Sunday, November 20, 2011

ஒரு குழந்தையின் 10 கட்டளைகள் — பெற்றோருக்காக

“Ten Commandments” — என்று சொன்னவுடன், கடவுளால் 
மோசஸ் மூலம் யூதர்களுக்குச்   சொல்லப்பட்ட 10 கட்டளைகள், 
என்று எத்தனை பேர் நினைப்பார்கள், என்பது ஒரு யூகம்தான்.
ஆனால், அநேகமாக, எவரும் 1956இல், Cecil B. Demilleயால் 
தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படத்தை 
மறந்திருக்க மாட்டார்கள். 
அதில் வரும் ஆண்டவன் இட்ட கட்டளைகள், 
ஞாபகம் இருக்கிறதோ என்னவோ
யூல் பிரைனர் மொட்டையும்
நீர் இரண்டாக பிளந்து  மறுபடியும் மூடிக்கொள்ளும் 
காட்சிகளும் நினைவில் இருக்கும். 
அது 30 வாரங்களுக்கு மேல் ஓடியனில் 
திரையிடப்பட்டது  என்பது ஒரு “extra news”.
இப்பொழுது 10 கட்டளைகளுக்கு வருவோம்.
இவை சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக 
இருந்துவந்திருக்கின்றன. ஆங்கில அகராதியிலும்
உபயோகத்திலும்  Ten Commandments என்றால் 
கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் என்று 
வழக்காக ஆகிவிட்டது.
இந்தக் கட்டுரையும் ஒரு வித்தியாசமான 
“Ten commandments” 10 கட்டளையைக் குறித்தது.
ஒரு குழந்தையின் ஆதங்கத்தில் எழுந்த கட்டளைகள் இவை.
பெற்றோர்களைச் சிந்திக்கவைக்கும் கட்டளைகள்.
என் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று 
எனக்குத் தெரியும். மற்றவர்களின் யோசனைகள் 
எனக்குத் தேவையில்லை”  என்ற மனோபாவத்தை மாற்ற 
முயற்சிக்கும் கட்டளைகள்.
சிந்தியுங்கள் மாற்றி யோசியுங்கள்.
முடிந்தால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.இதோ, குழந்தையின் 10 கட்டளைகள்.

1.என் கைகள் சிறியவை. நான் படுக்கையை விரிக்கும்போதும்
ஒரு படத்தை வரையும்போதும், ஒரு பந்தை வீசும்போதும் 
இவற்றை மிகச் சரியாக (perfection) செய்வேன் 
என்று எதிர்பார்க்காதீர்கள்.
என்னுடைய கால்கள் குட்டையானவை. தயவுசெய்து என்னுடன் 
வரும்போது மெதுவாக நடந்து வாருங்கள். 
அப்படிச் செய்தால் உங்களுடன் நான் நடந்து 
வருவதற்கு உதவியாயிருக்கும்.

2.நீங்கள் இந்த உலகத்தைப் பார்த்து ரசித்த மாதிரி
என்னுடைய கண்கள் இன்னும் இந்த உலகத்தைப் 
பார்க்க ஆரம்பிக்கவில்லை. தயவுசெய்து என்னை 
இந்த உலகத்தைப் பத்திரமாக ஆராய்ந்து தெரிந்துகொள்ள 
அனுமதியுங்கள். தேவையில்லாத தடைகளை 
உண்டாக்காதீர்கள். பண்ணாதீர்கள்.

3.உங்களுக்கு வீட்டு வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். 
நான் குழந்தையாக இருப்பது சிறிது காலம்தான். 
எனக்காக வேண்டிக் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி எனக்கு 
இந்த அதிசயமான உலகத்தைப் பற்றி 
சந்தோஷமாகவும் மனப்பூர்வமாகவும் விளக்குங்கள்.

4.என்னுடைய உணர்ச்சிகள் மிருதுவானவை. 
என்னுடைய தேவைகளை மதித்து நடந்துகொள்ளுங்கள். 
உங்களை யாராவது கேள்வி கேட்டு நச்சரித்தால் 
உங்களுக்குப் பிடிக்காது. அதே மாதிரி மற்றவர்களையும்
குறிப்பாக என்னையும், நாள்பூரா நச்சரித்துத் 
தொந்தரவு செய்யாதீர்கள்.

5.நான் கடவுள் கொடுத்த விசேஷமான பரிசு. 
கடவுள் கொடுத்த இந்தப் பொக்கிஷத்தைப் பத்திரமாக 
பாதுகாத்து வாருங்கள். என்னைப் பொறுப்புள்ள 
குழந்தையாக வளருங்கள். நான் தவறு செய்தால் 
அதை அன்போடு திருத்தி எனக்கு 
நல்போதனைகளைச் சொல்லுங்கள்.

6.உங்களுடைய ஊக்கம் எனக்கு எப்பொழுதுமே 
தேவை. என்னுடைய தவறுகளைத் திருத்துங்கள் — 
என்னைத் திட்டாமல்.

7.என்னை பற்றி முடிவு எடுக்க எனக்குச் சுதந்திரம் கொடுங்கள். 
நான் தோல்வி அடைந்தால், அந்தத் தோல்வியே என்னுடைய 
வெற்றியின் முதல் படி என்று நினையுங்கள்.

8.என்னைக் குறைவாக எடைபோட்டு என் மீது அதிகாரம் 
செலுத்தாதீர்கள். எனக்கு அது தாழ்வு மனப்பான்மையைக் 
கொடுக்கும். தயவுசெய்து என் சகோதரர், சகோதரியோடு 
என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.

9.எங்களைத் தனியாக விட்டு நீங்கள் பயணங்கள் 
செய்வதைத் தவிர்க்காதீர்கள். குழந்தைகளுக்கு எப்படிப் 
பெற்றோர்களிடமிருந்து விடுமுறை தேவையோ 
அதே மாதிரிதான் பெற்றோர்களுக்கும் 
குழந்தைகளிடமிருந்து விடுமுறை தேவை.

10.தவறாமல் கோவிலுக்கோ, சர்ச்சுக்கோ என்னைக் 
கூட்டிக்கொண்டு செல்லுங்கள். கடவுளைப் பற்றி 
தெரிந்துகொள்ள எனக்கு ரொம்பவே ஆசை.

நன்றி    Dr. Kevin Leman

பெற்றோர்களுக்கு - போனஸ் அறிவுரைகள்.

1.உங்களுக்குப் பிடித்தவை உங்கள் குழந்தைகளுக்கும் 
பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

2.தினந்தோறும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் 
உங்கள் குழந்தைகளிடம் “ I love you” என்று சொல்லுங்கள்.

3.உங்கள் குழந்தைகள் தவறு செய்தால் அதையே சுட்டிக் 
காட்டிக்கொண்டிருக்காதீர்கள். ஏற்கனவே 
அவர்கள் குற்ற உணர்வுடன் இருப்பார்கள்.

4.நீங்கள் வளரும்போது நீங்களும் முழுமையானவர்களாக 
இருந்திருக்கவில்லை என்பதை நினைவில் 
வைத்துக்கொள்ளுங்கள். நீங்களே முழுமையானவர்களாக 
இல்லாதபோது உங்கள் குழந்தைகளிடம் 
எப்படி அதை எதிர்பார்க்கலாம்?

5.ஒரு குழந்தைக்கு மேல் உங்களுக்கு இருந்தால் 
தயவுசெய்து அவர்களை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். 
ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இருக்காது.

6.குழந்தைகளிடம் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். 
அவர்களுக்கு இது கற்கும் காலம்.

7.தப்பு ஏதாவது நடந்தால் குழந்தைகளை அதற்குப் 
பொறுப்பாக்காதீர்கள். எல்லாச் சமயங்களிலும் தவறு 
குழந்தைகளிடம் இருக்காது.

8.சிறு பரிசானாலும் பரவாயில்லை. அடிக்கடி குழந்தைகளை 
ஆச்சரியத்தில் மூழ்கடியுங்கள்.

9.குழந்தைகள் எப்பொழுதுமே 5 வயது குழந்தைகளாக 
இருக்க முடியாது. அவர்களும் வளர்கிறார்கள்.

10.குழந்தைகள் முன்னால் வாக்குவாதத்திலோ
சண்டையிலோ ஈடுபடாதீர்கள்.

இதில் பாதியையாவது நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் 
குழந்தைகள் உங்களை நல்ல பெற்றோர்கள் என்று 
எப்பொழுதும் நினைத்துப் பெருமைப்படுவார்கள்.கொசுறு:


குழந்தைகள் மட்டும் தான் உண்மை பேசுவார்கள்- 
டேவிட் பெலாஸ்கோ
குழந்தைகள்,குடிகாரர்கள்,முட்டாள்கள்-இவர்களால் 
பொய் பேச முடியாது-டேவநர்
குழந்தைகள் புத்திசாலிகளாகவும்,பெறியவர்கள் 
முட்டாள்களாகவும் ஏன் இருக்கிறார்கள்?
கட்டாயம்,படிப்பு தான் காரணமாயிருக்கும். -டுமாஸ்.
உங்கள் நிநைவுக்கு: உங்கள் பெற்றோர்கள்  உங்களை
" உன் ரூமுக்கு செல்" என்றுசொன்ன போது,அது தண்டனையாக 
இருந்திருக்கும்; அதே மாதிரி,  நீங்கள் உங்கள்
குழந்தைகளிடம்,"உன் ரூமுக்கு செல்"  
என்று சொல்லிப்பாருங்கள் .சந்தோஷமாகசெல்வார்கள்.
ஏன் ஏனில் அவர்கள் ரூமில்,ஏசி,கம்புயடர்.சவுண்ட் சிஸ்டம், 
கலர் டிவி எல்லாம் இருக்கும்-
லெவந்ஸன்.கிளறல் தொடரும்

9 comments:

Sh... said...

Thank you Sir, I'm in the process of learning the art of parenting.

My own experience here -
http://all-is-well-that-ends-well.blogspot.com/2011/08/prayer.html

RS Rajan said...

Sir, I have been reading your articles since September until now and find them very interesting. Thank you.

Balaji Venkatachalam said...

I finally caught up with reading all your posts. Your efforts in sharing your experiences with subsequent generations are commendable.
On this particular post - Very nice post. Parents' perspective and understanding of these points also change (for better) as they 'grow up' .....nice thought provoking article.

Looking forward to our long pending chat session...
Balaji

Murugan Vadivel said...

Thank you Sir for the excellent points to the parents. As mentioned in the post, if we follow half of them surely the kid will come up nicely. As my son is 7 year old now, I feel I need to follow these points diligently going forward in our day to day life particularly with my kid.

Mani Kalidai said...

Excellent one valuable input looking forward for more.

ganesh said...

I like it. Every parent must follow

Anonymous said...

எனது பிள்ளைகள் வளர்வது அமெரிக்க தேசத்தில்... கோவில் கருத்தை தவிர மற்றவை மிகப்பொருத்தம். அதேநேரம் இந்ததேச ஆசிரியரும் இதையே ஆமோதிக்கன்றனர். பிள்ளைகள் முதல் ஐந்தை தாண்டியப் பிறகு பெற்றோரிடம் கலப்பதைவிட ஆசிரியரிடம் செலவிடும் நேரம் அதிகம். குறைந்த பட்சம் 8 மணி நேரம் விழுத்திருக்கும் காலம். எனவே, ஆசிரியருக்கு போருத்தமான கட்டளைகள் அறிய ஆவல்....

ramuk said...

Thanks for posting - I like it

Sowmiya said...

It was wonderful tatta..

I am going to take a printout and paste it in my home...

Even thoguh i am 24 yrs old i am a child for my parents na...

Regards,
Sowmiya