனிதர்கள்,  தேவர்கள்.
மனிதனின் பிறவிக்குணம் பேராசை’.
மற்றவர்களைத் துன்புறுத்திப் பார்ப்பவர்கள், அரக்க குணம் படைத்தவர்கள்.
மனிதனை அழிவு பாதையில் செலுத்துவது 3 வியாதிகள்-காமம்,லோபம்(பேராசை),குரோதம்(பகைமை உணர்ச்சி).
இதற்கு மருந்துகள்- தம(புலனடக்கம்),தானம்,தயை. 
வேறு மார்க்கமில்லை.
பிரும்மாவின் மூன்று உபதேசங்களும் மனிதர்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கின்றன.
காஞ்சி பெரியவாள் எழுதி ஸ்ரீமதி M.S. சுப்புலட்சுமி பாடிய மைத்ரம் பஜதஎன்ற பாடலில் — “தம்யத, தத்த, தயத்வம்என்று மூன்று சொற்களும் வருகின்றன.
இதையே, T.S. Eliot என்று ஆங்கிலக் கவிதன்னுடைய ‘The Wasteland & Other Poems’ என்ற கவிதைத் தொகுப்பில் சொல்கிறார்.
“Datta, dayadhvam, damyata”
 Give, Sympathise, Control
(Datta – give; dayadhvam – be compassionate; damyata – be self controlled.)
மூன்று அறிவுரைகளுமே முக்கியமானவை.
ஆனாலும் தத்த” — தானம் அறம்என்பது விசேஷமாக மனிதர்களால் கடைபிடிக்கப்பட வேண்டிய கடமை. 


அதைப் பற்றி விபரமாக... பின்னால்.......


கிளறல் தொடரும்

4 comments:

Anonymous said...

Intersting details.
Why not publish the relevant verses of the poem, please.
-Naran

tsnagarajan said...

Dear Mr.Naran:
thanks for your comment.
Please go to the following site.the full text is given.
http://www.astrojyoti.com/pdfs/DevanagariFiles/BrihadaranyakaUpanishat.pdf

The story referred to here is in page 40/41-chap5:2

regards

nagarajan

Chandra said...

Very interesting. Please keep posting.

Ramesh said...

“மனிதர்களைத் தவிர தேவர்களோ, அசுரர்களோ கிடையாது.
புலனடக்கத்தோடும் நல்ல குணங்களோடும் வாழும் மனிதர்கள், தேவர்கள்.
மனிதனின் பிறவிக்குணம் ‘பேராசை’.
மற்றவர்களைத் துன்புறுத்திப் பார்ப்பவர்கள், அரக்க குணம் படைத்தவர்கள்.