Monday, August 27, 2012

மின்னல் செய்தி - நடந்து கொண்டிருக்கிறது "போர்"- அமெரிக்காவில்


இது என்ன புருடாசெய்தி
ஏப்ரல் முதல் தேதி கூட இல்லையே?
ஆனால் இது உண்மை. 
இந்தப் போர் நீங்கள் நினைக்கிற 
மாதிரி ஆயுதங்களோடுப் போராடும் 
உலக யுத்தம் இல்லை.
இது ஒரு பனிப்போர்.
நடப்பது எங்கே
அமெரிக்காவில் சில பல வீடுகளில், 
குறிப்பாகசமையல் அறை மேஜையில்: 
சார், குழப்பாதீர்கள்! 
தலையைப் பிய்த்துக்கொண்டு 
தெருவில் ஓடுவதற்குமுன் தயவுசெய்து 
புரியும்படி சொல்லுங்கள்என்று 
நீங்கள் அலறுவது கேட்கிறது. 
இதோ, அந்தப் போரின்விளக்கம்.
அமெரிக்காவில், இரண்டாவது உலக 
மகாயுத்தத்திற்குப் பிறகு 1950 - 60களில் 
பிறந்தவர்களுக்கு,
‘Baby Boomers’ என்று பெயர். 
இவர்கள் இப்பொழுது 50 - 60 
வயதுடையவர்களாக இருப்பார்கள். 
பெரும்பான்மையோருக்கு, ஒன்றோ
இரண்டோ குழந்தைகள்15-19  வயது
அளவில்இருப்பார்கள். 
அவர்களைத்தான் ‘Teen Agers’ 
என்று அழைப்பார்கள்.
இப்பொழுது பிரச்சினை
பெற்றோர்களுக்கும் அவர்களுடைய 
teenage குழந்தைகளுக்கும்தான். 
என்ன பிரச்சினை
பாட்டிகள் சொல்லுகிற மாதிரி
உப்பு பெறாத சமாச்சாரம்இல்லை. 
பிரச்சினையே இந்த உப்புள்ள 
பதார்த்தங்களைப் பற்றித்தான். 
சுருக்கமாக, உணவைப் பற்றித்தான் 
வாக்குவாதம், சண்டை,எல்லாம்.
சப்ஜெக்ட்: அசைவம் vs. சைவம்.
இந்தியர்களுக்கு இந்த விஷயம் 
புதுமையானதாக இருக்கும். 
1961 சென்ஸஸ்படி 10இல் 7 இந்தியர்கள் 
அசைவர்கள் - வீட்டுக்கு வெளியில்- 
அதாவது, பெரும்பான்மையான வீடுகளில்
கலாச்சாரக் கோட்பாடுகளினாலோ
பொருளாதார வசதிக்குறைவாலோ 
சைவ சாப்பாடுதான் இருக்கும். 
ஆனால், அமெரிக்காவில் சைவ சாப்பாடு 
உண்பவர்கள் ரொம்பக் குறைவு.
ஆனால், சமீப காலத்தில் இந்தப் போக்கு 
மாற ஆரம்பித்திருக்கிறது. 
2008ஆம் ஆண்டு சர்வேபடி
7.3 மில்லியன் அமெரிக்கர்கள் 
வெஜிடேரியன்கள். 
மேலும் 22.8 மில்லியன் அமெரிக்கர்கள் 
வெஜிடேரியன் சம்பந்தப்பட்ட உணவை 
உட்கொள்ளுகிறார்கள். 
இந்தப் போக்கு குறைவதாகக் காணோம்.
எத்தனையோ காரணங்களினால்
வெஜிடேரியன் உணவுக்கு மவுசு 
கூடிக்கொண்டுவருகிறது. 
குறிப்பாக, இளைய சமுதாயத்திடமிருந்து 
அதிகமாக ஆதரவு.

‘Meat eaters’ (இறைச்சி) என்று 
அழைக்கப்படும் அமெரிக்க இளைஞர்கள்
meatless - இறைச்சி அல்லாத உணவை 
நாடிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். 
முக்கியக் காரணங்களைப் பட்டியல் போட்டால்,
மிருகங்களைப் பேணி வளர்ப்பதில் 
அக்கறை:
மத, கலாசாரக் கோட்பாடுகள்:
உடல் நல அக்கறை:
குடும்பத்தினரின் வற்புறுத்தல்:
பிடித்த, பிடிக்காத உணவு வகைகள்:
சுற்றுச்சூழலில், அதிகக் கவனம்:
இந்தச் சர்வே, மேலும் சொல்கிறது: 
1980இல்,அசைவர்கள்,சைவர்களை 
கேட்ட கேள்வி,
ஏன் நீங்கள் சைவ உணவு வேண்டும் 
என்று கேட்கிறீர்கள்?” 
2008இல்,அசைவர்கள்(கணிசமானவர்கள்)
நான் சைவ உணவைச் சாப்பிடுவதற்கு 
ஏன் தயங்கினேன்.”என்று நினைக்கிறார்கள்.
இந்த vegetarian உணவு சாப்பிடுபவர்களை 
3 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
Vegan - (வேகன்) - இவர்கள்
எந்த விலங்கு சம்பந்தமான உணவுகளையும் 
சாப்பிடாதவர்கள்.
Lacto Vegetarian - இவர்கள், இறைச்சி
சிக்கன்,மீன், முட்டை எதுவும் 
சாப்பிட மாட்டார்கள். 
ஆனால், பால் சம்பந்தமானப் 
பொருள்களைச் சாப்பிடுவார்கள்.
Lactoovo Vegetarian - 
இவர்கள் இறைச்சிசிக்கன், மீன் 
வகைகளைச் சாப்பிட மாட்டார்கள். 
ஆனால் முட்டை, பால் சம்பந்தமான 
உணவுகளைச் சாப்பிடுவார்கள்.
எப்பொழுதுமே, பெற்றோர்களுக்கும் 
வாலிப வயதினருக்கும் (adolescents) 
ஒரு அமைதியான சூழ்நிலை இருக்கவே 
இருக்காது. 
இரண்டாங்கெட்டான் வயது. 
எதையுமே எதிர்க்க வேண்டும் என்று 
மனதுக்குள் ஒரு குமுறல். 
இருக்கிற பிரச்சினை போதாது 
என்று இப்பொழுது இந்த உணவுப் 
பிரச்சினையும் சேர்ந்துகொண்டுவிட்டது.
60 - 70இல் பிறந்த அமெரிக்கப் பெற்றோர்கள்
roast beef, fried chicken என்று 
பழக்கப்படுத்திக் கொண்டவர்கள். 
இவர்களுடைய adolescent குழந்தைகள் 
இதற்கு எதிர்ப்புக் கொடி காட்டுகிறார்கள். 
இவர்களுடைய வாதம்: 
Eating meat in any form is unhealthy, 
inhumane and uncool.
இறைச்சியை எந்த ரூபத்தில் சாப்பிட்டாலும் 
அது ஆரோக்கியமில்லாதது
மனிதத் தன்மையற்றது
ஒத்துக்கொள்ள முடியாதது.
முன்னர் சொன்னபடி
இவர்களுக்கு அசைவத்தை 
எதிர்க்க நிறைய விஷயங்கள் 
இருக்கின்றன.-
மிருகங்களின் மேல் உள்ள அக்கறை.  
கால்நடை பராமரிப்பு,மழைக்காடுகளை 
அழிக்கிறது.
இறைச்சி சாப்பிட்டால் உடல் 
ஆரோக்கியம் கெடும்
இறைச்சி எடையைக் கூட்டும்
இப்படிப் பல. 
அதனால் இன்றைய இளைஞர்களில் 
பலபேருக்கு நடக்கும், நீந்தும், பறக்கும்’ 
விலங்குகளிடமிருந்து கிடைக்கும் உணவைக் 
கண்டாலே ஒரு அருவெறுப்பு.
இதன் விளைவு, Dinning tableல் tension.
அநேக வீடுகளில், தாய்மார்கள் 
(சில சமயம், தகப்பன்மார்களும்) 
குழந்தைகளுக்குத் தனி
தங்களுக்குத் தனி என்று இரண்டு வகை 
உணவுகளைத் தயாரிக்கிறார்கள். 
அது ஒன்றும் பிரச்சினை இல்லை. 
ஒரு தாயார் புலம்புகிறாள், 
என் இளைய பெண்ணுக்கு 
(13 வயது) tofu burger பிடிக்கும்
என்னுடைய 16 வயதுப் பெண் 
இறைச்சி மாதிரி look இருக்கிற எந்தப் 
பொருளையும் சீண்ட மாட்டாள்." 
இன்னொரு தாயார்,"என்ன சமைப்பது 
என்று ஒரு நெருடலான சமாச்சாரம். 
எப்படியோ சமாளித்துவிடலாம். 
ஆனால், நாங்கள் மாமிச உணவை 
சாப்பிட உட்கார்ந்தால்
எங்களுக்குக் கிடைக்கும் 
உபதேச மொழிகளைத் தாங்க முடியாது. 
ஆசையோடு, pork chipsஐ சாப்பிட 
நேர்ந்தால் உடல் கொழுப்பு, கொலஸ்ட்ரால் 
என்று ஒரு medical புள்ளிவிவரங்களை 
அள்ளி வீசி
ஏன் சாப்பிட நினைத்தோம் என்று 
புலம்ப வைத்துவிடுகிறார்கள்” 
என்று ஒரு  பத்திரிகையில் பேட்டி 
கொடுத்திருக்கிறாள்.
இன்னொரு தாயார் சொல்கிறார்: 
“grocery storeல் இறைச்சி பக்கம் போனால் 
என்னுடைய பெண்
இந்த graveyardஐ விட்டு 
வேறு இடத்துக்கு போகலாமா?"
என்று சீறுகிறாள்

எல்லா எதிர்மறைகளுக்கும் ஒரு பிரகாசமான 
பக்கம் இருப்பது போல்
இந்தப் பனிப்போருக்கும் 
ஒரு brighter side இருக்கிறது என்று 
அநேகம் பெற்றோர்கள் நம்புகிறார்கள்.
இன்றைய இளைஞர் சமுதாயம்
பெற்றோர்களிடமும் சமுதாயத்திடமும் 
இருக்கும் தங்கள் எதிர்ப்பைக் காட்டப் 
பல கெட்ட விஷயங்களில் ஈடுபட்டு 
அதன் மூலம் தங்களை heroக்களாக 
நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, புகைப்பிடிப்பது
மது அருந்துவது,
போதைப் பொருளை உபயோகிப்பது
வகுப்புக்குச் செல்லாமல் மட்டம் அடிப்பது
பாலியலில் ஈடுபடுவது
ரவுடிக் கூட்டத்துடன் சேர்வது
இத்யாதி. 
சைவ உணவு சாப்பிடுவதையும் 
ஒரு எதிர்ப்பாகத்தான் நினைக்கிறார்கள். 
அது அவர்கள், உணர்வுகளை வெளிப்படுத்த 
உதவினால், அது நல்லதுதானே?

மேலே சொன்ன கெட்ட பழக்கங்களைவிட 
இது ஒன்றும் மோசமான விளைவை 
ஏற்படுத்தாதே
வெஜிடேரியனிசம், இவர்களை 
மற்ற கெட்ட பழக்கங்களிலிருந்து 
திசைத் திருப்பினால், அது வரவேற்க 
வேண்டிய விஷயம்.

கொசுறு நன்மைகள்:

சில அமெரிக்க இளைஞர்கள் தங்களுக்கு 
வேண்டிய சைவ உணவைத் 
தாங்களே சமைத்துக்கொள்கிறார்கள்.

இன்னும் சில குடும்பங்களுக்கு 
மளிகை பில்லில் கணிசமான 
சேமிப்பு ஏற்படுகிறது.
எல்லாவற்றையும்விட, 
மகிழ்ச்சி தரும் செய்தி 
என்னவென்றால்
இந்தப் போக்கு வளர்ந்தால்
இதுவரை அமெரிக்க பெற்றோர்கள் 
கண்டிராத ஒரு காட்சியைப் பார்த்து 
மகிழ்ச்சி அடைவார்கள்.

அந்தக் காட்சி என்ன?

தங்கள் மக்கட்செல்வங்கள், 
சந்தோஷமாகக் 
காய்கறிகளைச் சாப்பிடும் காட்சி.

... கிளறல் தொடரும்.
















1 comment:

Anonymous said...

ஐயா, தங்கள் ப்ளாக்கில் மிக நல்ல பதிவுகள் உள்ளன. இட்லிவடையிலிருந்து வந்தேன். ப்ளாக்கின் அகலத்தை சற்று அதிகரித்து, எழுத்துருக்களின் அளவை சற்று குறைத்தால் படிப்பதற்கு ஏதுவாக இருக்குமென்பது என் தாழ்மையான வேண்டுகோள். நன்றி.