Monday, October 22, 2012

கூடிய சீக்கிரம் "அழியும் ஆபத்துக்குள்ளாவது"(Endangered) எது?


அழியும் ஆபத்துக்குள்ளானது (Endangered) 
என்று சொன்னவுடன் ஞாபகத்திற்கு வருவது
அநேகமாக விலங்கினங்களோ
பறவைகளோ அல்லது தாவர 
இனங்களோவாகத்தான் இருக்கும்.

நான் கேட்ட கேள்விக்குப் பதில் மேலே 
சொல்லப்பட்ட எதுவும் இல்லை.
கொஞ்சம் நன்றாக மூச்சு வாங்கி விடுங்கள். 
பதட்டப்படாமல் மேலே படியுங்கள்.

இந்தியாவில் கூடிய சீக்கிரம் 
அழியும் ஆபத்துக்குள்ளாகப் போவது - 
இந்தியாவின் நதிகள். 
குறிப்பாகத் தாயாருக்குச் சமமாகப்
போற்றப்படும் - கங்கை நதிதான்.
ஆச்சரியமாக இருக்கிறதா

கங்கை நதி










கங்கை நதி
ஆனால், உண்மை அதுதான். 
இது வெறும் கற்பனையோ
ஜோதிடமோ இல்லை. 
சொன்னது, நிறைய படித்த, விஞ்ஞானிகள்.  
உலக அளவில் பிரபலமானவர்கள். 
விஞ்ஞானிகளின் பேச்சை
"வேலை கிடையாது இவர்களுக்கு
ஏதாவது காபரா பண்ணியே காலம் 
கடத்துகிறார்கள்" 
என்று அலட்சியப்படுத்த நினைத்தாலும்
இப்பொழுது இந்திய சர்க்காரே
"அந்த மாதிரி நடக்க சாத்தியக்கூறுகள் 
உண்டு" என்று ஒப்புக்கொள்ளக் கூடிய 
ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

சமீப காலத்தில், மீடியாவில் அதிகமாகப் 
பேசப்படும் ஸ்தாபனம் - CAG. 
Controller &And  Auditor General of India 
என்பது
சுருக்கமாககவர்ன்மென்ட் ஆடிட்டர்கள். 
அரசின் பல விதமான ஸ்தாபனங்களின் 
வேலைபாடுகளை அலசிப்பார்த்து
ஒரு சுதந்திரமான அறிக்கையை 
அரசாங்கத்திற்குச் சமர்பிப்பார்கள். 
அதைப் பாராளுமன்றத்தில் வைத்து 
அதன் மேல் விவாதம் நடக்கும்.
சமீப காலத்தில், CAGயின் 2G ஸ்பெக்டரம் 
ரிப்போர்ட், நிலக்கரி பற்றிய ரிப்போர்ட். 
அதிகமாகப் பேசப்பட்ட விஷயங்கள். 
நாட்டின் எல்லா மீடியாக்களுக்கும் 
இந்த அறிக்கைகள். 
"ஒரு அல்வா சாப்பிடுகிற மாதிரி". 

CAG சமர்பித்து அதைப் பாராளுமன்றத்தின் 
முன் வைக்கப்பட்ட இன்னொரு ரிப்போர்ட்டைப் 
பற்றி மூச்சு பேச்சு காணோம். 
ஏனெனில் அந்த சப்ஜக்டைப் பற்றி 
யாருக்கும் எதுவும் தெரியாது. 
அதனால் அதன் மேல் ஒரு 
விசேஷமான அக்கறையும் கிடையாது.
டிசம்பர் 16, 2011 அன்று 
CAG தயாரித்த 
"Performance Audit of 
Water Pollution in India" 
இந்திய நதிகளின் தூய்மைக்கேட்டைப் 
பற்றின அறிக்கை. 
அந்த வாரத்தில், சில மெயின் லைன் 
பத்திரிகைகளில் சிறிய அளவில் 
இதைப் பற்றிப் பிரசுரித்தார்கள். 
மற்றபடி யாருக்குமே இதனுடைய 
முக்கியத்துவத்தைப் பற்றித் தெரியாது.
இந்த அறிக்கையின் சாராம்சம் இதோ:

சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டைத் 
தவிர்க்கப் போடப்பட்ட திட்டங்கள் 
கடந்த 26 வருஷங்களாகச் செயல்பட்டு
வருகின்றன. 
ஆனாலும் இன்றைய நிலை
பெரிய நதிகள் யாவும் தூய்மைகேடு 
நிறைந்ததாக இருக்கின்றன.
14 பெரிய நதிகள், 55 சிறிய நதிகள்
நூற்றுக்கணக்கான ஆறுகள் — 
இவற்றின் நிலை மிகக் கவலைக்கிடமாக 
இருக்கிறது. 
இந்த நதிகளில் லட்சக்கணக்கான 
லிட்டர்கள் கழிவு பொருள்கள்
தொழில் மற்றும் விவசாய சம்பந்தமான 
கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் 
நேரடியாகக் கலக்கப்படுகின்றன.
சர்க்கார் இதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் 
ஒரு low priority.
ஒவ்வொரு pious இந்துவும் 
தினசரி பிரார்த்திக்கும் ஸ்லோகத்தில் 
சொல்லப்பட்ட "கங்கை, கோதாவரி, யமுனை
சரஸ்வதி, நர்மதாசிந்து, காவேரி - 
என்று எல்லா நதிகளும் 
இந்த அவல நிலையிலிருந்து தப்பவில்லை.
பெரும்பான்மையான இந்திய மக்கள்
இந்த "நதித் தூய்மைகேடு" பிரச்சினையை 
ஒரு பொருட்டாக நினைப்பதாகத் தெரியவில்லை. 
யாரும் இதன் அவசியத்தை
எடுத்துச்சொல்வதாகவும் தெரியவில்லை.
CAG ரிப்போர்ட் கொஞ்சம் வெளிச்சத்தைக் 
காட்டுகிறது. 
மற்ற CAG ரிப்போர்ட்டுகள் போல 
இதுவும் விவாதத்தோடு முடிய 
நல்ல வாய்ப்புகள் உண்டு.
ஆனால் ஒரு வரவேற்க்கத் தகுந்த 
விஷயம். 
சில மேதைகள், இந்த விஷயத்தை மக்கள் 
மத்தியில் வெளிப்படுத்த எல்லா 
மேடைகளையும் உபயோகிக்கத் 
தயாராக இருக்கிறார்கள்.
Mainstream media. எவ்வளவு தூரம் 
ஒத்துழைக்கும் என்பது ஒரு கேள்வி.
"ஊதுகிற சங்கை ஊதுகிறோம்" 
என்ற நினைப்பில் 
இதோ சிலரின்" எச்சரிக்கை".

Prof. Devendra Swaroop Bhargava, 
former Prof. of Environmental 
Engineering at IIT, Roorkee 
சொல்கிறார்-
கங்கை நதி, தூய்மைக்கேடு நிறைந்த 
உலக நதிகளில் தனி இடம் பெற்றது. 
உலகத்தில் நதிகளின் நதிப்படுக்கை 
(river basin) அழிவைத் தேடிப் 
போய்கொண்டிருக்கிறது.
கங்கை நதி 








அதில் கங்கையும் ஒன்று.
2008ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று 
பாரத சர்க்கார் கங்கை நதியை 
ஒரு "தேசிய நதியாக" 
(National River of India) அறிவித்தது. 
அதற்கு முன்பைவிட இன்றைய நிலை 
இன்னும் மோசமாக ஆகியிருக்கிறது. 
அதன் தரம் கொஞ்சம்கொஞ்சமாக 
மோசமாகிக்கொண்டுவருகிறது. 
விஞ்ஞானிகளுக்கு ஒரு அளவுகோல் உண்டு. 
level of coliform bacteria - 
இதுதான் தண்ணீரின் தூய்மையைத் 
தெரிவிக்கும் அளவுகோல். 
குடிக்கும் தண்ணீரில் இந்த லெவல் 
50 ஆகவும், விவசாயத்திற்கு உபயோகிக்கும் 
தண்ணீரில் 5000 ஆகவும் இருக்க வேண்டும்.
கங்கை நதி ஹரிதுவாரத்திற்கு 
வரும்போது (ஹரிதுவாரத்தில் கங்கை 
சுத்தமாக இருக்கிறது என்று நம்பிக்கை) 
அதனுடைய அளவு 5500. 
இன்னொரு ஆராய்ச்சிப்படி, தண்ணீரை 
4 பிரிவாகப் பிரித்திருக்கிறார்கள். 
A - குடிக்கத் தகுதியானது
B - குளிக்கத் தகுதியானது
C - விவசாயத்திற்குத் தகுதியானது
D - அதிகபட்சத் தூய்மைக்கேடு. 
கங்கைக்குக் கிடைத்த மார்க் D.
ஹரிதுவாரத்துக்கு அப்பால் 27 
நகரங்கள் வழியாக கங்கை செல்கிறது. 
1.4 பில்லியன் லிட்டர் கழிவுநீர் 
சுத்திகரிக்கப்படாமல் 
இதில் கொட்டப்படுகின்றது. 
திருவிழாக் காலங்களைப் பற்றிக் 
கேட்கவே வேண்டாம். 
அடுத்த தடவை கங்கா ஜலத்தை 
உயிருக்குப் போராடும் நபர் வாயில் 
ஊற்ற நினைத்தால்
கொஞ்சம் யோசித்து செய்யுங்கள். 

கங்கையைப் பற்றி இவ்வளவு விரிவாக 
எழுதுவதற்குக் காரணம்
அதற்கு ஒரு சர்வதேச கெளரவம் கிடைத்து
எல்லா உலக விஞ்ஞானிகளும் அதன் 
அழிவுக் காலத்தைப் பற்றி பேச 
ஆரம்பித்ததால்தான்.

CAG ரிப்போர்ட்டில் சொன்னபடி
இந்திய மக்களுக்குப் பாரபட்சமே 
கிடையாது. 
நதி என்று வந்துவிட்டால் 
சிறிது, பெரிது என்று 
பார்க்க மாட்டார்கள். 
வழக்கமாக endangered என்ற 
வார்த்தையைத் தாவரங்களுக்கும் 
விலங்குகளுக்குமும் மட்டுமே 
உபயோகிப்பார்கள். 
ஆனால் இன்றைய நிலை மக்களுக்கு 
அத்தியாவசியத் தேவையான 
தண்ணீரைப் பற்றி.
இந்த அவல நிலைக்குக் காரணத்தை 
இன்னொரு விஞ்ஞானி விளக்குகிறார்.

Himansu Thakkar of South Asia Network 
on Dams, Rivers and People.

அணைகள், மின்சார நிலையத் திட்டங்கள்
நதிகளைத் திருப்பிவிடுதல்
தூய்மைக்கேடு
நதிப் படுகைகளை ஆக்கிரமித்து 
வேறு காரியங்களுக்காகப் 
பயன்படுத்துவது
தப்பான முறையில் 
தண்ணீரைப் பயன்படுத்துவது
இவை எல்லா நதிகளின் 
போக்கிலும் நடைபெறுகின்றன.
யமுனை நதி 









பநாசி நதி-கோட்டா

wetlandக்கு கொடுக்கிற முக்கியத்துவம்கூட 
நதிகளுக்குக் கொடுக்கப்படவில்லை. 
நதிகளைக் காப்பாற்றுவதற்கான 
கொள்கையோ, திட்டமோ, சட்டமோ 
"இந்திய சர்க்காருக்கு இல்லை. 
இதுதான் உண்மை" என்கிறார்.

சட்டம் ஒரு கழுதை என்று யாரோ 
சொன்னார்கள். 
இதோ ஒரு குட்டிக் கதை.
முன்னொரு சமயம், ஒரு மிக ருசியான 
மீன் வகை இருந்தது. எல்லோருக்கும் 
அதைச் சாப்பிட மிகவும் பிரியம். 
அதன் புகழ் பரவ ஆரம்பித்தது. 
தேவை அதிகமாக ஆக 
விலையும் உயர்ந்துகொண்டேவந்தது. 
மீன் பிடிப்பவர்களும் அதிக லாபத்தைக் 
கருதிப் புதுப்புது இடங்களில் போய் 
அந்த மீனைப் பிடிக்க ஆரம்பித்தார்கள். 
Supply கொஞ்சகொஞ்சமாகக் குறைந்தது.

விஞ்ஞானிகள் அழைக்கப்பட்டார்கள். 
அவர்கள் "இந்த மாதிரி வேறு மீன் 
வகை கிடையாது. கொஞ்ச நாளில் 
இவை அழிந்துவிடும்" என்று அறிக்கை 
தயாரித்தார்கள். 
சர்க்காரும் உடனே "இந்த மீனைப் பிடிப்பது 
சட்ட விரோதம்" என்று ஒரு 
சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். 
மீன்களுக்கு சந்தோஷம். 
மறுபடி இன விருத்திசெய்து கொள்ளலாம் 
என்று நினைத்து மகிழ்ச்சியாக இருந்தன.
ஆனால் திடீரென்று மீன்கள் காணாமல் 
போக ஆரம்பித்தன. ஒன்று இரண்டு மீன்கள் 
தைரியமாக ஹோட்டல்களில் போய்ப் பார்த்தன. 
ஆச்சரியம், அதே மீன் வகைகளை 
ஹோட்டல்கள் விற்றுவந்தன. 
மீன்கள் ஒரு மீனவனை அணுகி, 
"எப்படி ஹோட்டல்கள் விற்கலாம்" 
என்று கேட்டன. 
அதற்கு அந்த மீனவன் சொன்னான் 
"நீ நினைப்பது சரி. சட்டத்திற்கு மதிப்புத் 
தரும் மீனவன் உங்களைப் பிடிக்க மாட்டான். 
சட்டத்தை அவமதிப்பவன் உங்களைப் 
பிடிக்கலாமே! என்று. 
மீன்கள் கேட்டன 
"எங்களைப் பிடிப்பது சட்ட 
விரோதம் என்றால் எங்களைப் 
பரிமாறுவதும் சட்ட விரோதச் செயல்தானே
என்று.                                                                                                                                                              

விடை.. ஒரு புன்சிரிப்பு தான்.

மக்களைப் பயமுறுத்துவதற்காக 
எழுதப்பட்ட கட்டுரை இல்லை. 
மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட 
வேண்டும் — நதியைப் பற்றியும் 
தண்ணீரைப் பற்றியும்.
எல்லாமே சர்க்கார் போடுகிற 
சட்டதிட்டங்களால் ஒழுங்குபடுத்த முடியாது.
மற்ற நாட்டினரைவிட, இந்திய மக்கள்தான் 
அதிகப் பொறுப்புணர்ச்சியோடு
இந்த "நதி" விவகாரத்தை அணுக வேண்டும். 
ஏனெனில், இங்குதான், மூச்சுக்கு மூச்சு
நதிகளைத் தாய்மார்களாகவும் 
கடவுள்களாகவும் நினைத்துப் 
பேசி வருகிறோம். 
உங்கள் தாயை இப்படி நடத்துவீர்களா 
என்று நீங்களே கேட்டுப் பாருங்கள்.

தண்ணீர் ஒரு scarce commodity. 
இந்தப் பூமியில் இருக்கும் தண்ணீரில் 
97.5% குடிக்க முடியாத உப்புத் தண்ணீர். 
மீதியில் மூன்றில் 2 பங்கு 
துருவங்களில் உறைந்திருக்கிறது. 
மீதியிருக்கிறதுதான் நமக்குச் சொந்தம். 
அதிலும் பாதிக்கு மேல் தூய்மை கெட்டதாக 
இருக்கிறது.
ஓடுவதைத்தான் நதி என்கிறோம். 










யமுனை நதி

நதி ஓட்டம் தடைப்பட்டால் அது வெறும் 
ஏரியாகவோ, குட்டையாகவோதான் இருக்கும். 
இந்தியாவில் நதிகள் ஒரு eco system 
உயிர்ச்சூழல் என்ற நினைப்பே இல்லை. 
இது மாற வேண்டும். எதற்கும் சட்டம் போடலாம். 
அது அமுலாக்குவதில் மக்களும் விழிப்புடன் 
இருக்க வேண்டும்.

... கிளறல் தொடரும்

No comments: