Saturday, February 02, 2013

பெரு நாட்டில் நவராத்திரி - பகுதி 4 மாச்சு - பிச்சு














மாச்சு-பிச்சுவைப்பற்றித் 
தமிழர்களின் பொது அறிவு 
ஆழத்தைத் தீர்மானிப்பது   
எ.மு., எ.பி. என்ற இரண்டு 
காலகட்டங்கள். 
கி.மு. (கிறிஸ்துவுக்கு முன்)
கி.பி. (கிறிஸ்துவுக்குப் பின்) 
என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இதென்ன எ.மு., எ.பி?
எ.மு. என்றால், எந்திரன் படம் 
வருவதற்கு முன்
எ.பி. என்றால் எந்திரன் 
படத்திற்குப் பின். 
திரைக்கு வந்து சில மணி 
நேரங்களிலேயே பரபரப்பாகப் 
பேசப்பட்ட மெகா ஹிட் திரைப்படம்எந்திரன். 
இந்தப் படம் வெளிவருவதற்கு 
முன் மாச்சு-பிச்சுவைப் பற்றித் 
தெரிந்த தமிழர்கள்
ஒரு negligible minority 
ஆகத்தான் இருந்திருப்பார்கள்.

எந்திரன் படம் வந்தது. 
அதில் வரும் "கிளிமஞ்சாரோ" 
என்ற பாடல் ஒரு super hitஆக 
ஆயிற்று. 
அந்தப் பாடல் எடுக்கப்பட்ட 
locationஐப் பற்றிப் பேசாத
எழுதாத மீடியாக்களே இல்லை.
அந்த locationதான் 
மாச்சு-பிச்சு என்று தெரிந்தவுடன்
அடித்தது யோகம் 
மாச்சு-பிச்சுவுக்கு. 
எங்கேயோ,தென் அமெரிக்காவில் தூங்கிக்கொண்டிருந்த 
மாச்சு-பிச்சுவுக்குத் 
தமிழ் சினிமா ரசிகர்களிடம்
குறிப்பாக ரஜினி ரசிகர்களிடம்
பயங்கர வரவேற்புக் கிடைக்க 
ஆரம்பித்தது.
"நான் தமிழ்ப் படமெல்லாம் 
பார்ப்பதில்லை" என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் 
தன்மானத் தமிழர்களுக்காக 
இதோ, அந்தப் பாட்டு 
ஒளி, ஒலி வடிவில்.
இப்பொழுது
மாச்சு-பிச்சுவைப் பற்றிக் 
கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?

மாச்சு பிச்சு (இன்கா பாஷையான, Quechuaவில் Machu Pikchu என்று அழைக்கிறார்கள்) 
தென்அமெரிக்காவில் உள்ள 
பெரு நாட்டில் இருக்கும் 
ஒரு புராதானமான இன்கா 
கலாச்சார மையம். 
சுமார் 8000 அடி உயரத்தில் 
உருபாம்பா பள்ளத்தாக்கிற்கு 
மேலே இருக்கிறது. 
குஸ்கோ நகரிலிருந்து 
50 மைல் தூரத்திலிருக்கிறது. 
இதன் வழியாக உருபாம்பா நதி 
ஓடுகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி 
பச்சசூடி (Pachacuti) என்ற 
இன்கா சக்ரவர்த்தியால் 
1438, 1472 ஆண்டுகளில் கட்டப்பட்ட 
ஒரு Estate இது. 
இன்கா உலகத்திற்கே 
இது ஒரு அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது.

ஸ்பானியர்கள் ஆக்கிரமிப்புக்குப் 
பிறகு இதைப் பற்றி யாருக்கும் தெரியாமலேயே இருந்துவந்திருக்கிறது. 
1911ஆம் ஆண்டு Hiram Buighan 
என்ற ஒரு அமெரிக்க சரித்திர ஆசிரியர் இதைக் கண்டுபிடித்தார். 
இப்பொழுது இது ஒரு கலாச்சார 
இடமாக அறிவிக்கப்பட்டு நிறைய பயணிகளை வரவேற்கும் 
மையமாக ஆகியிருக்கிறது.

இந்த மாச்சு-பிச்சு 2007இல் 
ஒரு Internet Pollஇல் உலக 7 அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இப்பேர்ப்பட்டப் பிரசித்தமான, புராதனமான இடத்தில்தான் 
எங்கள் பயணத்தின் கடைசி 
நாட்களைக் கழித்தோம்.
பயணக் கட்டுரையைத் 
தொடருவோமா?

அமேசான் மழைக் காடுகளிலிருந்து திரும்பிய மறுநாள் குஷ்கோவிலிருந்து காரில் 3 மணி நேரம் பயணம் செய்து "புனிதமான பள்ளத்தாக்கு" 
(The Sacred Valley) என்று 
அழைக்கப்படும் இடத்திற்குச் 
சென்றோம். செல்லும் முன்
குஷ்கோ நகரில் இருக்கும் 
ஒரு பெரிய மியூஸியத்தைப் 
பார்த்தோம்.








இன்கா நாகரீகத்தைப் பற்றி 

எல்லா விவரங்களையும் அழகாகச் சித்தரித்து வைத்திருக்கிறார்கள். 
இன்கா symbolsகளையும் 
இன்கா புராணக் கதைகளையும் 
கேட்டதில் இந்தியக் கலாச்சாரத்திற்கும் இன்கா கலாச்சாரத்திற்கும் இருக்கும் நிறைய ஒற்றுமைகள் புலப்பட்டன. இன்காவாசிகளின் முக்கியமான கடவுள்இன்டி - 
நம்முடைய சூரியன்தான்.























பூமி மாதாவை பாஸ்ஸிமா என்று

அழைக்கிறார்கள். 
மனிதன் 3 உலகங்களைக் கடந்து உயர்நிலை அடைகிறான். 
3 உலகங்களும் 3அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன.
பாதாள உலகம்-
நம்முடைய பூத உடல்.
அதிபதி-பாம்பு:
பூலோகம்-நம்முடைய மனம்,
அதிபதி-பூமா-புலி வகை:
கடைசியாக மேல் உலகம் - 
இதுதான் highest spirit. 
இதன் அதிபதி - condor என்று அழைக்கப்படும் ஒரு பறவை. 
எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? கருடன், புலி, பாம்பு, சூரியன்
பூமாதேவி. 
இவர்களுடைய பிரசித்தமான 
அடையாளம் - symbol - chakana 
(Inca Cross). 
அதன் படங்கள் இதோ:





















இது என் மனைவியின்  interpretation








இன்கா நாகரீகத்தை நினைத்துக்

கொண்டு Ollantaytambo என்ற இடத்திற்குப் பயணம் செய்தோம்.

போகிற வழியில் நிறைய 
சின்னச்சின்ன ஊர்கள்.

முதலில் பார்த்தது Pisac 
என்ற ஊர். 
நம்மூர் சந்தை மாதிரி நிறைய 
கடைகள். கைத்தொழில் பாண்டங்கள் நிறையவே வைத்திருக்கிறார்கள். 
பேரம் பேசலாம். 
நச்சரிப்புக் கிடையாது.
















அதே ஊரில் அருமையான 

வெஜிடேரியன் buffet சாப்பாடு 
கிடைத்தது.

Ollantaytamboவில் 
இன்கா கோட்டை இருக்கிறது. 
இது ஒரு காலத்தில் இன்காவினருக்குப் புனிதமானதும் ராணுவ முக்கியம் 
வாய்ந்ததாகவும் இருந்திருக்கிறது. 
இங்கே முடிக்கப்படாத 
சூரியனார் கோவில் இருக்கிறது. அடுக்கடுக்காகப் படிகள் வைத்து 
ஒரு அழகான கோட்டை. 
ஸ்பானியர்கள் முதன்முதலில் இந்தக் கோட்டையைப் பார்த்தவுடன் அதிசயப்பட்டார்களாம். 
இங்கே இன்கா நினைவுகளை 
இன்றும் நன்றாகப் பாதுகாக்கிறார்கள்.




















இன்கா Trailம் மாச்சு-பிச்சுவுக்குப் 

போகும் ரயிலும் இங்கிருந்துதான் 
ஆரம்பம். மறுபடி, மறுநாள் இதே இடத்திற்கு வந்து மாச்சு-பிச்சுக்குப் 
போகும் ரயிலைப் பிடித்தோம்.

ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். 
மாச்சு-பிச்சு 8000 அடி உயரத்தில் இருக்கிறது என்று. 
நெஞ்சில் தைரியமும் 
உடலில் வலுவும் இருக்கிறவர்கள் 
5 நாட்கள் இன்கா trail வழியாக 
மாச்சு-பிச்சுவை அடையலாம். 











முடியாதவர்கள், ஒரு அருமையான 

90 நிமிட ரயில் பிரயாணத்தை மேற்கொள்ளலாம். Ollantaytamboவிலிருந்து 
ரயில் பயணம் ஊட்டி மாதிரி - 
Narrow gauge 
2 வரிசைகள் - 
ஒவ்வொரு வரிசையிலும் 
2 பேர் எதிரும் புதிருமாக. 
ருசியான காப்பி இலவசமாகக் கொடுத்தார்கள்.



















ரயில் வளைந்துவளைந்து 

நதிக்கரை ஓரமாக மேலேமேலே 
போகும் காட்சி ரம்யமாக இருந்தது. 
வழி நெடுகஇயற்கைக் காட்சிகள் 
பார்க்க ஆனந்தமாக இருந்தது. 
ரயில் சேர்ந்த இடம் 
Aguas Calientes என்ற 
வெப்ப ஊற்றுகள் உள்ள ஊர் 
(Hot Springs).

இங்கிருந்து உடனே பஸ் 
சவாரிசெய்து மாச்சு-பிச்சுவுக்குச் சென்றோம். 
அடுத்து 5 மணி நேரம்
மாச்சு-பிச்சுவில்தான் வாசம். 
கைடு ஒவ்வொரு இடமாக 
அழைத்துசென்று ஒவ்வொரு இடத்தின் பெருமையையும் விளக்கிச் சொன்னார். 










சில இடங்களில் ஏறுவது சிரமமாக இருந்தது.
மாச்சு-பிச்சு மலைக்கும் 
ஹயானா பிச்சு மலைக்கும் நடுவில் இருக்கிறது மாச்சு-பிச்சு 
Ruins. 













இங்கே 200 habitation structures கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. 

இங்கே ஒரு பெரிய நகரம் 
இருந்ததற்கான தடயங்கள் 
நிறையவே இருக்கின்றன.











இங்கேயும் முடிவுபெறாத 

சூரியனார் கோவில் இருக்கிறது. 





இது ஒரு காலத்தில் வானிலை 

ஆய்வு மையமாக இருந்திருக்கலாம் 
என்று ஆராய்ச்சியாளர்கள் 
கருதுகிறார்கள். 
இந்தக் கோவிலின் கோபுரத்தின் 
நடுவில் ஒரு பாறை இருக்கிறது. 
June Solstice (June 21) அன்று 
சூரிய வெளிச்சம் இந்தப் பாறையின் 
மேல் விழுகிறது. அதைப் பார்க்க நிறைய பேர் வருவார்களாம். 
(எனக்கு ஞாபகம் வந்தது காஞ்சிபுரம் ஏகாம்பரசுவாமி கோவிலில் 
வருஷத்திற்கு ஒரு நாள் சூரிய 
வெளிச்சம் சுவாமியின் மேல் விழும் சம்பவம்). 








இதன் பக்கத்தில் பூசாரிகளுக்கான 
வீடுகள் இருக்கின்றன.

இதன் பக்கத்தில் அரசருக்கான 
மாளிகை இருக்கிறது. 
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகப் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. 
தியான அறை ஒன்று இருக்கிறது. உட்கார்ந்து "ஓம்" என்று சொன்னால் எதிரொலி நன்றாகவே கேட்கிறது. 



இன்னொரு இடத்தில் 

condor பறவைக்கு ஒரு கோவில்.

















இன்னும் பல விதமான 

கட்டடங்களின் தொகுப்பைப் 
பார்த்தோம்.












கைடு சொல்லிக்கொண்டே 

வந்தார். அதிசயமாகவும் 
ஆச்சரியமாகவும் இருந்தது. 
இன்னொரு ஆச்சரியமான விஷயம். 
ஒரு நாளைக்கு 400 பேருக்குத்தான் 
அனுமதி அளிக்கிறார்கள். அவர்களும் ஒவ்வொரு தடவை உள்ளே 
போகும்போதும் அடையாளச் 
சீட்டைக் காட்டித்தான் 
உள்ளே போக முடியும். 
Black market, special தரிசனம், இடைச்செருகல் என்று 
ஒன்றும் கிடையாது. 

நாங்கள் பார்த்ததை எப்படி 
வர்ணிப்பது என்பது தெரியவில்லை. 
இந்தப் படங்கள் ஓரளவுக்கு இந்தச் சின்னங்களின் காம்பீரியத்தைப் புரிய வைக்கும் என்று நினைக்கிறேன்.

அன்றிரவு, மாச்சு-பிச்சுவில் உள்ள ஹோட்டலில் தங்கினோம். 
மறுநாள், ஹியானா பிச்சு 
மலைக்குப் போவதாகத் திட்டம். 
அந்த உயரத்தைச் சமாளிக்க முடியும் 
என்று தோன்றாததால் ஹோட்டலிலேயே தங்கிவிட்டோம். 
மகன், மருமகள், பேரன், பேத்தி 
ஜாலியாக mountain trailக்குச் 
சென்று மகிழ்ச்சியோடு 
திரும்பிவந்தார்கள். 















மறுபடி, ரயில் பிரயாணம் செய்து 

குஸ்கோ நகருக்கு வந்து சேர்ந்தோம். 
குஸ்கோ நகரில் புது வருடம் கொண்டாடியது பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.

திட்டப்படி ஜனவரி 1ஆம் தேதி 
லீமா வந்து அன்றிரவே 
எங்கள் ஊரான Morris Plains, 
NJக்கு திரும்பினோம்.

9 இரவுகள், 10 நாட்கள் போனதே தெரியவில்லை. 
மறக்க முடியாத பயணம். 
பல நண்பர்கள், என் 
கட்டுரைகளைப் படித்துவிட்டு 
என்னை ஒரு அதிர்ஷ்டசாலி என்று பாராட்டியிருக்கிறார்கள். 
உண்மையிலேயே, 
நானும் என் மனைவியும் கொடுத்துவைத்தவர்கள்தான்.

எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருக்கிறோம். 
இந்தப் பயணத்தில் கிடைத்த 
அனுபவம் ஒரு புதுமையானது
இனிமையானது. 
உங்களுடன் என் பயண 
அனுபவங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டதில் 
மிக்க மகிழ்ச்சி. 
உங்களில் பல பேர் 
எத்தனையோ நாடுகளுக்குப் 
பயணம் செய்ய 
முடிவு எடுத்திருப்பீர்கள்
முடிவு எடுப்பீர்கள். 
அப்படிச் செய்யும்போது 
பெரு நாட்டையும் அந்த அமேசான் காடுகளையும் மறக்காதீர்கள்.
அதிர்ஷ்டம் செய்தவர்களானால் 
அது கட்டாயம் நடக்கும்.

இண்டி கடவுள் துணை
புரிவார்.










... கிளறல் தொடரும்.

1 comment:

Ram said...

You are all indeed very lucky. I am proud my friends went there. This is perhaps the best travel-decision you have made. The photographs enhance the experience of reading your description.