Monday, September 26, 2011

கிசுகிசு


மற்றவர்களைப் பற்றி உண்மை என்று உறுதியாகத் தெரியாதச் செய்திகளைப் பற்றி எழுதுதல், பேசுதல். Gossip (காஸிப்), வதந்தி, புரளி என்றும் சொல்வார்கள்.
ஆனால் எல்லோருக்கும் தெரிந்த, சுவையான பெயர் கிசுகிசுதான்.
இது ஆட்சி செய்யாத இடமே கிடையாது.
கிசுகிசு நல்லதா? கெட்டதா?
இதோ கிசுகிசு தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு ஆங்கிலக் கவிதை:

Nobody’s friend
(author unknown)

My name is gossip, I have no respect for justice-I maim without killing.
I break hearts and ruin lives.
I am cunning and malicious and gather strength with age.
The more I am quoted, the more I am believed.
My victims are helpless. They cannot protect themselves against me because I have
no name or face.
To track me down is impossible. The harder you try, the more elusive I become.
I am nobody’s friend.
Once I tarnish a reputation, it is never the same.
I topple governments and wreck marriages.

I ruin careers and cause sleepless nights heartaches and indigestion I make
Innocent people cry in their pillows.
Even my name hisses.
I am called gossip
I make headlines and headaches.

இதன் பொருள் தமிழில்:

நான் யாருடைய நண்பனும் இல்லை
என் பெயர் கிசுகிசு.

எனக்கு நியாய, அநியாயத்தைப் பற்றிக் கவலையில்லை. நான் கொல்லாமலேயே ஒருவரை ஊனமாக்குவேன்.
இருதயங்களை உடைப்பேன். வாழ்க்கையை அழிப்பேன். நான் தந்திரமானவன். கெடுக்கும் நோக்கமுடையவன். என்னை எவ்வளவு தடவை மேற்கோள் காட்டுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு என்னை நம்புவார்கள்.
என்னால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்புக் கிடையாது. என்னிடமிருந்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் எனக்குப் பெயரோ, முகமோ கிடையாது.

என்னைத் தேட முடியாது. நழுவித் தப்பித்துக்கொள்வேன்.

ஒருவருடைய நற்பெயரைக் கெடுத்துவிட்டேனானால் அவர் மறுபடியும் அவராக ஆவது கடினம். அரசாங்கங்களைக் கவிழ்த்திருக்கிறேன். மணவாழ்க்கைகளை உடைத்திருக்கிறேன்.
எத்தனையோ பேர்களுடைய உத்தியோகங்களை அழித்திருக்கிறேன்.
நான் தலைப்புச் செய்தியாகவும் வருவேன். தலைவலியையும் உண்டாக்குவேன். என் பெயர் கிசுகிசு (Gossip).

கிசுகிசுவே சொல்லிவிட்டது. தான் எவ்வளவு கேவலமானவன் என்று.

1949ஆம் வருடம் அறிஞர் அண்ணாதுரை எழுதி ஸ்ரீ N.S. கிருஷ்ணன் நடித்த நல்லதம்பிபடம். அதில் 50ம் 60ம் என்று ஒரு குறுநாடகம் வெளிவந்தது. இதில் N.S. கிருஷ்ணன் 50இல் எப்படி நம் நாடு மோசமாக இருக்கிறது என்று சித்தரித்துவிட்டு 60இல் அது எப்படி மாறிவிடும் என்று கற்பனைசெய்து பார்ப்பார். 


இப்பொழுது 2011. 60 ஆண்டுகள் ஆயிற்று. இன்னும் இந்தியா 50ஐ விட்டு வெளிவரவில்லை. அது வேறு விஷயம்.

அதில் ஒரு காட்சி.

நல்லதம்பிஅவருடைய அடியாள்,பாண்டியன் இருவரிடையே ஒரு உரையாடல்:

பாண்டியன்         : அண்ணே, விஷயம் தெரியுமா? பக்கத்து வீட்டுப் பார்வதி, எதிர்  வீட்டுப் பரமசிவனோடு ஓடிப்போய்விட்டாளாம்.

நல்லதம்பி          : பாண்டியா, அது கிடக்கட்டும். இப்போ எனக்கு உன் சட்டைப் பையில் என்ன இருக்கிறது என்று தெரிய வேண்டும். சொல்வாயா?
பாண்டியன்         : ஓ! கொஞ்சம் சில்லரை, 2, 3 துண்டு கடிதாசி, இவ்வளவுதான்.
நல்லதம்பி          : இது போதாது. சில்லறை என்றால் எவ்வளவு, ரூபாய் எவ்வளவு, பைசா எவ்வளவு என்றும், கடிதாசி என்றால் யார் போட்டது எப்போ வந்தது ?

பாண்டியன்         : கொஞ்சம் இருங்க அண்ணே. நான் பார்த்துவிட்டு சொல்கிறேன்.

நல்லதம்பி          : பார்க்காமல் சொல்ல முடியாதா?
பாண்டியன்         : அதெப்படி அண்ணே, முடியும்?
நல்லதம்பி          : பார்த்தாயா. உன் சட்டைப்பையில் இருக்கும் விஷயங்களையே  பார்க்காமல் சொல்ல முடியாதபோது, மற்றவர்களைப் பற்றித் தீர விசாரிக்காமல் எப்படி உன்னால் சொல்ல முடியும்.
பாண்டியன் வெட்கமுற்று அவ்விடத்தைவிட்டு நகருவான்.

இப்பொழுது காட்சி…… 60இல்

பாண்டியன் ஓடிவந்து, நல்லதம்பியிடம் அண்ணே, செளக்கியமா? பக்கத்துவீட்டு சமாசாரங்களை நான் காதில் போட்டுக்கொள்வதில்ல என்னுடைய பையில் இப்பொழுது 3 ரூபாய் இருக்கிறது-  ரூபாய் நாணயம் 1, 50 பைசா – 2, 25 பைசா-4. 2 கடிதம். ஒன்று மனைவிடமிருந்து. இன்னொன்று என்னுடைய தம்பியிடமிருந்துஎன்பார்.

50 நிஜம் – 60 கற்பனை.

ஐம்பதா? அறுபதா? என்று முடிவு செய்வது நம் கையில்.

சில பேர், “கிசுகிசு ஒரு டைம் பாஸ் நிகழ்ச்சிதானே. நண்பர்கள் அரட்டை அடிப்பது ஒரு சமூக உடன்பாடுக்கு நல்லதுதானேஎன்று வாதிக்கிறார்கள். விளையாட்டாக சொன்ன செய்தி வினையாக மாறலாம்.

யூதர்கள் வதந்தியை “lashon hara” என்று சொல்வார்கள். அவர்கள் மதப்படி வதந்தி 3 வேலை செய்கிறது. யாரைப் பற்றி அவதூறாகப் பேசுகிறோமோ அவருடைய புகழை அழிக்கிறது. கேட்பவர் மனதில் ஒரு சஞ்சலத்தை உண்டுபண்ணி அவருடைய அமைதியைக் கொல்கிறது. கடைசியாக வதந்தியைப் பரப்புபவருடைய இமேஜ் தாழ்ந்துவிடுகிறது.

ஒரு நாள் ,கிரேக்க ஞானி சாக்ரடிஸிடம் அவர் பக்கத்து வீட்டுக்காரர் வந்து ஐயா, உங்கள் நண்பரைப் பற்றி நான் கேள்விப்பட்டதை சொல்லவா?” என்றார்.

சாக்ரடிஸுக்கும் அவருக்கும் நடந்த உரையாடல் இதோ:


சாக்ரடிஸ்           : கொஞ்சம் பொறும். என் நண்பரைப் பற்றி நீர்  சொல்வதற்குமுன்  என்னுடைய ‘3 வடிகட்டி-சோதனை’ (Triple Filter Test) க்குத் தயாரா?

பக்கத்து
வீட்டுக்காரர்       : புதிராக இருக்கிறதே. சரி, தயார்.

சாக்ரடிஸ்           : முதல் வடிகட்டி உண்மை (Truth). நீர் இப்பொழுது சொல்ல வந்த விஷயம் உண்மைதானே?

ப.வீ.க.              : மன்னிக்கணும்.நான்இப்பொழுதுதான் கேள்விப்பட்டேன். உண்மையா என்று நிச்சயமாகத் தெரியாது.

சாக்ரடிஸ்           : சரி, 2வது - Goodness – நல்லது. நீர், என் நண்பரைப் பற்றி சொல்ல வந்த விஷயம் அவரைப் பற்றிய நல்ல விஷயமா? கெடுதலானதா?

ப. வீ. க.            : இல்லை. அதற்குப் பதிலாக…..

சாக்ரடிஸ்           : நீர் சொல்லவந்த விஷயம் உண்மை என்றும் தெரியாது. அது நல்ல விஷயமாகவும் இல்லை. இதோ கடைசி வடிகட்டி – Usefulness –
               உபயோகமானது. நீர் சொல்ல வந்த விஷயம் எனக்கு
               உபயோகமானதா?

ப. வீ.க. : இல்லை. நிச்சயமாகச் சொல்ல முடியாது.

சாக்ரடிஸ்           : ஆக, நீர் சொல்ல வந்த விஷயம். உண்மையும் இல்லை, நல்லதும் இல்லை, உபயோகமானதும் இல்லை. பின் எதற்கு என்னிடம் சொல்ல வேண்டும்?

மற்றவர்களைப் பற்றி ஏதாவது செய்திகள் பரப்பும் முன் சாக்ரடிஸின் “Triple Filter Test”ஐப் பற்றி யோசியுங்கள்.



கண்ணால் பார்ப்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே
மெய்.

- கிளறல் தொடரும்

5 comments:

Anonymous said...

கிசு கிசு என்பது நாசுக்கான வதந்தி. அதிகம் பேருக்குப் புரியாது என்பதால் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. .. சரி,, கிசு கிசு எண்ற் வார்த்தையை செம்மொழிக்கு கோண்டு வந்தவர் யார் எண்று சொல்ல்வில்லையே..
--கருத்து கந்தசாமி

Anonymous said...

The english definition and the translation of ''kisu kisu'' is great! Incidentally do you keep extracts of dialogues of films of the last generation? Chumma sollakoodathu--Nag Naguthan!!!

Annamaliar

T.H.Iyer said...

The world is revolving around "kisu kisu". This seems to be the spice of life- it makes and unmakes people, parties and families.

Continue your great work.

I am a great fan from N.S. Krishnan. He had I hail from the same town Nagercoil. I have known him and his brother personally.

M.K.Ram said...

Hey Nagarajan: Nice post!!!But I am concerned about the possible mispronunciation of the word Tirunelveli in kuppai--what if some one reads it as Tirunelveli yil Kuppai!!

Ramesh

tsnagarajan said...

கருத்து கந்தசாமி அவர்களுக்கு வண்க்கம்.

நன்றி எனக்கு விடை தெரியாது.Crea வின் அகராதியில் இந்த

வார்த்தை இருக்கிறது.

நாகராசன்.