Saturday, June 08, 2013

காப்பி அடிப்பதில் தவறில்லை என்கிற சில அமெரிக்க நாகரிகங்கள் :1-வீட்டோடு அப்பா


மேல்நாட்டு நாகரிகத்தின் 
தாக்கம் இந்தியர்கள் வாழ்க்கையில் 
புதியதல்ல. வெள்ளைக்காரனிடம் அடிமைகளாக இருந்தபோது வெள்ளைக்காரர்கள், 
எப்படித் திட்டமிட்டு, 
இந்தியக் கலாச்சாரத்தைச் 
சீரழித்தார்கள் என்பது சரித்திரம் 
படித்தவர்களுக்குத் தெரிந்த விஷயம். 
வெளிநாட்டு மோகத்தைக் 
கண்டித்துப் போராட்டங்கள் 
நடத்தப்பட்டன என்பதும் 
தெரிந்ததுதான்.
"டமிலில்" பேசுவது அநாகரிகம் 
என்ற காலம் இருந்தது. 
சுதந்திரம் வந்தவுடன் இந்தியக் கலாச்சாரத்தின் அருமை புரிந்து 
மக்கள் செயல்பட ஆரம்பித்தார்கள். 
ஆனால், மேல்நாட்டு நாகரிகம், 
நாம் கேட்காமலேயே மறுபடியும் 
நம் வாழ்க்கையில் விளையாட 
ஆரம்பித்தது. 
உலகமயமாதல் (Globalisation) 
என்றபடி உலகத்தின் வெவ்வேறு பகுதிகளின் நாகரிகங்கள், 
உலக மீடியாக்கள் மூலம் 
இந்தியாவைத் தாக்க ஆரம்பித்தன.

புத்தாண்டுக் கொண்டாட்டம், 
காதலர் தினம், அன்னையர் தினம், டிஸ்கோ, social drinking, 
புகைபிடித்தல், Drugs, reality shows 
in T.V., பெண்கள் உரிமை, 
விவாகரத்து ரத்து, நாகரிக உடைகள், சுதந்திரமாக வாழ ஆசை, 
கூட்டுக் குடும்பத்தின் மேல் 
வெறுப்பு... 
இப்படி நிறைய விஷயங்கள் 
நம்மிடையே, குறிப்பாக நகர்ப்புற வாசிகளிடம் அதிகம் பரவிவருகின்றன.

இவை நல்லதா? கெட்டதா? 

என்று பட்டிமன்றம் போட்டு 
விவாதிக்க வேண்டிய 
அவசியத்திற்காக 
இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. 
காப்பி அடிப்பது என்று தீர்மானித்துவிட்டோம். 
அதில் என்ன "கொசுறு" 
வைக்க வேண்டும்? 
அப்படி காப்பி 
அடிக்கத் தகுதிபெற்ற 
சில நாகரிகங்களை, 
குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து 
நாம் ஏன் பின்பற்றக் கூடாது? 
உதாரணத்திற்கு, 
வீட்டோடு அப்பா 
(Stay Home Dads), 
Single Mom, கல்விமுறை, 
அமெரிக்க கல்யாணங்கள் etc. 
இவற்றைப் பற்றிக் கொஞ்சம் 
அலசி, இந்தியாவிற்கு 
அவை பொருந்துமா? 
என்று பார்க்கும் நோக்கத்தோடு 
இந்தக் கட்டுரைத் தொடர் 
எழுதப்படுகிறது.