Sunday, July 08, 2012

தெரிந்த பாதை- தெரியாத பாதை: இதில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?



கேள்விக்குப் பதில் சொல்ல நினைக்கும் முன்
இந்தக் கதையை முதலில் படியுங்கள்.

இந்தக் கதையின் பெயர் “The Black Door” 
எழுதியவர் யார் என்று சரியான தகவல்கள் 
இல்லை. Paul J. Meyer என்றவர் 
எழுதியதாகச் சில தகவல்கள் கூறுகின்றன. 

கதையைப் படிக்கலாமா?

ரொம்பரொம்ப காலத்திற்கு முன்
பாரசீக நாட்டில் ஒரு புகழ்பெற்ற 
படைத் தலைவர் (Army General) இருந்தார். 
பெரிய வீரர். மிக புத்திசாலி
மனிதாபிமானம் கொண்ட தயாள குணம் 
படைத்தவர்.

இவர் போர்க் கைதிகளை நடத்திய 
விதம் புதுமையானதாகவும், அதே சமயம்
புதிரானதாகவும் இருந்தது. 
இவர் காலம், ஜெனீவா கன்வன்ஷன் 
(Geneva Convention) போர்க் கைதிகளை 
எப்படி நடத்த வேண்டும் என்ற 
ஒரு ஒப்பந்தம்  நடைமுறைக்கு வராத காலம்.

வழக்கமாகப் போரின் முடிவில் கைதான 
போர் வீரர்களை வரிசையாக 
சுவருக்குமுன் நிறுத்தி துப்பாக்கியால் 
சுட்டு விடுவார்கள். 
இந்த முறைக்கு “Firing Squad” என்று பெயர்.






ஆனால், இந்தப் படைத் தலைவரின் 
வழி தனிவழி. 
போர்க் கைதிகளை உடனுக்குடன் 
சுட்டுக் கொல்லாமல் அவர்களுக்கு 
இரண்டு சாய்ஸ் கொடுப்பார். 
ஒன்று, அவர்கள் “firing squad”ஐ 
எதிர்கொண்டு சாவதற்குத் தயாராகலாம். 
அல்லது பக்கத்திலிருக்கும் 
ஒரு “black door”ஐ திறந்துகொண்டு 
வெளியே செல்லலாம். 
அந்தக் கதவின் வெளியே என்ன இருக்கும்
என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.








இந்த முறை ரொம்ப நாளாக நடந்துவந்தது. 
ஒரு நாள் நாட்டைக் காட்டிக் கொடுத்த 
ஒரு ஒற்றனைப் பிடித்து வந்தார்கள். 
அவனை விசாரித்த படைத் தலைவர் 
அவனுக்கு மரண தண்டனை விதித்து 
அதை நிறைவேற்ற ஒரு நாளையும் குறித்தார்.

தண்டனை நிறைவேற்ற வேண்டிய நாளில் 
அவனைத் தலைவர் முன் கொண்டுவந்தார்கள். 
அவனைப் பார்த்துத் தலைவர் சொன்னார்:
போர்க் கைதிகளைப் போல் உனக்கும் 
2 சாய்ஸ் கொடுக்கிறேன். 
firing squad அல்லது black door. 
எது வேண்டும் என்று உன் முடிவை 
நீயே தீர்மானித்துக்கொள்.

ஒற்றன் கொஞ்ச நேரம் யோசித்தான். 
என் குற்றத்திற்கு மரணம் நிச்சயம். 
அந்த மரணத்தை firing squad உடனே 
கொடுத்துவிடும். அதை விட்டுவிட்டு 
black door வழியாக வெளியே சென்று 
என்ன கஷ்டங்களை எல்லாம் 
அனுபவிக்க வேண்டியிருக்குமோ 
என்று தெரியவில்லை. 
போசாமல் firing squad என்று 
சொல்லிவிடலாம்என்று தீர்மானித்துத் 
தனக்கு firing squad மூலம் மரணத்தைக் 
கொடுங்கள் என்று படைத்தலைவரிடம் 
சொல்லிவிட்டான்.

படைத் தலைவரும் அப்படியே ஆகட்டும்” 
என்று சொல்லிவிட்டு அவ்விடத்தைவிட்டு 
நகர்ந்தார். கொஞ்ச நேரத்தில் அவர் காதில் 
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

படைத் தலைவரின் ஆலோசகர்
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு 
ஐயா, அந்த black doorக்குப் பின்னால் 
என்னதான் இருக்கிறது என்று 
தெரிந்துகொள்ளலாமா?” என்றார்.

படைத் தலைவர் சிரித்துக்கொண்டே
சுதந்திரம்என்றார்.

மேலும் சொன்னார்
ஆம், சுதந்திரத்தைத்தான் இவர்களுக்கு 
சாய்ஸாகக் கொடுத்தேன். 
அதைத் தேர்ந்தெடுத்தவர்கள் 
சுதந்திரமாக வெளியே சென்று 
வாழ்க்கையைத் தொடங்கலாம். 
ஆனால் மனித சுபாவத்தைப் பற்றி 
எனக்கு நிறையவே தெரியும். 
பெரும்பகுதி மக்கள், தெரிந்த 
பாதையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். 
தெரியாத பாதையைத் தேடிச் செல்ல 
விருப்பம் காட்ட மாட்டார்கள். 
அப்படி தேடிச் செல்பவர்கள் 
நிச்சயமாக நன்மை அடைவார்கள்” 
என்று சொன்னார்.

இப்பொழுது சொல்லுங்கள். 
நீங்கள் என்ன முடிவை எடுத்திருப்பீர்கள்?

இப்பொழுது சுலபமாக சொல்லலாம். 
அந்த ஒற்றன் ஒரு மடையன். 
எப்படியும் சாகப்போகிறோம். 
Black Door எதைத்தான் காட்டுகிறது 
என்று பார்ப்போமே என்று முடிவு 
எடுத்திருக்க வேண்டும்”.

ஆனால் அந்தச் சமயத்தில் இந்த முடிவை 
நீங்கள் எடுப்பீர்களா
இந்த மாதிரியான சூழ்நிலை 
உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட 
சமயங்களில் நீங்கள் என்ன முடிவை 
எடுத்தீர்கள்
“Safe bet or unknown. 
A known devil is better than unknown angel” 
என்ற முடிவுக்கு வந்தீர்களா?

பரிச்சயமானது, தெரிந்தது என்ற நிலை 
தப்பானது இல்லை. 
ஆனால், சில சமயம் புதிய சந்தர்ப்பங்களைத் 
தேடிச் செல்ல வேண்டுமானால் 
தெரியாத பாதையில் செல்ல 
மனத் துணிவு வேண்டும்.

Robert Frost என்ற கவி சொல்கிறார்.
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood,
and I took the one less traveled by,
And that has made all the difference.

“The Road Not Taken”


... கிளறல் தொடரும்.

No comments: