Sunday, November 06, 2011

ஒரு வயதானவரின் பிரார்த்தனை, வேண்டுகோள்!




பிரார்த்தனை, கடவுளிடம்:

கடவுளே, எனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என்பது உனக்குத் தெரியும்.

வளவளவென்று பேசிக்கொண்டிருக்கிறேன். நான் வாயாடி’, 
உளறுவாயன்’ என்று பெயர் எடுப்பதைத் தடுத்து நிறுத்து.

எல்லா விஷயங்களிலும் கேட்டோ கேட்காமலேயே 
என் அபிப்பிராயத்தைச் சொல்லத் துடிக்கும் 
பழக்கத்தை விட்டுவிட உதவிசெய்.

எனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை 
நுழைக்கும் என்னுடைய பேராவலைத் 
தயவுசெய்து மாற்று.

எல்லோருடைய பிரச்சினைகளையும் என்னால் 
தீர்த்துவைக்க முடியும் என்கிற என் அசட்டு 
மனப்பான்மையைத் தயவுசெய்து மாற்று.

எது பேச நினைத்தாலும் சுற்றிவளைத்து 
மற்றவர்களுக்கு ‘bore’அடிக்காமல்
சொல்ல வந்த விஷயத்தைச் சுருக்கமாக
நேரடியாகச் சொல்லும் ஆற்றலைத் தா.

மற்றவர்களுடைய குறைகளையும் 
கஷ்டங்களையும் பணிவோடு 
கேட்கும் மனப்பக்குவத்தைத் தா.

என்னுடைய கஷ்டங்களை மற்றவர்களிடம் சொல்லி
என்னுடைய புலம்பலினால் அவர்களின் 
மன நிம்மதியைக் குலைக்கச் செய்யும் 
என் சுபாவத்தை மாற்று.
         
எனக்கு எல்லாம் தெரியும்என்ற 
என் மமதையை அடக்கு.
நானும் தப்பு பண்ணலாம். 
யானைக்கும் அடி சறுக்கும்” 
என்பதை அடிக்கடி எனக்கு ஞாபகப்படுத்து.
           
நான் மஹானாக இருக்க விரும்பவில்லை. அதே சமயத்தில் 
எல்லோரும் வெறுத்து ஒதுக்கித்தள்ளும் 
ஒரு அழுமூஞ்சியாகவும் 
இருக்க விரும்பவில்லை. 
அதற்கு உன் உதவி தேவை.

என்னைச் சிந்தனையாளனாக ஆக்கு
ஆனால் உம்மணாமூஞ்சியாக ஆக்கிவிடாதே. 
மற்றவர்களுக்கு உதவிசெய்யும் 
மனப்பான்மையைக் கொடு
அதே சமயம் ஒருவர் மேலே விழுந்து 
அவரைச் சங்கடப்படுத்தக் கூடாது.

என்னைச் சுதந்திர புருஷனாக இருக்க விடு. 
அதே சமயம், மற்றவர்கள் என்மீது உள்ள 
அக்கறையில் எனக்கு உதவிசெய்ய முன்வந்தால் 
அதைப் பணிவுடனும் மகிழ்ச்சியுடனும் 
ஏற்றுக்கொள்ளும் மனத்தைக் கொடு.

நான் ரொம்ப நாளாக வாழ்ந்துகொண்டிருப்பதாலேயே
என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்களைவிட 
நான் அதிபுத்திசாலி என்ற எண்ணத்திலிருந்து 
என்னை விடுவி.

சமீப காலத்தில் நடந்த, நடந்துகொண்டிருக்கிற 
மாற்றங்களில் எனக்கு உடன்பாடு இல்லாமல் 
இருந்தால், என் வாயை 
மூடிக்கொண்டு மெளனியாக இருக்க கூடிய 
புத்தியை எனக்கு அருள்வாய்.

என்னுடைய அந்திம காலம் வரும்போது, எனக்கு 
ஒன்று, இரண்டு நண்பர்களாவது இருக்க வேண்டும் 
என்பது என்னுடைய ஆசை 
அது உனக்கு நன்றாகத் தெரியும்.
கடவுளே,அந்த ஆசையை நிறவேற்றும்.


வேண்டுகோள் மற்றவர்களிடம்

என்னை நீங்கள் நேசிப்பதாக இருந்தால் 
அதைச் சொல்வதற்கு 
இதுதான் சரியான நேரம்.

உங்களுடைய இனிமையான உணர்ச்சிகளின் மூலம் 
உங்களுடைய உண்மையான அன்பை 
நான் உயிரோடு இருக்கும்போதே 
வெளிப்படுத்திவிடுங்கள்.

என் உயிர் பிரியும்வரை காத்திருக்காதீர்கள்.

உங்களுடைய இனிமையான வார்த்தைகளை 
ஜடமான சலவைக்கற்களில் உளியினால் செதுக்கி 
உங்கள் அன்பை வெளிப்படுத்தாதீர்கள்.

என்னைப் பற்றி ஏதாவது அன்பாகச் சொல்ல 
வேண்டுமானால் இப்பொழுதே
நான் உயிருடன் இருக்கும்போதே
சொல்லிவிடுங்கள்.

நான் இறந்த பிறகு உங்கள் வார்த்தைகள் என் காதில் விழாது.

ஆகவே, என்னிடம் துளி அளவாவது 
அன்பு, பாசம், நேசம் இருந்தால்
நான் உயிருள்ளபோதே 
எனக்குத் தெரியவையுங்கள்.

சரியான நேரம் — இதுதான்இப்பொழுதுதான்.

அப்போதைக்கு இப்பவே சொல்லிவிடுங்கள்
‘I love you’ என்று.

கொசுறு:

“8 கழுதை வயதாகிவிட்டது. காடு வா வா என்கிறது. 
வீடு போ போ என்கிறது. 
நான் என்னத்தைச் சாதிக்கப்போகிறேன்.?
பேசாமல், கிருஷ்ணா, ராமா என்று ஜபம் 
பண்ணிக்கொண்டு போகிற வழிக்குப் 
புண்ணியமாவது தேடிக்கொள்கிறேன்என்று 
புலம்புகிற, புலம்ப நினைக்கிற 
வயதானவர்களுக்காக... 
இந்தப் பட்டியல்.

100 வயதில், மோஸஸ் பாட்டி படங்கள் 
வரைந்துகொண்டிருந்தாள்.

94 வயதில், பெர்நாண்ட் ரஸ்ஸல்  உலக சமாதானத்திற்காகப் 
போராடினார்.

93 வயதில், பெர்னார்ட் ஷா, “Farfetehed Fables” 
என்ற நாடகத்தை எழுதினார்.

91 வயதில், ஏமன் டிவேலரா
அயர்லாந்தின் ஜனாதிபதியானார்.

90 வயதில், பிக்காஸோ ரொம்ப ரொம்ப 
பிஸி, வரைவதில்.

89 வயதில், ஆர்தர் ரூபின்ஸ்டைன் நீயுயார்க் கார்னிகே 
ஹாலில் மறக்க முடியாத கச்சேரி பண்ணினார்.

89 வயதில், Albert Schweitzer, ஆப்ரிக்காவில்
ஒரு ஆஸ்பத்திரியை நிர்வகித்து வந்தார்.

88 வயதில் Michelangelo திட்டங்கள் தீட்டினார்.

84 வயதில் சாமர்ஸெட் மாகம்
Points of View என்ற நாவலை எழுதினார்.

82 வயதில் சர்ச்சில் ‘History of English Speaking People’ 
என்ற புத்தகத்தை எழுதினார்.

82 வயதில் டால்ஸ்டாய் ‘I cannot be silent’ 
என்ற புத்தகத்தை எழுதினார்.

81 வயதில் Benjamin Franklin - US 
அரசியல் சட்டத்துக்கு வழிகாட்டினார்.

81 வயதில் Wolfgang Goethe, Faust எழுதினார்.

80 வயதில் நாகராஜன் – 'திருநெல்வேலியின் குப்பை' 
என்ற Blogஐ தொடங்கி உங்கள் நேரத்தை 
வீணடித்து கொண்டிருக்கிறார்-தப்பு தப்பு-
பாஸிடிவாக யோசிக்க வேண்டும்-
உங்கள் நேரத்தை  பொன்னான நேரமாக
மாற்றிக் கொண்டிருக்கிறார்.

வயது என்பது ஒருவருடைய மனதை பொருத்தது.
வயதாவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது..
ஆனால்,உங்கள் நினைவுகளை இளமையாக
வைத்துக் கொள்வது உங்கள் கையில்...
உங்கள் மனதில்..........

Think -Positively..
Stay Young- Mentally 
Age- Productively

       

            .......கிளறல் தொடரும்






22 comments:

colmurali said...

அருமையான பதிவு !

sury siva said...

நான் சொல்லவேண்டியதை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com
http://movieraghas.blogspot.com

kothandapani said...

I LOVE YOU

Swami said...

எண்பது வயது உடலுக்கு தானே ? மனது இளமையாக இருந்தால் போதுமே. நீங்க சக்கை போடு போடுங்க
அய்யா. இறைவன் இன்னும் பலத்தை உங்களுக்கு தருவாராக..

Anonymous said...

Sir, i love you sir.

Jeevan

sugi said...

I love U heaps thatha! what a writing!hereafter I wont miss my thatha's blog :)

HariV is not a aruvujeevi said...

I Love You Sir

HariV is not a aruvujeevi said...

Ungallal mudinthal intha thiraipadum parrungal,"The Bucket List"

http://www.imdb.com/title/tt0825232/

Ramesh said...

Age is not a particularly interesting subject. Anyone can get old. All you have to do is live long enough.
தீதும், நன்றும், பிறர் தர வாரா;:

Thenmerkuthendral said...

Very Nice Blog. I like it...
Wishes...Friend...

Sowmiya said...

Very nice sir..

tsnagarajan said...

நன்றி நன்றி நன்றி

நாகராஜன்.

Anonymous said...

I love you sir,

Regards,

Krishnan

M.Chokkalinkom said...

Beloved Sir,
Excellent Food of Thoughts. God Bless you with Good Health and Cheer.
Anbudan,
Chokkalinkom Murugesan

Pudukkottaian said...

Dear Sir,

I LOVE YOU... Excellent Writing...

Need your blessings...

Sankar V

Sh... said...

இன்னுமொரு சிறப்பான பதிவு.

விஜயஸாரதி said...

இட்லிவடை மூலம் இங்குவந்து சேர்ந்தேன். சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறீர்கள். மனதில் தெம்பும், சொல்வதற்கு விஷயமும் இருந்தால் சரி. வயதென்ன வயது- உங்களுக்கு மட்டும்தானா ஆகிறது !

நல்ல ஆரோக்யத்தையும் நீண்ட ஆயுளையும் ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.

வெளுத்துவாங்குங்கள் !

விஜயஸாரதி
காங்கோ

Anonymous said...

brilliant start. I love you and some of "kuppais"
Palany

Anonymous said...

நீங்கள் சொன்னது அனைவருக்கும் பொருந்தும்!

Ram said...

I Love You Sir!!

Murugan Vadivel said...

Sir,

Excellent Writing. 80 year Old ??, I can't believe this. God bless you with good health and cheers.

Seshan Natarajan said...

Dear Sir, very well said; very pertinent for this and any time!
What you have prayed for and requested can be easily accomplished if everyone follows the dictum ordained by Thiru Thruvalluvar in Kural Numer 645:
645 - சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். Easier said than done, but, we can make a sincere effort.
Keep up your well thought out guidances, regards and respects, Seshan Natarajan, Inverness, Illinois USA.