Friday, January 25, 2013

பெரு நாட்டில் நவராத்திரி - பகுதி 3 அமேசான் மழைக்காடுகள்

"காடு, மலைவனாந்திரம்
ஏழு கடல்களைத் தாண்டி 
கதாநாயகன் கதாநாயகியை 
அரக்கனிடமிருந்து மீட்கச் சென்றான்" 
என்று பெரிய எழுத்து மதனகாமராஜன் 
கதைகளில் படித்திருக்கிறோம். 
நாங்களும் அதே மாதிரி, விமானம்
கார்விசைப்படகு
காட்டில் நடை, தோணிச் சவாரி 
என்று கஷ்டப்பட்டு எங்கள் 
லாட்ஜை அடைந்ததைப் 
பற்றி எழுதியிருந்தேன். 
ஒரு வித்தியாசம் நாங்கள் 
கதாநாயகி யாரையும் 
தேடிப் போகவில்லை. 
அமேசான் மழைக் காடுகளில் 
2 இரவுகள் 3 நாட்கள் தங்கி
நம்முடைய ரிஷிகள் காட்டில் 
எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் 
பார்க்க ஆவலுடன் சென்றோம்.
நாங்கள் தங்கியிருந்த லாட்ஜின் பெயர் 
Sandoval Lake Lodge - 
பெயரில் இருக்கிறபடி Sandoval 
என்ற ஒரு பெரிய ஏரிக் கரையில் 
இருக்கிறது.
அநேகமாக எல்லாப் பயண விடுதிகளும் 
இந்த ஏரிக் கரையில்தான் இருக்கின்றன.
நாகரிகத்திலிருந்து தூர விலகி 
நடுக் காட்டில் இருக்கும் சுவையான 
அனுபவத்தைக் கொடுப்பதற்காக 
இந்த ஏற்பாடு. பயணிகளுக்குத் 
தேவையான எல்லாப் பொருள்களும் 
homeland இலிருந்துதான் 
கொண்டுவர வேண்டும். 
குறிப்பிட்ட நேரத்தில் வரும் 
மின்சாரத்தைத் தவிர மற்ற எந்த 
வசதியிலும் குறைவில்லை. 
இரவுகள்,3 நாட்கள் 
போனதே தெரியவில்லை. 
மழை தொடர்ந்து பெய்தாலும் 
செலவழித்த நேரத்தில் 
பெரும் பகுதி, வெளிப்புறத்தில்தான். 

அதற்குத்தானே வந்திருக்கிறோம்.
 
படகில் ஏறி, ஏரியைச் சுற்றிவருவது 

Trail Walk என்று அடர்த்தியான காட்டுப் 
பகுதியில் நடை, இரவில் 
அதே பாதையில் நடை - 
என்று ஜாலியான 
outdoor வாழ்க்கை.
என்ன பார்த்தோம்
என்ன தெரிந்துகொண்டோம்
நிறையவே
இதுவரை பார்த்திராத, கேட்டிராத 
பல்லுயிரியம். (பயப்படாதீர்கள் - 
Bio-diversity என்பதற்கு 
தமிழ் மொழிபெயர்ப்பு) - 
அதாவது விலங்கினங்கள்
தாவரங்கள்பறவைகள் பற்றி 
பார்த்துத் தெரிந்துகொண்டோம்.
இவ்வளவு வித்தியாசமான 
Bio-diversityஐத் தன்னுள் 
அடக்கி வைத்திருக்கும் இந்த 
அமேசான் மழைக்காடுகளைப் 
பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?

முதலில் அமேசான் ஆற்றைப் பற்றி:
அமேசான் ஆறு, உலகத்திலேயே 
பெரிய river system. 
இது பெரு நாட்டில் உற்பத்தியாகி 
பிரேசில் நாட்டில் 
அட்லாண்டிக் சமுத்திரத்தில் 
சேர்கிறது. 
இது உலகில் உள்ள 2 

நீளமான ஆறுகளில் ஒன்று. 
மற்றது நைல் நதி. 
ஆயிரத்துக்கு அதிகமான உபநதிகள். 
சில உபநதிகள் (17) ஆயிரம் 
கிலோமீட்டர் நீளமானவை.
இந்த நதி நிமிடத்திற்கு 
3.5 மில்லியன் காலன் 
தண்ணீரை அட்லாண்டிக் 
கடலில் சேர்க்கிறது.
இப்பொழுது, மழைக்காடுகளைப் பற்றி — 
இந்த நதி போகும் பாதை, 
காட்டுப் பகுதி வழியாக 
8 நாடுகளின் வழியாகச் செல்கிறது. 
அமேசான் காடுகள் மிகவும் பெரியவை. 
இந்தக் காடுகளை tropical rain forests - 
வெப்ப மண்டல மழைக்காடுகள் 
என்று அழைக்கிறார்கள். 
அதிகமான வெப்பத்தையும் 
மழையையும் கொண்டுள்ளவை 
மழைக்காடுகள் ஆகும்.

இந்த மழைக்காடுகளின் அடையாளங்கள் — 
உயரமான மரங்கள்
வெப்பமான வானிலை
நிறைய மழை - 
ஒரு நாளைக்கு ஒரு 
முறையாவது மழை பெய்யும். 
இந்தக் காடுகள் பொதுவாக 
Tropic of Cancerக்கும் (கடக ரேகை) 
Tropic of Capricorn (மகர ரேகை)க்கும் 
நடுவில் உள்ள பகுதி. 
மரங்கள் அடர்த்தியாகவும் 
உயரமாகவும் வளர்ந்து ஒரு canopy 
(குடை) மாதிரி இருக்கும்.
உலகத்தில் உயிரினங்களில் 
மூன்றில் ஒரு பகுதியை 
அமேசான் மழைக்காடுகள் 
தன்னகத்தே கொண்டிருக்கின்றன.
பெரு நாட்டில் இருக்கும் அன்டேஸ் 
மலைத் தொடரின் கிழக்கே 
இந்தக் காடு தொடங்குகிறது. 
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் நிறைந்தது. 
சுமார் 2000 பறவையினங்கள்
பாலூட்டிகள் வசிக்கின்றன. 
உலகில் 5இல் 1 பகுதி பறவைகள் 
இங்கு வாழ்கின்றன. 
அனகோண்டா, ஜாகுவார்
கேமன் (முதலை வகை) 
என்று சில அரிய விலங்குகள் 
இந்தக் காடுகளில் வசிக்கின்றன.
பெருமளவு மருத்துவ குணம் கொண்ட 
தாவர இனங்கள் இருப்பதால் உலகின் 
மிகப் பெரிய மருத்துவச் சாலையாக 
இந்தக் காடுகளைக் காண்கிறார்கள்.
இந்த அழகான சூழலைக்கூட 
(environment) ஆறறிவு படைத்த 
மனிதன் விட்டு வைக்கவில்லை. 
Deforestation - 
இஷ்டத்திற்கு மரங்களை வெட்டுவது
ஒரு பெரிய கள்ளக் கும்பலின் 
வியாபரம். 
அரசாங்கங்கள் கடுமையான 
சட்டங்கள் இயற்றி 
ஒரு கட்டுப்பாட்டுக்குள் 
கொண்டுவந்தாலும் 
இந்த அச்சுறுத்தல் தொடர்ந்து 
இருக்கிறது.
இந்த அளவு bio-diversity 
இருக்கும் காடுகளில் 
2 நாள்களில் என்ன பார்த்தோம்
என்ன தெரிந்துகொண்டோம் என்பதை 
உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் 
ரொம்ப மகிழ்ச்சி.
படகில் ஏரிக்கரையைச் சுற்றி 
வந்தபோது முதலில்  பார்க்காதது - 
அனக்கொண்டா
ஜாகுவார் (புலி வகை). 
நம்மைப் பார்க்க அவற்றுக்குக் 
கொடுத்துவைக்கவில்லை.
அதிசயமானவற்றில் பார்த்தவை
ஆட்டரும் (Otters), 
Caiman (கேமான்) என்ற முதலை வகையும்.ஆட்டர் - ஒரு நீர் வாழும் பாலூட்டி. 
60 / 86 நாட்களில் குட்டிகள் பிறக்குமாம். 
குகையிலிருந்து குட்டிகள் ஒரு மாதத்தில் 
வெளிவருமாம். 
2 மாதத்தில் நீந்த முடியுமாம். 
1 வருடம் வரை 
குடும்பத்தோடு வசித்துவிட்டு
பிறகு தனிக் காட்டு ராஜ்யம். 
16 ஆண்டுகள் வாழுமாம். 
மீன்கள்தான் உணவு.


கேமன் (Caiman) - 

இது ஒரு முதலை வர்க்கத்தைச் 
சேர்ந்தது: கைடு சொன்னார்.


ஆள் வளர்ந்த அளவுக்கு 
மூளை வளர்ச்சி அவ்வளவாகக் 

கிடையாதாம். அதைக் கேட்ட 
நாங்கள் எல்லாம் ஒரே குரலில் 
"எங்களுக்குத் தெரியுமே 
முதலைக்கு மூளை கிடையாது" 
என்று "குரங்கு-முதலை" கதையை 
சொல்லி கைடைத் திகைக்க வைத்தோம்.
நிறைய குரங்குகளைப் பார்த்தோம். 
spider monkey என்பது ஒரு விசேஷமான 
குரங்காம்.பறவை இனங்கள் நிறையவே இருந்தன. 
எங்களில் யாரும் bird watcher 
ஆக இல்லாததால்
கைடு சொன்னதைப் 
பார்த்தோம். 
விதவிதமான வண்ணங்களில் 
macaws என்ற கிளி வகைகள் 
பார்ப்பதற்கு அழகாக இருந்தன. 

கைடு நிறைய பெயர்கள் சொன்னார். 
பார்த்த பறவைகள் எல்லாம் 
நன்றாகவே இருந்தன. 
3 மணி நேரப் படகு சவாரி 
ரொம்ப சுவாரசியமாக இருந்தது. 
bird watchersகளுக்கு 
இது ஒரு சொர்க்கம்.

Trail Walkஇல் 
நிறையவே தெரிந்துகொண்டோம்.
Symbolic Mutualism 
என்று கேள்விபட்டிருக்கிறீர்களா
அதாவது, பரஸ்பர உதவி - 
ஒருத்தருக்கு ஒருத்தர் 
உதவிசெய்துகொள்வது.
இந்தக் காடுகளில் ஒரு அதிசயமான 
உறவை பார்த்தோம். 
உறவு யாருக்கும் யாருக்கும்
அதிசயம், மரத்திற்கும் 
எறும்பு வகைகளுக்கும்.
ஒரு மரம் எறும்புக்குப் பாதுகாப்பும் 
உணவும் தருகிறது. 
பதிலுக்கு எறும்பு 
அந்த மரத்தைப் பாதுகாக்கிறது.

Bull Horn Acacia என்ற மரமும் 

Acacia எறும்புகளும் 
இதற்கு உதாரணம். 
இந்த மரங்கள் நன்றாக 
வளர்ந்து எறும்புகளுக்கு 
நல்ல ஊட்டத்சத்துக்களையும் 
தங்க இடத்தையும் கொடுக்கிறது. 
பதிலுக்குத் தாவர உண்ணிகளிடமிருந்தும் 
தாவரங்களை உண்ணும் 
விலங்கினங்களிடமிருந்து 
எறும்புகள் பாதுகாக்கின்றன.
இவை மரத்தில் வசிக்கும் எறும்புகளின் 
வாடையைத் தெரிந்துகொண்டதும் 
மரத்தை நெருங்காது. 
அப்படித் தப்பித்தவறி 
சென்றால் சாரிசாரியாக 
எறும்புகள் வெளியே வந்து 
பயங்கரமாகக் கொட்டிவிடும். 
கைடு, உதாரணத்திற்கு ஒரு கத்தியால் 
ஒரு மரப்பட்டையைக் கிளறினார். 
வந்தது எறும்புக் கூட்டம். 
முந்திய காலத்தில் கைதிகளை 
இந்த மரங்களில் 
கட்டிவைத்துவிடுவார்களாம். 
எறும்பு கடித்துக் கைதி 
இறந்துவிடுவாராம். 
அதைப் பார்த்தவுடன் கொஞ்சம் 
நேரம் நம்முடைய எதிரிகள் 
ஞாபகம் வந்தது. 
(கேவலமான எண்ணம்
மன்னிக்கவும்
temptation யாரை விட்டது?)

Walking Tree—நடமாடும் மரத்தை 
பார்த்திருக்கிறீர்களா
நாங்கள் பார்த்தோமே!உண்மையில் மரம் நடக்கவில்லை. 

தோற்றம்தான். 
பழைய வேர்கள் அழிந்து 
புது வேர்கள் தோன்றும்போது 
அவைகள் சூரிய வெளிச்சத்தை 
நோக்கி வளர்க்கின்றன. 
2, 3 வருஷங்களில் அவை சற்றுத் தள்ளி 
வேறு இடத்தில் இருக்கின்றன.


Brazil Nuts


160 அடி உயரமான மரத்திலிருந்து 

கிடைக்கும் இதுதேங்காய் அளவிற்கு 
இருக்கிறது. 
ஜனவரி / பிப்ரவரி மாதத்தில் காய்க்கும் 
இந்தப் பழம் ஒரு base ball அளவு 
5 பவுண்டு இருக்கிறது. 

உடைத்தால் (உடைப்பது வெகு கஷ்டம்) 
உள்ளே ஆரஞ்சின் உள்ளே இருப்பதுபோல் 
10 முதல் 21 nuts அழகாக 
அடுக்காக இருக்கின்றன. 
Agoutis என்ற 
ஒரு பூதாகாரமான எலியால்தான் 
இதைப் பல்லால் உடைக்க முடியுமாம். ஒரு வருடத்தில் 250 பவுண்ட் nuts 

கிடைக்குமாம். 
இது காய்க்க ரொம்ப காலமாவதால்,
plantationக்கு உகந்தப் பொருளாக 
கருதப்படவில்லை. 
 காட்டு வாசிகள் இவற்றைச் சேகரித்து 
விற்கிறார்கள். 
இது புரதச்சத்து நிறைந்த nutsஆக 
இருப்பதால் நிறையவே டிமான்ட். 
இதனுடைய எண்ணெய் 
அழகுச் சாதனத் தயாரிப்பில் 
உபயோகப்படுத்தப்படுகிறது.

சின்கோனா மரம்
க்வினைன் தயாரிக்கும் மரத்தை 
இங்கு பார்த்தோம்.

கடைசியாக நகரவாசிகளுக்கு 
"Terror"ஆக இருக்கும் கரையான்கள் 
என்கிற termites.காட்டின் decomposers என்று 
இவற்றை அழைக்கிறார்கள். 
Dead wood, leaf litters - 
செத்த மரங்களும் அழுகிப்போன 
இலைத் தழைகளும்தான் 
இவற்றுக்கு ஆகாரம். 
காடுகள் நாறாமல் இருக்க இவை 
செய்யும் சேவை மகத்தானது. 
wood waste எங்கிருந்தாலும் 
அவற்றைச் சேகரித்து 
தங்கள் கூடுகளுக்கு எடுத்துச் 
செல்கின்றன. 
ஏதாவது காரணத்திற்காக 
மரத்தை விட்டு 
கறையான்கள் விலக நேர்ந்தால் 
மரங்களின் வேர்களை 
பறவைகள், தவளைகள் 
மற்றும் விலங்கினங்கள் சாப்பிட்டு 
மரத்தின் அழிவைத் துரிதப்படுத்துகின்றன. 
எவ்வளவு தூரத்தில் மர வாசனை 
வந்தாலும் இவற்றுக்கு மோப்பம் 
பிடிக்கும் திறமையை 
ஆண்டவன் கொடுத்திருக்கிறான். 
ஆனால் அதற்கு எது நல்ல மரம் 
எது dead wood என்று பிரிக்கும் 
திறனைக் கொடுக்கவில்லை. 
அதனால்தான் நம்முடைய 
அழகான மர அலமாரிகளை 
விட்டுவைப்பதில்லை.
இனிமேல் கரையானைப் பார்த்தால், 
"தயவுசெய்து காட்டிற்கு 
போய் உங்கள் சேவையைத் 
தொடருங்கள்
எங்களை வாழவிடுங்கள்" 
என்று வேண்டிக்கொள்ளுங்கள்.
அதை ஒழிக்க முயற்சி 
செய்யாமல் இருப்பதற்கு 
நான் பொறுப்பல்ல.

இப்படியாக இந்த trail walkஇல் 
நிறைய விஷயங்களைத் 
தெரிந்துகொண்டோம்.

கடைசி நாள் இரவு
வேறு ஒரு நடைபாதையில் 
நடந்து சென்றோம். 
கொஞ்ச தூரத்திலேயே 
சிலந்திகளைப் பார்த்தோம். 
அனக்கொண்டாவின் குட்டி 
cousinஆன பாம்பு 
எங்களைப் பயமுறுத்தாமல் 
வரவேற்றது. 
பார்த்தது போதும் என்ற திருப்தியுடன் 
லாட்ஜுக்குத் திரும்பி,  
சாப்பிட்டுவிட்டு நன்றாக 
அமேசான் காட்டில் தூங்கினோம்.

மறுநாள் - காலையில் எழுந்து மறுபடி 
வந்த வழியே குஸ்கோக்குப் பயணம். 
திருஷ்டிப் பரிகாரம் மாதிரி ஒரே மழை. 
3 கிலோ மீட்டர் நடை. 
ஒரு nightmare ஆகிவிட்டது. 
எப்படியோ கஷ்டப்பட்டு  


ப்யூர்டோ மாலடோனாடாக்கு 

(Puerto Maldonado) 
வந்து சேர்ந்தோம்.
வழக்கம் போல, குஸ்கோவுக்குச் 
செல்லும் விமானம் 
3 மணி நேரம் லேட். ஒரு வழியாக
குஸ்கோ வரும்போது 
மணி 5 ஆகிவிட்டது. 
குஸ்கோவைச் சுற்றிக் 
காண்பிப்பதாக இருந்த 
guided tour கான்ஸல் ஆகிவிட்டது. 
ஓசிக்கு, ஒரு நவீன ஹோட்டலில் 
சாப்பாடு கொடுத்தார்கள். 
அங்கு நிறைய 
வெளிநாட்டினர்கள் வந்திருந்தனர். 
எங்களைப் பார்த்தவுடன் 
எங்கள் மேஜையில் ஒரு இந்தியக் 
கொடியை வைத்தார்கள். 
(எங்கள் மூஞ்சியில் அப்படி 
"இந்தியன்" என்று எழுதி 
ஒட்டியிருக்கிறது போல் இருக்கிறது)  
ஒரு வித்தியாசம் மூவர்ணம் இருந்தது. 
ஆனால் அசோக சக்கரம் 
மிஸ்ஸிங். ஆர்வத்திற்கு நன்றி.

ஆக, எங்கள் அமேசான் மழைக்காடுகள் 
விஜயம் சுபமாக முடிந்தது. 
ஒரே வார்த்தையில் சொல்ல
வேண்டுமானால் fantastic. 
நாங்கள் அனுபவித்த இந்தச் சுகமான 
அனுபவத்தை முழுவதுமாக 
உங்களிடம் பகிர்ந்துகொள்ள 
முடியவில்லை. 
அதற்கு என் எழுத்துத் திறமையின் 
லெவல் சுமார். 
இவ்வளவாவது படங்களுடன் 
உங்களிடம் பகிர்ந்துகொள்ள 
முடிந்தது பற்றி மகிழ்ச்சி. அடுத்தது, ஆவலுடன் எதிர்பார்க்கும் 
மாச்சுபிச்சு விஜயம்.

...கிளறல் தொடரும்1 comment:

Ramakrishnan Seetharaman said...

சார் உண்மையில் இது ஒரு சாகசப் பயணம்தான். பஞ்சவர்ண கிளிகள் மிகவும் அருமை. என்னால் கனவிலும் பார்க்க முடியாத இடங்களை உங்கள் மூலம் பார்த்து தெரிந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. நடமாடும் மரம் பார்க்கவே அதிசயசமாக இருக்கிறது. அவ்வளவு பயங்கரமான சேற்றில் எப்படி உங்களால் நடக்க முடிந்தது? இயற்கை காட்சிகள் நிறைந்த இந்த மாதிரியான இடங்களைப் பார்ப்பது உண்மையில் இறைவன் கொடுத்த வரம்தான்.


Asha