Monday, May 28, 2012

மாற்றுத் திறனாளிகள் -ஒரு கண்ணோட்டம்


இது என்ன புது வார்த்தை என்று கேட்கத் 
தோன்றுகிறதா?

ஆம், புது வார்த்தைதான். 
பழமையான தமிழ்ச் சொல்லுக்குப் 
புது விளக்கம் தேவைப்பட்டது. 
அதனால் இந்த வார்த்தை உண்டாயிற்று. 
ஊனமுற்றோர் என்று சொன்னவுடன் 
எல்லோர் மனதிலும் உடனே 
ஒரு image தோன்றும். 
உடலில் குறைபாடு இருப்பவராகவோ 
அல்லது ஐம்பொறிகளில் எதிலாவது 
குறைபாடு இருப்பவராகவோ இருப்பவர் 
என்று நினைத்து நல்ல மனதுடையவர்கள் 
பரிதாபப்பட வாய்ப்பு உண்டு.

செவிடர்கள், குருடர்கள், நொண்டிகள்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று 
சினிமாவிலும் டிராமாவிலும் நகைச்சுவை 
என்ற பெயரில் இவர்களை வைத்து 
நையாண்டி செய்து வந்திருக்கின்றனர். 
இன்னும் அது தொடர்கிறது. 
ஊனம் ஒரு பலவீனம் இல்லை. 
அதையும் தாண்டி மனிதன் 
வெளிபடுத்தக் கூடிய ஆற்றல் இருக்கிறது 
என்ற ஒரு யதார்த்த நிலையை 
யாரும் நினைப்பதாகத் தெரியவில்லை.

ஊனமில்லாதவர்களுக்கு ஒரு திறன் 
இருந்தால் ஊனமுற்றவர்களுக்கு வேறு 
ஒரு மாற்றுத் திறன் இருக்கிறது. 
இதனால்தான் இவர்களை 
மாற்றுத் திறனாளிகள் 
என்று அழைக்கலாம் என்று 
தமிழ் தெரிந்தவர்கள் 
இந்தச் சொல்லை உருவாக்கினர்.


இந்த மாற்றுத் திறன் எப்படி
எதனால் வெளிபடுத்தப்படுகிறது
தன்னம்பிக்கை - 
இதுதான் இவர்களுக்குத் 
தாரக மந்திரம்.

ஸ்டீபன் ஹாகிங்  (Stephen Hawking)  
ஒரு பெரிய விஞ்ஞானி. 
இவரால் நடக்க முடியாது, வாய் பேசாது
கை இயங்காது. கண், மனம்  
இந்த இரண்டுதான் வேலை செய்யும். 
அவருடைய சாதனை என்ன
Big Bang Theory and Black Hole Theory 
என்ற இவருடைய கண்டுபிடிப்பு 
உலக மக்களை இவர்பால் 
திரும்பச் செய்தது. இவர் சொல்கிறார்.
It is a waste of time to be angry about 
my disability. One has to get on with life. 
I haven't done badly. People won't have time 
for you if you are always angry or complaining.
உன் ஊனத்தை நினைத்துக் 
கோபப்படுவது வீண். 
நடக்க வேண்டியதைப் பார்க்க வேண்டும். 
நீ எப்போதும் கோபப்பட்டுக் குறைசொல்லிக்
கொண்டிருந்தால், மற்றவர்கள் உன்னைக் 
கவனிக்க மாட்டார்கள்.

ஊனத்தை வென்று சாதனைப் படைத்தவர் 
பட்டியல் ரொம்பரொம்ப நீளம். 
ஏற்கனவே, முந்திய பகுதிகளில்
தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற
அந்தகக் கவி வீரராகவ முதலியார்
இரட்டைப் புலவர்கள் பற்றிப் பார்த்தோம். 
இப்பொழுது, இன்னும் தெரிந்த
தெரியாத பிரபலங்களைப் பற்றித் 
தெரிந்துகொள்ளலாமா?

பெத்தோவன்  (Ludwig Van Beethoven) 
(1770 - 1827)
32 வயதில் அரைகுறை காது கேட்காதவராக 
இருந்த இவர், தன்னுடைய 46ஆவது வயதில் 
முழுவதுமாக  காது கேட்காத நிலையை 
அடைந்தார். 
சங்கீதத்தில் அவர் படைத்த 
இசைக் காவியங்கள் 46ஆவது 
வயதுக்குப் பிறகுப் படைத்தவையே.

சாரா பெர்ன் ஹார்ட்  (Sarah Bern Hardt) 
(1844 - 1923)
1905இல் மூட்டுக் காயம். 
1914இல் ஒரு காலை வெட்டி 
எடுத்துவிட்டார்கள். 
தன் கடைசி மூச்சு இருக்கும் வரை 
நடிப்புத் தொழிலை விடவில்லை. 
பிரான்ஸ் நாட்டின் - Divine Sarah 
என்று அழைக்கப்பட்டவர்.

ஜார்ஜ் லுயிஸ் போர்ஜஸ் (Jorge Luis Borges) 
(1899 - 1986)
இவர் அர்ஜன்டைனா நாட்டைச் 
சேர்ந்த கவிஞர், கதை ஆசிரியர்
இவருடைய படைப்புகள் 
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 
இவருக்குக் கண் பார்வை கிடையாது.

லூயி பிரெயில் (Louis Braille) 
(1809 - 1852)
3 வயதில் கண் பார்வையை இழந்தவர். 
பிரெயில் எழுத்து முறை பற்றித் 
தெரியாதவர்கள் ரொம்பரொம்பக் 
கொஞ்சம்.

ஹோமர் (Homer)
கிரேக்க காவியங்களான இலியட், ஒடிஸ்ஸி 
படைத்த இவர் கண் பார்வை அற்றவர்.

ஹெலன் கெல்லர்   (Helen Keller ) 
(1880 - 1968)
2ஆவது வயதில் கண் பார்வை இழந்தவர். 
அதே சமயத்தில் காது கேட்பதும் 
பாதிக்கப்பட்டது. 
பெரிய சொற்பொழிவாளராகவும்-
10 புஸ்தகங்களுக்கு ஆசிரியராகவும் 
புகழ் பெற்றிருக்கிறார்.

ப்ராங்க்லின் ரூஸ்வெல்ட் (Franklin D. Roosevelt)  
(1882 - 1945)
39 வயதில் பக்கவாதத்தால் 2 கால்களும் 
முடமாக ஆயிற்று. 4 தடவை அமெரிக்கா 
ஜனாதிபதியாகிப் பெரும் புகழ் 
அடைந்திருக்கிறார்.

ஹென்றி விஸ்கார்டி (Henry Viscardi)  
பிறக்கும்போதே கால்கள் கிடையாது. 
Human Resources Center - President. 
13 Honorary Degrees, 9 புத்தகங்களுக்கு 
ஆசிரியர்.

ஜேம்ஸ் தர்பர்  (James Thurber) 
(1894 - 1961)
சிறு வயதில் விபத்தில் ஒரு கண் போயிற்று. 
அடுத்த கண் அவர் இளைஞராக இருக்கும் 
போது பார்வை இழந்தது. 
இவர் வரையாத கார்டூன்கள்
sketches இல்லை. 
அநேக நாடகங்கள், கட்டுரைகள் 
எழுதிக் குவித்திருக்கிறார்.

டானி கிரே தாம்ஸன்  (Tanni Grey Thompson)
வாழ்க்கை முழுவதும், வீல் சேர்தான். 
ஆனால் Paralympics விளையாட்டில் 
16 மெடல்களில் 11 தங்கம், 4 வெள்ளி 
மற்றும் வெண்கலம் பெற்றுள்ளார்.  
30 உலக சாதனைகள், ஆறு தடவை 
லண்டன் மாராதான் வின்னர். 
OBE  (Order of the British Empire) 
பட்டம் கொடுத்து பிரிட்டிஷ் அரசியால் 
கெளரவப்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஜான் மில்டன்  (John Milton)
43 வயதில் கண் பார்வை போய்விட்டது. 
அதற்குப் பிறகு படைத்த ஆங்கில 
மகா காவியம் Paradise Lost.
இவரைப் பற்றி ஒரு சின்ன ஜோக்.
இவர் இரண்டு காவியங்கள் எழுதியிருக்கிறார். 
ஒன்று Paradise Lost அடுத்தது  
Paradise Regained. 
எப்போது இவற்றை எழுதினார்
திருமண வாழ்க்கை சோபிக்காதபோது  
Paradise Lost என்று எழுதினார். 
மனைவியிடமிருந்து விவாகரத்து 
கிடைத்தவுடன்  
Paradise Regained எழுதினார்.
இந்தப் பட்டியல் போதும் என்று 
நினைக்கிறேன். 
முதலில் சொன்னபடி இந்த லிஸ்ட் 
ரொம்பரொம்ப நீளம். 
இங்கே சொல்லப்பட்ட நபர்கள் 
ஒரு சாம்பிள். 
தெரிந்த தெரியாத எத்தனையோ 
மாற்றுத் திறனாளிகள் நமக்கு அருகிலேயே 
இருக்கிறார்கள். 
நம் பார்வை கொஞ்சம் வித்தியாசமாக 
இருந்தால் நாம் அவர்களை 
நிச்சயமாகக் கண்டுகொள்ளலாம். 
அடுத்த தடவை ஒரு குறைபாடு உள்ள 
நபரைப் பார்த்தால் பரிதாபத்தோடு 
பார்க்காதீர்கள். 
அவரை ஒரு மாற்றுத் திறனாளியாகப் 
பார்த்து அவரை ஊக்குவியுங்கள்.


... கிளறல் தொடரும்.

No comments: