Sunday, January 08, 2012

மனைவிமார்களே! மார்க் போடலாம்,வாருங்கள்.... உங்கள் கணவன்மார்களுக்கு.

ஒவ்வொரு பெண்ணும், தன் திருமணத்திற்கு முன்
தனக்கு வரப்போகும் கணவனைப் பற்றி 
தன் மனதுக்குள் ஒரு உருவகத்தை 
நினைத்து வைத்திருப்பாள். 
அதில் எத்தனைப் பேருக்கு அந்தக் கனவுக் 
கணவன் நிஜ வாழ்க்கையில் அமைவான் 
என்பதற்கு ஒரு புள்ளிவிவரமும் கிடையாது. 
பெரும்பான்மையான (ஏன் எல்லா பெண்களுமே 
என்றுகூடச் சொல்லலாம்) பெண்கள் திருமணத்திற்கு 
பிறகு தனக்கு அமைந்த கணவர்கள் 
விதிப்படி அமைந்ததுஎன்ற  
வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்.

கனவு வேறு, நிஜம் வேறு என்பதில் 
ஒரு திடச் சித்தம் உள்ளவர்கள் 
தங்களை மாற்றிக்கொள்வார்கள். 
ஆனால் நிச்சயமாக, அவர்கள் உள்மனதில் 
நம் கணவரும் மற்ற கணவர்மார்கள்போல 
இருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் 
இருக்கத்தான் செய்யும்.

அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா
அவர் ஆத்துக்காரர் கொஞ்சறத கேட்டேளா?” 
என்ற பாடல் கேட்கும்போது ஒரு சிறு 
உறுத்தல் தோன்றலாம்.

உங்கள் மனதில் உள்ள உங்கள் கணவரைப் 
பற்றி இருக்கிற எண்ணங்களை வெளியே 
கொண்டுவர, இதோ ஒரு சந்தர்ப்பம். 

இது பிறருக்கான கேள்வி- பதில் 
விஷயம் இல்லை. 
இது உங்களுக்காக செய்துகொள்ளும் 
ஒரு ‘Self Assessment’. 
இதை நீங்கள் யாரிடமும், ஏன் உங்கள் 
கணவருடன்கூடப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

உங்கள் கணவரையும் இந்தப் பகுதியில் பங்கேற்க 
அழைக்கிறோம். ஒருவேளை மனைவிகளின் 
எதிர்பார்ப்புகளைப் படித்தால்
அவர் மனதும் மாறி அவர் உங்களை 
ராணி மாதிரிநடத்தலாமே?

உங்கள் கணவரைப் பற்றிய 
இந்த  ‘Self Assessment’ 2 பகுதிகளாக 
இருக்கும். 
முதல் பகுதி ­ உங்கள் கணவரின் குறைகள். 
இரண்டாவது பகுதி ­ உங்கள் கணவரின் நிறைகள். 
ஒவ்வொரு பகுதியிலும் 15 கேள்விகள். 
மொத்தம் 30 கேள்விகள்.

முதலில் குறைகள்பகுதியைப் பூர்த்திசெய்யுங்கள். 
ஒவ்வொரு வாக்கியமும் உங்கள் கணவருக்குப் 
பொருத்தம் என்று நீங்கள் நினைத்தால்
1மதிப்பெண் கொடுங்கள். பொருத்தம் இல்லை 
என்று நினைத்தால் 0 மதிப்பெண் கொடுங்கள். 
15 வாக்கியங்களில் எத்தனை என்பதை 
குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது நிறைகள்பகுதியைப் படித்து 
இதோ மாதிரி, பொருத்தத்திற்கு 1 மதிப்பெண்ணும் 
பொருத்தமின்மைக்கு 0 மதிப்பெண்ணும் கொடுங்கள். 
கடைசியாக, நிறை மதிப்பெண்களிலிருந்து 
குறை மதிப்பெண்களைக் கழியுங்கள். 
அதுதான் நீங்கள், உங்கள் கணவருக்குத் தரும் 
முடிவான மதிப்பெண்.

உங்கள் மதிப்பெண்களைப் பற்றி முடிவுசொல்ல 
கீழ்க்கண்ட அட்டவணையைப் பின்பற்றுங்கள்.

(மார்க் Range -15லிருந்து ­ +15 வரை)

மதிப்பெண்                                 முடிவு

+ 11லிருந்து + 15 வரை      ­ மிக உத்தமமான கணவர்.
+ 5லிருந்து  +10 வரை         நல்ல கணவர்.
+ 1 லிருந்து + 4 வரை         மோசமில்லை ­ இன்னும் 
                                          நன்றாக இருக்கலாம்.
                                 ­      
 0                                      சொல்லிக்கொள்ளும் 
                                         அளவில்லை
-5லிருந்து ­ -1 வரை           ­  கொடுப்பினை இல்லை
-5க்கும் கீழே                    ­  நான் என்ன செய்ய வேண்டும்?

இது ஒரு கடினமான வேலை இல்லை. 
இதற்குத் தேவையானது, சிறிதளவு உங்கள் நேரம்
ஒரு பேப்பர், பென்சில்
ஒரு Honour Code.

அதாவது உங்கள் பதில் உங்கள் மனச்சாட்சிப்படி 
சொல்லப்படுகிற நிஜமான விடை என்று 
நீங்களே எடுத்துக்கொள்ளும் ஒரு பிராமிஸ்.

பரீட்சைக்குத் தயாரா?

குறைகள்

1.மனைவியுடன் வெளியே செல்லும்போது 
மற்ற பெண்களை சைட்அடிப்பார்.
2. மனைவிக்கு முன்னரே தெரிவிக்காமல் 
விருந்தாளிகளை வீட்டுக்கு  அழைத்து வருவார்.
3. டின்னருக்கு லேட்டாக வர வேண்டியக் 
கட்டாயத்திலும் வீட்டுக்கு போன் 
 பண்ண மாட்டார்.
4. அடிக்கடி மனைவியை அவருடைய 
அம்மாவுடனாவது அல்லது மற்ற       
மனைவிமார்களோடாவது 
ஒப்பிட்டுக் குற்றம் கண்டுபிடிப்பார்.
5. மனைவியைப் பகிங்கரமாக 
எல்லோர் முன்னிலையிலும் 
விமர்சனம் பண்ணுவார்.
6. எல்லோர் முன்னிலையிலும் 
தன்னுடைய பிரம்மச்சாரி வாழ்க்கையைப்      
புகழ்ந்து, தான் ஏன் கல்யாணம் 
செய்துகொண்டோம் என்று   புலம்புவார்.
7. வீட்டில் ஒரு சர்வாதிகாரி.
8. ஒரு குடிக்காரர்.
9. நிறைய பொய் சொல்வார். 
நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இல்லை.
10. பிடிவாதக்காரர். மன்னிப்பு கேட்பார்..
வேறு வழியில்லை யானால்.      
11. எல்லாத் தவறுகளுக்கும் மனைவிதான் 
பொறுப்பாளி என்று குற்றம்        
காணும் சுபாவம்.
12. சந்தேக பிராணி. தற்பெருமைக்காரர்.
13. அம்மா கோண்டு’.
14. மனைவியின் அபிப்பிராயங்கள்
ஆற்றல்எடுக்கும் முடிவுகளைப் பற்றி 
ஒரு   தாழ்ந்த அபிப்பிராயம்.
15.ஒரு நல்ல தகப்பனார் இல்லை.

நிறைகள்
1. மனைவிக்குக் குடும்பச் செலவுக்கானப் 
பணத்தைக் கொடுப்பார். 
சம்பளம் முழுவதையும் கொடுப்பதும் உண்டு.
2. இரக்கமுள்ளஅதே சமயம் கண்டிப்பான 
குடும்பத் தலைவர்
3. மனைவியின் தோற்றம், சமையல்
வீட்டை பராமரிக்கும் திறமை ­இவற்றை   
அடிக்கடி பாராட்டிப் பேசுவார்.
4. மனைவியின் பிறந்த நாள், கல்யாண நாள் ­ 
இவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்வார்.
5. மனைவிக்குக் கூடாமாட உதவிகள் செய்வார். 
குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது
கடைக்குச் செல்வது, போன்ற 
காரியங்களில்   உதவிசெய்வார்.
6.மனைவியுடன் தனிமையாக இருக்கும்போது 
அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வார்.
7. எந்த விஷயமானாலும் மனைவியை 
கலந்துதான் முடிவெடுப்பார்.
8. ஒரு நல்ல உழைப்பாளி
9. அவசரத்துக்கு உதவும் 
ஒரு Handy man
10. குடும்பத்திற்குத் தேவையான Insurance 
எடுத்துக்கொள்ளும் சுபாவம்   உண்டு.
11. குழந்தைகளை மனைவி கண்டித்தால் 
அதில் தலையிட மாட்டார்.
12. அடிக்கடி “ I love you” என்று சொல்வார்.
13. குழந்தைகளுக்கு ஒரு நல்ல அப்பா.
14. ஒரு நல்ல காதலர்
15. மனைவிக்கு துரோகம் இழைக்காத 
ஒரு விசுவாசி.



கணவர்மார்களே, நீங்களும் இந்த போட்டியில் 
கலந்துகொள்ளலாம். 
உங்கள் மனைவிகளின் எதிர்பார்ப்புகளைப் 
படித்தப் பிறகு அதன்படி நடக்க 
உங்களை மாற்றிகொள்ளுங்களேன். 

அடுத்த வாரம், நீங்கள் உங்கள் 
மனைவிகளுக்கு மார்க் போடலாம்.
காத்திருங்கள்....

ஒரு சின்ன ஜோக்...

ஆதாம்,ஏவாள் (Adam and Eve) 
ஒரு ஆதர்ச தம்பதிகள்.
சண்டையே ஏற்படாது.
ஏன் தெரியுமா?..
ஆதாமுக்கு ,ஏவாளிடமிருந்து 
"எத்தனையோ மாப்பிளைகள்
காத்துக் கொண்டிருந்தார்களே?
போயும் போயும் உங்களை
தலையில் கட்டி விட்டார்களே " 
என்ற பேச்சை கேட்க வேண்டிய
அவசியம் ஏற்படாது?

அதே மாதிரி,ஏவாளுக்கும்,
ஆதாமிடமிருந்து 
"எங்க அம்மா சமையல் மாதிரி வருமா? " 
என்ற பேச்சைக் கேட்க வேண்டிய
அவசியம் ஏற்படாது.



.... கிளறல் தொடரும்.













2 comments:

Anonymous said...

Yen sami indha sindu mudiyar velai umakku?

Annamalaiar

Sowmiya said...

super... :-) very nice..