Sunday, July 22, 2012

கணக்கில் வராத ‘கலோரிகள்’

மீடியாவில் அதிகமாகப் பேசப்படும்
எழுதப்படும் டாப் டென் (Top Ten) 
வார்த்தைகளில்கலோரிநிச்சயமாக 
இடம் பெறும்.

இந்த வார்த்தை, இப்பொழுது 
தனிப்பட்ட உரையாடல்களிலும் 
குடும்ப, சமூக விவாதங்களிலும் 
ரொம்பவே முக்கியத்துவத்தை 
அடைந்திருக்கிறது.

இத்தனை நாள், இந்த கலோரி’ 
எங்கே போயிருந்தது
அறிவியல் பாடப் புத்தகத்தில் மாத்திரம் 
புதைந்துகிடந்த இந்த கலோரி’ 
பூதாகாரமாக வெளிக் கிளம்பி 
எல்லோருடைய வாழ்க்கையிலும் 
ஏதோ ஒரு விதத்தில் 
விளையாடிக்கொண்டிருக்கிறது. 

சின்ன வயதில் நம் அறிவியல் வாத்தியார் 
சொன்னது ரொம்ப சுலபமான விளக்கம்.

1 கிராம் தண்ணீரின் வெப்பத்தை 
1 டிகிரி ஏற்றுவதற்குத் தேவையான 
வெப்பத்தின் அளவு (Heat). 
இது சக்தியை அளவிடும் ஒரு அளவு.

அப்படியா? என்று கேட்டு ரசித்து 
நம்முடைய வாழ்க்கையை 
நம் இஷ்டத்திற்கு நடத்திக்கொண்டுவந்தோம். 
திடீரென்று, கடந்த 10, 15 ஆண்டுகளாக 
எங்கே திரும்பினாலும் கலோரியைப் 
பற்றித்தான் பேச்சு, எழுத்து.

எத்தனை விதமான ஆராய்ச்சி, கட்டுரைகள்!
அதிக கலோரியுள்ள உணவு, பானங்கள்
குறைவான கலோரியைத் தரும் 
'டயட்உணவு, பானங்கள்.— 
எரிக்காதகலோரி, கொழுப்பாக மாறி
கொலஸ்ட்ரால் - ரத்த அழுத்தம் -                   
சர்க்கரை வியாதி இவை 
உங்களுக்கு வர வாய்ப்பு.
இப்படி சகட்டுமேனிக்கு எச்சரிக்கைகள்...

இவையெல்லாம் படித்துக் கேட்ட பிறகு
சாப்பிட வேண்டும் என்ற ஆசை நம்மில் 
பல பேருக்குப் போய்விட்டால் 
ஆச்சரியப்பட வேண்டியதில்லை. 


ஆனால் மனித சுபாவம் என்று 
ஒன்று இருக்கிறதே!

நமக்கு அதெல்லாம் வராது சார்என்று 
இஷ்டத்திற்குச் சாப்பிடுபவர்கள்
தான் அதிகம்.

கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர்களுக்காகச் 
சில யோசனைகள் தரப்பட்டிருக்கின்றன. 
இவற்றைப் பின்பற்றினால்
உங்கள் இஷ்டம்போல் 
நச்சுத் தீனியையும், Desserts 
(சாப்பாட்டுக்குப் பிறகு சாப்பிடும் 
ஐயிட்டங்களை)யும் 
ரசித்து ருசித்து, மனச்சாட்சி குத்தாமல் 
சாப்பிடலாம்.

கணக்கில் வராத கலோரிகள்.

1.நீங்கள் எதையாவது சாப்பிடும்போது
யாரும் அதைப் பார்க்கவில்லையானால்,       
அந்த உணவில் zero கலோரிதான் இருக்கும்.

2.‘டயட்ஸோடாவுடன் ஒரு சாக்லட் 
பார் சாப்பிட்டீர்களானால்
சாக்லெட்டில்    உள்ள கலோரிகள்
டயட்ஸோடாவின் ‘fizz’ல் 
அடிபட்டுப்போய்விடும்.

3.இன்னொருவருடன் சாப்பிடும்போது 
அவர் சாப்பிடுவதைவிட நீங்கள்       
குறைவாகச் சாப்பிட்டால்
கலோரிகள் கணக்கில் வராது.

4.மருந்துக்காகச் சாப்பிடும் உணவு- 
hot chocolate, பிராந்தி
பனானா கேக்toast-        
எதுவும் கலோரிக் கணக்கில் வராது.

5.சினிமாக் கொட்டகைகளில் சாப்பிடும் 
உணவு - milk shake, வெண்ணெய் 
தடவிய பாப்கார்ன், Tootsie Rolls - 
இத்யாதிகள் 
உங்களுடைய entertainment package 
சேர்ந்தது.        
உங்கள் உணவு கணக்கில் வராது.

6.குக்கிகளில் கலோரி கிடையாது. 
அவற்றை உடைக்கும்போது 
கலோரி  லீக்காகிவிடுகிறது.

7.உணவு தயாரிக்கும்போது, ஸ்பூன், கத்தி 
போன்றவற்றில் இருக்கும் உணவை   
நக்கிச் சாப்பிடும்போது ஒரு கலோரியும் 
கணக்கில் வராது.

8.ஒரே வர்ணத்தில் இருக்கும் உணவுப் 
பொருள்கள் ஒரே அளவு கலோரிகளைத் 
தருகிறது. 
உதாரணம் - கீரை, பிஸ்டாஸியோ ஐஸ்கீரீம்.

9.நின்றுகொண்டே சாப்பிடும் எந்த உணவிலும் 
கலோரி கிடையாது. 
ஏன் என்று தெரியவில்லை. 
ஒரு வேளை, புவியீர்ப்புச் சக்தியால் 
இருக்குமோ?

10.இன்னொருவருடைய தட்டிலிருந்து 
எடுத்துச் சாப்பிடும் எந்த உணவிலும் 
கலோரி கிடையாது. 
அந்தக் கலோரிகள் தட்டின் சொந்தகாரருக்குச் 
சேர்ந்தவை.

Disclaimer

கணக்கில் வராத கலோரிகள்’ - 
தமாஷுக்காக எழுதப்பட்டவை. 
வழக்கமாகக் கூறும் எச்சரிக்கை இதோ.

எது சாப்பிட்டாலும் உங்கள் மனைவியின் 
அனுமதியோடு சாப்பிடுங்கள். 
திருட்டுத்தனமாகச் சாப்பிட 
ஆசைகள் வரும். 
பின் விளைவை(சாப்பாட்டைபற்றி
சொல்லவில்லை) நினைவுகூர்ந்து 
இது தேவை தானா 
என்று முடிவு செய்யுங்கள்.

கடைசியாக இதை நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள்.

DESSERTS - spelled backwards - 
STRESSED.
Stress வந்தா என்ன ஆகும் என்று
தெரியும்லே?
உஷார்....



... கிளறல் தொடரும்.

No comments: