Wednesday, November 07, 2012

எதிர்மறையாகவே இயங்கும் உலகத்தில் நம்பிக்கையுடன் (Positive) வாழ்வது எப்படி?



சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்: 
"ஒரு நாளில்நீங்கள் எந்தப் 
பிரச்சினையையும் சந்திக்கவில்லை 
என்றால்நிச்சயமாக நீங்கள் 
ஏதோதப்பான வழியில் 
பிரயாணம் செய்துகொண்டிருக்கிறீர்கள்."
(In a day, when you don't come 
across any problem, 
you can be sure that 
you are travelling a wrong path)
சுவாமிஜி இதை ஒரு ஜோக்காகச் 
சொல்லியிருக்க மாட்டார். 
சொன்னது
அவர் வாழ்ந்த வாழ்க்கைச் 
சூழ்நிலையில்
அதாவது 100 ஆண்டுகளுக்கு 
முன்னால். 
"பிரச்சினை இல்லாத மனித வாழ்க்கை 
இருக்க முடியாது" என்று சொன்ன 
சுவாமிஜி
பிரச்சினையே வாழ்க்கையாக 
மாறிவிட்டிருக்கும் 
இந்தக் காலத்தைப் பற்றி 
எப்படி வர்ணித்திருப்பார்?
அலுத்து, வெறுத்துப்போன சூழ்நிலை-  
எங்கு திரும்பினாலும். 
ஒரு லிஸ்ட் போடலாம் என்றால்
எவ்வளவு நீளம் அது போகும்
எதைச் சேர்க்கணும்
விலைவாசி, பவர்கட்
பெட்ரோல் விலைசுகாதாரம்
கொலை, கொள்ளை
கற்பழிப்புஏமாற்றல்
ஒழுங்கின்மைலஞ்சம்
கோவில் சொத்து திருடுபோவது
scandals, scams  etc... etc...
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு 
விதத்தில் வெவ்வேறு பரிமாணத்தில் 
இந்தப் பிரச்சினைகள் தாக்குகின்றன.
"சர்வம், பிரம்ம மயம் ஜகத்" — 
இந்த உலகம் முழுவதும் 
"பிரம்மம்" என்பது வேத வாக்கு. 
இன்றைய புது மொழி: 
"சர்வம் டென்ஷன் மயம் ஜகத்". 
எல்லாமே டென்ஷன்’. 
டென்ஷன்’ வந்தால் stress. 
stress வந்தால் 
எல்லா வியாதிகளும் 
தேடி வரும். 
நிம்மதி போய்விடும்.
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” 
என்று பாடத் தோன்றும்.
இப்படி இருக்கிற 
எதிர்மறை உலகில் 
எப்படி நிம்மதி கிடைக்கும்
எப்படி பாஸிடிவாக வாழ முடியும்?
தர்மர், அரிச்சந்திரன் போன்ற 
புராணகால மனிதர்களால் 
இன்றைய சூழ்நிலையில் 
வாழ முடியுமா?
முடியும்- என்கிறார்கள், 
மகான்கள்படித்த பெரியோர்கள். 
சொல்லில் மாத்திரம் இல்லை
வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள்.
இந்தப் பெரியோர்கள் சொல்லும் 
வழி ரொம்ப சிம்பிள்.


"வரும்முன் காப்பது" - 
அதாவது வியாதி வந்த பிறகு 
குணப்படுத்த முயலாமல்
வியாதிக்கான காரணங்களை 
ஆராய்ந்து அவற்றைத் தவிர்க்க முயல்வது.

இந்த stressக்கு மூல காரணம்: 
ஒன்றேதான். 

அது நம்முடைய எண்ணங்கள் 
(Thoughts) 
Frank Outlaw என்ற பெரியவர் 
சொல்கிறார்.
எண்ணங்களைக் கவனியுங்கள்  - 
அவை வார்த்தைகளாக மாறுகின்றன.
வார்த்தைகளைக் கவனியுங்கள் - 
அவை செயல்களாக மாறுகின்றன.
செயல்களைக் கவனியுங்கள்-              
அவை பழக்கங்களாக மாறுகின்றன.
பழக்கங்களைக் கவனியுங்கள்-
அவை உங்கள் குணங்களாக மாறுகின்றன.
குணங்களைக் கவனியுங்கள்            
அவைதான் உங்கள் விதியாக 
(destiny) ஆகிறது.
Watch your thoughts; 
they become words
Watch your words;             
they become actions
Watch your actions;    
they become habits
Watch your habits              
they become your character
Watch your character  
it becomes your destiny.

எண்ணங்கள்தான் மனிதர்களை 
நல்லவர்களாகவோ
கெட்டவர்களாகவோ 
உருவாக்குகின்றன. 
வார்த்தைகள் இரண்டாம்பட்சம்தான். 
எது நடக்கிறதானாலும்
அது ஒருவருடைய 
எண்ணத்தின் பிரதிபலிப்புத்தான்.

பணம்தான் பிரதானம் என்று 
நினைத்தால் பணப்பேய்களாகத்தான் 
உருவெடுப்பீர்கள். 
பிரச்சினைகளைப் 
பலாத்காரத்தின் மூலம் 
சாதிக்க முடியும் என்று நினைத்தால்
நீங்கள் பலாத்காரவாதிகளாகத்தான் 
செயல்படுவீர்கள். 
அதனால்தான்சான்றோர்கள் 
அடிக்கடி சொல்கிறார்கள் 
"நல்லதை நினையுங்கள் - 
நல்லதே நடக்கும்" என்று.
உங்கள் வாழ்க்கை 
நன்றாக அமைய 
வேண்டுமானால் 
உங்கள் எண்ணங்கள் 
பாஸிடிவாக இருக்க வேண்டும். 
பாஸிடிவாக நினைப்பது
நடப்பது ,எப்படி என்பதைப் பற்றிச் 
சொன்ன கருத்துகளின் 
சாம்பிள் தொகுப்பு 
இதோ...

Matthew Ferry - விளையாட்டு 
வீரர்களின் coach சொல்கிறார்:
வாழ்க்கையில் நடந்த 10 விஷயங்களைப் 
பற்றி ஒரு லிஸ்ட் தயார்பண்ணுங்கள் 
(எதுவானாலும் பரவாயில்லை. 
"என்னிடம் கார் இருக்கிறது". 
"என் குடும்பத்தோடு சேர்ந்திருக்கிறேன்") 
அதே மாதிரி, 10 தற்கால, நீண்ட 
கால இலக்குகளைப் பற்றி 
ஒரு பட்டியல் தயார்பண்ணுங்கள். 
ஒவ்வொரு நாள் இரவிலும்
2 பட்டியல்களையும் பரிசீலனை 
செய்யுங்கள். 
நாம் நிறைய விஷயங்களை 
யதார்த்தமாக எடுத்துக்கொள்கிறோம். 
இந்தப் பரிசீலனை உங்களை பாஸிடிவாக 
எண்ண வைக்கும். 
உங்கள் முன்னேற்றத்திலும் 
ஒரு நிச்சயமான வேகம் 
(momentum) கூடும்.

Dr. Beverly Conrad, Psychologist 
சொல்கிறார்:
Face your fears - 
பயத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். 
அப்படிச் செய்யவில்லை என்றால் 
பயமே உங்களைக் கொன்றுவிடும். 
எத்தனையோ வழிகள் இருக்கின்றன. 
பயத்தைத் தவிர்க்க- 
எதிர்மறை எண்ணங்கள் கொண்ட 
நபர்களுடன் தொடர்பு கொள்ளாதீர்கள். 
நம்பிக்கையோடு வாழும் நண்பர்களைத் 
தேடிக் கூட்டுச் சேர்ந்தால் 
அவர்களுடைய positive எண்ணங்கள் 
உங்களையும் வந்தடையும். 
உடற்பயிற்சி அவசியம்.      

Bob Stahl, meditation teacher 
சொல்கிறார்:
Count your blessings - 
உங்கள் வாழ்க்கையில் கிடைத்த 
நன்மைகளை எண்ணி நினைத்து 
சந்தோஷப்படுங்கள்.
Take a three second break.
செய்கிற வேலையை 3 வினாடிகள் 
நிறுத்துங்கள். 
நன்றாக மூச்சுவிடுங்கள். 
உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது 
என்று கவனியுங்கள். 
பிறகு உங்கள் வேலையைத் தொடருங்கள்.

இன்னும் சில அறிவுரைகள்:

நீங்கள் அமைதியாக இல்லாதபோது
யாருக்கும் அவசரப்பட்டு பதில் 
சொல்லாதீர்கள்.

அமைதியான குரலில் உரையாடுங்கள். 

ஞாபகம் வைத்துகொள்ளுங்கள் — 
எல்லோரையும் எப்போதும் 
திருப்திபண்ண முடியாது. 

யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். 

இந்த வாழ்க்கை ஒரு சவால்
அது எப்போதும் நியாயமானதாக 
இருக்காது. 
அந்தச் சமயத்தில் மனத்தைத் 
தளரவிடக் கூடாது. 
வாழ்க்கை நன்றாக 
ஓடிக்கொண்டிருக்கும்போது 
சந்தோஷமாகவும், நன்றி 
உணர்வோடும் செயல்படுங்கள். 

எல்லோரையும் எக்காலத்திலும் 
மன்னியுங்கள். 

சுறுசுறுப்பாக இருங்கள். 

உங்களையே குறைசொல்லிக்
கொண்டிருக்காதீர்கள்.

கோபப்படாதீர்கள்: 
மகான் புத்தர் சொல்கிறார்: 
"கோபத்தோடு இருப்பது 
ஒரு சூடான கரித்துண்டைக் 
கையில் வைத்துக்கொண்டு 
இன்னொருவர் மேல் எறிய நினைப்பது 
போல. அதில் பாதிக்கப்படப்போவது
நீங்கள்தான். 
உங்கள் கைதான் காயப்படும்."

இன்றைக்காக வாழுங்கள்:
மகாகவி காளிதாசர் சொல்கிறார்:

"For yesterday is but a dream.
And tomorrow is only a vision.
But, today, well lived means
make yesterday a dream of happiness
And every tomorrow a vision of hope"

சுவாமி விவேகானந்தர் - 
மூன்று பொன்னான விதிகளைப் 
பின்பற்றச் சொல்கிறார்.










யார் உங்களுக்கு உதவுகிறார்களோ
அவர்களை மறக்காதீர்கள்
யார் உங்களை நேசிக்கிறார்களோ
அவர்களை வெறுக்காதீர்கள்
யார் உங்களை நம்புகிறார்களோ
அவர்களை ஏமாற்றாதீர்கள்

மேலும் சொல்கிறார்: 

Never break- 
Trust, Promise, Relation and Heart. 
Because when they break 
they don't make noise 
but pains a lot.

நம்பிக்கை, வாக்குறுதி
உறவு, இருதயம் —  
இந்த நான்கையும் உடைக்காதீர்கள். 
உடைத்தால் சத்தம் வராது
வலிதான் மிஞ்சும்.

எண்ணங்கள் நல்லதாக இருந்தால்
நமக்கு மனநிம்மதி கிடைக்கும். 
வெற்றி உண்டாகும். 
மற்றவர்களுடன் உறவுகள் 
நன்றாக அமையும். 
நல்ல ஆரோக்கியம் உண்டாகும். 
சந்தோஷம் அடைவோம். 
திருப்தி உண்டாகும்.
பதற்றமும், கவலையும் 
இல்லாத வாழ்க்கை கிடைக்கும்.

Let noble thoughts come to us 
from everyside.  - Rig Veda.
நல்ல எண்ணங்கள் 
எல்லா திசைகளிலிருந்தும்
நம்மிடம் வரவேண்டும்-
ரிக் வேதம்











கொசுறு: 
பாஸிடிவ் எண்ணத்திற்கு 
ஒரு உதாரணம்.

ஒரு இளைஞன் ஒரு பெண்ணைக் 
காதலித்தான்.
 "உன்னைக் கல்யாணம் 
பண்ணிக்கொள்ள ஆசை" 
என்று சொன்னான். 
அவள் அவனை நிராகரித்து விட்டாள். 
அவன் மனத்தளர்ச்சி அடையவில்லை. 
அவன் நண்பர்களுக்குக் கவலை. 
அவனைத் தேற்றி
 "உனக்கு வருத்தமில்லையா?" 
என்று கேட்டார்கள். 
அவன் சொன்னான்
"எனக்கு வருத்தமே இல்லை. 
நான் இழந்தது என்ன
காதலிக்காத ஒரு பெண்ணை. 
ஆனால் அவள் இழந்தது
அவளை உண்மையாகக் 
காதலித்தவனை. 
யாருக்கு அதிக நஷ்டம்?" 
என்றான்.


...கிளறல் தொடரும்.

2 comments:

பாலாஜி said...

Very relavant and meaningful article, for today. Good one Mama

Elango Gopal said...

நம் இருதயத்தில் பாவத்தின் ஆளுகை இருக்கும்வரையில் சமாதானமும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கவே கிடைக்காது.

பாவத்தின் வேர் அறுக்கப்படவேண்டும், சமாதானத்தைக்கொடுக்கும் இயேசுவை நம் இருதயத்தில் வரவேற்க்கவேண்டும்.


இயேசுவிடம் நம் பாவங்கள் அனைத்தையும், ஒப்புக்கொண்டு அவரோடு அனுதினமும் நடந்தால் மட்டுமே நமக்கு மனநிம்மதியும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கும்.

Regards,
gopalelango.blogspot.com