Monday, April 15, 2013

ஞமலி (நாய்) புராணம் தொகுத்தவர்: வேதவியாச தாசன் தி.சு. பாம்பரசனார் பகுதி - 2


குருமார்களுக்கு வணக்கம்
விநாயகருக்கு வணக்கம்
   எல்லா தெய்வங்களுக்கும் 
வணக்கம்.
காலபைரவரை மனதில் நினைத்து
தி.சு. பாம்பரசன் என்ற 
திருநெல்வேலி 
சுப்ரமணிய நாகராஜன் 
இந்தநாய்புராணத் தொகுப்பைச் சமர்பிக்கிறேன். 








(என் முழுப் பெயரைக் 

கொடுத்ததன் காரணம் 
பிற்காலத்தில் ஒருவேளை
இது பிரபலமான 
காவியமாக ஆகும் பட்சத்தில் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் 
மண்டையைப் போட்டுக் 
குழப்பிக்கொள்ளக் கூடாது 
என்ற நல்ல எண்ணம்.)
இந்தப் புராணத் தொகுப்பில் 
பங்கேற்கப் போகும் 
இன்னொரு நபர் 
என் மனைவி - 
பிரபா நாகராஜன். 
பிரபா -அவர்கள் பெற்றோர்கள் 
இட்ட பெயர். 
என்னைத் திருமணம் செய்தபின் 
எங்கள் வழக்கப்படி என் பெயரைச் 
சேர்த்துக்கொண்டார்கள். 
இந்த இணைப்பின்படி பெரும்பாலான இந்தியப் பெண்மணிகள் தங்கள் 
சுய அடையாளத்தை இழந்து
 "கணவனே கண் கண்ட தெய்வம்" 
என்ற தாரக மந்திரத்தில் ஊறிப்போய் வாழ்கிறார்கள் என்பது கண்கூடு.
என் மனைவி கல்யாணமாகியும் 
தனக்கு என்று ஒரு தனிஅடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டாள். 
சங்கீதம், தத்துவம், சமஸ்கிருதம்
நாட்டியம் என்று பல துறைகளில் 
பட்டம் பெற்றவர்கள். 
பார்வதி-பரவேஸ்வரர்
ராதா-கிருஷ்ணன்
வள்ளுவர்-வாசுகி
இந்த லட்சிய தம்பதிகளுக்குப் பிறகு 
பிரபா-நாகராஜன் தம்பதிகள்தான் 
(என்று யாரும் சொல்லவில்லை) 
நாங்களே சொல்லிவருகிறோம் - 
51 ஆண்டுகளாக.
என் மனைவிதான் என் 
முதல் விசிறி. 
என் கட்டுரைகள் மனதில் 
தோன்றியவுடன் அவளுடன்தான் விவாதிப்பேன். 
இதுவரை - "one sided"தான்.
ஏனோ தெரியவில்லை - 
இந்த "நாயை"ப் பற்றி 
எழுதப்போகிறேன் என்று 
சொன்ன மாத்திரம் அவளிடமிருந்து ஏகப்பட்ட ஆட்சேபணைங்கள்
எங்கள் உரையாடலின் 
ஒரு பகுதி இங்கே:

பிரபா: வேற சப்ஜக்டே 
கிடைக்கலையா
போயும்போயும் எல்லாராலும் 
திட்டப்படும் ஒரு கடை 
ஜென்மத்தைப் பற்றியா எழுதப்போகிறீர்கள்
உங்களுக்குத்தான் நாயைக் 
கண்டாலே பயமாச்சே
எத்தனை தரம் அந்த நிகழ்ச்சியைப் 
பற்றிப் புலம்பியிருக்கிறீர்கள்.
நான்: ஓ, அதைச் சொல்கிறாயா