Sunday, January 20, 2013

பெரு நாட்டில் நவ ராத்திரி - பகுதி 2 லீமா, அமேசான் மழைக் காடுகள்.



2ஆம் நாள்-6000 கிலோ மீட்டர் 
தள்ளிப் புது இடத்தில் கண்விழிப்பு. 
களைப்பு ஒன்றும் இல்லை. 
காரணம்,பெரு நாடும், நாங்கள் 
குடியிருக்கும் அமெரிக்க நாட்டு 
New Jerseyயும் 
ஒரே Time Zone - EasternTime 
ஜெட் லாக் ஒன்றும் இல்லாமல்
சுறுசுறுப்பாக எழுந்து 
breakfastஐ நாடி ஓடினோம். 
அநேகமாக,வெளிநாட்டு
ஹோட்டல்களில் எல்லாம் 
bed & breakfastதான் rule. 
Breakfast-free. 
அதுவும் விதவிதமான breakfast. 
ரொட்டிவகைகள்,சீரியல்வகைகள்
பழங்கள், முட்டை, பான்கேக்
ஆம்லெட், ஜாம், ஜூஸ் - 
நம்மைப் போல் இல்லாமல் 
வெளிநாட்டினர்கள் 
breakfastக்கு ரொம்பவே 
முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 
ஹோட்டலில் ஒரு பிடி பிடித்து
breakfast சாப்பிட்டால் 
லஞ்ச்என்று வயிறு கேட்காது.
நாங்களும் UA Airlines பட்டினி 
போட்ட அவலத்தை மறந்து 
ஒரு அருமையான breakfastஐ 
ஒரு பிடி பிடித்தோம்.
சரியாக 10 மணிக்கு டிராவல் கம்பெனி 
ஒரு vanஐயும் ஆங்கிலம் தெரிந்த 
ஒரு guideஐயும் அனுப்பிற்று. 
மறந்துவிடாதீர்கள் — 
இது ஒரு ஸ்பானிஷ் பேசும் நாடு. 
எங்கும் ஸ்பானிஷ்தான். 
city tour ஆரம்பித்தது.
லீமா நகரத்தைப்பற்றி கைடு 
சொன்ன கதையின் சுருக்கம் இதோ:
பசிபிக் மகா சமுத்திரத்தின் 
கரையோரத்தில் இருக்கும் லீமா நகரம்
பெரு குடியரசின் தலைநகர். 
1535ஆம் ஆண்டு Francisco Pizaro 
என்ற ஸ்பானியரால் ஸ்தாபிக்கப்பட்டது. 
இதற்கு The City of Kings 
என்று ஒரு செல்லப் பெயர் உண்டு.
13 X 9 Gridஇல் 117 சிடி பிளாக்குகளுடன் 
நகரம் முதலில் கட்டப்பட்டது.
இன்றைக்கு அரசியல் பொருளாதார
வர்த்தகத் தலைநகராக 
தென்அமெரிக்காவில் 
இது புகழ்பெற்றிருக்கிறது. 
இன்றைய ஜனத்தொகை கிட்டத்தட்ட 
9 மில்லியன் ஆக இருக்கிறது. 
அமெரிக்கக் கண்டத்தில்
San Paulo, Mexico City, 
New York Cityகளுக்குப் பிறகு 
லீமாதான் 4ஆவது பெரிய நகரம். 
Beta World City என்ற 
அங்கீகாரமும் இதற்கு உண்டு.
இப்போதைக்கு இந்த அறிமுகம் 
போதும் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது நகர ஊர்வலம் செல்வோமா?


Van நகர ஆரம்பித்தவுடன்
முதல் ஷாக் எங்கே
9 மில்லியன் ஜனங்கள்
தெருக்கள் எல்லாம் 
வெறிச்சோடிக் கிடந்தன.
கேள்விக்கு உடனே 
பதில் கிடைத்துவிட்டது. 
நாங்கள் ஊர்வலம் சென்ற நாள் - 
டிசம்பர் 25ஆம் தேதி - 
கிறிஸ்துமஸ் காலை.
பெரும்பான்மையானோர் கத்தோலிக்க 
மதத்தைச் சார்ந்தவர்களானதால் 
டிசம்பர் 24, 25 midnight massக்குச் 
சென்ற களைப்புடன் 
தூங்கிக் கொண்டிருப்பார்களாம்.
பெரும்பான்மையான 
கடைகளும் மூடியிருந்தன. 
நகரத்தின் மையத்தை 
நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். 
திடீரென்று ஒரு கூட்டம்
மக்கள் விதவிதமான கலர் ஆடைகளில் 
நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். 












அருமையானக் காட்சி 
இது ஒரு வருடாந்திர ஊர்வலமாம். 
New Yearக்கும் இதே மாதிரி நடக்குமாம். 
ஆண், பெண், வயதானோர்
இளைஞர் என்று வித்தியாசம் 
பாராமல் ஆடிப்பாடி மகிழும் 
இந்த community procession 
ஒரு மறக்க முடியாத சம்பவம்.


இந்த நகரத்தின் மையம் 
Plaza Mayor. 




ஒரு பெரிய சதுரமான open space. 
சுற்றி சரித்திர பிரசித்திப் 
பெற்ற கட்டடங்கள். 
லீமா கதீட்ரல்
ஜனாதிபதி மாளிகை
ஆர்ச் பிஷப் வீடு என்று 
கட்டடங்கள். 
















நடுவில் ஒரு fountain - 
Angel of Fame. 
“Angel de la Fama” (The Angel of Fame),
 statue, a replica of the original one, 
that was accidentally destroyed in 1900.











UNESCO ஸ்தாபனம் 
இந்த ஏரியாவை 
Cultural Heritage of Mankind 
என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.
ப்ளாசாவின் கிழக்குப் பகுதியில்தான் 
லீமா கதீட்ரல் இருக்கிறது. 
இதற்குப் பெயர் Cathedral 
San Juan Evangelista. 
இப்போதையக் கட்டடம் 
1746இல் பூகம்பத்திற்குப் பிறகு 
18ஆம் நூற்றாண்டில் 
புதிதாகக் கட்டப்பட்டது. 
சர்ச்சுக்குள்ளே 17ஆம் நூற்றாண்டு 
chours stallsகளைப் பத்திரமாக 
வைத்திருக்கிறார்கள். 
Pizaroவின் சவப் பெட்டியும் 
உள்ளே இருக்கிறது. 
சர்ச்சுக்குப் பக்கத்தில் ஆர்ச் பிஷப்பின் வீடு. 
இதன் மரத்தினால் ஆன பால்கனி 
ரொம்ப அழகாக இருக்கிறது. 
எதிர் வரிசையில் முனிசிபல் 
கட்டடமும் ஜனாதிபதி மாளிகையும் 
அழகாக இருக்கின்றன. 
கிறிஸ்துமஸ் tree 
அழகாக வைத்திருக்கிறார்கள்



லீமா நகரத்தில், 
எங்கு திரும்பினாலும் தென்படுவது 
கதீட்ரல்களும் சர்ச்சுகளும்தான். 
அதில் முக்கியமானது 
Mansterio de San Francisco 
என்ற சர்ச். 











காலனி ஆட்சியின் ஒரு ஆபரணம். 
இதற்குள் 17ஆம் நூற்றாண்டு 
நூலகம் இருக்கிறது. 
25000க்கும் மேலான 
leather bound volumesகளும் 
6000 parchmentகளும் இருக்கின்றன.

இதற்குள், Cata Combs 
என்ற பழைய காலத்து 
burial groundஐப் பார்க்கலாம்.
 













கடைசியாக
நாங்கள் வெளியிலிருந்து பார்த்தது 
Natural University of San Marcos 
என்ற பல்கலைக்கழகம்.




இதன் சிறப்பு என்னவென்றால் 
1551இல் ஸ்தாபிக்கப்பட்ட 
இந்தப் பல்கலைக்கழகம் 
இன்றுவரை தடையில்லாமல்தொடர்ந்து 
செயல்பட்டு வருகிறது என்பதுதான். 
அமெரிக்கக் கண்டத்தில் இதுதான் 
oldest continuously functioning University. சர்ச்சுகளுக்கு அடுத்தபடியாக 
லீமா நகரத்தில் நிறையவே 
மீயூஸியங்கள்இருக்கின்றன. பெரும்பான்மையானவற்றுக்கு 
விடுமுறை. அதனால் அவற்றைப் பார்க்க 
முடியவில்லை.

லீமா beachஇல் 
கொஞ்சம் உட்கார்ந்துவிட்டு
lunch சாப்பிட ஒரு சின்ன 
பிஸ்ஸா கடையைத் 
தேர்ந்தெடுத்தோம். 
வெஜிடேரியன்களுக்கு 
safe bet pizzaதான். 
ஹோட்டலில் சிரம பரிகாரம். 
டின்னர் ஹோட்டலிலேயே
டிராவல் ஏஜெண்டின் உபயம்.

சீக்கிரமாகவே படுக்கைக்குச் 
சென்றோம். 
மறுநாள், பிளான் 
அமேசான் மழைக்காடுகளுக்கு 
விஜயம். நிறையவே 
buildup excitement வேறு. 
விடியற்காலை 4 மணிக்குத் தயாராகி
6 மணிக்கு விமானத்தில் குஸ்கோ 
வழியாக Puerto Maladoluக்குச் 
செல்ல வேண்டும். அங்கிருந்து 
boat, walk, canoe என்று காட்டு 
மத்தியில் இருக்கும் லாட்ஜுக்குச் 
செல்ல வேண்டும்.

6 மணி flightஇல் சென்றால் 
1 மணிக்குள் லாட்ஜை அடைந்துவிடலாம். Night walk பண்ணலாம். 
இதெல்லாம் நினைத்துக்கொண்டு 
தூங்கச் சென்றோம். 
மறுநாள் எப்படி என்பது நமக்கு 
எப்படி தெரியும்
ஏழுகொண்டலவாடு 
என்ன எழுதியிருக்கிறனோ?
மூன்றாம் நாள் - 
காலை 3 1/2 மணிக்கு 
பெரியவர்கள், சிறுவர்கள் 
உட்பட எல்லோரும் தயாராகிவிட்டோம். 
4 மணிக்கு விமான நிலையத்துக்கு 
அழைத்துச் செல்ல வேண்டிய வண்டி 
வந்து எங்களை அழைத்துக்கொண்டு 
5 மணி அளவில் விமான 
நிலையத்தை அடைந்தது.

செக்கிங் கவுண்டரில் அபாய 
ஒலி ஒலித்தது. 
48 மணி நேரத்திற்குமுன் 
confirm பண்ணாததால் எங்கள் 
சீட்டுக்களை வேறு நபர்களுக்கு 
airlines கொடுத்துவிட்டதாம். 
அதாவது லீமா வந்து 
இறங்கியவுடன் confirm 
செய்திருக்க வேண்டுமாம். 
Overbooking ஆனதால் 
argue பண்ணி பிரயோஜனம் இல்லை. 
அடுத்த flight மதியம் 1 மணி. 
consolation price என்று சொல்வார்களே? ஆளுக்கு 1 food voucher - 
ஒரு sandwich ஒரு coffee. 
கொடுத்தார்கள்
6 பேரில் 4 பேருக்கு தலா 
45 டாலர்கள் கொடுத்தார்கள். 
மற்ற 2 பேருக்கு இன்னும் 
வரவில்லை. வருமா? என்பது கேள்விக்குறி.
இப்படியாக 3 1/2 மணிக்கு 
எழுந்த முயற்சி வீண். 
food courtஇல் போய் உட்கார்ந்து 
காப்பி வேண்டாம், டீ கொடுங்கள் 
என்று கேட்டால் rule படி காப்பிதான் - 
No டீ என்று சொல்லிவிட்டார்கள். 
காப்பி - 3 டாலர். டீ 1 டாலர். 
Rule ruleதான். மாற்றம் கிடையாது.
கொஞ்சம் படிப்பு
கொஞ்சம் சுடோக்கு
கொஞ்சம் தூக்கம் என்று 5 மணி 
நேரத்தை ஓட்டினோம். 
airlines பெயர் LAN. 
நம்மூர் இந்தியன் ஏர்லைன்ஸ் மாதிரி.
1 மணி விமானம் 
2 மணிக்குத்தான் புறப்பட்டது. 
குஸ்கோவில் மழையாம். 
3 மணிக்கு குஸ்கோ 
விமானத்திலிருந்து இறங்க 
வேண்டிய கட்டாயம். 
சீட்டுகள் மாறிவிட்டது. 
குஸ்கோ ப்யூர்டோ 
மலடோலா - செக்டாரில்.

லீமா - குஸ்கோ  1 மணி நேரம். 
குஸ்கோ - மலடோலா 30 நிமிடங்கள்.

ப்யூர்டோ மலடோலா விமான நிலையத்தில் கைடு காத்திருந்தார். 
5 மணி நேரம் காத்திருந்ததாக 
ஒரு புலம்பல். 
நேரடியாக டிராவல் ஏஜென்ஸியின் 
ஆபிஸுக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். 
அங்கே எங்களை repack 
பண்ணச் சொன்னார்கள். 
3 நாள்களுக்குத் தேவையான 
உடைகளை ஒரு duffel bagஇல் 
வைக்கச் சொன்னார்கள் - 
bag அவர்கள் உபயம். 
எங்கள் baglodgeஇல் 
கொடுப்பதாகச் சொன்னார்கள்.
எல்லோரும், மழைக்கால 
பூட்ஸ்கள் அணிந்துகொண்டோம். 
15 நிமிடங்கள் கார் சவாரி எங்களை 
ஒரு நதிக்கரைக்கு எடுத்துச் 
சென்றது. அங்கே ஒரு மின்விசைப் 
படகில் எல்லோரும் அமர்ந்தோம். 
ஆளுக்கு ஒரு life jacket 
அணிந்துகொண்டோம். 
சுமார் 45 நிமிடம் ஏரியில் 
பிரயாணம். 










வானம் தெளிவாக இருந்தது. 
கைடு சொன்னார் - 
நாங்கள் "Plan படி காலையில் 
வந்திருந்தால் மழையில் 
நனைந்திருப்போம்" 
என்று. 
அவருக்கு நம்மூர் 
"எல்லாம் நன்மைக்கே" 
என்ற கதையை அழகாக 
(என் சொந்த சரக்கு) 
சொன்னதாக எல்லோரும் 
பாராட்டினார்கள். 
படகு நின்ற இடம் காட்டின் 
ஆரம்ப எல்லை. 
இங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் 
நடக்க வேண்டும்.காலை மழை காரணமாக 
எங்கேயும் சகதி. 
ரோடு என்று ஒன்றும் 
கிடையாது. 
நேராகவும் நடக்க முடியாது. 
வயதான எங்களுக்கு 
ஒரு குச்சி கொடுத்தார்கள். 
அதை ஊன்றிக்கொண்டு 
3 கிலோ மீட்டர் தூரத்தைக் 
கடந்தோம் 
எவ்வளவோ research 
பண்ணியிருந்தோம். 
இவ்வளவு கடினமாக இருக்கும் என்று 
புரிந்துகொள்ளவில்லை.


 


நடைப்பாதையின் 
முடிவில் ஒரு படகுத்துறை இருந்தது. 
அங்கே வித்தியாசமான 
கட்டுமரத்தில் (cones) 
உட்கார்ந்து படகோட்டிகள் துடுப்பு மூலம் 
அந்தப் பகுதியைக் கடந்தார்கள். 









ஆன நேரம் - 30 நிமிடங்கள்.
லாட்ஜை அடையும்போது நேரம்
மாலை 7 மணி. 
களைப்பான, கடுமையான பயணம். 
லாட்ஜ் "அத்வானமான" இடம் 
என்று சொல்கிறமாதிரி 
நடுக்காட்டில் இருக்கிறது. 
25 அறைகள், எங்கள் குடும்பம் 
ஒன்றுதான் நாங்கள் சென்ற 
சமயம் லாட்ஜுக்கு வந்தது. 
எல்லாமே மரக் கட்டடம்தான். 
இதை அடைய வேறு வழியே கிடையாது.



Electricity - generator 
மூலம்தான. 
குறிப்பிட்ட நேரத்திற்குத்தான் 
கிடைக்கும். அருமையான ambience.
எல்லோரும் களைப்பாக 
இருந்தோம். சுடச்சுட வெஜிடேரியன் 
சாப்பாடு கிடைத்தது. 
எல்லோரும் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள், நாளைக் காலையில் forest visit என்று கைடு சொல்லிவிட்டார்.
படுக்கையில் தலைபட்டதுதான் 
தெரியும். 
நாளையைப் பற்றி கவலைப்படாமல் 
"அடிச்சா கேட்கிறதற்கு ஆள் கிடையாது" என்று சூழ்நிலையில் அடர்ந்த காட்டில் 
சுகமாகத் தூங்கினோம்.

அடுத்த 2 நாள்கள் இந்த 
அமேசான் காடுகளில் 
எந்தவிதமான அனுபவம் 
காத்திருக்கிறது என்பதற்கான 
ஒரு clue தெரியாமலேயே தூங்கி 
மறுநாள் காலையில் எழுந்தோம். 
வெளியில் மழை.

ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் 
இல்லை. இதற்கு பெயரே 
Rain forestதானே. 
அப்படி என்ன
இந்த அமேசான் 
மழைக்காடுகளில் இருக்கிறது
முதலில் அமேசான் மழைக்காடுகள் 
என்றால் என்ன
இந்தக் கேள்விகளுக்கும் 
மற்ற 2 நாளில் நாங்கள் 
பார்த்த, கேட்ட, ரசித்த 
விஷயங்களைப் பற்றியும் 
அடுத்த வாரம் சொல்கிறேன்.

...கிளறல் தொடரும்.

No comments: