Sunday, September 30, 2012

மூத்த குடிமக்கள்(Senior Citizens) யார் குழந்தைகள்?


பகுதி 2
                                                                             வயோதிகமும் வயோதிகர்களும்” 
என்ற  தலையாய பிரச்சினையை 
எப்படி இந்திய அரசும்  இந்திய மக்களும்
ஒரு அலட்சிய நோக்குடன் அணுகுகிறார்கள் 
என்பதைப் பகுதி 1இல் பார்த்தோம்.

வளர்ந்த  நாடுகளைப் போல்
இந்தப் பிரச்சினைக்கு ஒரு 
தெளிவான  நோக்குடன் 
விரிவான திட்டம் விரைவாக 
உருவாக்கப்பட வேண்டும்.

அப்படிச் செய்யத் தவறினால்
வருங்காலத்தில்  இது சமூக, 
பொருளாதாரப் பிரச்சினையாக 
உருவாவதற்கான வாய்ப்பு 
நிறையவே உள்ளது.

யார், ‘மணியைக் கட்டுவது?’

முதலில்இது ஒரு நாட்டுப் பிரச்சினை. 
அதனால் பொறுப்பு மத்திய
மாநில அரசுகளுக்குத்தான். 
முதல் பெற்றோரும் அவர்கள்தான் - 
வளர்ந்த நாடுகளில் 
‘GERONTOLOGY’  
அதாவது வயதானவர்களைப் 
பற்றிய பிரச்சினைகள்  
ஒரு துறையாகவே வளர்ந்து  
அதற்கு  மிக முக்கியத்துவம் 
கொடுக்கிறார்கள். 
இந்தியாவிலும் இது 
பரவ ஆரம்பித்திருக்கிறது,
ஒரு நல்ல அறிகுறி.

உடல்ரீதியாக முதுமை டைதல்,  
மனோரீதியாக முதுமை அடைதல், 
சமூகரீதியாக முதுமை அடைதல்  - 
என்று வயோதிகத்தின் பல பரிமாணங்களை 
ஆராய்ச்சிசெய்து ஒவ்வொன்றுக்கும் 
தேவையான திட்டங்களை 
வகுப்பதில் வளர்ந்த  நாடுகள் 
கவனம் செலுத்துகின்றன.

இந்த விஷயத்தில் இந்திய நாடு 
ரொம்பவே பின்தங்கியிருக்கிறது.

இதுவரைக்கும் எந்த 
5 ஆண்டுத் திட்டத்திலும் 
வயோதிகத்தைப் பற்றி 
எந்த விதமான திட்டமும் இல்லை. 
ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும்  
சில சலுகைகள் அளிக்கப்படும். 
இது ஒரு சரியான 
அணுகுமுறையே இல்லை.

60ஆவது வயதில் ஓய்வுபெறும் நபர்
அடுத்த 20, 25 ஆண்டுகளை 
எப்படிச் செலவழிக்கப்போகிறார்
அவர் அதற்குத்  தன்னைத் தயார்படுத்திக்
கொண்டிருக்கிறாரா?  
யாராவது அவருக்கு அதற்கான 
பயிற்சி அளித்திருக்கிறார்களா?  
இந்த மாதிரி நிறைய 
கேள்விகள் இருக்கின்றன.  
எத்தனையோ விஷயங்களுக்கு 
தேசீய அளவில் கொள்கை  
இருப்பதுபோல்,வயோதிகத்திற்கும் 
தேசீய அளவில் ஒரு கொள்கை 
உடனே தேவை. 
அந்தக் கொள்கை, 
அவர் வாழும் சமுதாயத்தை 
ஒட்டியதாக இருக்க வேண்டும்.

வயோதிகர்களைப் பராமரிப்பதில் 
கவனம் செலுத்தும் அரசு மற்றும் 
தனியார் ஸ்தாபனங்களின் 
நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தி
ஒரே நோக்குடன் செயல்பட 
ஒரு உயர்மட்டக் குழுவை அரசு  
அமைக்க வேண்டும். 
இதில் அரசுப்  பிரதிநிதிகளோடு 
சேவை மனப்பான்மையுள்ள 
தனியார் பிரதிநிதிகளையும் 
சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அடிப்படை வசதிகளான - 
உடல்நலப்  பராமரிப்பு
மனநலப் பராமரிப்பு,  
உறைவிடப் பராமரிப்பு 
(residential care), 
பகல்நேரப் பராமரிப்பு(day care), 
நிதி உதவி, பொழுதுபோக்கு 
உதவி, ஆலோசனை வழங்குதல் 
என்று  ஒரு திட்டவட்டமான 
செயல்முறை சார்ந்த கொள்கை 
உருவாக்கப்பட  வேண்டும்.

வயோதிகர்களின் நலம்
நாட்டின் சமூக பொருளாதார 
வளர்ச்சியுடன் இணைந்தது .

அடுத்ததாக,  இரண்டாவது  
பெற்றோராகிய தன்னார்வத் 
தொண்டு நிறுவனங்கள் 
(voluntary agencies).

எல்லா நாடுகளிலும் இவற்றின்  
பங்கு மிக  அவசியம். 
அவற்றால்தான்நலத் 
திட்டங்களுக்குத் தேவையான 
பணம்ஆள்பலம் போன்றவற்றைத்  
திரட்ட முடியும். 
இந்தியாவில்  பத்துபன்னிரெண்டு 
ஸ்தாபனங்கள் நல்ல முறையில் 
செயல்பட்டுவருகின்றன.

Help Age India, Age-Care India, 
Senior Citizens Federations 
என்ற ஸ்தாபனங்கள் 
குறிப்பிடத் தக்கவை.

இந்தியாவின் பரப்பளவுக்கும் 
பிரச்சினைகளுக்கும் இன்னும் 
நிறைய ஸ்தாபனங்கள் 
வேண்டும். அதற்கு மக்களின் 
மனதில் ஒரு விழிப்புணர்ச்சி 
உண்டாக வேண்டும். அதை 
இந்த ஸ்தாபனங்களால்தான் 
உருவாக்க முடியும்.

மூன்றாவது பெற்றோர்கள்:   
Social Scientists (சமூக நல
விஞானிகள்)

வயோதிகம் என்பது சமூக
மனோதத்துவ பிரச்சினையானதால் 
அது சம்பந்தமான வல்லுநர்கள் 
அதற்குண்டான தீர்வுகளை 
ஆராய்ச்சிமூலம் கண்டுபிடிக்க வேண்டும். 
இந்தியாவில் இந்த ஆராய்ச்சிக்கு 
முக்கியத்துவமே கொடுப்பதில்லை. 
இது மாற வேண்டும். 
இந்த ஆராய்ச்சி, உதாரணத்திற்கு, 
கீழ்க்கண்ட வினாக்களுக்கு 
விடை தேட முயல வேண்டும்.

வயதானவர்களை மற்றவர்கள் 
எப்படிப் பார்க்கிறார்கள்?
வயதானவர்கள் தங்களை 
எப்படிப்  பார்க்கிறார்கள்?
வயதானவர்கள் 
ஒரு வரப்பிரசாதமா
அல்லது சுமையா? 
வயதானவர்கள் சமூகத்திற்குத் 
தேவையில்லையா?
வயதானவர்களின் 
எதிர்பார்ப்புகள் என்ன?
இப்பொழுது இருக்கும் 
ஸ்தாபனங்களின் நிறைவு
குறைகள் என்ன?

இது ஒரு சாம்பிள் கேள்விகள்தான். 
இதற்கு விடைகள் கிடைத்தால் 
ஒரு Idea வங்கியை  உருவாக்க முடியும்.

 நான்காவதாக, பொது மக்கள்:

வயோதிகம் என்ற பிரச்சினையை 
அணுகும் பொதுமக்கள் பல தரப்பட்ட 
பிரிவுகளாகச்  செயல்படுகிறார்கள். 
ஒவ்வொரு பிரிவுக்கும் 
ஒவ்வொரு விதமான கண்ணோட்டம்.

சில குறிப்பிடத்தக்க பிரிவினர் இதோ:-
சிறு வயதினர் குடும்பம்
அவர்கள் வயதானவர்களை 
நடத்தும் விதத்தில் உண்டாகும் 
அடிப்படை பிரச்சினைகள்.
- 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்
சில பணக்காரர்கள் தங்கள் 
தாராளப் பண உதவியினால் 
சில ஸ்தாபனங்களைச் 
செயல்படச் செய்வது.
- தன்னார்வத் தொண்டர்கள். 

அவசரத் தேவை - 
மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சி. 
வயோதிகம் என்பது 
நாட்டுப் பிரச்சினை. 
எல்லோரும் அதில் கவனம் 
செலுத்த வேண்டும்.

கடைசியாக
வயதானவர்களே 
அவர்களுடைய பெற்றோர்கள்.

வயதானவர்கள்தான் இந்தப் 
பிரச்சினையின் அடிப்படை .

முதலில் அவர்கள் 
புரிந்துகொள்ள வேண்டியது-  
மாற்றம் ‘CHANGE’

மாற்றம் யாருக்கும் எந்த 
வயதினருக்கும் பிடிக்காத ஒன்று. 
ஆனால் மாற்றம்’ என்பது 
எல்லோர் வாழ்க்கையிலும் 
ஏற்படும் ஒன்று. 
அந்த மாற்றம் எத்தனையோ 
காரணங்களினால் ஏற்படலாம். 
அதிலும் வயதான காலத்தில் 
ஏற்படும் மாற்றங்கள் 
வித்தியாசமானவை. 
அதைப் புரிந்துகொண்டு 
அதன்படி தங்களை மாற்றிக்கொள்ள 
முயல  வேண்டும். 
முதல் மாற்றம்- 
வயதானவர்களின் 
உடல் ரீதியான வரம்புகள்  - 
வயதிற்குண்டான தளர்ச்சி. 
உடல்மனம் இரண்டுமே 
சம்பந்தப்பட்டது. 
சின்ன வயதுப் பிரதாபங்களைச் 
சொல்லிக்கொண்டு  
காலம் கடத்துவது ரசிக்க 
கூடியதாக இருக்காது.

இரண்டாவது மாற்றம் - 
generation gap -  
தலைமுறை இடைவெளி - 
இதைப் புரிந்துகொண்டு  செயல்படாத 
எந்த வயதானவரும் நிம்மதியாக 
இருக்க முடியாது.

எது செய்தாலும் அதற்கு ஒரு அர்த்தம், 
ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.

பெரும்பான்மையான-young old - 
50 பிளஸ் வயோதிகர்கள் 
திடகாத்திரமாக இருந்தாலும் 
ஓய்வுக் காலத்திற்கான திட்டங்கள்  
எதுவும் இல்லாமல்  
ஒரு சூனிய வாழ்க்கையை 
நினைத்து வருத்தப்படுவார்கள். 
புதிதாகக் கற்பதற்கு வயது 
எப்போதும்  தடையில்லை. 
ஏதாவது ஒரு பொழுதுபோக்கு
புதுப்பாட்டுபுதுப் படிப்பு — 
என்று கற்று நேரத்தைப் 
பயனுடையதாகச் செய்யலாம்.

An idle mind is devil's abode 
என்பது உலக வழக்கு.

வயோதிகர்கள் தங்கள் நேரத்தை 
சமூக நல ஸ்தாபனங்களுக்காகச் 
செலவிடலாம்.

வயோதிகர்கள்தங்களை 
ஒரு beneficiary 
(உதவிமானியம் பெறுபவராக) 
மாத்திரம் நினைக்கக் கூடாது
சமூகத்தினால் ஏதாவது 
சலுகைகள் கிடைத்தால்
அந்தச் சமூகத்திற்காக ஏதாவது 
திரும்பச் செய்ய வேண்டும். 
அவரவருடைய திறமையையும் 
அனுபவத்தையும் 
“முதியோர் கல்வி
சமூக நலச் சேவை” 
போன்ற காரியங்களுக்காகச் 
செலவிட வேண்டும்.
இதில் ஒரு  இரட்டை நன்மையிருக்கிறது.
வயோதிகர்களுக்கு 
ஒரு ‘sense of belonging’ 
நாமும் இந்தச் சமுகத்தின் 
ஒரு அங்கம் என்ற நினைப்பு வரும். 
இரண்டாவது,தங்களுடைய 
சேவை மற்றவர்களுக்குத் 
தேவைப்படுகிறது என்ற மகிழ்ச்சி.

தேவைப்படும் வயோதிகர்களுக்கு 
(needy aged) வேண்டிய உதவியை 
உடனே செய்யத் திட்டங்கள் தேவை. 
அதே சமயத்தில் மற்ற 
வயோதிகர்களுக்கும் (young old) 
அவர்கள் பயனுள்ள வகையில் 
செயல்பட வயதாவதைப்பற்றிய 
ஆலோசனைகளும் உதவிகளும் 
செய்ய வேண்டும்.

வயதாவதை யாரும் தடுத்து 
நிறுத்த முடியாது. 
ஆனால்,
உபயோகமாக வயதாவது”  
(Productive Aging) 
என்பது எல்லோருடைய 
லட்சியமாக இருக்க வேண்டும். 
நாம் வாழும் வாழ்க்கைக்கு 
ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். 
நம்முடைய வயதான காலத்தில் 
நாம் கெளரவத்தோடு வாழ 
எல்லா  முயற்சிகளையும் 
எடுக்க வேண்டும்.

“The concept of aging 
with honour and dignity 
is a worthwhile and inspiring goal. 
It is still a goal than a reality 
to be experienced. 
The need to realise it 
is imperative.”

“We do not need to allow 
our elderly to wait in silent 
desolation for “Rest” 
which is to come”

                                                                                                                                                                            ...கிளறல் தொடரும்.



No comments: