Wednesday, October 31, 2012

‘அமெரிக்கா’ பிடிச்சிருக்கா?'




கடந்த 10 ஆண்டுகளாக, நானும் என் மனைவியும் எப்போதெல்லாம் அமெரிக்காவிலிருந்து 
இந்தியாவிற்குப் போகிறோமோ அல்லது இந்தியாவிலிருந்து வரும் யாரையாவது 
சந்திக்கிறோமோ, அப்போதெல்லாம் எங்களிடம் கேட்கப்படுகிற கேள்விகள்: 
என்ன, அமெரிக்காவிலேயே செட்டில் 
ஆகிவிட்டீங்களே, எப்படி இருக்கிறீங்க
அமெரிக்கா பிடிச்சிருக்கா
சந்தோஷமாக இருக்கிறீங்களா?’

இவை ஒரு சம்பிரதாயத்திற்காகக் 
கேட்கப்படுகிற கேள்விகள் என்று நாங்கள் 
நினைத்தது கிடையாது. 
பலரிடம் எங்களைப் பற்றி 
ஒரு genuine concern  ஏற்பட்டதால் 
எழுந்த கேள்விகள்தான் என்று நினைக்கிறோம்,

60 ஆண்டுகளாக, ஒரு தனி அடையாளத்தோடு’ 
இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப்போன 
2 கிழங்கள் எப்படி வயதான காலத்தில் 
ஒரு புதிய சூழ்நிலையில் தங்கள் கடைசிக் 
காலத்தைக் கழிக்கப்போகிறார்கள்’ 
என்ற கவலை அவர்களில் பலருக்குத் தோன்றியிருக்கலாம். 
அவர்களுக்கு மட்டுமில்லை. 
ஆரம்ப காலத்தில் எங்களுக்கும் 
இந்த முடிவை எடுக்கும் முன் 
கொஞ்சம்’ பயம் இருந்தது.

கொஞ்சம்தான்.

ஏனெனில், எங்கள் முடிவு அமெரிக்காவைப் 
பற்றியது அல்ல. 

எங்களுடைய 2 தாய்மார்கள்  
காலமான பிறகு, இந்தியாவில் 
தனிமையாகக் காலத்தைக் கழிப்பதா 
அல்லது பிள்ளைகள் 
எங்கே இருக்கிறார்களோ அங்கு 
அவர்களுடன்  காலத்தைக் கழிப்பதா 
என்ற முடிவு எடுக்க 
வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது. 
2ஆவது முடிவு எல்லோருக்கும் சிறந்தது 
என்று பிள்ளைகள் இருக்கும் இடம் தேடி 
வந்துவிட்டோம். பிள்ளைகள் இருப்பது 
அமெரிக்காவாக இருந்ததால்
இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறோம்.
இனிமேல், எங்கள் மீதி வாழ்கை 
(என்வரை, அதிகபட்சம் 6900 நாட்கள்) 
என் பிள்ளைகளோடும் அவர்கள் 
குடும்பங்களோடும் தான் இருக்கும். 
(அதென்ன 6900 நாட்கள்?  
எல்லோரும் ஒருவரை ஆசீர்வதிக்கும்போது
சதமானம் பவதி சதாயுஷ்என்று
அதாவது, 100 ஆண்டுகள் வாழ வேண்டும் 
என்பார்கள். அந்தக் கணக்குப்படி நான் 
max 100 years இருந்தால் 
6900 சொச்சம் மீதியிருக்கும் நாட்கள்தானே!) 

அப்படியானால் உங்களுக்கு 
அமெரிக்காவை அவ்வளவாகப் 
பிடிக்காதாஎன்று கேட்கத் தோன்றும்.  
ஆனால் எங்களைப் பொறுத்தவரை 
ஆரம்ப நாட்களிலிருந்து 
எங்களுக்கு அமெரிக்க வாழ்க்கை 
பிடித்துவிட்டது. 
அதனால் adjustment  time 
கொஞ்ச நாள்தான் இருந்தது
அப்படி என்ன இருக்கு? அமெரிக்காவில் ... 
நிறையவே இருக்கு... 
குறிப்பாக இந்தியச் சூழ்நிலையிலிருந்து 
வந்தவர்களுக்கு... 

ஒரு மறுப்புடன் எழுதத் தொடர்கிறேன். 
அமெரிக்காவின் பொருளாதார 
மேன்மையினாலோ, அதனுடைய வெளிநாட்டுக் கொள்கை கவர்ச்சியினாலோ 
ஈர்க்கப்பட்டு  அமெரிக்கா 
ஒரு நல்ல நாடு என்று 
முடிவு எடுக்கவில்லை.

ஒரு மிடில் கிளாஸ் குடும்பஸ்தன்
ஒவ்வொரு நாளும் குறைந்தது 
10 பேருடன்  interact பண்ண 
வேண்டியிருக்கும். 
அந்த நாள் முடிவில்
அதில் பாதி தொடர்புகளாவது 
அவனுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தால் 
அந்த நாள் பொன்னாள்’ 
என்று மகிழ்ச்சி அடைவான். 
என் வரை, அந்த மகிழ்ச்சி, 
சிங்காரச் சென்னையில் எனக்குக் 
கிடைக்கவில்லை. 
ஆனால் இங்கு ஒவ்வொரு நாளும் 
எனக்குக் கிடைப்பது மகிழ்ச்சியே. 

கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன். 

தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் 
தோன்றல், பரவல், வேர் ஊன்றல்” 
என்ற காலத்தில்தான் என் வாழ்க்கையும் 
நடந்துவந்திருக்கிறது.

திராவிடக் கட்சிகளின் contribution பற்றிச் 
சரித்திர ஆசிரியர்கள் அலசட்டும். 
என்னைப் பொறுத்தவரை, அவர்கள் பிரசாரம் 
பண்ணிய 2 விஷயங்கள் என்னையும் 
என் போன்றவர்களையும் மிகவும் 
பாதித்திருக்கிறது. 
முதலாவது, ரிசர்வேஷன் பாலிஸி
இரண்டாவது, இந்தி படிக்க முடியாத 
சூழ்நிலை. 
ரிசர்வேஷன் பாலிஸியினால் 
பாதிக்கப்பட்டவர்கள் முற்போக்கு 
சமூகம் மட்டும்தான். 
இரண்டாவது, பெரிய கொடுமை
நான் என்ன மொழி கற்றுக்கொள்ள வேண்டும் 
என்று சர்க்கார் ஏன் கட்டளையிட வேண்டும்
இந்த நிலை, இங்கு (அமெரிக்காவில்) கிடையாது. ஆங்கிலம் உண்டு. அதே சமயம் மற்ற மொழிகள் கற்பதற்குத் தடை கிடையாது. 

இதே திராவிடக் கட்சிகள்
மேடைதோறும் முழங்கி ஆட்களைப் போரடித்த 
3 சொற்கள். 
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’. 
Double talk என்பதற்கு இவற்றைவிடச் 
சரியான உதாரணங்கள் இருக்க முடியாது.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் 
(அதைப் பற்றித்தான் நான் பேசமுடியும் 
ஏனெனில் அங்குதான் 60 ஆண்டுகள் 
வாழ்ந்திருக்கிறேன்) 
இந்த 3 வார்த்தைகளுக்கும் மதிப்பில்லை.
சில உதாரணங்களைப் பார்ப்போம்.

கடமை
சுஜாதா, இந்தியன் படத்திற்காக 
ஒரு வசனம் எழுதியிருந்தார்.
லஞ்சம் வாங்கும் மகன், தந்தையைப் 
பார்த்துக் கேட்கிறான்,
என்னவோ இந்தியாவில் மட்டும்தான் 
லஞ்சம் இருக்கிறது என்று பேசுகிறாயே. 
மற்ற நாடுகளில் லஞ்சம் இல்லையா?” 
என்று.  
தந்தையான பெரியவர் சொல்கிறார் 
“yes, லஞ்சம் எல்லா நாட்டிலும் 
இருக்கிறது. 
ஆனால், ஒரு வித்தியாசம். 
அங்கெல்லாம் கடமையை மீறுவதற்காக 
லஞ்சம் கொடுக்கிறார்கள். 
இந்தியாவில் மாத்திரம்தான்
கடமையைச் செய்வதற்கே 
லஞ்சம் கொடுக்க வேண்டும்என்று.
உண்மையான வார்த்தை - 
அனுபவங்கள் அவரவர்கள் வாழ்க்கையிலிருந்து...

அமெரிக்காவில் பிடித்த விஷயம்
மிடில் கிளாஸ் லெவலில் லஞ்சம் கொடுத்து 
எதையும் சாதிக்க வேண்டாம். 
சாதிக்கவும் முடியாது. 
நேரில் சென்று முறையிட வேண்டியதில்லை. 
போனில் பல காரியங்களை முடித்துக்கொள்ளலாம். Deadlineக்கு ஒரு நாள் குறிப்பிட்டு எழுதுவார்கள். 
அதற்கு முன்னமே, பதில் கிடைத்துவிடும். 

Return policyஐப் பற்றி நிறையவே 
படித்திருப்பீர்கள். எந்தப் பொருளையும் 
திரும்பக் கொடுத்து முழு பணத்தையும் 
பெறலாம்.

கண்ணியம்
வயதானவர்களுக்கும், உடல் 
ஊனமுற்றோர்களுக்கும் அமெரிக்காவில் 
நிச்சயமான விசேஷ சலுகை உண்டு. 
இந்தியாவைப் பொறுத்தமட்டில்
என்னுடைய 2 அனுபவங்கள்.

முதலாவது, சங்கரன் கோவிலிலிருந்து 
திருநெல்வேலிவரை பஸ் பயணம்
என் 80 வயது தாயாருடன். 
மகளிர் மட்டும்’ என்ற இடத்தில் 
கட்டபொம்மன் மீசை வைத்திருக்கும் 
2 தடி ஆட்கள்பார்த்தும் பாராது மாதிரி 
உட்கார்ந்து இருந்தார்கள். 
எழுந்திருக்கச் சொல்லியும் பயன் 
இல்லாமல்வண்டி நடத்துநரிடம் 
புகார் பண்ணினேன். 
பலன் இல்லை. 
நடத்துநரின் பொன்மொழி இதோ: 
சார் இதில் எல்லாம் நான் தலையிட்டால் 
பஸ் திருநெல்வேலி போய்ச் சேராது” - 
வாழ்க கண்ணியம்.
அமெரிக்க பஸ்களில் வீல் சேரில் 
வரும் ஊனமுற்றோர்களுக்கு என்று 
தனி இடம் உண்டு. 
அவர்களில் யாராவது பஸ்ஸில் ஏற வந்தால்
ஓட்டுநர் எழுந்திருந்து (நடத்துநர் கிடையாது) 
அவர்கள் வீல் சேருக்கு இட வசதி செய்துகொடுத்து அவரை பத்திரமாக hook பண்ணியப் 
பிறகு தான் மற்றவர்களை 
ஏற அனுமதிப்பார். 
 அதே மாதிரி,இறங்குவதற்கும், 
அவர்களுக்கு உதவிசெய்வார். 

மனிதாபிமானத்திற்கு 
இன்னொரு பெயர் கண்ணியம்.

2ஆவது அனுபவம்.
ரேஷன் கடை வரிசையில் நின்று
கொண்டிருந்தேன். 
ஒரு பெரியவர் கஷ்டப்பட்டு 
கடைசியாக நின்றுகொண்டிருந்தார். 
நான் அந்த கிளர்க்கிடம் சென்று 
அவருக்கு முதலிடம் கொடுக்க 
வேண்டினேன். 
அதற்கு அந்தக் கிளர்க் சார்
என்னால் ஒன்றும் செய்ய முடியாது. 
மற்றவர்களிடம் கேளுங்கள்” 
என்றார். மற்றவர்களிடம் கேட்டேன்
போங்க சார், வேலையில்லை
நாங்களும்தான் ரொம்ப நாழிகையாக 
நிற்கிறோம்” என்று சொன்னார்கள். 
பெரியவரிடம் என் இடத்தை 
கொடுத்துவிட்டு வெளியேறுகிறேன்,
என்று சொன்னேன். 
பெரியவர் ஒரு மானஸ்தர் 
நன்றி இன்னொரு நாள் வருகிறேன்” 
என்று கிளம்பிவிட்டார்.

முதியோருக்கு முதலிடம்’ - 
போர்டில் மாத்திரம்.

கட்டுப்பாடு

ஆங்கிலத்தில் ‘discipline’ என்று 
சொல்வார்கள். இந்தியாவில் குறிப்பாக
சிங்காரச் சென்னையில், 
அப்படின்ன என்ன சார்
எங்கே கிடைக்கும்
என்ன விலை?’ என்று பேசுவார்கள். 
ஆளுக்கு ஒரு பேப்பர் கொடுத்து
அவர்களுடைய அனுபவங்களை எழுதச் 
சொன்னால் எல்லோரும் extra sheets 
கேட்பது நிச்சயம். 
அவ்வளவு நேர்த்தியான, சுகமான
மறக்க முடியாத அனுபவங்கள்.
இதன் மறுபக்கம்
அமெரிக்காவில் பார்க்கலாம். 
road discipline - ஒன்றே போதும். 
மணிக்கணக்காக ஒன்றன்பின் ஒன்றாக 
கார்கள் தங்களுக்குண்டான லேன்களில் 
பொறுமையாகச் செல்வது ஒரு 
கண்கொள்ளாக் காட்சி. 
horn அடிப்பது ஒரு அவமதிப்பானச் 
செயலாகக் கருதப்படுகிறது. 
இரவு 1 மணிக்கும்
stop signல் நிற்கும் ஓட்டுநரைச் 
சென்னை வாசிகள் பைத்தியம்’ 
என்று சொல்வார்கள். 
drunken drivingஐ இவர்கள் 
கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது 
ஒரு பெரிய விஷயம். 
எப்படி? ‘"deterrent punishment’ 
குற்றத்திற்கு அதிகமான தண்டனை.
‘something’க்கு சான்ஸே கிடையாது. 
போலீஸ் டிக்கட் கொடுத்தால் 
கொடுத்ததுதான். 
இந்த மாதிரி மிடில் கிளாஸ் 
நிம்மதியாக வாழ்வதற்கான 
நிறைய நல்ல விஷயங்கள் 
அமெரிக்காவில் இருப்பதால் 
வாழ்க்கை கொஞ்சம் மேடு பள்ளமில்லாமல் 
ஓடிக்கொண்டிருக்கிறது. 
இரண்டே இரண்டு விஷயங்களைச் 
சொல்லிவிட்டுக் கட்டுரையை 
நிறைவுசெய்கிறேன்.

முதலாவது - Education

இதைப் பற்றித் தனியாகப் 
புத்தகமே போடலாம். 
இந்தியக் கல்வி முறையைப் பற்றி 
நிறையவே எழுதியாயிற்று. 
மாற்றங்கள் தேவை என்று 
எல்லோரும் உணருகிறார்கள். 
யார் பூனைக்கு மணி கட்டுவது
இங்கு குழந்தைகளுக்குப் பூரண 
சுதந்திரம் உண்டு. 
எந்தக் குழந்தைக்கு எதில் ஆர்வம் 
இருக்கிறதோ அதற்கான எல்லா 
வசதிகளையும் செய்து தருகிறார்கள். 
உங்கள் பையன் வந்து, 
அப்பா, எனக்கு ஐஐடி வேண்டாம்
நான் சிவமணி மாதிரி டிரம் வாசித்துப் 
பெரியவனாக போகிறேன்” 
என்று சொல்கிறான் 
என்று வைத்துக்கொள்ளுங்கள். 
நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள், 
என்பதற்கு பெரிய ஜோசியர் தேவையில்லை. 

To start with  அடி செருப்பாலே.... etc.

ஆனால் அமெரிக்காவில் அது நடக்கும். 
உலகம், இன்ஜினியரிங், மெடிக்கல்
சார்டர்ட் அக்கௌடண்டில் 
மாத்திரம் சுழலவில்லை. 
இதன் உண்மையை எந்த அமெரிக்க 
மாணவனிடமும் கேட்டுத் 
தெரிந்துகொள்ளலாம்.

கடைசியாக, சங்கீதம்
சங்கீத சீசன் வருகிறது. 
உங்களை யாராவது 
தலைமை தாங்க கூப்பிட்டால் 
தயங்காமல் ஒத்துக்கொள்ளுங்கள். 
கஷ்டமே கிடையாது. 
10 வருஷத்துக்கு முன்னால் மியூஸிக் 
அகாடமியிலேயோ தமிழ் இசையிலேயோ 
யாராவது ஒரு பெரிய மனுஷன் பேச்சை 
உங்களுடையதாக ஆக்கிப் பேசுங்கள். 
ஞாபகமாக, அவர் சொன்ன ஒரு உயர்ந்த 
கருத்தை - சங்கீதத்தை வளர்க்க 
வேண்டுமென்றால் 
அதைப் பள்ளிகூடங்களில் 
கட்டாய பாடமாக 
வைக்க வேண்டும் - 
மீண்டும் வலியுறுத்திப் பேசுங்கள். 
இதையேதான் இத்தனை ஆண்டுகளும் அரைத்துக்கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாணவனும் 
தனக்குப் பிடித்தமான வாத்தியத்தையோ
கலையையோ தேர்ந்தெடுத்து அதில் 
வளர்ச்சியைக் காணலாம். 
Art, music எல்லாம் கல்வியின் பகுதிகள்.

எல்லாமே, பாஸிடிவ் ஆகவே 
சொல்லியிருக்கிறீர்களே
எதிர்மறை விஷயங்களே கிடையாதா
என்று கேள்வி எழலாம். 
நான் முதலில் சொன்னபடி 
என்னுடைய அனுபவம் - 
அமெரிக்காவில் வாழும் ஒரு மிடில்கிளாஸ் 
சீனியர் சிட்டிஸனின் அனுபவம். 

சில குறைபாடுகள், படிப்பதினாலும் 
பார்ப்பதனாலும் கேட்பதனாலும் 
தெரியவருகின்றன.

உதாரணத்திற்கு break up of familes, 
அதனுடைய தாக்கத்தினால் 
பாதிக்கப்படும் குழந்தைகள்
gun culture, drug addiction etc.

என்னைப் போல் உள்ளவர்களுக்குச் 
சட்டென்று சுதந்திரமாக ஒரு வீட்டுக்குள் 
போய் உறவாட முடியாது. 
privacy ஒரு தாரக மந்திரம். 
ஒரு லட்சுமண ரேகா. 
இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கு 
இது புரிய நாளாகும்.

சரி, அமெரிக்காவாசியாக ஆகிவிட்டீர்
வாழ்த்துக்கள். எங்களையெல்லாம் 
மறந்து விடாதீர்கள் என்று கிண்டல் 
அடிப்பவர்களுக்காக 
இதோ ஒரு முத்தாய்ப்பு.

சட்டப்படி நான் ஒரு அமெரிக்க பிரஜை. 
OCI கார்டு ஓவர்ஸீஸ் இந்தியன் என்ற 
அந்தஸ்தை அளித்திருக்கிறது.

மனதளவில்...
இந்தியத் தொடர்பு, சகோதர சகோதரிகள் 
மூலம் தொடர்கிறது. ஏராளமான நண்பர்கள். 
அமெரிக்கப் பத்திரிகைகளையோ
அமெரிக்க டிவி சேனல்களையோ
எனதாக்கிக்கொள்ள எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. 
இன்றும் காலை 4 மணிக்கு எழுந்திருந்து 
பார்ப்பது இந்தியா விளையாடும் கிரிக்கட் 
மேட்சுகள்தான் (எவ்வளவு பட்டாலும் இந்தப் பிரமாணனுக்குப் புத்தி வரலயே என்ற 
மனைவியின் புலம்பல் தொடர்ந்தும்). 
தமிழ் இலக்கியம் கற்பதற்காகக் கட்டாயம் 
பார்க்கத் தவறாத தமிழ் டிவி சேனல்கள். 
பயனடைந்த உதாரணங்கள் - 
போட்டுத்தள்ளுவது, போட்டுக்கொடுப்பது,
குடும்பத்தை எப்படிக் கலைப்பது
குழந்தைகளை எப்படிக் கடத்துவது- 
இப்படிப் பலபல.

நீங்கள் படிக்கும்முன் படிக்கும் 
இந்து, தினமலர் பத்திரிகைகள்.

சந்தாதரான பத்திரிகைகள் - 
ஆனந்த விகடன், துக்ளக்.

இப்பொழுது கேளுங்கள்:

சார், நீங்கள் அமெரிக்கரா? இந்தியரா?” என்று.

தெரியலையே அப்பா”.


                                                                 
... கிளறல் தொடரும்

12 comments:

ghss-uchinatham said...

வாழ்த்துக்கள்

Jayadev Das said...

ஊரை அடிச்சு உலையில் போட்டுள்ள நாட்டில் எல்லா சவுகரியமும் இருக்கத்தான் செய்யும். எங்கள் நாட்டில் மக்கள் பணத்தை நாட்டை ஆள்பவனே அடித்து வெளிநாட்டில் போட்டுக் கொண்டான் அது தான் தரித்திரம்.ரிசர்வே ஷன் என்னமோ இருக்குது இன்னமும் அரசாங்கப் பணிகளில் முக்கால் வாசிக்கும் மேல பிராமணர்கள் தானே இருக்காங்க, அதுவும் இல்லைன்னா நூறு சதமும்நீங்க தான் இருப்பீங்க............

Anonymous said...

India is the country which fed you and brought your whole family to US.

You cant compare countries which ever you like who care the damn about it.

Anonymous said...

அய்யா,

உங்கள இந்தி கத்துக்க வேணாம்னு கையப் பிடிச்சுத் தடுக்கலையே. தக்ஷண பாரத இந்தி சபா காலங்காலமா நம்மூரில இருக்கே?

Anonymous said...

இருக்கறது 100 இடம். மின்னாடி எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்கிட்டீங்க. மீதி 900 பேர் படிக்காத, படிப்பு வராதுன்னு சொல்லப்பட்டபோது உங்க வாய்ப்புக்குப் பஞ்சமில்ல.

ஆனா இப்ப 1000 பேர் போட்டிக்கு வந்துட்டான்.

அந்த 100 இடத்த 300 இடமாச்சும் ஆக்கனும்னு என்னிக்காச்சும் தோணுச்சா?

அந்த 100 எனக்கே எனக்குன்னு சுருட்டப் பாத்தா பங்கு போட்டுத்தானே பிரிச்சுக் கொடுக்க முடியும்?

நீங்கள் உங்கள் வாய்ப்பை இழந்தது உங்களைவிடத் திறமையான முற்போக்கு சாதியைச் சார்ந்தவரிடமே!

SathyaPriyan said...

அய்யா, நீங்களும் உங்கள் குழந்தைகளும் நன்றாகத்தானே இருக்கிறீர்கள்? நன்றாக படித்து அமெரிக்கா வந்து வசதியாக இருக்கும் பொழுது என்ன வாய்ப்பு உங்களுக்கு இட ஒதுக்கீட்டினால் கிடைக்காமல் போனது?

அமெரிக்காவில் இட ஒதுக்கீடு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? பெண்களுக்கு, மைனாரிட்டிக்களுக்கு, ஏழைகளுக்கு என்று பல பிரிவுகளில் அவை உண்டு.

உங்கள் குழந்தைகளையும், உங்கள் வீட்டில் வந்து கக்கூஸ் அடைப்பு எடுக்கும் ஒரு தலித்தின் குழந்தைகளையும் ஒரே அடுக்கில் வைத்து மதிப்பிடுவது எந்த வகையில் நியாயம்?

இட ஒதுக்கீடு காலத்தின் தேவை. நீங்கள் அமாவாசை தர்பணம் செய்கிறீர்களே அந்த மூதாதையர்கள் செய்த பாவத்தின் விலை இட ஒதுக்கீடு.

//
உங்கள இந்தி கத்துக்க வேணாம்னு கையப் பிடிச்சுத் தடுக்கலையே. தக்ஷண பாரத இந்தி சபா காலங்காலமா நம்மூரில இருக்கே?
//
அனானி கேட்ட அதே கேள்வி தான் எனக்கும், திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தது 1967 ஆம் ஆண்டு. அதன் பின்னர் தமிழகத்தில் ஒருவர் கூட ஹிந்தி கற்கவில்லையா?

இரு மொழி பாட திட்டத்தினால் தமிழக மாணவர்களின் ஆங்கில வண்மை அதிகமானது என்பது உங்களுக்கு தெரியுமா?

வட நாட்டு மாணவர்களை தமிழ் கற்க சொல்லி இருந்தால் எந்த சலசலப்பும் செய்யாமல் கற்றுக் கொண்டு இருப்பார்களா?

தேசியம் என்பது தமிழர்களுக்கு மட்டுமேவா?

ஹிந்தி பேசும் மக்கள் அதிகம் உள்ள உத்தர பிரதேசம், உத்தராஞ்சல், ஒரிசா, பீஹார், சடிஸ்கர் போன்ற மாநில மக்கள் மிகவும் சுபிட்சமாக தான் இருக்கிறார்களா?

இந்த கேள்விக்கெல்லாம் நீங்கள் விடை சொல்ல வேண்டாம், உங்கள் மனதிலேயே கேட்டு விட்டு உங்கள் ஆதங்கம் நியாயம் தானா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

வயதில் பெரியவர்களை மறுத்து பேசும் வழக்கம் எனக்கு இல்லை. உங்கள் மனம் வருந்தும் படி ஏதேனும் சொல்லி இருந்தால் மன்னிக்க.

Anonymous said...

Sir ungalukku teriyathathu ellai. Palaga palaga palum pullikkum.

Neegal India tirumbi pogumpothu ninaithu parthukkollavum.

Anonymous said...

அருமையான கட்டுரை: முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த, ஒய்வு பெற்ற, அமரிக்கா குடியேறிய மக்களை உடைய ஒரு தந்தையின் உண்மையான எண்ணம். உங்கள் முடிவு உங்களை பொறுத்து சரியே!

இட ஒதுக்கீடு என்பது இணையத்தில் எளிதாக விவாதிக்ககூடிய விடயம் அன்று ......!

மற்றபடி ஒரு அமரிக்க 'மிடில் கிளாஸ்' வாழ்கை பற்றிய உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

? said...

with all due respect, நீங்களும் பிற பிராமணரும் மாட்டுக்கறி சாப்பிடும் மிலேச்சர்களான அமெரிக்கர்களை சமமாக மதித்தும் அவர்களை மதித்தும் வாழ்ந்து வருவதைப் போலவே, இந்தியாவில் (வர்ணாசிரமப்படி அவர்களை விட உயர்ந்த) பிற மக்களை நடத்தியிருந்தால் இட ஒதுக்கீடே வந்திருக்காது சார்!

Anonymous said...

http://mukundamma.blogspot.in/2012/11/blog-post.html

tsnagarajan said...

என் அருமை வாசகர்களே:
தப்பு...தப்பு மன்னிக்கவும்..இது வரை 60 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.அரசியலைப்ப்ற்றி தொட்டதில்லை.
முதல் தடவை"தொட்டுவிட்டேன்.
அதுஇவ்வ்ளவு கடுமையான விமர்சனத்தை சந்திக்கும் என்று நினைக்க்வில்லை.
யாரையும் நோக அடிக்க எழுதவில்லை.
நான் ரிசர்வேஷனைப் பற்றி எழுதக் காரணம்
எனக்கு ஏற்ப்பட்டஏமாற்றத்தினால்.
என் சிறு வயது ஆசை இன் ஜினியாராகவது.
1947ல் பிராகசம் ஆட்சியில் 20% மெரிட்.
மற்ற்வை .G.O.அது படி ஒரு ஜில்லாவில் 14ல் 2 பிராம்ணர்களுக்கு.1948ல் நான்
இண்டர் பாச பண்னினேன்.அந்த வருஷம் மெரிட் கோட்டா இல்லை.நான் ஜில்லாவில் 3 வது இடம்.2க்கும்
எனக்கும் ஒருமார்க் தான் வித்தியாச்ம்.ஒரே காலேஜ் தான் கிண்டியிலே.
ஆனால் "எல்லாம் நன்மைக்கே,என்று நம்புவன்.
கடவுள் வேறு பாதயை காட்டிநார்.இருந்தாலும் அந்த ஏமாற்றம் இருக்கிறது.
அதன் வெளிபாடு இந்த கட்டுரையில் வத்துவிட்ட்அது.
உங்கள் பதில்களில் நான் ஏதொ பிராமண வெறியன் மாதிரி
எழுதியிருக்கிறீர்கள்.எனக்கு அன்ரும் இன்றும் பிராமணரல்லாத
நண்பர்கள் தான் அதிகம்.மாமிசம் இல்லாத சம ப்ந்தி போஜனம்
தான்-அன்றும்,இன்றும்.-எங்கள் வீட்டிலே-அதுவும் ஆசாரமாக் உள்ள என் அம்மாவும்,பாட்டியும் இருந்த வீட்டிலேயே.

அடுத்தது ஹிந்தி...இளம் வயதில் அண்ணாவின் பேச்சுக்க்ள்-
ஹிந்தி மேல் வெறுப்பு. அதனால் படிக்கவில்லை.
படித்திருக்கலாம்..அவ்வளவு Brain washing
.குற்றம் என்னிடம்-சுயமாக் சிந்திக்காததால்.

நான் கட்டுரையில் சொன்னபடி இன்னும் மனதளவில் இந்திய தமிழன்.அதனால் தான் மிடில் கிளாச் வாழ்க்கை ஏன் இந்தியாவில் கஷ்டமாக இருக்கிறது,ஏன் அமெரிக்கா போல்
இருக்க கூடாது என்ற ஆதங்கத்தில் எழுதினேன்.

பாலிடிக்ஸ் கலப்பது என் நோக்கமில்லை.அதை தவிற்கிறேன்.

யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால்,
மறுபடி apologies
உங்கள் ஆதரவுக்கு நன்றி

நாகராஜன்

Sri :) said...

ஒரு குறிப்பெடுக்க google search ல் தேடுகையில் accidentally no no luckily got a chance to read this post ...அருமை ... உங்கள் பதிவு மற்றும் உங்கள் பதில்.

நாயகன் கமல் ஸ்டைல் last line ல "தெரியலையே அப்பா " :):)