Monday, August 27, 2012

மின்னல் செய்தி - நடந்து கொண்டிருக்கிறது "போர்"- அமெரிக்காவில்


இது என்ன ‘புருடா’ செய்தி? 
ஏப்ரல் முதல் தேதி கூட இல்லையே?
ஆனால் இது உண்மை. 
இந்தப் போர் நீங்கள் நினைக்கிற 
மாதிரி ஆயுதங்களோடுப் போராடும் 
உலக யுத்தம் இல்லை.
இது ஒரு பனிப்போர்.
நடப்பது எங்கே? 
அமெரிக்காவில் சில பல வீடுகளில், 
குறிப்பாக, சமையல் அறை மேஜையில்: 
“சார், குழப்பாதீர்கள்! 
தலையைப் பிய்த்துக்கொண்டு 
தெருவில் ஓடுவதற்குமுன் தயவுசெய்து 
புரியும்படி சொல்லுங்கள்” என்று 
நீங்கள் அலறுவது கேட்கிறது. 
இதோ, அந்தப் ‘போரின்’ விளக்கம்.