Monday, June 18, 2012

பாப்கார்ன்



இது மிகவும் பிரபலமான ஒரு ஆங்கில-தமிழ் 
வார்த்தை - பஸ், சைக்கிள், கம்ப்யூட்டர்
டெலிபோன் போல.

இந்த வார்த்தையைக் கேட்டவுடன் வித்தியாசம் 
பாராமல் கேட்பவர் மனதில் தோன்றுவது 
கீழே உள்ள Image ஆகத்தான் இருக்கும்.
பாப்கார்ன் என்று சொல்வதற்குப் பதிலாக 
இதனுடைய தமிழ்ச் சொல்லான 
மக்காச்சோளப் பொரி என்று சொன்னால் 
மேலே உள்ள image எவ்வளவு தூரம் 
மனதில் கொண்டுவரும் என்பது 
ஒரு கேள்விகுறியாகத்தான் இருக்கும்.

பாப்கார்ன் ஒரு பாப்புலரான உணவு. 
சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி 
உண்ணும் உணவுப்பொருள். 
இதை ஒரு addictive உணவு என்றுகூடச் 
சொல்வார்கள். 
அதாவது, பாப்கார்ன் பாத்திரத்தில் (bowl)  
கை வைக்க ஆரம்பித்தால், கை
திரும்பத்திரும்ப அந்தப் பாத்திரத்துக்குள்ளேயே 
போகும். 
நிறுத்த நினைத்தாலும் மனது கேட்காது. 


பாப்கார்ன்  இப்பொழுது உலகம் முழுவதும் 
பரவிவிட்டது. ஆனாலும் இதை மிக 
அதிகமாகச் சாப்பிடுபவர்கள் 
அமெரிக்கர்கள்தான்.  
உண்மையான அன்புக்கு (True love) 
உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் 
அமெரிக்கர்கள், பாப்கார்னை விரும்பி 
சாப்பிடுவதைதான் சொல்ல வேண்டும். 
எந்த சினிமா தியேட்டருக்குச் சென்றாலும் 
பெரியவர்களும் சிறுவர்களும் 
பெரிய அட்டைப் பெட்டியில் பாப்கார்னை 
வாங்கி மடியில் வைத்துக்கொண்டு சினிமா 
பார்ப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சி.





இரண்டாவது உலகப் போரின்போது 
அமெரிக்காவில் சர்க்கரைக்கு ரேஷன் இருந்தது. 
அப்போது பாப்கார்னின் உபயோகம் 
3 மடங்கு பெருகியதாம். 
சுருக்கமாகச் சொன்னால்
அமெரிக்கா பாப்கார்னை நேசிக்கும் நாடு. 
(Land of popcorn lovers). 
அமெரிக்கா ஒரு பாப்கார்ன் நாடு 
(Land of popcorn). 
இதுவரை அமெரிக்கா பாப்கார்ன் 
புராணத்தை படித்தவர்கள் அமெரிக்காதான் 
பாப்கார்னை உலகத்திற்குத் தந்ததாகக் 
கற்பனை பண்ண வேண்டாம்.

பாப்கார்ன் சரித்திரத்தைக் 
கொஞ்சம் புரட்டிப்பார்ப்போம்.

அமெரிக்கர்களுக்கு பாப்கார்ன் 
அறிமுகம் ஆனது 
19ஆம் நூற்றாண்டின் கடைசிப் 
பகுதியில்தான்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் 
கண்டுபிடிப்பு, 7000 வருடங்களுக்கு முன் 
பெரு நாட்டுப் பழங்குடி மக்கள் 
பாப்கார்ன் சாப்பிட்டுவந்தார்கள் 
என்று சொல்கிறது. 
பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் 
2 இடங்களில் மக்காச்சோளத்தின் 
வெளித்தோல்உமி, சோளத்தட்டை
சோளக்குஞ்சம்  கிடைத்ததை ஆதாரமாக 
வைத்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். 
மத்திய மெக்ஸிகோவில் உள்ள 
‘Bat Care' என்ற இடத்திலிருந்து 
5600 வருடங்களுக்கு 
முன் உபயோகிக்கப்பட்ட 
பாப்கார்ன் கிடைத்திருக்கிறது.

Utah  மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 
பாப்கார்ன் 1000 ஆண்டுகளாகியும் 
கெடாமல் இருக்கிறது. 
தூசி தட்டினால் இன்றும் பஞ்சுபோல் 
ஆக இருக்கிறதாம். 
பஞ்சுபோன்ற, மொரமொரப்பான 
இந்த பாப்கார்னின் ரகசியம் 
ஆதிகுடி மக்களால் பல காலம் காக்கப்பட்டு 
வந்திருக்கிறது.

குவாடெக்வினா  (Quadequina ) என்ற 
அமெரிக்கா பழங்குடி மகன் 
19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்திலிருந்து 
வந்த யாத்ரீகர்களின் தந்தையருக்கு 
(Pilgrim's Fathers)  
மான் தோலால் செய்யப்பட்ட பை நிறைய 
இந்த பாப்கார்னைநன்றி தெரிவிக்கும் 
விதமாகப் பரிசாகக் கொடுத்தான். 
இதுதான், அமெரிக்கா வெள்ளையர்களுக்கு 
பாப்கார்ன் அறிமுகமான படலம். 
இதற்குப் பிறகு, வீடுகளில் மக்காச்சோளம் 
பாப்பண்ண ஆரம்பித்தது.

1892ஆம் ஆண்டு, வீட்டில் அடங்கிக்கிடந்த 
பாப்கார்ன் தெரு வீதிகளுக்கு வர ஆரம்பித்தன. 
சார்லஸ் கிரேடர் என்ற அமெரிக்கர் 
பாப்கார்னைத் தயாரிக்க நீராவியால் 
இயங்கும் இயந்திரத்தைக் கொண்ட 
தள்ளுவண்டியை வடிவமைத்து அதற்கான 
காப்புரிமையை (patent) பெற்று 
அந்த இயந்திரத்தை விற்க ஆரம்பித்தார். 


1927ஆம் வருடம் பாப்கார்னின் 
சினிமா பிரவேசம் 
New York Rose Theater இன் 
லாபியில் நடந்தது.

1982இல் electric powered hot air popper 
வர ஆரம்பித்தவுடனே பழைய தள்ளுவண்டிக்கு 
டா-டா சொல்லிவிட்டார்கள். 
எத்தனை எத்தனை விதமான பாப்கார்ன் - 
வெள்ளை-, மஞ்சள், ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு
அதேபோல் வெண்ணெய், எண்ணெய்
பாலாடை கலந்த ரகங்கள்.


அப்படி என்ன இந்த பாப்கார்னில் இருக்கிறது. 
இதனுடைய அடிப்படை பொருள்கள் என்ன?

71%  மாவுச்சத்து
10.5%  புரதம்
3%  கொழுப்பு
14% தண்ணீர்
இந்த, H2O(தண்ணீர்) தான் கார்னை 
பாப்செய்ய உதவுகிறது. சூடாக்கப்பட்ட 
ஈரப்பதம் நீராவியாக மாறி, பாப்கார்னின் 
உமியை நீக்கி, அப்படியே உள்பக்கத்தை 
வெளியே தள்ளி பாப்கார்னாக மாற்றுகிறது. 
இதனால்தான் பாப்கார்னைக் 
காற்றுப் புகாத பாத்திரங்களில் 
வைக்க வேண்டும்.

இவ்வளவு பிரபலமான பாப்கார்ன் 
நம்முடைய உடலுக்கு ஏதாவது 
நன்மை செய்கிறதா
அல்லது இதுவும் முறுக்கு, தட்டை 
போன்ற உடலைக் கெடுக்கும் 
நொறுக்குத் தீனியா?

விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களின் முடிவு. 
பாப்கார்ன் - வெண்ணெய், எண்ணெய்
உப்பு சேர்க்காமல் இருந்தால் - 
ஒரு அருமையான ஆரோக்கியமான உணவு” 
என்று. 

எப்படி? பார்ப்போமா?

பல்லில் சிக்கி அவஸ்தை தரும் பாப்கார்ன் 
உமிநார்சத்து உள்ள ஆகாரம். 
Poly phenols என்ற சத்துக்கள் 
பாப்கார்னில் நிறைய இருக்கின்றன. 
இது சாதாரணக் கடலைகளைவிட 
15% அதிகமாகவும் அடர்த்தியாகவும் 
பாப்கார்னில் இருக்கிறது. 
பென்ஸில்வேனியா பல்கலைக்கழக 
ஆராய்ச்சிப்படி-, உங்களுக்கு தினசரி 
தேவைப்படும் தீட்டப்படாத தானியத் 
தேவையில் 70% பாப்கார்னிலிருந்து 
கிடைக்கிறதாம்.
அவர்கள் சொல்கிறார்கள்.
“Popcorn may be the perfect snack food. 
It is 100% unprocessed whole grain. 
All other grains are processed 
and diluted with other ingredients, 
and although cereals are called ‘whole grain,’ 
this simply means that over 51 percent of 
the weight of the product is whole grain. 
One serving of popcorn will provide more 
than 70 percent of the daily intake 
of whole grain. 
The average person only gets 
about half a serving of whole grains a day, 
and popcorn could fill that gap 
in a very pleasant way.”

மேலும் சொல்கிறார்கள் இதில் நிறைய 
நார்ச்சத்து இருப்பதால் உடலுக்குப் 
போஷாக்கையும் ஆரோக்கியத்தையும் 
கொடுக்கும்.

பாப்கார்னில் இருக்கும் நார்ச்சத்து 
மலச்சிக்கலைத் தடுக்க வல்லது. 
கொலஸ்ட்ரால், இரத்தக் கொதிப்பு 
போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் 
கொண்டுவரும். 
இதில் நிறைய antitoxidants இருக்கிறது. 
இதைச் சாப்பிடுவதால் கலோரிகள் ஏறாது. 
ஒரு கப் பாப்கார்னில் 25 கலோரிகள் 
மட்டுமே இருக்கின்றன.

நுண்ணலை அடுப்புகளைப்(microwave) 
பயன்படுத்தித் தயாரிக்கும் பாப்கார்னில் 
கலோரிகள் அதிகம்.

பாப்கார்ன் மகிமை போதும் 
என்று நினைக்கிறேன். 

அடுத்த தடவை உங்கள் குழந்தைகள் 
பாப்கார்ன் கேட்டால் தயங்காமல் 
வாங்கிக்கொடுங்கள்.
நீங்களும்,shameless ஆ
குழந்தைகளின் பாப்கார்ன் 
பாத்திரத்தில் கை வையுங்கள்.




கிளறல் தொடரும்...





No comments: