Friday, October 11, 2013

சரணாகதி

இது என்னுடைய 
100ஆவது கிளறல்.

எங்கேயோ, ஒரு குரல் கேட்கிறது... 
"இது என்னையா, பெரிய சாதனை, அவனவன் 100 நாளில் 
100 கட்டுரைகள் எழுதுகிறான். 
2 வருஷத்தில் 100 என்பதற்காக
இவ்வளவு பெரிய "Build up."

நியாயமான கேள்வி.
என்னுடையது ஒன்றும் இமாலய 
சாதனை அல்ல என்பது எனக்கு 
நன்றாகவே தெரியும். 
இருந்தாலும், காக்கைக்குத் 
தன் குஞ்சு பொன் குஞ்சு 
அல்லவா
அது போல்தான்
நானும் இந்த நிகழ்ச்சியைச் 
சந்தோஷமாக நினைவுகூருகிறேன். 
100 என்பது ஒரு Magic Number. 
கில்லி, கிரிக்கெட் ஆனாலும்
டெஸ்ட் கிரிக்கெட் ஆனாலும்
சென்சுரி, சென்சுரி தானே
சான்றோர்கள் வாழ்த்தும்போது 
"சதமானம் பவதி, சதாயுஷ் புருஷ:" 
என்றுதானே சொல்கிறார்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு 
முன் ஏதோ தமாஷுக்காக
நானும் வலைப்பூ-blog எழுத 
ஆரம்பித்தேன். 
அது இவ்வளவு தூரம் 
என்னைக் கொண்டுவந்து 
சேர்க்கும் என்று நினைக்கவே 
இல்லை.

நிறைய பேருக்கு நன்றி.
கடவுளுக்கு, மனைவிக்கு
என் குடும்பத்தாருக்கு 
(நான் தமிழில் என்ன 
எழுதியிருக்கிறேன் என்று 
தெரியாமலேயே என்னைப் 
பற்றி தம்பட்டம் அடித்ததற்காக)
என் நண்பன் ராம்
"க்ரியா" ஆஷா
மற்றும் என் நல விரும்பிகள்.

நான் 50 ஆண்டுகள்
"மார்கெட்டிங்"கில் இருந்தாலும் 
அதன் முதல் பாடமான 
"Know your customer" - 
உங்கள் கஸ்டமர் யார்
யாருக்காக எழுதுகிறீர்கள்
என்பதை முழுவதுமாக 
மறந்துவிட்டு 
இந்தக் கிளறலைத் தொடர்ந்து
வந்திருக்கிறேன்.

எனக்குப் பிடித்தது
உங்களுக்குப் பிடிக்கலாம்
பிடிக்கும் என்ற நப்பாசையில்தான் எழுதிவந்திருக்கிறேன்.

கிளறலின் முக்கிய நோக்கம் 
அநேக பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத விஷயங்களைச் 
சேகரித்து எனக்குத் 
தெரிந்த நடையில் சொல்வது. 
அது நிறைவேறியதா 
என்பதை நீங்கள்தான் 
சொல்ல வேண்டும்.
என்வரை, இந்தக் கிளறல் 
பணியை ரசித்து எழுதி
வந்திருக்கிறேன்.

மறுபடியும்
உங்கள் எல்லோருக்கும் 
நன்றி.

இப்போது, கட்டுரைக்குப் 
போகலாமா?

இரண்டு வாராங்களாக
நரகத்தைப் பற்றி நிறையவே எழுதியாயிற்று. 
நரகத்திற்குப் பிறகு 
சுவர்க்கம்தானே
இருட்டுக்குப் பிறகு 
வெளிச்சத்தைத்
தானே எல்லோரும் 
விரும்புவார்கள்.

டான்டே சுவர்க்கத்திற்குச் 
சென்றது போல நாமும் 
எப்படி மோட்சத்தை 
அடைய முயற்சி செய்ய 
வேண்டும் என்பதுதான் 
இந்தக் கட்டுரையின் நோக்கம்.

எச்சரிக்கை: நான் பெரிய ஆன்மீகவாதியில்லை. 
சமய சொற்பொழிவாளர்களில் 
ஒருவனும் இல்லை. 
என்னுடையது எல்லாம் 
கேள்வி ஞானம். ஏற்கனவே 
படித்திருந்தால் 
time passஆக எடுத்துக்
கொள்ளுங்கள்.

"மோட்சம்" - 
இதுதான் மனிதர்கள் 
பெற விரும்பும் உயர்ந்த பலன்.

Tuesday, October 01, 2013

டான்டேயின் நரகம் (Inferno)




























டான்டே (Dante)-(1265 -1321)

இவருடைய முழுப் பெயர் - 
Dante Alighieri

இவர் ஒரு இத்தாலிய கத்தோலிக்கக் 
கவிஞர். இவர் பிறந்த ஊர்  
Florence நகர், இத்தாலி. 
சில காரணங்களுக்காக, 
ப்ளாரன்ஸிலிருந்து வெளியேற்றப்பட்ட 
இவர், ரவீனா (Ravenna) என்ற ஊரில் 
மலேரியா வந்து இறந்தார். 
அங்கே உள்ள ஒரு மாதாகோவிலில் 
இவர் உடல் அடக்கம்செய்யப்பட்டிருக்கிறது. 
இவர் உடலை ப்ளாரன்ஸ் நகருக்கு 
எடுத்துச்செல்ல நடந்த முயற்சி 
கைகூடவில்லை. 
ப்ளாரன்ஸ் நகரில் இவருக்காக 
ஒரு காலி  கல்லறை காத்திருக்கிறது. 
ரவீனாவில் உள்ள இவருடைய 
கல்லறையில் எரிந்துகொண்டிருக்கும் 
விளக்குக்கான எண்ணெய் இன்றும் 
ப்ளாரன்ஸ் நகரிலிருந்து வருகிறது.

ஹோமர், ஷேக்ஸ்பியர் போல 
இவருடைய வாழ்க்கைப் பின்னணி 
பற்றியும் சரித்திர ஆசிரியர்களிடம் 
ஒத்த கருத்து இல்லை. 
சிறுவயதிலேயே மணமானவர். 
இவருக்கு பியாட்ரிஸ் என்ற காதலி 
இருந்ததாகவும், அவள்தான் அவருடைய 
பாடல்களில் இடம்பெற்றிருக்கிறாள் 
என்றும் சொல்லுகிறார்கள்.

இவருடைய masterpieceன் பெயர்  
La Comedia. 
ஆங்கிலத்தில் Divine Comedy. 

காமெடி என்பதால் இவர் காவியம் 
ஒன்றும் தமாஷானது அல்ல. 
இதன் முக்கிய கதாபாத்திரம் 
(டான்டேயேதான்) ஒரு மங்களகரமான, 
சந்தோஷமான முடிவை—
அதாவது கடவுளின் கருணை 
வடிவத்தை - சந்திக்கிறார். 
1302இல் ஆரம்பித்து 1321இல் 
இதை எழுதி முடித்தார். 
Divine Comedyயில் 14,233 வரிகள் 
உண்டு. ஒரு comparisonக்கு: 
ஹோமரின் Iliad - 15,693 வரிகள்; 
Odyssey - 12,110 வரிகள்; 
வர்ஜிலின் Aeneid - 9,890 வரிகள். 

இது 3 பகுதிகளான ஒரு காவியம்.

Inferno (4720) வரிகள்
Purgatorio (4755) வரிகள்
Paradiso (4758) வரிகள்

முகவுரை தவிர, ஒவ்வொரு பகுதியிலும் 
33 cantoக்கள் உண்டு - மொத்தம் 100.

இதனுடைய சாராம்சம் இதுதான்:

இது ஒரு பாவப்பட்ட கவியின் 
மேலுலுகப் பயணத்தைப் பற்றியது. 
இவர் முதலில் முடிவில்லாத 
தண்டனைகளைக் கொடுக்கும் இடம் 
வழியாக, தற்காலிகப் புனிதத் தன்மையை 
அடைந்து, முடிவில் கடவுளின் அளவில்லாத 
அன்பு உள்ள இடத்திற்கு செல்வது 
(endless bliss).


இந்தப் பயணம் - 5 1/2 நாட்கள்.

Tuesday, September 24, 2013

வியாசரின் கருட புராணமும் டான்டேயின் நரகமும் (Inferno)


தலைப்பைப் பார்த்தவுடன்,
"அப்துல் காதருக்கும் 
கோகுலாஷ்டமிக்கும் 
என்ன சம்பந்தம்?" என்று 
கேட்கத் தோன்றுகிறதா
கேள்வி நியாயமானதுதான்... 
கருட புராணம் 
ஒரு இந்துப் புராணம். 
டான்டேயின் Inferno 
ஒரு கிறிஸ்தவக் காவியம். 
இரண்டும் இரு துருவங்களாயிற்றே! 
எப்படிச் சம்பந்தமிருக்கும்?

சம்பந்தம் இருக்கிறது...

நரகம் -Hell-Inferno -என்பதுதான். 











இந்த இரண்டு மதங்களுக்கு மாத்திரமல்லாமல் மற்ற 
மதங்களுக்கும் உண்டான 
தொடர்பு சித்தாந்தம்.

எல்லா மதங்களும் 
ஒப்புக்கொண்ட 
ஒரு நம்பிக்கை -
பாவம் செய்தவர்கள் 
தங்கள் மரணத்திற்குப் பிறகு 
நரகத்திற்குச் சென்று 
தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தண்டனைகளை அனுபவிப்பார்கள்.

Linearமதங்கள் என்று 
சொல்லப்படும் இஸ்லாம்
கிறிஸ்துவ மதங்கள் 
நரகம் என்பது ஒருமுடிவில்லாத 
இடம் என்று நம்புகிறார்கள்.

Cyclic என்று சொல்லப்படும் 
மதங்கள், குறிப்பாக 
இந்து மதம், தண்டனைகளை 
நரகத்தில் அனுபவித்த பிறகு 
மானிடப் பிறவி மறுஜென்மம் 
எடுத்து மீண்டும் 
பிறக்கிறான் என்று 
சொல்கிறது.

எப்படிப் பார்த்தாலும்
நரகம் என்பது ஒருகொடிய இடம். அங்கேதான் இறந்தவர்களின் 
பருஉடல் (gross body) சரீரம் 
செல்கிறது என்பது 
ஒப்புக்கொள்ளப்பட்ட 
கருத்து.

"பாவிகள் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள்" 
என்பது உலக நியதி.

இதற்கு விதிவிலக்கு
மெகா டி.வி. சீரியல் எழுதும் 
ஆசிரியர்கள். 
365 எபிசோடுகளில் 
364 எபிசோடுகள் வில்லி 
கதாநாயகியைக் கொடுமைப் 
படுத்துவதாகக் காட்டுவார்கள். 
365 ஆவது எபிசோடில் வில்லி
தன் தவறுகளை உணர்ந்து 
கதாநாயகியிடம் ஒரு "sorry" 
கேட்பாள். கதாநாயகியும் 
"எதற்காக இப்படிபட்ட 
பெரிய வார்த்தைகளைச் 
சொல்லுகிறீர்கள்?" என்பாள். 
சீரியல் முடியும்.

எனக்கு ரொம்ப நாள் கனவு. 
ஏன் கடவுள் இப்படி நடந்து
கொள்ளக் கூடாது
ஒரு "சாரி" போதுமென்றால்
நாமெல்லாம் ஜாலியாகத் 
தப்புத்தண்டாவே 
பண்ணிக்கொண்டு 
காலம் கழிக்கலாமே
கடவுள் கொஞ்சம் கறாரான 
பேர்வழி. 
யாரையும் தண்டனையிலிருந்து 
தப்பவிட மாட்டார்.

அதற்காக ஒரு eloborate plan 
பண்ணி அதை ஒரு துல்லியமான 
சாஸ்திர விதிகளாக 
அமைத்திருக்கிறார்.

நரகத்தைப் பற்றியும் 
அதில் கொடுக்கப்படும் 
தண்டனைகளைப் 
பற்றியும் எல்லா மதங்களிலும் 
விவரமாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இரண்டு காவியங்களில் 
எப்படி நரகம் 
வர்ணிக்கப்பட்டிருக்கிறது 
என்பதை இப்போது பார்ப்போம்.

இந்த வாரம் கருட புராணத்தைப் 
பற்றியும்
அடுத்த வாரம் 
டான்டேயின் Inferno பற்றியும் 
கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

Friday, September 13, 2013

விடை தெரிந்திருக்க வாய்ப்பில்லாத சில பல கேள்விகள்



யானைக்கு நீந்தத் தெரியுமா?
பச்சோந்தி Backgroundக்கு 

ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளுமா?
நமக்கு எத்தனை உணர்வுகள் 
(senses) உண்டு?

இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் 
விடைகள் இருக்கிறதா?

விடை தெரியவில்லை என்றால் 
தப்பில்லை; 
தைரியமாக, 
‘கற்றது கை மண் அளவு; 
கல்லாதது உலகளவு’ என்ற 
போர்வையில் உங்கள் அறியாமையை 
மறைத்துக் கொள்ளலாம். 
ஆனால், உங்களுக்குள் இந்த மாதிரி கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள 
ஒரு ஆவல் (curiosity) இருக்கிறதா? 
அந்த ஆவல் இருந்தால் நீங்கள் 
நிச்சயமாக ஒரு மனிதப் பிறவிதான். 
ஏனெனில்,மனிதப் பிறவி ஒன்றுக்குத்தான் 
curiosity என்ற 4ஆவது பரிமாணம் 
இருக்கிறது. 
மற்ற 3 பரிமாணங்கள்—
உணவு, பாலியல், தங்குமிடம் 
(food, sex, shelter). 
இந்த மூன்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானவை. 

கழுதைக்குக் கற்பூரத்தின் வாசனை 
தெரிய வேண்டிய அவசியமில்லை. 
அதைப் பற்றி அதற்கு ஆவலும் 
கிடையாது அவசியமும் கிடையாது.

ஆக, மனித இனத்திற்கே உரியதான 
இந்த curiosity ஆவல்தான் 
மனித வாழ்க்கையை மேம்படச் செய்கிறது. 
அந்த ஆவல்தான், மனிதனைக் கேள்வி 
கேட்கத் தூண்டுகிறது.

‘கேள்வி கேட்டால்தான் 

தெளிவு பிறக்கும்.’  
இது சான்றோர் வாக்கு.

பெரிய தத்துவக் கேள்விகளிலிருந்து-
வாழ்க்கை என்பது என்ன? 
மரணம் என்றால் என்ன? 
உப்புசப்பில்லாத கேள்விகள்வர-
ரஜினிகாந்தின் காலை உணவு என்ன?, 
சினிமா நடிகை எத்தனை விவாகரத்துகள் செய்திருக்கிறாள்? 
என்று தினசரி ஆயிரக்கணக்கான 
கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான 
விடைகளும் தேடப்படுகின்றன.

இன்றைய டிஜிடல் உலகம் இந்த 

ஆர்வத்தை நன்றாகவே வளர்த்துவருகிறது.

"Who wants to be a millionnaire" 
‘Master mind’, ‘Jeopardy’, 
‘நீங்களும் கோடிஸ்வரர் ஆகலாம்’ 
‘Jack pot’ என்று 
தினசரி ஏதாவது டி.வி. சேனலில் 
Quiz Programme நடத்தி 
லட்சக்கணக்கான மக்களைக் 
கட்டிபோட்டு வைக்கிறார்கள்.

இந்தக் கேள்விகள் வாழ்க்கைக்கு 
அவசியமா?

இவற்றுக்கு  விடை தெரியாததால் 
சொர்க்கத்தை இழந்துவிடுவோமா? 
என்று கேள்விகள் கேட்காமல் 
இதை பொழுதுபோக்காகக் கருதி 
அந்த முறையில் நம்முடைய அறிவு 
கொஞ்சம் விசாலமானால் 
அது வரவேற்க வேண்டிய விஷயம்தான்.

அதே நோக்கத்தில் இந்தக் கட்டுரையில் 
சில கேள்விகள் தரப்பட்டுள்ளன. 
இது நிச்சயமாக Silly, useless, 
time waste என்ற வரிசையில் 
இருக்காது.

எனக்குச் சுத்தமாக இந்தக் 

கேள்விகளுக்கு 
முதலில் விடை தெரியவில்லை. 
ஆனால் இந்தக் கேள்விகளின் 
பதில்கள் ஒரு புதிய அறிவைக் 
கொடுத்தது. 

அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். 

"By ignorance, the truth is known" 
Henry Suso (1300 - 65) 

இப்போது கேள்விகளுக்குப் போகலாமா?

கேள்வி 1
இந்த உலகத்திலேயே பயங்கரமான 
விலங்கு எது?

Thursday, August 29, 2013

பார்கின்ஸன்ஸ் வியாதி (Parkinson's Disease)



இது மருத்துவ சம்பந்தமான 
கட்டுரையானதால் ஒரு மறுப்போடு 
(disclaimer) ஆரம்பிக்கிறேன். 

காமெடி நடிகர் விவேக், ஒரு படத்தில் 
தன் காதலிக்கு கான்ஸர் வியாதி 
இருப்பதாகத் தவறாகப் புரிந்து
கொண்டு (குழப்பம் அந்தக் காதலியின் 
ராசி - கடகம், அதாவது cancer). 
தன் நண்பனிடம் இவ்வாறாகப் புலம்புவார்.

"கான்ஸர் என்ற வியாதி, குணப்படுத்த 
முடியாது என்பதையே நான் சினிமா 
மூலம்தான் தெரிந்து கொண்டேன்" 
என்பார். நான் அவ்வளவு 
"ஞானசூனியன்" இல்லை. 
இருந்தாலும் நான் மருத்துவத்தை 
முறையாகப் படித்தவன் இல்லை. 
என்னுடைய மருத்துவ அறிவு புத்தகப் 
படிப்புகள் மூலம் கிடைத்தது. 
அதாவது "ஏட்டுச் சுரைக்காய்" என்று தெரிவித்துக் கொண்டு கட்டுரையைத் தொடர்கிறேன்.

இன்றைய சமுதாயத்தில் மக்கள் 
எத்தனையோ வியாதிகளினால் 
அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 
புதிது புதிதாக வியாதிகள், புதிது புதிதாக மருந்துகள். ஆட்கொல்லி என்று 
சொன்ன வியாதிகள்- காலரா, 
டபுள் நிமோனியா, சுலபமாகக்  குணப்படுத்தப்படுகின்றன. 
மருத்துவ விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். 
அப்படியிருந்தும் சில வியாதிகளின் 
காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்க 
முடியாமல் இருக்கின்றன. 
அப்படிப்பட்ட வியாதிகளில் ஒன்றுதான் "பார்கின்ஸன்ஸ்" வியாதி. 
இந்த வியாதியைப் பற்றி விவரமாக 
மக்களுக்கு எடுத்துச் சொல்லிய 
ஆங்கில நாட்டு James Parkinson 
என்பவரின் பெயரையே இந்த வியாதிக்குச் சூட்டிவிட்டார்கள்


















இவர் 1817ஆம் ஆண்டு 
Essay on the Shaking Palsy என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். 
அதற்குப் பிறகுதான் இந்த வியாதியைப் 
பற்றின ஆராய்ச்சிகள் வெகுவாக 
நடந்தன - நடந்து கொண்டிருக்கின்றன. 

முதல் கேள்வி - 1817க்கு முன் 
இந்த வியாதி இருந்ததா? 
இருந்தது. 
அதற்கான விளக்கங்கள் 
இதோ-

Monday, August 19, 2013

என் சகோதரியின் மறைவு - சில நினைவுகள்


        மீனாட்சி தியாகராஜன்-(1926-2013)

என் அக்காவின் உடல்நிலைபற்றி 
போன வாரம் குறிப்பிட்டிருந்தேன். 
கடந்த திங்கட்கிழமை (12.08.2013) 
அன்று இரவு மருத்துவமனையில் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். 
ஒரு வாரம் வென்டிலேட்டரில் 
இருந்த அவருக்கு நினைவு திரும்பவேயில்லை. 
2 வாரத்திற்கு முன் விடைபெற்று 
வந்த எனக்கு இந்த முடிவு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 
எதிர்பார்த்த நிகழ்ச்சிதான் 
என்றாலும் (தத்துவரீதியாக அல்ல) கூடப்பிறந்த சகோதரியின் மரணம் 
எந்த வேதாந்த கருத்துகளினாலும் 
ஆறுதல் அடையாது. 
அடையும் - காலப்போக்கில். 
அதுவரை 80 ஆண்டு நினைவுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.










என் சகோதரியினால் ஏற்பட்ட 
மரண சோகம் என்னுடைய  
தனிப்பட்ட சோகம்  . 
அதை மிகைப்படுத்தி உங்கள் மனநிலையைச் சோகப்படுத்துவது 
என் நோக்கமில்லை.

இந்தச் சோக நிகழ்ச்சியின் 
தொடர்பாக என் மனதில் தோன்றிய 
சில எண்ணங்கள் என்னைச் சங்கடப்படுத்திகொண்டிருக்கின்றன. அவற்றை  உங்களுடன் 
பகிர்ந்துகொள்ள ஆவல்.

அதற்குமுன் என் அக்காவைப் 
பற்றி ஒரு சில வார்த்தைகள் - 
என் அஞ்சலியாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்.

என் அக்காவின் பெயர்-மீனாட்சி.
பிறந்த ஊர்-திருநெல்வேலி டவுன் . 
பிறந்த தேதி-22.07.1926. 
மாதம் - ஆடி.
நட்சத்திரம்-மூலம்.