Monday, June 11, 2012

ஒப்புரவு அறிதல்


சுயநலமற்ற சமூக சேவையைப் பற்றி 
இந்த வாரம் எழுதுவதாக சொல்லிவிட்டு
இது என்ன புது சப்ஜக்ட்என்று கேட்கலாம். 
நியாயமான கேள்வி.
பதில் - இது அதேதான்.’ 
ஒரு சிறு விளக்கம்:
இந்த ஒப்புரவுதற்காலத் தமிழ் 
அகராதிகளில் காணப்படவில்லை. 
இந்தச் சொல் புழக்கத்தில் இல்லாதுதான் 
காரணம். ஆனால், இதை உபயோகித்தவர் 
சாதாரண பேர்வழியில்லை. 
சாட்சாத் வள்ளுவர் பெருமான்தான். 
இந்த வார்த்தையை ஒரு அதிகாரத்திற்குத்  
தலைப்பாக வைத்து 10 குறள்களில் 
இதன் அவசியத்தை வலியுறுத்திருக்கிறார். 
(அத்தியாயம் 22: 211-220)

ஒப்புரவு அறிதல் என்பதன் பொருள்: 
உன் சமூகத்திற்கு நீ செய்ய வேண்டிய கடமை.

திருவள்ளுவர் இந்த 10 குறள்களில் 
சமுதாய நலன் நாடல், தாம் வாழும் குடியைச் 
சிறப்பித்தல் என்ற கோட்பாடுகளை 
விளக்கியிருக்கிறார். 
சில உதாரணங்கள்:
ஒப்புரவி னால் வரும் கேடுஎனின் 
அஃது ஒருவன்
விற்றுக் கோள் தக்கது உடைத்து.
பிற நலன்களை இழக்க வேண்டியிருந்தாலும் 
சமுதாயத் தொண்டில் தன்னை இழந்து 
ஈடுபட வேண்டும்.
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற
இன்றைய வாழ்க்கை சிறக்கவும் எதிர்கால 
வாழ்க்கை மேலாக வளரவும்
சமுதாயப் பொதுநலன் கருதி உழைக்கும் 
வாய்ப்பைவிடச் சிறந்தது இல்லை.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
பிரதிபலன் எதிர்பார்க்காமல் பெய்யும் 
மழையைப் போல் கைம்மாறு கருதாது 
சமூகத்தின் நலன் நாடித் தொண்டு 
செய்பவர்கள் சிறந்தவர்கள்.

வள்ளுவர் மாதிரி அவருக்கு முன்பும் பின்பும் 
வாழ்ந்த எத்தனையோ மகான்கள் 
இந்த சமூக சேவையைப் பற்றி 
எழுதி, சொல்லியிருக்கிறார்கள். 
எத்தனையோ moral codesஐ நாம் 
பறக்கவிட்டதுபோல் இதற்கும் 
அதே கதிதான்.

ஏதோ சில ஸ்தாபனங்கள் — Scouts, NCC — 
சமூக சேவையை ஒரு பகுதியாகத் தங்கள் 
பயிற்சிகளில் திணித்திருக்கிறார்கள். 
மற்றபடி சமூக சேவையைப் பற்றி நம் வளரும் 
இளைஞர் சமுதாயத்திற்கு எவ்வளவு 
தூரம் விழிப்புணர்வுஇருக்கிறது
எத்தனை பேர் அது ஒரு  அத்தியாவசியமான 
செயல்பாடு என்று கருதுகிறார்கள்?

இளமையில் கல்என்ற வழக்கு 
நம் நாட்டிலிருந்து ஒலிபரப்பப்பட்ட வார்த்தை. 
அதை கடைப்பிடிப்பது அமெரிக்க 
பள்ளிகூடங்கள். உயர்நிலைப் பள்ளியில் 
(9, 10, 11, 12 வகுப்புகளில்) படிக்கும் 
மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 
குறைந்தபட்சம் 10 மணி நேரமாவது 
சமூகத் தொண்டு (community service) 
செய்ய வேண்டும். 
இதற்கான சான்றிதழ் அந்தந்த  counselor 
இடமிருந்து பெற்றுப் பள்ளியில் 
சேர்க்க வேண்டும். 
இந்த 4 ஆண்டு, 40 மணி நேர 
சேவையில்லாமல் 
எந்த மாணவனும் மாணவியும் 
தங்கள் உயர்நிலைப் படிப்பை 
முடிக்க முடியாது. 
கட்டாயத்திற்காக முதலில் இந்த மாணவ 
மாணவியர்கள் சமூக வேவையில் 
ஈடுபட்டாலும் பழகப்பழக அவர்களுக்கு 
அதில் ஒரு ஈடுபாடு ஏற்பட்டு
பிற்காலத்தில் அது அவர்களுக்குச் 
சமூகத்திலும் அதன் சூழ்நிலையிலும் 
கவனத்தை ஏற்படுத்த உதவுகிறது.
சமூக சேவை என்றால் என்ன
இது உங்கள் bio-dataவை அலங்கரிக்கும் 
தகவல் இல்லை. 
தம்பட்டம் அடித்துக்கொள்ளும் 
விஷயமும் இல்லை.

மனித சமுதாயத்தைப் புரிந்துகொள்ள 
உதவும் ஒரு சாதனம். 
மற்றவர்களுக்கு பரிவுடன் உதவி செய்வது. 
இது ஒரு பொறுப்பல்ல (responsibility); 
ஒரு கடமை. (obligation)

சமூக சேவை, உங்களை உங்கள் 
சொகுசுப் போர்வையிலிருந்து  (comfort zone) 
வெளிவரச் செய்து, உலக நடப்பைப் 
பார்க்கத் தூண்டுகிறது.

நாம் எல்லோரும் ஒருவரை ஒருவர் 
சார்ந்தவர்கள். 
வாழ்க்கையின் லட்சியமே 
பகிர்ந்துகொள்வதுதான். 
தீர்ப்பு நாள்என்று சொல்வார்களே அன்று
நம்மையும் நம்மைச் சார்ந்த சமுதாயத்தையும் 
அலசிப் பார்த்துத் தீர்ப்பு காணும் நாள். 
நம் நீதிபதி பார்ப்பதெல்லாம்
நாம் எப்படி நம்முடைய 
குழந்தைகளையும், வயதானவர்களையும், 
நோயாளிகளையும்,ஊனமுற்றோர்களையும் நடத்திவந்திருக்கிறோம் என்பதைத்தான்.

நல்லவனாக இருந்தால் மாத்திரம் போதாது. 
மற்றவர்களுக்கும் நல்லது செய்ய  வேண்டும்.

இந்தச் சமூகச் சேவையினால் என்ன பயன்?
ஏற்கனவே சொன்னபடி, போகிற காலத்திற்குப் 
புண்ணியம் கிடைக்கும். 
வாழ்க்கையைப் பற்றி ஒரு புதுப் பரிமாணம் 
கிடைக்கும். 
உங்களுக்குப் பணிவைக் கற்றுக்கொடுக்கும். 
பல பேருக்கு ஒரு புதிய திறமையைக் (skill)
கற்றுக்கொடுக்கும்.
கடைசியாக, நீங்கள் உங்கள் சமுதாயத்திற்கு 
ஏதாவது திரும்பக் கொடுக்க 
ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.
யாருக்கு உங்கள் சேவை தேவைப்படும்?  
Nebraska University இணையதளத்தில் 
சமூகத்திற்குத் தொண்டு எப்படியெல்லாம் 
என்பது பற்றி 366 யோசனைகள் 
கொடுத்திருக்கிறார்கள். அதன் URL இதோ:
சுருக்கமாக
வயதானவர்கள் வசிக்கும் இடங்கள்
ஏழைகளுக்கானப் பள்ளிக்கூடங்கள்
eye camp, சூப் கிச்சன்
விழாக்கள் மற்றும் பண்டிகைகள் 
நாள்களில் volunteer service, 
துணி, உணவுப் பண்டங்கள் - 
இவற்றைச் சேகரிக்க volunteer service, 
கண் தெரியாத மாணவர்களுக்குத் தேர்வு 
எழுத உதவுதல்.

யோசியுங்கள்... 
நிறைய யோசனைகள் தட்டுப்படும். 
தனிப்பட்ட நபர்களுக்கும், தனிப்பட்ட 
குழுக்களுக்கும்  உதவுவதற்கு நிறையவே 
வழிகள் உண்டு. 
தன்னார்வத் தொண்டு (voluntary service) 
என்பது மகிழ்ச்சியைக் கொடுக்கும் அனுபவம்.
Volunteers are not paid not because 
they are worthless but because 
they are priceless.
முடிவாக ஒரு சிறுகதை:
ஒரு பாதிரி பிரார்த்தனை 
செய்துகொண்டிருந்தார். 
அப்போது ஊனமுற்ற ஒருவன்,  
ஒரு பிச்சைக்காரன்
ஒரு நலிந்த மனிதன் அவரைத் தாண்டிச் 
சென்றார்கள்.

பாதிரி கடவுளைப் பார்த்துக் கேட்டார்: 
, கடவுளே, நீர் காருண்யத்துடன் 
படைக்கும் கடவுள் என்று எல்லோரும் 
போற்றுகிறார்கள். அப்படிப்பட்ட உம்மால் 
எப்படி இந்த மாதிரி ஆட்களைப் படைத்து 
அவர்களுக்கு ஒரு நிவாரணமும் செய்யாமல் 
இருக்க முடிகிறது?”
கடவுள் சொன்னார்: 
நான் ஒன்றும் சும்மா இல்லை. 
இவர்களுக்கு உதவ உன்னைப் படைத்தேன்.

நண்பர்களே
எதற்காக இன்னும் காத்திருக்கிறீர்கள்?

 ...கிளறல் தொடரும்.

குறள் விளக்கம்-நன்றி:ஜெ.நாராயணசாமி












2 comments:

ganesh said...

nanri

Vetirmagal said...

இப்போதெல்லாம் பரவலாக, இளைஞர்கள், குழுக்களில், வாலன்டியரிங்க், செய்வது வரவேற்க தக்கது.

இந்த முயற்சிகள் இன்னும் , பலராலும் , கடைபிடிக்கப்பட்டால், எவ்வளவு பலன்!

முனைப்பாக படிக்கத்தூண்டும் பதிவுகளுக்கு ந்ன்றி.