Friday, February 15, 2013

தத்துவ சாஸ்திரமும் விஞ்ஞானமும் மதமும் ஒன்றாகச் செயல்பட முடியாதா?



தத்துவம் (Philosophy) 
என்றால் என்ன?
விஞ்ஞானம் (Science), 
மதம்(Theology) - 
இவற்றிலிருந்து எப்படி 
மாறுபட்டிருக்கிறது?

இதோ ஒரு குட்டிக் கதை.

ஒரு சிறு ஊர். ஒரு வீட்டின் 
தாழ்வாரத்தில் மூன்று நபர்கள். 
தனித்தனி நாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். 
ஒருவர் விஞ்ஞானி (Scientist). இன்னொருவர் ஒரு தத்துவ மேதை (Philosopher). மூன்றாவது நபர் 
ஒரு பாதிரியார் (Priest).

30 அடி தூரத்தில் 
ஒரு கோழி பாதையைக் 
கடந்து சென்றுகொண்டிருந்தது. 
மூன்று பேரும் அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
விஞ்ஞானி தனக்கு தெரிந்த 
விஞ்ஞானத் திறமைகளையெல்லாம் நினைவுகூர்ந்து அந்தக் கோழியின் அசைவுகளை மனதில் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார். 
அவர் மூளை சுறுசுறுப்பாக 
வேலைசெய்து
Newton's laws of motion, 
inertia என்ற physics சம்பந்தமான விதிகளின்படி 
கோழியின் அசைவுகளை 
அலசினார். முடிவாக, வியர்வை 
கொட்ட திடீரென்று, "Eureka" - கண்டுபிடித்துவிட்டேன் 
என்று கத்தினார். 
இதற்கிடையில் கோழி பாதையைக் 
கடந்து மறுபுறம் சென்றுவிட்டது.
விஞ்ஞானி, மகிழ்ச்சி பொங்க 
"நான் கோழி எப்படிப் பாதையைக் 
கடந்தது என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்றார்.
தத்துவஞானி அலட்சியமாக
 "மதிப்பிற்குரிய மடையரே! 
இப்பொழுது பிரச்சினை "எப்படி" என்பதில்லை. 
எப்படி, கோழி பாதையைக் கடந்தது 
என்பது முக்கியமில்லை. 
கோழி, "ஏன்" பாதையைக் கடந்தது என்பதுதான் முக்கியம். 
இந்த உலகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளும் "ஏன்" என்பதின் விடைக்காகத்தான் காத்திருக்கின்றன" என்று சொன்னார்.
தத்துவஞானி தனக்கு ஆதரவு தேடி மதகுருவைப் பார்த்தார். 
"சுவாமி, நான் சொல்வது சரிதானே
இந்த மடையரிடம் சொல்லுங்கள்
கேள்வி: "ஏன்" - "எப்படி" அல்ல" 
என்று.
பாதிரியார் சொன்னார்
 "தத்துவஞானியே, நீர் சொல்வது 
சரிதான். "ஏன்" என்ற கேள்விதான் முக்கியம். ஆனால் நாம் அதைக் கேட்க வேண்டாம். ஏனெனில் ஏன் கோழி பாதையைக் கடந்தது என்பதற்கான 
விடை நமக்கு ஏற்கனவே தெரியும்" 
என்றார். தத்துவஞானிக்கு ஆச்சரியம். பாதிரியைப் பார்த்து "Holy Friend, 
நான் கடந்த சில மணி நேரங்களாக
 "ஏன்" என்று கேட்டுகொண்டு 
விடை தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன். 
உமக்கு எப்படி அதன் விடை தெரிந்தது?
பாதிரியார் சிரித்துக்கொண்டு 
சொன்னார். "ரொம்ப சுலபம். 
(தன் கையில் வைத்திருக்கும் 
ஒரு கறுப்புப் புத்தகத்தைச் (Bible) சுட்டிக்காட்டி இந்தப் புத்தகத்தில் 
உங்கள் கேள்விக்கான விடை 
இதில் இருக்கிறது. 
அது மாத்திரமில்லை. 
உலகத்தில் உள்ள அவ்வளவு 
அறிவும், ஞானமும் இதில் அடங்கியிருக்கின்றன.
தத்துவஞானி கேட்டார் 
"பாதிரியாரே, சொல்லும். 
ஏன் கோழி பாதையைக் கடந்தது?" 
என்று.
பாதிரி சொன்னார் "ஏனெனில்
அதுதான் கடவுள் சித்தம்" 
(Because it's God's Will) என்றார்.
கடவுள்என்ற பெயரைக் 
கேட்டவுடன் விஞ்ஞானிக்குக் 
கோபம் பொத்துக்கொண்டு வந்தது. 
"கடவுளா? எங்கே இருக்கிறார். 
எங்கே அதற்கு ஆதாரம்
அப்படி ஒரு ஆதாரம் இருக்கிற 
மாதிரி தெரியவில்லை. நிரூபணம் இல்லாமல் கடவுள் என்பவர் 
இருக்க முடியாது" 
என்று கத்தினார்.
இப்பொழுது தத்துவஞானியின் 
சான்ஸ். "ஆதாரம், நிரூபணம் ஒன்றும் இல்லையா? மடையா, உம்மைச் சுற்றிப் பாரும். 
அழகான சூரிய அஸ்தமனம்
கண்ணைப் பறிக்கும் பூக்கள் - 
எங்கே திரும்பினாலும் இயற்கையின் 
அழகு பாரும். இன்னும் சொல்கிறேன். 
நாம் வாழ்கிறோம். நாம்  இங்கு இருக்கிறோம் இல்லையா
I Think, therefore I am. 
சூனியத்திலிருந்து நாம் 
எப்படி வந்திருக்க முடியும்
எப்படி உருவானோம்
நீர் என்ன வேண்டுமானாலும் 
சொல்லும். Big Bank Theory - etc...
யார், எப்படி இந்த ஆட்டத்தை 
ஆரம்பித்து வைத்தார்கள்?" என்றார்.
விஞ்ஞானி விடுவதாக இல்லை. 
"நீர் என்ன சொன்னாலும் இங்கே 
எந்த விஞ்ஞானபூர்வமான ஆதாரமும் ஒன்றும் இல்லை. கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஏதாவது பரிசோதனை (Experiment) வைத்திருக்கிறீரா?" 
என்றார்.
தத்துவஞானிக்குக் கோபம், எரிச்சல். முடிவாகச் சொன்னார் 
"நான் சின்ன வயதில் ஒரு பாடம் படித்திருக்கிறேன். அதை மறுபடியும் சொல்கிறேன். 
Absence of evidence - 
scientifc or otherwise - 
is not evidence of absence" 
என்று.
விவாதம் தொடர்ந்தது. 
மூன்று வழி விவாதம் முடிவதாகத் தெரியவில்லை. இன்றைக்கும் ஒரு அமைதியான சூழ்நிலையில் கூர்ந்து கேட்டால் இந்த மூவரின் "கடவுள் இருக்கிறார்" விவாதத்தைக் கேட்கலாம்.

இந்தக் குட்டிக்கதையின் அர்த்தம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 
இந்த மூன்று படிப்புகளின் வித்தியாசங்கள் தெளிவாகவே வெளிப்படுகின்றன.
விஞ்ஞானம், "எப்படி" என்றும்
தத்துவம் "ஏன்" என்றும் கேட்கிறது. 
மதமோ நம்பிக்கையோடு 
நமக்கு இந்த உண்மை ஏற்கனவே 
தெரியும்ஏனெனில் எல்லாமே 
இந்தப் புனிதமானப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது 
என்று சொல்கிறது.
Bertrand Russell என்ற தத்தவ மேதை 1945இல் A History of Western 
Philosophy என்ற புத்தகத்தில் 
இந்த மூன்று துறைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்குகிறார்.
Philosophy என்பது விஞ்ஞானத்துக்கும் (science) மதத்திற்கும் (theology) 
நடுவில் உள்ளது.  
Theology போல நமக்கு விடை 
தெரியாத கேள்விகளுக்கு 
அனுமானங்கள், ஹேஷ்யங்கள் 
மூலம் விடை காண்கிறது. 
விஞ்ஞான முறைப்படி மனிதனின் 
காரண-காரிய முக்கியத்துவம் 
கொடுக்கிறது. 
Authority 2ஆம் பட்சம்தான்.
முடிவாக சொல்கிறார்:

All definite knowledge belongs 
to science; all dogma belongs 
to theology. But between theology 
and science is a No Man’s Land, 
exposed to attack from both sides; 
this No Man’s Land is philosophy.                                        
                                                            
Bertrand Russell
மேலே சொன்ன குட்டிக்கதையை 
கிரேக்கத் தத்துவாசிரியர்கள் 
மூன்றையும் உபயோகித்து 
"கோழி பாதையைக் கடந்த" 
விஷயத்தை அலசிப் பார்ப்பார்கள்விஞ்ஞான மூலமாக, கோழி பயணத்தின் mechanicsஐப் புரிந்திருப்பார்கள். கோழியின் நோக்கத்தைத் 
தத்துவக் கோட்பாடுகள் மூலம் 
விளக்கியிருப்பார்கள். 
கடைசியாக, பெரிய ரிஷிகளையும், ஜோசியர்களையும் கலந்து 
கடவுளின் பணி எவ்வளவு தூரம் 
கோழியின் பயணத்தைப் பாதித்திருக்கும் என்பதை அறிவார்கள்.

இந்த சப்ஜகட், ரொம்ப ஆழமானது:
கடினமானது.
குட்டி கதை, கைவசம் ரொம்ப 
நாளாக இருந்தது.
உங்களுடன் பகிர்ந்து 
கொள்ள நினைத்தேன்.

கேள்வி கேட்காமல், மதத்தில்
சொல்லியிருக்கிறதை அப்படியே
நம்புவர்களுக்கு பிரச்னை இல்லை.
அதே மாதிரி,நிரூபணம் இல்லாத
எதையும் ஏற்கமுடியாது என்று
சொல்லும் விஞ்ஞானிக்கும்
பாதிப்பில்லை.
நடுவில் இருக்கும் தத்துவ மேதைக்குத்
தான் திண்டாட்டம்.

ஆனால் ஒன்று மாத்திரம் நிச்சயம்.
இன்றய விஞ்ஞானத்திடம் 
எல்லாவற்றிருக்கும் விடை இல்லை.

நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது.
நம்பித்தான் ஆக வேண்டும்.


கொசுறு-1

ஒரு தத்துவப் பேராசிரியர் தன் மாணவர்களுக்கு ஒரு பரீட்சை வைத்தார்.
ஒரு நாற்காலியை மேஜைமேல் வைத்து, மாணவர்களிடம் "இதுவரை நீங்கள் வகுப்பில் கற்றுக்கொண்ட எல்லாப் பாடங்களையும் நினைவுகூர்ந்து 
"இங்கே நாற்காலி என்று ஒன்றும் இல்லை" என்று நிரூபியுங்கள்" என்றார்.
 மாணவர்கள் சுறுசுறுப்பாக பேனா, பென்ஸில்களைச் சீர்பண்ணிக்கொண்டு எழுத ஆரம்பித்தார்கள். ஒரே ஒரு மாணவன் மட்டும் 30 விநாடிகள் மட்டும் எழுதி முதலிடத்தைப் பிடித்தான்.
 எல்லோருக்கும் ஆச்சரியம். அப்படி என்னதான் எழுதியிருக்கிறான் என்று. ஆவலோடு அவன் பேப்பரைப் பார்த்தார்கள். 
அதிலிருந்த ஒரே வாக்கியம் 
"What chair?"

கொசுறு-2

வழக்கமான கேள்வி-முதலில் எது
வந்தது?-கோழியா? முட்டையா?

விஞ்ஞானி: முதலில் முட்டை தான்
"evolve" ஆச்சு.
தத்துவ மேதை:கடவுள் கோழியையும்
சேவலையும் படைத்தார்.அவைகள்
சேர்க்கை மூலம் முட்டை வந்தது.
பாதிரி நல்ல அறிவாளி.
தத்துவ மேதை சொன்னது
தான் சரி.அது கிடக்கட்டும்.
முட்டையின் சூடு
ஆறுவதற்கு முன் சாப்பிடுவோம்.

கொசுறு-3

ஒரு மின்சார பல்பை மாற்ற எத்தனை
தத்துவ மேதைகள் தேவை?
அருமையான கேள்வி...
மின்சார பல்பின் விளக்கம் தேவை?
பல்ப் மாற்ற வேண்டும் என்று எப்படி
உறுதியாக சொல்கிறீர்கள்?
3 பேர்கள்:
ஒருவர் பல்பை மாற்ற-மற்ற 2 பேர்கள்
பல்ப் இருந்ததா என்று விவாதிக்க

சயன்ஸ் வகுப்பு:Physics class
 Madam  காந்தத்தை(Magnet)
பற்றி விளக்கி சொன்னார்.
எப்படி அது கீழே கிடக்கும்
இரும்பு பொருள்களை
ஈர்க்கும் என்று சொன்னார்.
முடிவில் ஒரு கேள்வி கேட்டார்:
என் பெயர்-M -ல் ஆரம்பிக்கிறது.
நான் கீழே கிடக்கும் பொருள்களை
பொறுக்குவேன்.என் பெயர் என்ன"

ஒரு படுசுட்டியான பெண்
எழுந்து சொன்னாள்"

Mother

கடைசி ஜோக் ஆங்கிலத்தில்:

Chemistry teacher:
What is the chemical term for water"
Student:
HIJKLMNO
Teacher:
what is this?
Teacher,you said yesterday
water is called HtoO;

கிளறல் தொடரும்....... 


No comments: