Monday, July 30, 2012

உருப்படியாகப் புகார்செய்தல் (Creative Complaining)


நீங்கள் அடிக்கடி எதற்கெடுத்தாலும் 
புகார் செய்பவரா?
அவசரப்பட்டு இல்லைஎன்று 
சொல்லிவிடாதீர்கள். 
நீங்கள் நிச்சயமாக ஒரு புகார் பேர்வழிதான். 
அது ஒரு தப்பான, வெட்கப்பட வேண்டிய
வேதனைப்பட வேண்டிய 
(விசு சார், மன்னிக்கவும்) விஷயமே இல்லை. 
இதை நான் சொல்லவில்லை. 
ஒரு பிரபல மனோதத்துவ விஞ்ஞானி
Robin M. Kowlaski சொல்லியிருக்கிறார்.

அவர் சொல்லுகிறார்: 
“Complaining has value. 
We would't do it otherwise. 
புகார் செய்வதில் ஒரு மதிப்பு 
இருக்கிறது. இல்லையென்றால் 
நாம் அதை செய்ய மாட்டோம்.

அமெரிக்க பழமொழிகளில் ஒன்று 
The squeaky wheel gets the grease - 
சத்தம்போடும் சக்கரத்திற்குத்தான் 
எண்ணெய் கிடைக்கும். 
நம்முடைய தமிழிலும் 
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்” 
(கொஞ்சம் மாற்றி, அழுத பிள்ளைக்குத்தான் 
பால் கிடைக்கும்).

இந்த 2 பழமொழிகளும் ஒரே 
விஷயத்தைத்தான் சொல்லுகிறது.  
உங்களுடைய வாழ்க்கையை இடைஞ்சல் 
பண்ணும் விஷயங்களைப் பற்றி 
நீ வாய்விட்டுப் புகார்செய்தால் 
மாத்திரம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

புகார் விஷயங்களில் முக்கியமானது 
‘feed back’ mechanism. 
அதாவது நம்முடைய புகார்களுக்கு 
நிவாரணம் அளிக்கும் ஒரு சாதனம் 
(நபர், ஸ்தாபனம் அல்லது சர்க்கார்).

50, 60 ஆண்டுகளுக்கு முன் 
வாழ்க்கை, பெரும்பான்மையோருக்கு
சுலபமாகப் போய்கொண்டிருந்தது. 
பிரச்சினைகள் அவ்வளவாக இல்லை. 
பிரச்சினை சக்கரம் சத்தம் போட்டவுடன் 
எண்ணெய் போடத் தயாராக 
அரசாங்கமும் அதன் ஊழியர்களும் இருந்தனர்.

இப்பொழுது.... எத்தனை பிரச்சினைகள்- 
தனிநபர், சமூகம், நாடு என்று 
எல்லாவற்றிலேயும் புகார்கள். 
தனிப்பட்ட புகார்களுக்கு மதிப்புக் கிடையாது. 
நாமும் நம்முடைய பெரும்பகுதி 
நேரத்தைப் புகார் செய்வதிலேயே 
செலவழிக்கிறோம். 
இது ஒரு National Pastime” ஆக 
ஆகிவிட்டது. 
இதற்கு தீர்வுதான் என்ன?

இருக்கிறது.... கொஞ்சம் ஆக்கபூர்வமாக  
சிந்தித்தால்....

1. புகார்களை அளவாகச் செய்யுங்கள்.
புகார் செய்தவுடன் உங்கள் மனத்தில் 
உள்ள பாரம் குறையலாம். 
கொஞ்சம் அனுதாபம்கூட கிடைக்கும். 
கொஞ்சம் சிந்தியுங்கள். 
அடிக்கடி எல்லாவற்றையும் பற்றி 
நீங்கள் புகார் சொல்லிக்
கொண்டிருந்தால் எத்தனை பேரிடமிருந்து 
அனுதாப வலை வீசும்? 
உங்கள் முன்னால் தலையை ஆட்டிவிட்டு
நீங்கள் போனவுடன் சனி விட்டது. 
நன்றாக மாட்டிக்கொண்டோம்என்று 
சொல்பவர்கள்தான் அதிகம்.

யாரோ ஒரு பெரியவர் அழகாக சொல்கிறார். 
புகார் செய்வது ஒரு பூண்டு மாதிரி. 
அளவாக உபயோகித்தால் ரொம்பவே 
ரசிப்பார்கள். 
அதிகமாக உபயோகித்தால்
ஆட்கள் ஓடிவிடுவார்கள்.

2.உங்கள் புகார்கள் நம்பத் 
தகுந்ததாகவும் உண்மையானதாகவும் 
இருக்க வேண்டும்.
இதோ சில “Complaints”
இது ஒரு வேலையா?”
இந்த சர்க்கார் என்னை நிம்மதியாக 
இருக்கவே விடாதா?”
என்னுடைய பெற்றோர்கள் 
என்னை ஓடஓட விரட்டுகிறார்கள்
இவைகள் உங்கள் மனத்தாங்கலை 
வெளிப்படுத்தும் புகார்கள். 
இதில் ஒரு விஷயமும் இல்லை. 
ஒவ்வொரு விஷயத்திலும் 
உங்களுடைய கையாலாகத்தனத்தை - 
உங்கள் அலுவலகப் பளு, உங்கள் வரிச் 
சமாசாரங்கள், உங்கள் உறவுகள்- 
வெளிக்காட்டுகின்றது.
உங்களை உண்மையிலேயே பாதிக்கும் 
விஷயங்களை மட்டும் பேசுங்கள்.
3.எந்தப் புகாருக்கும் சான்றுகள் தேவை.
சான்றுகளை வைத்துகொண்டு 
புகார் செய்யுங்கள்.  
உங்கள் முதலாளியை, உங்களைவிட்டு 
மற்றவருக்குச் சம்பள உயர்வு 
கொடுத்ததிற்காக நீதிமன்றத்துக்கு 
இழுக்காதீர்கள்.
புகார் செய்யும் முன் சான்றுகளை 
திரட்டுங்கள்: 
எத்தனை நேரம் நீங்கள் வேலை 
செய்திருக்கிறீர்கள்
எத்தனை முக்கியமான வேலைகளைத் 
திறம்பட செய்து முடித்திருக்கிறீர்கள்
நீங்கள் எவ்வளவு திறமைசாலி? 
இப்படியெல்லாம்.
4. சரியான நபரிடம் புகார் செய்யுங்கள்.
யார் உங்கள் புகார்களுக்கு நிவாரணம் 
அளிக்கத் தகுதியும், பொறுப்பும் உள்ளவரோ 
அவரிடம் மட்டுமே புகார்செய்யுங்கள். 

புகார்கள் நம்முடைய வாழ்க்கையின் 
ஒரு அங்கமாக ஆகிவிட்டன. 
நம்முடைய பல புகார்கள் அர்த்தமற்றவை. 
பொறுப்பற்ற புகார்கள் நம்முடைய 
சுய மதிப்பைக் குறைத்து மனஅழுத்தத்தை 
ஏற்படுத்தும்.

நம்முடைய புகார்கள் வெறும் குறைகளாக 
மாத்திரம் இருக்க கூடாது. 
அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்த 
வேண்டும். 
ஒரு கம்பெனியின் பொருளைப் பற்றி 
புகார்செய்து அதன் மூலம் அந்தப் 
பொருளின் தரம் உயர்ந்தால் 
மற்றவர்களும் அதனால் பயன் 
அடைவார்கள்.

அடுத்த தடவை நீங்கள் புகார்செய்ய 
நினைத்தால், எது எல்லோருக்கும் 
பயன்படுமோஎதனால் உங்கள் சமூகமோ
வட்டமோ நன்மை அடையுமோ
அதை மாத்திரம் சரியான நபரிடம் 
புகார் செய்யுங்கள். 
நிவாரணம் கிடைக்க மற்றவர்களையும் 
சேர்த்துகொண்டு போராடுங்கள்.


வெற்றி நிச்சயம் கிடைக்கும்.


Complaning is cathartic, eases tensions, 
creates bonds and sometimes actually 
gets results. 
If it's worth doing, it is worth doing well.


Robin M. Kowalski, Psychology Professor 
at Clemson University



...கிளறல் தொடரும்.








No comments: