Monday, May 21, 2012

வயதாகிக்கொண்டிருந்தாலும் இளமையாக இருப்பது எப்படி? ஒரு பாட்டியின் டிப்ஸ்


வயதாவதை யாரும் தடுக்க முடியாது. 
கண்ணே கண்ணு, ஒண்ணே ஒண்ணு’ 
என்று ஒரே ஒரு மார்க்கண்டேயரைத்தானே 
இன்னும் என்றும் 16 வயதினர் 
என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். 
எல்லோருக்கும் ஆசைதான்
மார்க்கண்டேயரைப் 
போல் இளமை மாறாமல் இருக்க! 
அது முடியாத காரியம் என்று தெரிகிறது. 
இருந்தாலும்  எத்தனையோ முதியோர் 
இன்னும் இளமைத் துடிப்போடு 
வாழ்கிறார்களே
அது எப்படி?

சில பேருக்கு எவ்வளவு வசதிகள் 
இருந்தாலும் 
துக்கமாகவே இருப்பது 
ஒரு அலாதியான கலை. 
இன்னும் சில பேருக்கு
ஒன்றுமே இல்லாவிட்டாலும் 
சந்தோஷமாக இருப்பதில் பிரியம். 
நீங்கள் முந்திய ரகத்தைச் சேர்ந்தவரானால்
உடனே உங்கள் டிராக்கை’ 
மாற்ற யோசியுங்கள். 
இதோ அதற்கான பாட்டி வைத்தியம்’.  
இவைகளைப் பின்பற்றினால்
நீங்கள் வயதாவதை 
நிச்சயம் தடுக்க முடியாது. 
ஆனால் 
உங்கள் வருங்கால நாட்கள் 
நிச்சயமாக 
இன்பமயமாக இருக்கும்.

இதோ அந்த டிப்ஸ்


1.வேண்டாத நம்பர்களை- ­ 
உங்கள் வயது, எடை, உயரம்- ­ 
தூக்கி எறியுங்கள்.     
உங்கள் டாக்டர் அதைப் பற்றிக் 
கவலைப்படட்டும்.

2.எப்பொழுதும் மகிழ்ச்சியான 
நண்பர்களை மட்டும் உடன் 
வைத்துக்கொள்ளுங்கள்.        
சிடுமூஞ்சி நண்பர்கள் உங்களைத் 
தங்களுடன் கீழ் மட்டத்துக்கு 
இழுத்துக்கொண்டு செல்வார்கள்.

3. வாழ்க்கையின் சிறுசிறு விஷயங்களை 
அனுபவிக்கரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

4. நன்றாகச் சிரியுங்கள் ­ சத்தமாக, அடிக்கடி.

5.உங்கள் உடல்நலனில் கவனம் 
செலுத்துங்கள். 
நன்றாக இருந்தால் தொடர்ந்து        
பாதுகாத்துக்கொள்ளுங்கள். 
கொஞ்சம் இடக்குப் பண்ணினால் 
அதைச் சரி செய்ய முயற்சி 
மேற்கொள்ளுங்கள். 
மோசமான நிலை என்று தெரிந்தால் 
தயங்காமல்  பிறர் உதவியை நாடுங்கள்.

6. உங்களுக்கு உதவி தேவையானால் அதை 
வெட்கப்படாமல் மற்றவர்களுக்குத்        
தெரியப்படுத்தி அதைப் பூர்த்தி 
செய்துகொள்ளுங்கள். 
கிடைத்த உதவியைப்        
பெருந்தன்மையோடும் நன்றியோடும் 
எடுத்துக்கொள்ளுங்கள்.

7.நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசிக்கிறேன்’ 
என்று அடிக்கடி சொல்லுங்கள்.

8.எப்பொழுதும் நேசக்கரம் நீட்டத் 
தயங்காதீர்கள். 
அதே மாதிரி மற்றவர்களின்        
கஷ்டங்களைக் காதுகொடுத்துக் 
கேட்டு ஆறுதல் சொல்லுங்கள்.

9. உங்களைச் சுற்றியுள்ள உலகத்தின் மேலே 
உங்கள் கவனம் இருக்கட்டும்.        
நீங்கள் மற்றவர்களிடம் அனுதாபம் 
காட்டினால் உங்கள் பிரச்சினைகள் 
உங்களுக்கு பாரமாக இருக்காது.

10.வாழ்க்கை ஒரு roller coaster மாதிரி. 
மேடு பள்ளங்கள் மாறிமாறி வரும்.

11.கோபம், வருத்தம் இரண்டையும் 
மறுநாளுக்கு எடுத்துச் செல்லாதீர்கள்.

12. இன்றைக்கு மட்டுமே வாழுங்கள். 
ஒவ்வொரு நாளும் என்ன கொண்டு       
வருகிறதோ, அதை முழு மூச்சுடன் 
வாழ்ந்து காட்டுங்கள்.

13. கற்பதை நிறுத்தாதீர்கள். 
சோம்பேறி மனம் சாத்தானின் தொழிற்சாலை 
(Idle    mind is devil's workshop). 
அது தயார் பண்ணும் பொருள் ­ 
Alzheimer's disease.    
ஏதாவது கற்றுக்கொண்டே இருங்கள்.

14. உங்களுடைய வாழ்க்கை உங்கள் கையில்.


....கிளறல் தொடரும்.


1 comment:

Nithyasaravanan said...

Naala Thudipaana vaarthaikal