Tuesday, September 24, 2013

வியாசரின் கருட புராணமும் டான்டேயின் நரகமும் (Inferno)


தலைப்பைப் பார்த்தவுடன்,
"அப்துல் காதருக்கும் 
கோகுலாஷ்டமிக்கும் 
என்ன சம்பந்தம்?" என்று 
கேட்கத் தோன்றுகிறதா
கேள்வி நியாயமானதுதான்... 
கருட புராணம் 
ஒரு இந்துப் புராணம். 
டான்டேயின் Inferno 
ஒரு கிறிஸ்தவக் காவியம். 
இரண்டும் இரு துருவங்களாயிற்றே! 
எப்படிச் சம்பந்தமிருக்கும்?

சம்பந்தம் இருக்கிறது...

நரகம் -Hell-Inferno -என்பதுதான். 











இந்த இரண்டு மதங்களுக்கு மாத்திரமல்லாமல் மற்ற 
மதங்களுக்கும் உண்டான 
தொடர்பு சித்தாந்தம்.

எல்லா மதங்களும் 
ஒப்புக்கொண்ட 
ஒரு நம்பிக்கை -
பாவம் செய்தவர்கள் 
தங்கள் மரணத்திற்குப் பிறகு 
நரகத்திற்குச் சென்று 
தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தண்டனைகளை அனுபவிப்பார்கள்.

Linearமதங்கள் என்று 
சொல்லப்படும் இஸ்லாம்
கிறிஸ்துவ மதங்கள் 
நரகம் என்பது ஒருமுடிவில்லாத 
இடம் என்று நம்புகிறார்கள்.

Cyclic என்று சொல்லப்படும் 
மதங்கள், குறிப்பாக 
இந்து மதம், தண்டனைகளை 
நரகத்தில் அனுபவித்த பிறகு 
மானிடப் பிறவி மறுஜென்மம் 
எடுத்து மீண்டும் 
பிறக்கிறான் என்று 
சொல்கிறது.

எப்படிப் பார்த்தாலும்
நரகம் என்பது ஒருகொடிய இடம். அங்கேதான் இறந்தவர்களின் 
பருஉடல் (gross body) சரீரம் 
செல்கிறது என்பது 
ஒப்புக்கொள்ளப்பட்ட 
கருத்து.

"பாவிகள் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள்" 
என்பது உலக நியதி.

இதற்கு விதிவிலக்கு
மெகா டி.வி. சீரியல் எழுதும் 
ஆசிரியர்கள். 
365 எபிசோடுகளில் 
364 எபிசோடுகள் வில்லி 
கதாநாயகியைக் கொடுமைப் 
படுத்துவதாகக் காட்டுவார்கள். 
365 ஆவது எபிசோடில் வில்லி
தன் தவறுகளை உணர்ந்து 
கதாநாயகியிடம் ஒரு "sorry" 
கேட்பாள். கதாநாயகியும் 
"எதற்காக இப்படிபட்ட 
பெரிய வார்த்தைகளைச் 
சொல்லுகிறீர்கள்?" என்பாள். 
சீரியல் முடியும்.

எனக்கு ரொம்ப நாள் கனவு. 
ஏன் கடவுள் இப்படி நடந்து
கொள்ளக் கூடாது
ஒரு "சாரி" போதுமென்றால்
நாமெல்லாம் ஜாலியாகத் 
தப்புத்தண்டாவே 
பண்ணிக்கொண்டு 
காலம் கழிக்கலாமே
கடவுள் கொஞ்சம் கறாரான 
பேர்வழி. 
யாரையும் தண்டனையிலிருந்து 
தப்பவிட மாட்டார்.

அதற்காக ஒரு eloborate plan 
பண்ணி அதை ஒரு துல்லியமான 
சாஸ்திர விதிகளாக 
அமைத்திருக்கிறார்.

நரகத்தைப் பற்றியும் 
அதில் கொடுக்கப்படும் 
தண்டனைகளைப் 
பற்றியும் எல்லா மதங்களிலும் 
விவரமாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இரண்டு காவியங்களில் 
எப்படி நரகம் 
வர்ணிக்கப்பட்டிருக்கிறது 
என்பதை இப்போது பார்ப்போம்.

இந்த வாரம் கருட புராணத்தைப் 
பற்றியும்
அடுத்த வாரம் 
டான்டேயின் Inferno பற்றியும் 
கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.