Sunday, February 05, 2012

நேரத்தின் மதிப்பு (Value of Time)


நாம் பார்க்கும், ரசிக்கும், அனுபவிக்கும் எல்லா 
பொருள்களையும்விட அதிக மதிப்புள்ள பொருள் - 
நேரம்.

நேரமே இல்லை”, “மூச்சு விடக்கூட நேரமில்லை”, 
முழி பிதுங்குகிறது”, “24 மணி நேரம் போதல” - 
என்று புலம்புவதைக் கேட்டிருக்கிறோம். 
ஏன், நாமே, பல சமயங்களில் புலம்பியிருக்கிறோம். 
அதற்குத் தலையாய காரணம், நம்மில் பல பேருக்கு - 
Time Management —- நேரத்தை எப்படி திட்டமிட்டுச் 
செலவழிப்பது என்ற கலை தெரியாததுதான்.

ஒரு பொருளை மதித்து அதற்காக ஏங்குவதுபோல்
ஏன் நேரத்தையும் ஒரு பொருளாகக் கருதி 
அதை மதிப்பதில்லை?

ஒருவேளை, அதற்கு நாம் ஒரு விலை நிர்ணயம் 
பண்ணாத காரணமா
அதற்கு ஒரு விலை வைப்போமே...


உங்கள் ஆண்டு வருமானத்தை (வருமானம் இருந்தால்) 
8760 (இது லீப் வருடம் அதனால் 8784) ஆல் 
வகுத்தால் வரும் எண்தான் உங்கள்
ஒரு மணி நேர வருமானம்.

ஒரு இம்மாத்துண்டுஆட்களைத் தவிர மற்ற 
எல்லோருக்கும் இந்த எண் ஒரு ஜுஜுபி’ 
ஆகத்தான் இருக்கும். 
அதனால்தான் என்னவோ, நேரத்தை  ஒரு பொருட்டாகவே 
நாம் மதிப்பதில்லை. 
வேறு காரணம் தேடுவோம்...
18ஆம் நூற்றாண்டு பொருளாதார மேதை 
ஆடம் ஸ்மித் அவர்களுக்கு ஒரு விடை 
தெரியாத கேள்வி இருந்தது.

தண்ணீர் இல்லாமல் நாம் வாழ முடியாது. 
வைரம் இல்லாமல் வாழலாம். 
ஆனால் வைரத்துக்கு இருக்கும் மதிப்பு 
தண்ணீருக்கு இல்லையே, ஏன்?

பிற்காலப் பொருளாதார மேதைகள் 
இதற்கு நிறைய விளக்கங்கள் அளித்துள்ளார்கள். 
சுருக்கமாக, ‘Marginal Utility’ என்ற விதிப்படி 
இதை விளக்கியிருக்கிறார்கள். 
ஒரு பொருளின் மதிப்பு அதனுடைய மிகச் சிறிய 
உபயோகத்தின் அருமையைப் பொறுத்தது.

உதாரணமாக, தண்ணீரை எடுத்துக்கொள்வோம். 
நிறையக் கிடைத்தால் முக்கியமற்ற காரியங்களுக்கு 
அதை உபயோகப்படுத்துவோம். 
தண்ணீர் கிடைப்பது குறைந்தால் 
உபயோகமற்றவற்றைத் தவிர்ப்போம். 
இப்பொழுது தண்ணீரின் மதிப்பு
இந்தப் புதிய உபயோகத்தைப் பொறுத்து இருக்கும்.

நேரமும் தண்ணீர் மாதிரிதான். 
நம்முடைய மிகச் சிறிய உபயோகம் 
(least important use)  
ஒன்றுமே செய்யாமல் சும்மா இருப்பதுதான். 
அதனால்தான் அதை நாம் பொருட்படுத்துவதில்லை.
ஆனால் ஒரு விஷயத்தில் நேரம், வைரம் மாதிரி. 
வைரம்  மாதிரி நேரமும் ஒரு scarce commodity
ஒரு அரிய பொருள்.

ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு வரையறையுள்ள 
காலம் (எவ்வளவு என்று தெரியாது) 
அளிக்கப்பட்டிருக்கிறது. 
மேலும், நேரம் ஒரு அழியக்கூடிய பொருள் 
(perishable commodity). 
நேரம், உங்கள் (bank account) மாதிரி. 
ஆனால், வித்தியாசமானது. 
இதனுடைய  விதிகளும் கொஞ்சம் வித்தியாசமானது. 
ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பாராமல் 
எல்லோருக்கும் இந்த bank account கொடுக்கப்படும்.

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் accountஇல் 
86,400 (ரூபாய் அல்லது டாலர்) போடப்படும். 
இரவில் ஏதாவது மிச்சம் இருந்தால் அதை அழித்துவிடும். 
மறுநாளுக்கு எடுத்துச் செல்ல முடியாது. 
Overdraft சலுகை கிடையாது. 
ஒவ்வொரு நாளும் புது deposit. 
பின்னால் செல்வது என்பது கிடையாது. 
Interest கிடையாது.

அது என்ன 86400?
ஊகித்திருப்பீர்களே!
அதுதான் ஒருநாளில் உங்களுக்கு 
கொடுக்கப்பட்டிருக்கும் விநாடிகள்.
(24 x 60 x 60)
சில சமயங்களில் நேரத்தை வியாபாரம்கூட 
பண்ணலாம் (tradable).
சாப்பாட்டை நீங்களே தயார்செய்து கொள்ளலாம். 
அல்லது கடைக்குப் போய்ச் சாப்பிட்டுக் கொள்ளலாம். 
எதற்கு நேரத்தைச் செலவழிக்கிறோம் என்பது 
அவரவர் மனத்தைப் பொறுத்தது. 
அதைப் பொறுத்து ஒவ்வொருவரும் 
நேரத்தின் மதிப்பைக் கணித்துக்கொள்வார்கள்.

இதோ சில உதாரணங்கள்...
ஒரு மாதத்தின் மதிப்புத் தெரிய,            
தண்டனை அனுபவிக்கும் 
ஒரு டீன்ஏஜரைக்
கேளுங்கள்.
ஒரு வாரத்தின் மதிப்புத் தெரிய,            
அறிவியல் project முடிக்க 
இருக்கும் மாணவனைக் கேளுங்கள் 
அல்லது வாரப் பத்திரிகை ஆசிரியரைக் 
கேளுங்கள்.
ஒரு நாளின் மதிப்புத் தெரிய,               
ஒரு substitute ஆசிரியரிடம் கேளுங்கள்.
ஒரு மணி நேரத்தின் மதிப்புத் தெரிய,     
பிரசவவேதனையில் 
இருக்கும் பெண்மணியிடம் 
கேளுங்கள்.
ஒரு நிமிடத்தின் மதிப்புத் தெரிய,           
ரயிலைத் தவறவிட்ட 
பிரயாணியிடம் கேளுங்கள்.
ஒரு விநாடியின் மதிப்புத் தெரிய,   
ஸ்கோர் ஒரு எண்குறைவாக 
இருக்கும் சமயம்                          
கையில் பந்துடன் இருக்கும் 
basket ball player இடம் 
கேளுங்கள்.
ஒரு மில்லி செகண்டின் மதிப்பு தெரிய
ஒரு gymmastஐ கேளுங்கள்.
ஒரு கஜத்தின் மதிப்புத் தெரிய,             
NFL(அமெரிக்கா புட்பால்) 
running back ஐ 
கேளுங்கள்.
ஒரு அடியின் மதிப்புத் தெரிய,              
ஒரு architectஐக் கேளுங்கள்.
ஒரு அங்குலத்தின் மதிப்புத் தெரிய,        
ஒரு bungee jumperஐக் கேளுங்கள்.
ஒரு காலனின் (gallon)  மதிப்புத் தெரிய
ஒரு லாரி டிரைவரைக் கேளுங்கள்.
ஒரு pintன் மதிப்புத் தெரிய,         
யாருக்கு ரத்தம் தேவையோ 
அவரிடம்  கேளுங்கள்.
ஒரு தேக்கரண்டியின் மதிப்புத் 
தெரிய வியாதியுள்ள 
ஒரு குழந்தையிடம்                                                      
கேளுங்கள்.
ஒரு தொலைபேசி அழைப்பின்    
மதிப்புத் தெரியவேலைக்கு விண்ணப்பம் 
செய்திருக்கும் நபரிடம் கேளுங்கள்.
கட்டுப்பாட்டைப் பற்றித்
தெரிந்துகொள்ள,என்னுடைய 
பேத்தியிடம் கேளுங்கள்.
ஒரு மன்னிப்பின் மதிப்புத் தெரிய,  
மரண வாயிலில் இருக்கும் 
கைதியிடம்  கேளுங்கள்.
ஒரு குழந்தையின் மதிப்புத் தெரிய 
குழந்தையில்லாத
தம்பதியிடம்                                                         
கேளுங்கள்.

நேரம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. 
நேரம் யாருக்காகவும் எதற்காகவும் 
காத்திருக்க போவதில்லை.

சுவாமி விவேகானந்தர் சொன்னபடி 
நேரத்தை வீணாக்கும்போது 
கடிகாரத்தைப் பார்! 
ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை”.

இன்றைய நேரம், மற்ற எல்லா நேரங்கள் போல்
ஒரு இனிய நேரம் - அதை எப்படி 
உபயோகிக்க வேண்டும் 
என்று தெரிந்திருந்தால்”  
This time, like all times, 
is a very good one, if we but know 
what to do with it (Emerson)

நன்றி: பால் மெண்டிட்(போர்பசஸ் பத்திரிகை)


 ... கிளறல் தொடரும்.

1 comment:

Sowmiya said...

nice one. :-)
adu enna kattupadai patti unga pettiyidam ketka vendum?
avlo restriction-a unga veetla?