Wednesday, December 05, 2012

சிரிக்கிறவன் நீண்ட நாள் வாழ்கிறான் (He who laughts- lasts)


64 வாரங்களாகத் தொடர்ந்து 
serious விஷயங்களைப் பற்றி 
எழுதிவந்த நான்
ஒரு மாறுதலுக்காக
ஒரு light ஆன விஷயத்தைப் 
பற்றி எழுதலாம் 
என்று நினைக்கிறேன்.
சிரிப்பைவிட (laughter) 
ஒரு 'light' ஆன விஷயம் 
இருக்க முடியாது.
அதனால், இந்த வாரம்
ஒரு 'நகைச்சுவை' வாரம்.
இங்கே சொல்லப்பட்டிருக்கிற 
நகைச்சுவை விஷயங்களோ
கொடுக்கப்பட்டிருக்கிற 
வீடியோக்களோ புதிதாக இருக்காது. 
தெரிந்ததை மறுபடியும் படிப்பது 
கொஞ்சம் "போரான" சமாச்சாரம்தான். 
ஆனால், நகைச்சுவை மாறுபட்ட விஷயம். 
வாழைப்பழத் தோலை மிதித்து 
வழுக்கி விழுந்த காட்சியை 
எத்தனை தரம் பார்த்தாலும், நினைவுபடுத்திக்கொண்டாலும் 
சிரிப்பு இன்னும் வருகிறதல்லவா?
அதனால், இந்தப் பகுதியைப் படிக்கும் 
வாசகர்களிடம் ஒரு சிறு புன்னகையாவது 
தோன்றும் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன்.

டாக்டர்கள், மனோதத்துவ நிபுணர்கள், சமூக நல விஞ்ஞானிகள் என்று மனித உடல்நலத்தில்அக்கறைகொண்ட 
அத்தனை படித்தவர்களும் 
ஒரு மனதாக ஒத்துக்கொண்ட விஷயம்
"மருந்துகளில் சிறந்த மருந்து, சிரிப்பு" - 
Laughter is the best medicine.
அநேக ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 
அவர்கள் சொன்னதன் கருத்து:
சிரிப்பு அவசியம்.
சிரிப்பு -ஒரு மருந்து.
சிரிப்பு -மன அழுத்தம், வலி
சண்டை சச்சரவுகள் ஆகியவற்றை 
முறிக்கும் சிறந்த மருந்து.
சிரிப்பு - உடலை லேசாக்கி
தசைகளைத் தளர்த்துகிறது.
சிரிப்பு -இருதயத்திற்கு இதமானது.
சிரிப்பு-ஒரு தொத்து வியாதி மாதிரி. 
மற்றவர்களிடம் பரவி ஒரு சகோதர 
பாசத்தை உண்டுபண்ணுகிறது.
சிரிப்பு - சந்தோஷத்தைக் 
கொடுக்கும் ஒரு கருவி.
சிரிப்பு -கவலை, எதிர்பார்ப்புகளினால் 
ஏற்படும் வலிகளைக் குறைக்கிறது.
சிரிப்பு -உறவுகளைப் பலப்படுத்துகிறது.
சிரிப்பு - ஒரு fun, இலவசமானது,
எளிதாக உபயோகப்படுத்தும் 
ஒரு சாதனம்.

இப்படிச் சொல்லிக்கொண்டே 
போகலாம்...

இந்தச் "சிரிப்பை" பற்றி 
சில பிரபலங்களின் 
பொன்மொழிகளில் சில:

Laughter is the closest distance 
between 2 people - 
Victor Borge.
Always laugh when you can, 
it is a cheap medicine - 
Lord Byron.
The human race has only one 
effective weapon and that is laughter - 
Mark Twain.
Man is distinguished from all other creatures by the faculty of laughter - Joseph Addisson.

He deserves Paradise who makes 
his companions laugh. - Anonymous

ஒரே வாக்கியத்தில் சொல்லவேண்டும் என்றால்
"சர்வம் சிரிப்பு மயம் ஜகத்."
எத்தனை விதமான சிரிப்புகள் — 
எத்தனை விதமான கதைகள்
கட்டுரைகள்நாடகங்கள்
சினிமாக்கள்கதாசிரியர்கள்
கலைஞர்கள் - 
இந்தச் சிரிப்பை கையாண்டு 
நம்மை மகிழ்ச்சியடைய 
செய்திருக்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள். 
மற்ற "subjects"களுக்கு இல்லாத 
ஒரு தனித்துவம் 
இந்தச் சிரிப்புக்கு இருக்கிறது. 
அதுதான்
அதனுடைய "Amazing Variety". 
உலகத்தில் உள்ள எதைத் தொட்டாலும்,- 
மனித இனம், கலாச்சாரம், மொழிகள்
மிருக இனங்கள், எல்லாவற்றை பற்றியும் 
ஏதாவது ஒரு நகைச்சுவைத் துணுக்கு இருக்கிறது. 
எந்த நிகழ்ச்சிக்கும் ஜோக் சொல்ல முடியும். 
என்னைக் கவர்ந்த சில சினிமா நகைச்சுவைத் துணுக்குகளை 
உங்களிடம் இப்பொழுது பகிர்ந்துகொள்கிறேன்.
மாயா பஜார்படம் நினைவிருக்கும் 
என்று நம்புகிறேன். 
அதில் கடோத்கஜனாக வரும் 
S.V. ரங்காராவ் பாடுவதாக வரும் 
"கல்யாண சமையல் சாதம்" பாட்டு 
ஒரு விசேஷமான பாட்டு. 
அதில் வரும் "ஆஹ, ஆஹ, ஆஹ," 
அருமையான ரிதம். 
ஆனால் இந்த வெற்றிப் பாட்டின் 
original ஆங்கிலத்தில் வந்த 
"laughing song". 
இரண்டையுமே உங்கள் 
மகிழ்ச்சிக்காகக் 
கொடுத்திருக்கிறேன்.

(கிளிக் செய்யவும்)
Maya Bazaar-Tamil
தமிழ் சினிமாக்களில் எத்தனையோ 
நகைச்சுவைக் காட்சிகள் இருந்தாலும் 
எத்தனையோ நகைச்சுவை நடிகர்களும் 
நடிகைகளும் இருந்தாலும் என்னுடைய 
top 10 இதோ, (வரிசை முக்கியமில்லை)
இது என்னுடைய subjective list. 
உங்களுடையது வேறாக இருக்கலாம்.
1. N.S. கிருஷ்ணனின்
 "சிரிப்பு" பாட்டு.
 (கிளிக் செய்யவும்)
NSK "laughter" song
2. N.S. கிருஷ்ணனின் 
"கிந்தனார் காலட்சேபம்"
3. நாகேஷ் - சிவாஜி - 
திருவிளையாடல்.
(கிளிக் செய்யவும்)
Nagesh-Sivaji
4. தங்கவேலுவின் - 
"வைரவன்"
(கிளிக் செய்யவும்)
thangavelu
5. தங்கவேலுவின் - 
குசேலர் காலட்சேபம்.
6. நாகேஷ் - பாலையா - 
காதலிக்க நேரமில்லை
(கிளிக் செய்யவும்)
Nagesh-Balaiah
7.மநோரமா-கிஷ்மு 
சம்சாரம் அதுஅது மின்சாரம்
(கிளிக் செய்யவும்)
Manorama-Kishmu
8. கமல்-ஊர்வசி
மைக்கேல்-மதனகாமராஜன்
(கிளிக் செய்யவும்)
kamal-urvasi
9. விவேக்கின் -7.5 
(கிளிக் செய்யவும்)
vivek 7.5
10.சோ-சிவாஜி-மநோரமா
நிறைகுடம்
(கிளிக் செய்யவும்)
cho-sivaji-manorama
ஆங்கில சினிமாக்களில் 
எனக்கு மிகவும் பிடித்த 
Danny Kaye, Laurel&Hardy, 
Bob Hope 
இவர்களின் நகைச்சுவையைப் 
பற்றிச் சொல்ல இன்னொரு 
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன்.

என்னுடைய 60 ஆண்டு குப்பையில் 
நான் அதிகம் சேர்த்தது Jokesதான். 
விதவிதமான Jokes - Lawyer Jokes, 
Doctor Jokes, Ethnic Jokes, Celebrity Jokes, Religious Jokes என்று...
எல்லாவற்றையும் உங்களிடம் 
பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றால் 
அதற்கென்று நான் ஒரு தனி 
Blog கொண்டு வர வேண்டும். 
அதற்கான யோசனை 
தற்சமயம் இல்லை. 
இந்த நகைச்சுவை வாரத்திற்காக
எனக்குப் பிடித்த (உங்களுக்கும் பிடிக்கும் 
என்ற நினைப்பில்) 
சில ஹாஸ்யத் துணுக்குகளைக் 
கொடுத்திருக்கிறேன்.

ஆங்கிலத்தில் சொல்வார்களே
அதே மாதிரி Laugh it aloud, boy!

நகைச்சுவையாக இருந்தால் 
வாய்விட்டுச் சிரியுங்கள். 
சுமார்என்றிருந்தால் 
ஒரு புன்முறுவலாவது 
செய்யுங்கள். 
உம்மணா மூஞ்சியாக இருக்காதீர்கள்.

ஜோக்-1
ஒரு முதலாளி தன் கட்டட வேலைக்காக 
ஒரு காண்டிராக்டரை interview பண்ணுகிறார்:
முதலாளி: 
இந்த வேலையை எத்தனை நாளில் முடிப்பீர்?
காண்டிராக்டர்: எனக்கு 3 மாதம் தேவை. 
அதற்குள் நன்றாக முடித்து கொடுப்பேன்.
முதலாளி: 3 மாதமா? ரொம்ப அதிகம். 
உமக்குத் தெரியுமா
இந்த உலகத்தைப் படைக்க 
கடவுள் 6 நாட்கள்தான் 
எடுத்துக்கொண்டார் என்பது.
காண்டிராக்டர்: 
நன்றாகத் தெரியும். 
அந்த அவலட்சணத்தைத்தான் 
இப்பொழுதுபார்த்துக்
கொண்டிருக்கிறோமே.

ஜோக் 2:
பெர்னாட் ஷாவையும் 
வின்ஸ்டன் சர்ச்சில் 
பற்றியும் எல்லோருக்கும் தெரியும். 
இரண்டு பேரும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் 
ஒருத்தரை ஒருத்தர் காலை வாரிவிட்டுக்கொள்வது 
வழக்கம் .
இதோ ஒரு சாம்பிள்:
பெர்னாட் ஷா, தன்னுடைய புதிய நாடக 
ஆரம்ப நாளுக்கு சர்ச்சிலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
என் அருமை சர்ச்சில் அவர்களே
இத்துடன் என் புதிய நாடக ஆரம்ப 
நாளுக்கு 2 அழைப்பிதழ்களை அனுப்பியிருக்கிறேன். 
தவறாமல் வர வேண்டும். 
ஒன்று உமக்கு
இன்னொன்று உமது நண்பருக்கு - 
அப்படி யாராவது உமக்கு இருந்தால்.

சர்ச்சில் பதில்:
ஷா அவர்களுக்கு நன்றி
வேறு ஒரு நிகழ்ச்சி காரணமாக
உங்கள் நாடகத்தின் ஆரம்ப நாளில் 
வர முடியாத நிலை. வருந்துகிறேன். 
கட்டாயம் இரண்டாம் நாள் 
நாடகத்திற்கு வருகிறேன். 
நாடகம் -இரண்டாம் நாள் நடந்தால்.

ஜோக் 3:
ஒரு வயலின் வித்வான் அருமையாகக் கச்சேரி செய்துகொண்டிருந்தார். 
முன் வரிசையில் ஒரு பெண்மணி நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். 
கச்சேரி முடிந்து, வித்வானுக்கு 
Standing Ovation கிடைத்தது. 
தூங்கிக்கொண்டிருந்த பெண்மணி 
திடீரென்று எழுந்து உட்கார்ந்துகொண்டாள். 
வயலின் வித்வான் பவ்யமாக 
"அம்மணி, மன்னிக்கவும். 
இந்த அப்ளாஸ்தான் 
உங்களை எழுப்பி விட்டது. 
நான் எவ்வளவு மெதுவாக 
வாசிக்க முடியுமோ 
அவ்வளவு மெதுவாகத்தான் 
வாசித்தேன்” என்றார்.

ஜோக் 4:
ஒரு பணக்காரருடைய விலையுயர்ந்த 
நாய் காணாமல் போய்விட்டது. 
அவர் தன் ஊர் பேப்பரில் 
ஒரு விளம்பரம் கொடுத்து நாயைக் 
கண்டுபிடிப்பவருக்கு 
500 டாலர்கள் பரிசுத் தொகை 
கிடைக்கும் என்று சொல்லியிருந்தார். 
ஒரு வாரம் ஆகியும், பத்திரிகை ஆபிஸிலிருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை. 
ஒரு நாள் அவர் அந்த ஆபிஸுக்குச் 
சென்று:
"நான் இப்போது உங்கள் விளம்பர மேனேஜரைப் பார்க்க வேண்டும்" 
என்றார்.
அங்குள்ள ஆபிஸ் பையன் 
"சார், அவர் வெளியே போயிருக்கிறார்" என்றான்.
"அவருடைய அசிஸ்டென்ட்?"
"சார் அவரும் வெளியே போயிருக்கிறார்."
"நான் உங்கள் எடிட்டரைப் பார்க்க வேண்டும்" என்றார்.
"அவரும் இல்லை. எல்லோரும் ஒரு நாயைத் தேடி போயிருக்கிறார்கள்" என்றான்.

ஜோக் 5:
ஹிட்லர் ஒரு நாள் குதிரை சவாரி செய்தார். 
குதிரை தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. 
ஹிட்லர், "உதவி, உதவி" என்று கதறினார். 
ஒரு இளைஞன் எகிறிக் குதித்து
குதிரையை நிறுத்தினான்.
ஹிட்லர் அந்த இளைஞனைப் பார்த்து, "தம்பி, நான் யார் என்று தெரியுமா
நான்தான் Fuhrer. நீ யார்?" 
என்று கேட்டார்.
அந்த இளைஞன் 
"என் பெயர் இஸ்ரேல் கோன். 
நான் ஒரு யூதன்" என்றான்.
ஹிட்லருக்கு ஷாக். இருந்தாலும் 
சமாளித்துக்கொண்டு 
"பரவாயில்லை. நீ ஒரு தைரியசாலி. 
உனக்கு நான் ஏதாவது உதவிசெய்ய வேண்டும். என்ன வேண்டும்?" 
என்று கேட்டார்.
அதற்கு இளைஞன் சொன்னான். 
"ஐயா, எனக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவிஇங்கே நடந்த சமாசாரத்தை யாரிடமும் சொல்லக் கூடாது" என்றான்.

ஜோக் 6:

ஒரு பெண்மணியை நாய் கடித்துவிட்டது. 
அவளுடைய டாக்டர் அவளிடம் 
"மேடம், உங்களுக்கு Hydrophobia 
அதனால் நீங்கள் பிழைப்பது கடினம். 
உங்கள் கடைசி ஆசைகள் இருந்தால் 
அவற்றை எழுதிக்கொடுங்கள்" என்றார். 
அவளும் ஒரு பேப்பரையும் பென்ஸிலையும் வைத்துக்கொண்டு, ரொம்ப நேரம் 
எழுதிகொண்டிருந்தாள். 
டாக்டர் அவளிடம் வந்து 
"என்ன மேடம், பெரிய உயில் எழுதுகிறது 
மாதிரி தெரிகிறதே" என்று கேட்டார். 
மேடம் பதில் சொன்னாள்
"உயிலா, சான்ஸே இல்லை. 
நான் யாரையெல்லாம் 
கடிக்க வேண்டும் என்று 
list தயார்செய்து
கொண்டிருக்கிறேன்" 
என்றாள்.

ஜோக் 7
வாஷிங்டன் Wat Officeஇல் 
இரண்டு பேர் அடுத்தடுத்த 
மேஜைகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 
ஒருவர் தினசரி 4 மணிக்கு ஆபிஸை 
விட்டுக் கிளம்பி விடுவார். 
மற்றவர் கஷ்டப்பட்டு
6 மணிக்கோ இன்னும் 
லேட்டாகவோ 
வீட்டுக்குச் செல்வார். 
ஒரு நாள், லேட்டாக வேலை 
செய்யும் நபர் மற்றவரைப் பார்த்து 
"உங்களால் எப்படி 4 மணிக்கே 
போக முடிகிறது
எப்படி எல்லா வேலையையும் முடித்துவிடுகிறீர்கள்" 
என்று கேட்டார்.
அதற்கு அவர் சொன்னார் 
"இது ஒன்றும் பிரமாதமான 
விஷயம் இல்லை. எந்த கஷ்டமான 
file என் மேஜைக்கு வந்தாலும் 
அதை உடனே Mr. Smith 
கவனத்திற்கு 
என்று எழுதி out trayஇல் 
போட்டு விடுவேன். 
இவ்வளவு பெரிய ஆபிஸில் 
Smith என்று ஒருவர் இருக்க 
மாட்டாரா
நான் நினைத்தபடி 
ஒரு fileலும் என் மேஜைக்குத் 
திரும்பி வந்ததே இல்லை" என்றார். 
கேள்வி கேட்ட நம் நண்பர் 
"தன் சட்டையின் கைகளை மேலே 
இழுத்து விட்டுகொண்டு 
"தம்பி, be ready for action. 
நான் தான் கமாண்டர் ஸ்மித்" 
என்றார்.

கொசுறு:
(கிளிக் செய்யவும்)
kids laughter


கிளறல் தொடரும்...

3 comments:

Jersey Ocean said...

Hey man

I like your story but im not feeling your vibe

Try translating this into english

Other than that

Solid Job Bro

Jersey Ocean said...
This comment has been removed by the author.
கடுகு said...

சிரிப்புக் கட்டுரை இன்னும் நீளமாக் இருக்கலாம்! எம் ஜி ஆர் “ எங்கள் தங்கம்” படத்தில் செய்த கதாகாலட்சேபத்தையும் சேர்த்திருக்கலாம். அதே மாதிரி பி,. யூ. சின்னப்பா செய்த கதா காலட்சேபத்தையும் சேர்க்கலாம்.

பி. எஸ் ஆர்