Tuesday, October 01, 2013

டான்டேயின் நரகம் (Inferno)




























டான்டே (Dante)-(1265 -1321)

இவருடைய முழுப் பெயர் - 
Dante Alighieri

இவர் ஒரு இத்தாலிய கத்தோலிக்கக் 
கவிஞர். இவர் பிறந்த ஊர்  
Florence நகர், இத்தாலி. 
சில காரணங்களுக்காக, 
ப்ளாரன்ஸிலிருந்து வெளியேற்றப்பட்ட 
இவர், ரவீனா (Ravenna) என்ற ஊரில் 
மலேரியா வந்து இறந்தார். 
அங்கே உள்ள ஒரு மாதாகோவிலில் 
இவர் உடல் அடக்கம்செய்யப்பட்டிருக்கிறது. 
இவர் உடலை ப்ளாரன்ஸ் நகருக்கு 
எடுத்துச்செல்ல நடந்த முயற்சி 
கைகூடவில்லை. 
ப்ளாரன்ஸ் நகரில் இவருக்காக 
ஒரு காலி  கல்லறை காத்திருக்கிறது. 
ரவீனாவில் உள்ள இவருடைய 
கல்லறையில் எரிந்துகொண்டிருக்கும் 
விளக்குக்கான எண்ணெய் இன்றும் 
ப்ளாரன்ஸ் நகரிலிருந்து வருகிறது.

ஹோமர், ஷேக்ஸ்பியர் போல 
இவருடைய வாழ்க்கைப் பின்னணி 
பற்றியும் சரித்திர ஆசிரியர்களிடம் 
ஒத்த கருத்து இல்லை. 
சிறுவயதிலேயே மணமானவர். 
இவருக்கு பியாட்ரிஸ் என்ற காதலி 
இருந்ததாகவும், அவள்தான் அவருடைய 
பாடல்களில் இடம்பெற்றிருக்கிறாள் 
என்றும் சொல்லுகிறார்கள்.

இவருடைய masterpieceன் பெயர்  
La Comedia. 
ஆங்கிலத்தில் Divine Comedy. 

காமெடி என்பதால் இவர் காவியம் 
ஒன்றும் தமாஷானது அல்ல. 
இதன் முக்கிய கதாபாத்திரம் 
(டான்டேயேதான்) ஒரு மங்களகரமான, 
சந்தோஷமான முடிவை—
அதாவது கடவுளின் கருணை 
வடிவத்தை - சந்திக்கிறார். 
1302இல் ஆரம்பித்து 1321இல் 
இதை எழுதி முடித்தார். 
Divine Comedyயில் 14,233 வரிகள் 
உண்டு. ஒரு comparisonக்கு: 
ஹோமரின் Iliad - 15,693 வரிகள்; 
Odyssey - 12,110 வரிகள்; 
வர்ஜிலின் Aeneid - 9,890 வரிகள். 

இது 3 பகுதிகளான ஒரு காவியம்.

Inferno (4720) வரிகள்
Purgatorio (4755) வரிகள்
Paradiso (4758) வரிகள்

முகவுரை தவிர, ஒவ்வொரு பகுதியிலும் 
33 cantoக்கள் உண்டு - மொத்தம் 100.

இதனுடைய சாராம்சம் இதுதான்:

இது ஒரு பாவப்பட்ட கவியின் 
மேலுலுகப் பயணத்தைப் பற்றியது. 
இவர் முதலில் முடிவில்லாத 
தண்டனைகளைக் கொடுக்கும் இடம் 
வழியாக, தற்காலிகப் புனிதத் தன்மையை 
அடைந்து, முடிவில் கடவுளின் அளவில்லாத 
அன்பு உள்ள இடத்திற்கு செல்வது 
(endless bliss).


இந்தப் பயணம் - 5 1/2 நாட்கள்.