Friday, February 08, 2013

மகிழ்ச்சியாக இருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளும் எளிய ரகசியங்கள்



நம்முடைய வாழ்க்கையில் சில பேர் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே 
இருப்பதைப் பார்த்திருக்கிறோம்
பார்த்துக்கொண்டிருக்கிறோம். 
இவர்களைப் பார்த்தவுடன் 
நமக்கு வரும் முதல் ரியாக்ஷன் 
(Reaction) ஆச்சரியம், பொறாமை, எரிச்சல்... 
நம் மனதில் எழும் தலையாய கேள்வி: 
"நம்மைச் சுற்றி இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது இவர்களால் மட்டும் 
எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? ஏதாவது, கடவுளிடமிருந்து வரம் 
வாங்கி வந்திருக்கிறார்களா
இவர்கள் மகிழ்ச்சியின் ரகசியம் 
என்ன?"
இதோ, ஒரு ஆசிரியர் சொல்கிறார்: 
"இது ஒன்றும் பிரம்ம ரகசியம் 
இல்லை. ரொம்ப சிம்பிளான
எளிய ரகசியங்கள்தான்" என்று.
யார் அந்த ஆசிரியர்?
அவர் பெயர் - David Niven Ph.D. 
இவர் அமெரிக்காவில் உள்ள 
Florida Atlantic Universityஇல் 
பாடம் சொல்லிக்கொடுக்கும் 
Professor. 
இவர் ஒரு சமூக ஆராய்ச்சியாளர். இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிரசித்தம் பெற்ற அறிவியல் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. 
நிறைய பரிசுகளை வாங்கியிருக்கிறார்.
இவர் எழுதிய புத்தகம்தான்
The 100 Simple Secrets of 
Happy People 
(What Scientists have learned 
and How You Can Use It) 
(Harper Collins)
100 எளிய ரகசியங்களை 
நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் என்னுள் எழுந்த 
Reaction இதோ:
இதுவும் ஒரு "How to..." 
புத்தகமாகத்தான் இருக்கும். 
இந்த மாதிரி எத்தனை சுய தூண்டுதல்" புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. 
(Self motivation) 
ஏன், ஆண்டாண்டு  காலமாக 
எத்தனையோ மகான்கள் 
வாழ்க்கையை எப்படி வாழ்ந்தால் 
மகிழ்ச்சி உண்டாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். 
ஒளவையார் என்ன
திருவள்ளுவர் என்ன
இவர் என்ன புதிதாகச் 
சொல்லப்போகிறார் என்றுதான் தோன்றியது.
இவ்வளவு பெரிய மனிதர்களின் 
கூற்றை நாம் ஏன் பின்பற்றவில்லை? இவர்கள் சொன்னபடி நாம் ஏன் 
நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை
இவர்களின் கூற்றில் அவநம்பிக்கையா? அலட்சியமா?
இது விஞ்ஞான உலகம். 
எதையும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டாலொழிய நம்மில் 
பல பேர் ஒத்துக்கொள்வதில்லை. மகான்களின் அறிவுரைகளையும் அவர்களின் சொந்த அனுபவங்களாகப் பார்த்தோமே தவிர அவற்றை நம்பிச் செயல்படவில்லை.
ஆனால் சமீப காலமாக விஞ்ஞானிகளும் படித்த மேதைகளும்
 "மனிதன் எப்படி, எதனால் 
மகிழ்ச்சியை அடைகிறான் 
என்பதைப் பற்றி நிறையவே 
ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார்கள். பண்ணிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் பெரும்பாலும் அவர்கள் துறை சம்பந்தப்பட்ட ஆய்வுப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. 
இந்த முடிவுகள் பாமர மக்களுக்குப் 
போய்ச் சேரவில்லை.
இப்பொழுது முதல் தடவையாக 
David Niven ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்.
ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளை அலசி, புரியாத 
கஷ்டமான விஞ்ஞானப் பாஷைச் 
சொற்களை நீக்கி, ஒரு வடிகட்டின, புரியும்படியான 100 துணுக்குகளை அறிவுரையாகத் தந்திருக்கிறார்.
இந்த நூறும் எளிதானவை. 
எல்லோராலும் பின்பற்றக் கூடியவை. ஒவ்வொரு வழியும் (அவர் அதை
‘secret’ ரகசியம் என்கிறார்) 
ஒரு உதாரணத்தோடும் அதன் பின்னால் செயல்படும் விஞ்ஞான ஆராய்ச்சியோடும் விளக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆசிரியர் தன்னுடைய 
பட்டமளிப்பு விழாவன்று உரையாற்றிய 
ஒரு மேதையிடம் சென்று 
"சார், உங்கள் பேச்சு என்னை ஒரு 
better personஆக செய்துவிட்டது. 
நன்றி" என்றாராம்.
அதற்கு அந்த மேதை சொன்னராம் 
"நன்றி, டேவிட். நான் உன்னை 
better personஆக ஆக்கிவிடவில்லை. 
நான் செய்யக் கூடியதெல்லாம் 
ஒன்றைச் சுட்டிக்காட்டுவதுதான். 
நீ அதை பார்ப்பாய் என்பது என் நம்பிக்கை". 
(I didn't make you a better 
person. All I can do is point 
and hope you look)
நானும் அதையே தான் 
செய்யப்போகிறேன். 
இந்த நூறையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைதான். 
அது இயலாத காரியம். அதனால் உங்களுக்கு ஒரு கோடி காட்டுகிறேன். நிச்சயமாக நீங்கள் இதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுவீர்கள் 
என்று நம்புகிறேன். 
எனக்கு முக்கியம் என்று 
பட்டதை விளக்கத்தோடு 
சொல்ல முயற்சிக்கிறேன்.
படிப்பதை, யோசித்து
நம்பிச் செயல்படுங்கள். 
வாழ்த்துக்கள்!
ரகசியம் 1
உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. ஒரு அர்த்தம் இருக்கிறது. 
(Your life has purpose and meaning)
நீங்கள் இந்தப் பூமியில் ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்காகப் பிறக்கவில்லை. 
நீங்கள் தனி நபர் இல்லை. ஒவ்வொருவரிடமும் நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
இதோ ஒரு உதாரணம்.
பீட்டர் அமெரிக்காவில் ஒரு வக்கீல். அவருடைய நாய் டுக்கட். 
அதற்கு முதுகு எலும்பில் ஒரு கட்டி. 
அவர் ஊரில் மிருக வைத்திய சாலை இல்லை. அவர் அங்குள்ள குழந்தைகளுக்கு வைத்தியம் பண்ணும் ஒரு சர்ஜனைப் பார்த்தார். அந்த வைத்தியர் நாய்க்கு வைத்தியம் பண்ண சம்மதித்தார். 
பதிலுக்கு அவர் ஆஸ்பத்திரிக்கு 
நன்கொடை கேட்டார். 
அந்த ஆஸ்பத்திரியில் Jerry என்ற 
5 வயது பையனுக்கு முதுகெலும்பில் 
கட்டி. இந்த நன்கொடையில் 
Jerryக்கு ஆபரேஷன் நடந்து 
அவன் குணமானான். 
Jerry, பீட்டரையோ, டுக்கட்டையே பார்த்ததில்லை. டுக்கட்டின் வியாதியும் குணமானது.
Lepper 1996 ஆராய்ச்சிப்படி - 
வயதான அமெரிக்கர்களிடம் நடத்திய ஆராய்ச்சி - வாழ்க்கைக்கு ஒரு குறிகோள் இருந்தால்தான் மக்கள் சந்தோஷமாக இருக்க முடியும் என்று முடிவானது.
10இல் 7 பேர், குறிகோள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் நிம்மதியாகவே இல்லை. 
வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள் 
அவசியம்.
ரகசியம் 2
தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிடுங்கள் 
(Turn off the T.V.)
நம்முடைய வாழ்க்கையின் 
முக்கியமான நிகழ்ச்சிகளிலிருந்து 
நம்மைத் திசை திருப்பும் கருவி தொலைக்காட்சிப் பெட்டி.
நாம் சூப்பர் மார்க்கெட் கடைக்குச் செல்லும்போது ஒவ்வொரு வரிசையிலும் இருக்கிற பொருள்களை எல்லாம் வாங்குகிறோமா? எது தேவையோ 
அதை மாத்திரம்தானே வாங்குகிறோம். 
அது என்ன T.V. விஷயத்தில் மாத்திரம் 
ஒரு வேறு நோக்குடன் செயல்படுகிறோம்?
நிறைய T.V. பார்க்கிறவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி சம்பாஷணை செய்வது என்ற திறமையே இல்லாமல் போய்விடும் என்கிறார் 
ஒரு சைக்கலாஜிஸ்ட். 
இன்னொருவர் சொல்கிறார் 
"T.V. robs our time and never 
gives it back" 
தேவையான விஷயத்திற்கு மாத்திரம் 
T.Von செய்யுங்கள்.
இன்னொரு ஆராய்ச்சி (WV 1998) சொல்கிறது. அதிகமாக T.V. பார்ப்பவர்களுக்குத் தேவைக்கு 
அதிகமான சாமான்கள் வாங்கும் 
நிலை மூன்று மடங்காக இருக்குமாம். 
அதே சமயம் அவர்களுடைய திருப்தி, ஒவ்வொரு மணி நேரம் பார்க்கும்போது 
5 சதவீதமாகக் குறைகிறதாம்.
ரகசியம் 3
நட்பு பணத்தை வெல்லும் 
(Friendship beats money)
ஒரு நபர் சந்தோஷமாக இருக்கிறாரா 
என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால், அவருடைய bank balanceஐப் பற்றிக் கேட்காதீர்கள். அவர்களுடைய நண்பர்களைப் பற்றிக் கேளுங்கள்.
2 நபர்கள் - நல்ல நண்பர்கள். வியாபாரத்தில் கூட்டு சேர்ந்தார்கள். வியாபாரம் நசிந்துவிட்டது. 
ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்ல ஆரம்பித்தார்கள். நட்பு முறிந்தது. 
ஒரு வருஷம் பேசாமல் இருந்தார்கள். கடைசியில் ஒரு நாள் சந்தித்து 
மனம்விட்டு பேசினார்கள். 
ஒரே மனதாக, 2 பேரும் தாங்கள் 
பெரு நஷ்டம் அடைந்ததாகச் சொன்னார்கள். அவர்கள் சொன்னது
பண நஷ்டத்தை அல்ல
தங்களுடைய நட்பைப் பற்றி.
ஒருவர் சொன்னார் 
"பணம் ஒரு கை உறை. 
நட்பு, நம்முடைய கை மாதிரி. 
ஒன்று உபயோகமுள்ளது. 
மற்றது அத்தியாவசியமானது."
Murray & Peacock 1996 ஆராய்ச்சி சொல்கிறது 
"மக்களுடைய சந்தோஷ வாழ்க்கைக்கு நிறைய பணம் தேவையில்லை. முக்கியமானவை, நல்ல நண்பர்கள், நண்பர்களிடமும் குடும்பத்தாரோடும் 
நல்ல இணக்கம், சக ஊழியர்களிடம் 
நல்ல அணுகுமுறை. 
இவை 70 சதவீத சந்தோஷத்தைக் கொடுக்கும்.
ரகசியம் 4
உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள் (Believe in yourself)
நம்மால் முடியும்என்று நம்புங்கள். தன்னம்பிக்கை இல்லாதவர் எவரும் நன்றாகச் செயல்பட முடியாது.
Steve Blass ‘72இல் பெரிய 
Base ball விளையாட்டு வீரர். 
திடீரென்று அவருக்குத் தன் மேல் 
நம்பிக்கை போய்விட்டது. 
சம்பாதித்த புகழ் எல்லாம் போயிற்று. 
Myers and Diener 1995 சர்வே 
சொல்கிறது 
தன் மேல் திடமான நம்பிக்கை வைத்திருப்பவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் 30 சதவீதம் அதிகமாகிறது. 
இது எல்லா வயதினருக்கும் பொருந்தும். அப்படி நம்பிக்கை வைத்திருப்பவர்கள் சந்தோஷமாகவே இருப்பார்கள்.
ரகசியம் 5
Don't be overprotective - 
எதையும் பொத்திப்பொத்திப் பாதுகாக்காதீர்கள்.
நாம் நேசிக்கும் நபர்களைப் பற்றிக் கவலைப்படுவதில் தப்பு ஒன்றும் இல்லை. ஆனால், அவர்களைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டு
அவர்களை அவர்கள் வேலைகளைச் 
செய்ய முடியாத நிலைமையை உண்டாக்குவது தப்பானது. 
செய்யக் கூடாத ஒன்று.
"பொத்திபொத்தி வளர்ப்பது" 
இன்றைய உலகத்தில் 
விரும்பத் தகாதது.
ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைகளைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிராமல் அவரவர் வாழ்க்கையை அவர்கள் நடத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழந்தால் 
நிச்சயமாக மகிழ்ச்சியுடன் 
இருப்பீர்கள்.
Voydanoff and Donnelly 1998 
சர்வே 
ஆயிரக்கணக்கான பெற்றோர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் யாரெல்லாம் "Overprotective"ஆக 
செயல்படுகிறார்களோ அவர்கள் 
எதிர்மறை விளைவுகளைச் 
சந்திக்கிறார்கள். கவலைப்பட்டே 
அவர்கள் திருப்தியையும் 
சந்தோஷத்தையும் 
இழந்துவிடுகிறார்கள்.
ரகசியம் 6
பணத்தினால் சந்தோஷத்தை 
வாங்க முடியாது. 
(Money does not buy happiness)
பணத்தைத் தேடி நேரத்தைச் செலவழிக்கிறோம். பணத்திற்காகக் கவலைப்படுகிறோம். 
ஆனால் உண்மையான நிலை. 
பணம் படைத்தவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பது ஒரு தவறான எண்ணம்.
லாட்டரி சீட்டு வாங்குவது 
ஒரு சர்வதேசப் பழக்கம். திடீர் பணக்காரராக எல்லோருக்கும் ஆசை. ஆனால், லாட்டரியில் வெற்றி பெற்ற எவராவது சந்தோஷமாக இருக்கிறாரா?
சிகாகோ நகரில் ஒரு நபர் 13 மில்லியன் டாலர்கள் லாட்டரியில் ஜெயித்தார். 
6 மாதத்தில் பாதிப் பணம் கேட்டு 
மனைவி விவாகரத்துக் கோரினாள். மகிழ்ச்சியைப் பணத்தினால் 
வாங்க முடியுமானால் மூலைக்கு 
மூலை கடைகள் திறக்கப்பட்டிருக்கும். 

Hong and Giannakopoulos 1995 
சர்வே சொல்கிறது: 
வாழ்க்கைச் சந்தோஷத்திற்குத் 
தேவையான 20 விஷயங்களை 
வெவ்வேறு மனிதர்களிடம் காட்டி, அவைகளில் எவை சந்தோஷத்திற்கு அத்தியாவசியத் தேவை என்று 
கேட்டபோது 19 விஷயங்களைக் 
கட்டாயம் தேவை என்றார்கள். 
ஒரு விஷயம் முக்கியமில்லை என்றார்கள். அது financial status 
(பணத்தினால் வரும் உயர் நிலை)
இந்த ரகசியங்களுக்கு என்ன அர்த்தம்? நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
(What does it all mean? You decide)
உங்கள் எதிர்காலம் - உங்கள் கையில். உங்கள் எதிர்காலம் - நீங்கள் எடுக்கும் முடிவுகளில். நீங்கள் நினைக்கும் முக்கியத்துவங்களின் வரிசை 
(Priorities) உங்களுடைய தூரநோக்கு பார்வை. 
ஆண்டாண்டு காலமாக விடை 
கிடைக்காத கேள்விகள் பல. 
நாம் யார்? நாம் ஏன் இங்கே 
இருக்கிறோம்? நாம் என்ன செய்ய வேண்டும்
இதற்கெல்லாம் என்ன அர்த்தம்

இதற்கான விடைகள் 
வெளியே இல்லை. 
உங்களுக்குள்தான் இருக்கிறது.

உங்களுக்கு ஒரு வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. 
அதோடு உங்களுக்காகச் சந்தர்ப்பங்கள் 
கொடுக்கப்பட்டிருக்கின்றன. 
உங்களுடைய வாழ்க்கை 
வரைப்படத்தைப் போடுவது 
உங்கள் கையில்.

Su h, Diener, and Fujita 1996 
ஆராய்ச்சி சொல்கிறது.

100 பேரிடம் கடந்த 2 ஆண்டுகளில் அவர்கள் சந்தித்த நல்ல விஷயங்களையும் கெட்ட விஷயங்களையும் பற்றிப் 
பட்டியல் போட்டு அவர்கள் சந்தோஷம் எவற்றால் பாதிக்கப்பட்டன என்று 
கேள்வி கேட்கப்பட்டது. அதன் முடிவு: நல்லது’ ‘கெட்டதுஎன்ற எண்ணங்கள் சீக்கிரம் மறைந்துவிடுகிறது. 
ஆனால் அவர்களின் மகிழ்ச்சி 
இந்த நல்ல-கெட்டவிஷயங்களின் கூட்டலில் இல்லை. அந்த விஷயங்களிலிருந்து அவர்கள் தெரிந்துகொண்ட பாடங்களைப் பொறுத்தது.
நான் மேலே சொன்னது ஒரு சிறு சாம்பிள்தான். எல்லாவற்றையும் பற்றி சொல்ல முடியாததற்கு மன்னிக்கவும்.
                                                                
                                                          ...கிளறல் தொடரும்.

கொசுறு

இன்னும் சில ரகசியங்கள்
1. You don't have to win everytime
2. Your goals should be aligned 
with one another
3. Cultivate friendships
4. Accept yourself - unconditionally
5. Remember where you came from
6. Have realistic expectations
7. Be open to New Ideas
8. Share with others how important 
they are to you
9. Don't believe in yourself too much
10. Age is not to be feared
11. Don't be aggressive with your 
friends and family
12. Volunteer
13. Excercise
14. Laugh
15. Share
16. Satisfaction is relative
17. Eat some fruits everyday
18. Enjoy what you have
19. Be a peacemaker
20. Be flexible

No comments: