Monday, October 24, 2011

தீபாவளி




என் அருமை  நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும்  
தீபாவளி வாழ்த்துக்கள் .
Om sarvesham swastir bhavantu-
sarvesham shantir bhavatu-
sarvesham poornam bhavatu-
sarvesham mangalam bhavatu-
sarve bhavantu sukhinah-
sarve santu niramayaah-
sarve bhadrani pashyantu-
maakaschit duhkha bhaag bhavet. 
Om Shanthi  Shanthi   Shanthi 
ஓம். எல்லோருக்கும்  நல்லது நடக்கட்டும். 
எல்லோருக்கும்  அமைதி கிடைக்கட்டும்.
எல்லோருக்கும் பூர்ணத்துவம் கிடைக்கட்டும்.  
எல்லோருக்கும்  மங்களம் உண்டாகட்டும்.  
எல்லோரும் சுகமாக இருக்கட்டும். 
எல்லோரும்  நோய் இல்லாமல் இருக்கட்டும். 
எல்லோரும் நல்லதையே பார்க்கட்டும். 
ஒருவரும் துக்கத்தினால் பாதிக்கப்படக் கூடாது. 

ஓம் சாந்தி   ஓம் சாந்தி    ஓம் சாந்தி.

ஒவ்வொரு மதத்திற்கும் தனிப்பட்ட விரதங்கள்
உபவாசங்கள்  மற்றும் விழாக்கள் உண்டு. 


கிருஸ்துமஸ், ரம்ஜான், ஈஸ்டர், யாம் கிப்புர் - 
போன்ற விழாக்கள் எல்லா இடங்களிலும் 
ஒரே மாதிரிதான் கொண்டாடப்படுகின்றன.  
ஆனால், இந்திய விழாக்கள் மட்டும் 
ஒரே பெயரைக் கொண்டிருந்தாலும்
வெவ்வேறு பகுதிகளில்  
வெவ்வேறு  விதங்களில் கொண்டாடப்படுகின்றன.
உதாரணத்திற்கு, தீபாவளிப்  பண்டிகையை 
எடுத்துக்கொள்வோம். 
(தீபாவளி - தீவாலி என்று எப்படிச் சொன்னாலும் 
தீபங்களின் வரிசைஎன்பது பொருள்.)

இது இந்திய நாட்டின் மிகப் பெரிய  பண்டிகை. 
மகிழ்ச்சியுடனும், குதூகலத்துடனும்
கொண்டாடப்படும்  பண்டிகை.  
ஆனால், ஒவ்வொரு  பகுதி மக்களும் 
இந்தப் பண்டிகையை 
ஒவ்வொரு மாதிரி கொண்டாடுகிறார்கள். 
தமிழ்நாட்டில் இந்தப் பண்டிகை 
எப்படிக் கொண்டாடப்படுகிறது 
என்பது  எல்லோருக்கும் தெரியும்.

மற்ற  மாநிலங்களில் இந்தப் பண்டிகையை 
எப்படிக் கொண்டாடுகிறார்கள்  என்பது 
பல பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர்களுக்காக இந்தச் சிறிய  அறிமுகம்.  

பெரும்பாலான வட மாநிலங்களில், தீபாவளி 
ஐந்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் - தாந்தேரஸ்  அல்லது தாந்ரோயத்சி
என்று அழைக்கப்படுகிறது.

இது அஸ்வின் மாதத்தின் 13ஆவது நாள். 
தானஎன்றால் செல்வம்  என்று அர்த்தம்.
லட்சுமி  தேவி மங்களகரமான வீடுகளைத்  
தேடி  வருவாள் என்ற நம்பிக்கையில் வீடுகளை  
அலங்கரித்து,  விளக்குகள் ஏற்றி, கோலங்கள்  போட்டு
சிறிய  லட்சுமி பாதங்களை வரைந்து 
லட்சுமி பூஜை  செய்வார்கள்.  
லட்சுமி தேவிக்கு நிறைய  இனிப்பு 
நைவேத்யங்கள் வழங்கப்படும்.

இங்கே ஒரு சின்னக் கதை..

ஹிமா  என்ற ஒரு அரசனுக்கு 16 வயதில் ஒரு மகன்.  
அந்த  மகனுடைய ஜாதகப்படி  அவனுக்குக் கல்யாணம் 
ஆன 4ஆம்  நாள், பாம்பு கடித்து அவன் இறந்துபோவான் 
என்று  ஜோஸியர்கள்  சொன்னார்கள். 
கல்யாணம்  ஆயிற்று. 4ஆவது  நாள்
அவனுடைய புதிய மனைவி அவனைத் தூங்க விடவில்லை.
வீட்டில் உள்ள  தங்க  நாணயங்கள், நகைகள் 
எல்லாவற்றையும்  வீட்டு  வாசலில் ஒரு  குவியலாகப் போட்டு 
நிறைய  விளக்குகளை ஏற்றிவைத்தாள். 
கதைகள் சொன்னாள்.  பஜனை  செய்தாள். 

யமன் வந்தான். பாம்பு ரூபத்தில். 
விளக்குகளின் வெளிச்சம்
யமனுடைய  கண்களைக்  கூசச் செய்தது. 
அவனால் வீட்டுக்குள்  போக முடியவில்லை. 
காலையில் மெதுவாக திரும்பிச்  சென்றுவிட்டான். 
இளம்  மனைவி கணவனை யமன் வாயிலிருந்து
காப்பாற்றி வெற்றிபெற்றாள்.
இந்த  நாள், யமனுக்கு நன்றி தெரிவிக்கும் 
வகையில்  இரவு  முழுவதும் விளக்குகள் ஏற்றி  
யம தீப் தான்என்று அழைக்கப்படுகிறது.

இரண்டாம்  நாள் - நரக சதுர்த்தஸி - சோட்டி திவால். 

இது 14ஆம் நாள் வருவது.
எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.
நரகாசுர வதம். கிருஷ்ணனால்- 
சிறிய வித்தியாசம் எண்ணெய்க் குளியல்” 
விஷயத்தில். 
வட  மாநிலங்களில் கிருஷ்ண பகவான் 
நரகாசுரனைக்  கொன்ற பிறகு அவனுடைய
ரத்தத்தை நெற்றியில்  பூசிக்கொண்டாராம். 
வீட்டுக்கு வந்தவுடன் பெண்கள்  நறுமணம் 
கலந்த எண்ணெயைத்  தடவிக் 
குளிப்பாட்டினார்களாம். 
நம் ஊரின் பழக்கம் உங்களுக்குத் தெரியும்.
மஹாராஷ்டிராவில், கடலை மாவுடன் வாசனைத்  
திரவியங்களைச்  சேர்த்து  எண்ணெய் 
தேய்த்துக் குளிப்பார்கள். 
பிறகு அவல், தயிர், வெல்லம்  
சேர்த்த உணவைச்  சாப்பிடுவார்கள்.
சில  இடங்களில், மஹா பலி  பூமிக்கு  வருகிற  
நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

வங்காளத்தில் காளி  பூஜை செய்வார்கள்.

மூன்றாம்  நாள் - லட்சுமி பூஜை -  சோபடா -  பூஜா 
ஒரு முக்கியமான நாள். லட்சுமி  தேவியைப் 
பூஜை செய்ய  ஒதுக்கப்பட்ட  நாள். 
இது அமாவசை நாளானாலும் 
சுப நாளாகக் கருதப்படுகிறது.
அன்று முழுவதும் Non-Stop கொண்டாட்டம்.
வட  நாட்டில் ஒரு அதிசயமான பழக்கம் உண்டு.
தேவி பார்வதி சிவனாருடன் சொக்கட்டான்  
ஆடிய  தினம் தீபாவளி. 
சிவனுடைய கட்டளைப்படி எவரெல்லாம் 
தீபாவளி தினத்தில் சூதாடுகிறார்களோ
அவர்களுக்கு  வருஷம்  முழுவதும் வெற்றிதான்.
இந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது.  
(இந்தக்  கதையைப் படித்துவிட்டு சூதாடிப்  
பணத்தைத் தொலைத்தால் நான்  பொறுப்பல்ல.) 

மஹாவீரர், சுவாமி ராம்தீர்த்தர்  ஆகியோர் 
முக்தி அடைந்த நாள் இது.

நான்காம்  நாள் - பட்வா  - “வர்ஷபிரத்ஹிபாத.  
விக்கிரமாதித்ய  மஹாராஜா சிம்மாஸனம் ஏறிய நாள். 
விக்ரம் சம்வாட் ஆரம்ப  தினம். புது வருஷத் தொடக்கம்.

புது  வியாபாரம் - புதுக் கணக்கு ஆரம்பிக்கும் நாள். 

கோவர்த்தன பூஜை அன்றுதான் செய்யப்படும்.

அந்த நாள் அன்னகூட்” “சாப்பாட்டு மலைநாள்.  
பூஜை  முடிந்து எல்லோருக்கும்  
பிரசாதம் தருவார்கள். 

இந்த  நாள், “குடி பட்வா” Gudi Padwa 
ஆகவும் கொண்டாடப்படுகிறது.  
மனைவிமார் தங்கள் கணவர்கள் நலம் கருதி 
அவர்கள் நெற்றியில் சிவப்புத் திலகம் இட்டு
ஆரத்தி  எடுத்துப் பிரார்த்தனை  செய்வார்கள்.
கணவர்களும்  ஒரு விலை உயர்ந்த பரிசைக் 
கொடுப்பார்கள்.  
கணவன்  மனைவி அந்நியோன்யத்துக்கு
குடி பட்வாஒரு நல்ல  சந்தர்ப்பம்.

ஐந்தாம் நாள்-Bhai Dooj or Bhau Beej-
பய்யா டூஜ்-பாய் பீஜ்-

ஐந்தாம் நாளை மராட்டியர்களும், நேபாளிகளும் 
Bhai-tika - பாய் டிக்கா 
என்று சொல்கிறார்கள். 
வங்காளத்தில் Bhai Photo 
என்று அழைக்கிறார்கள்.

யமன் தன்னுடையை சகோதரி யமியை 
சந்திக்க வந்த நாள். 
யமி யமனைத் திலகமிட்டு, மாலை போட்டு
வரவேற்று வயிறாரச் சாப்பாடு  போட்டு
இரண்டு பேரும் சந்தோஷமாக 
நேரத்தைக் கழிப்பார்களாம். 
இருவரும் பரஸ்பரம் பரிசுகளைக் 
கொடுத்துக்கொள்வார்களாம்.
இதற்கு மற்றொரு பெயர் - Yama-Dwittiya 
யம  துவிட்டியா.
இந்த நாள் சகோதர-சகோதரி பாச நாளாகக் 
கொண்டாடப்பட்டுவருகிறது.

இதோ ஒரு வங்காளப் பாட்டு:

நான் என் சகோதரன் நெற்றியில் 
பொட்டு வைத்தேன்.
அவன் எந்நாளும் சாகாமல் இருக்க .
யமுனா, யமனுக்குப் பொட்டு வைத்தாள்.
நான் என் சகோதரனுக்குப் பொட்டு வைத்தேன்.
இரும்பு மாதிரி வைரமுள்ளவனாக ஆகட்டும்.

இப்படி ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை  
தீபாவளி. 
எல்லோருக்கும் வெவ்வேரு மாதிரி
பிரச்சநைகள்.கஷ்டங்கள்.
இப்போது உறவுகளும் ஒருத்தருக்கு  
ஒருத்தர் காட்டும் சகஜ பாவமும் 
குறைந்துகொண்டுவருகின்றன.
 
தீபாவளி போன்ற பண்டிகைகள் 
சகஜ சூழ்நிலையை  
உருவாக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்.

நழுவ  விடாதீர்கள். 

முடிவாக,  குருதேவ்  ரவீந்திரநாத் தாகூர் 
சொன்னபடி தீபாவளி நாளைக் 
கொண்டாடுவோம்.

The night is black
Kindle the lamp of LOVE
With thy life and devotion

இரவு  கருமையாக இருக்கிறது
உங்கள் வாழ்க்கையாலும் அர்ப்பணிப்பாலும்
அன்பு என்ற விளக்கை ஏற்றுங்கள்.

மீண்டும்  தீபாவளி வாழ்த்துக்கள்.

கிளறல்  தொடரும்..



1 comment:

Siva Ramanathan said...

Quite informative.