Friday, September 13, 2013

விடை தெரிந்திருக்க வாய்ப்பில்லாத சில பல கேள்விகள்



யானைக்கு நீந்தத் தெரியுமா?
பச்சோந்தி Backgroundக்கு 

ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளுமா?
நமக்கு எத்தனை உணர்வுகள் 
(senses) உண்டு?

இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் 
விடைகள் இருக்கிறதா?

விடை தெரியவில்லை என்றால் 
தப்பில்லை; 
தைரியமாக, 
‘கற்றது கை மண் அளவு; 
கல்லாதது உலகளவு’ என்ற 
போர்வையில் உங்கள் அறியாமையை 
மறைத்துக் கொள்ளலாம். 
ஆனால், உங்களுக்குள் இந்த மாதிரி கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள 
ஒரு ஆவல் (curiosity) இருக்கிறதா? 
அந்த ஆவல் இருந்தால் நீங்கள் 
நிச்சயமாக ஒரு மனிதப் பிறவிதான். 
ஏனெனில்,மனிதப் பிறவி ஒன்றுக்குத்தான் 
curiosity என்ற 4ஆவது பரிமாணம் 
இருக்கிறது. 
மற்ற 3 பரிமாணங்கள்—
உணவு, பாலியல், தங்குமிடம் 
(food, sex, shelter). 
இந்த மூன்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானவை. 

கழுதைக்குக் கற்பூரத்தின் வாசனை 
தெரிய வேண்டிய அவசியமில்லை. 
அதைப் பற்றி அதற்கு ஆவலும் 
கிடையாது அவசியமும் கிடையாது.

ஆக, மனித இனத்திற்கே உரியதான 
இந்த curiosity ஆவல்தான் 
மனித வாழ்க்கையை மேம்படச் செய்கிறது. 
அந்த ஆவல்தான், மனிதனைக் கேள்வி 
கேட்கத் தூண்டுகிறது.

‘கேள்வி கேட்டால்தான் 

தெளிவு பிறக்கும்.’  
இது சான்றோர் வாக்கு.

பெரிய தத்துவக் கேள்விகளிலிருந்து-
வாழ்க்கை என்பது என்ன? 
மரணம் என்றால் என்ன? 
உப்புசப்பில்லாத கேள்விகள்வர-
ரஜினிகாந்தின் காலை உணவு என்ன?, 
சினிமா நடிகை எத்தனை விவாகரத்துகள் செய்திருக்கிறாள்? 
என்று தினசரி ஆயிரக்கணக்கான 
கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான 
விடைகளும் தேடப்படுகின்றன.

இன்றைய டிஜிடல் உலகம் இந்த 

ஆர்வத்தை நன்றாகவே வளர்த்துவருகிறது.

"Who wants to be a millionnaire" 
‘Master mind’, ‘Jeopardy’, 
‘நீங்களும் கோடிஸ்வரர் ஆகலாம்’ 
‘Jack pot’ என்று 
தினசரி ஏதாவது டி.வி. சேனலில் 
Quiz Programme நடத்தி 
லட்சக்கணக்கான மக்களைக் 
கட்டிபோட்டு வைக்கிறார்கள்.

இந்தக் கேள்விகள் வாழ்க்கைக்கு 
அவசியமா?

இவற்றுக்கு  விடை தெரியாததால் 
சொர்க்கத்தை இழந்துவிடுவோமா? 
என்று கேள்விகள் கேட்காமல் 
இதை பொழுதுபோக்காகக் கருதி 
அந்த முறையில் நம்முடைய அறிவு 
கொஞ்சம் விசாலமானால் 
அது வரவேற்க வேண்டிய விஷயம்தான்.

அதே நோக்கத்தில் இந்தக் கட்டுரையில் 
சில கேள்விகள் தரப்பட்டுள்ளன. 
இது நிச்சயமாக Silly, useless, 
time waste என்ற வரிசையில் 
இருக்காது.

எனக்குச் சுத்தமாக இந்தக் 

கேள்விகளுக்கு 
முதலில் விடை தெரியவில்லை. 
ஆனால் இந்தக் கேள்விகளின் 
பதில்கள் ஒரு புதிய அறிவைக் 
கொடுத்தது. 

அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். 

"By ignorance, the truth is known" 
Henry Suso (1300 - 65) 

இப்போது கேள்விகளுக்குப் போகலாமா?

கேள்வி 1
இந்த உலகத்திலேயே பயங்கரமான 
விலங்கு எது?

ஆச்சரியம்! ஆனால் உண்மை.
நமக்கெல்லாம் ரொம்ப ரொம்பப்  
பரிச்சயமான நபர்தான் அவர், 
sorry,அவள்.
ஆம். பெண் கொசுதான் 

உலகத்திலேயே பயங்கரமான 
விலங்கு.

இதுவரை இறந்த மனிதர்களில் 

பாதிக்கு மேல் பெண் கொசுவினால் 
தங்கள் மரணத்தை சந்தித்திருக்கிறார்கள். 
(ஆண் கொசு பாவம் - சாது.)

















Fatal diseases (மரண வியாதிகள்) 
என்று சொல்லப்படும் - மலேரியா, 
மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல், 
யானைக்கால் வியாதி, etc...etc.. 
பெண் கொசுவின் கைங்கர்யம். 
ஒரு கணக்குப்படி பெண் கொசுவினால் 
12 விநாடிகளுக்கு  ஒரு நபர் இறக்கிறார். 
பெண் கொசு தான்  உறிஞ்சிய ரத்தத்தை, தண்ணீரில், தான் இட்ட முட்டைகள்  
வளர்ச்சிபெற, உபயோகிக்கிறது.

பெண் கொசுக்களை ஈர்ப்பது - 
ஈரப்பசை, கார்பன் டை ஆக்ஸைடு, 
உடம்பில் உள்ள சூடு. 
வியர்வையுடன் உள்ள நபர்களையும் 
பிரசவ நிலையில் உள்ள பெண்களையும் 
பெண் கொசுக்கள் அதிகமாகவே 
விரும்புகின்றன.

இவ்வளவு ஆபத்தான பெண் 

கொசுக்களைப் பற்றி இன்னும் 
இரண்டு கேள்விகள்.

கேள்வி 2
அரிப்பு வந்த பிறகுதான் நாம் 

கொசுக்கடியை உணர்கிறோம், ஏன்?

கொசு கடிக்கும்போது நமக்கு 

அது தெரியாததற்குக் காரணம் 
இயற்கை கொடுத்த வரப்பிரசாதம். 
பெண் கொசுவிற்கு அவசரமாக 
"வந்தோம் கவிழ்த்தோம்" 
என்ற பாலிஸி கிடையாது. 
மனிதனுடைய தோலில், 
தன் 6 கால்களையும் வைத்து 
ஒரு நிமிடம் உட்கார்ந்து கொள்ளும். 
கொசுக்கள் ரொம்ப light. 
அவற்றின்  
கடிக்கும் டெக்னிக் ரொம்ப 
தேர்ச்சி பெற்றது. 
5 நிமிடம் உட்கார்ந்தாலும் 
மனிதனால் உணரப்படுவதில்லை. 
கொசு தன் "கடி வேலையை" 
ஆரம்பிக்க நினைக்கும்
போது தன்னுடைய கூர்மையான 
நகங்களை (lancets) தோலில் 
அழுத்தி ஒரு நிமிடம் 
மனித ரத்தத்தை உறிஞ்சுகிறது. 
அதன் வாய்க்கு lubrication 
அதனுடைய எச்சில்தான். 
3 நிமிடம் ரத்தத்தை உறிஞ்சுகிறது-
அதன் வயிறு வெடிக்கும்வரை. 
அந்த வேலை முடிந்தவுடன் 
முட்டைகள் இடும் பணியைச் 
செவ்வன செய்யப்  பறந்துவிடுகிறது. 
உலகத்தார் பெருமூச்சு விடலாம் 
"கொசுக்கள் ,endangered species 
ஆகாது" என்ற நினைப்பில்.

கொசு போன பிறகு வெகு 

நேரத்திற்கு அப்புறம்தான் 
நமக்கு ஒரு உணர்வு ஏற்படும். 
அது கொசுக்கடியினால் அல்ல. 
அது விட்டுச் சென்ற எச்சிலினால். 
அதில் anticoagulant compounds 
இருக்கின்றன. அதுதான் சின்னக் கொப்புளங்களையும் அரிப்பையும் உண்டுபண்ணுகின்றன.

கேள்வி 3
ஏன் பெண் கொசுக்கள் மனித 

ரத்தத்தைக் குடிக்கிறது? 
ஆண் கொசுக்களின் 
ஆகாரம் என்ன?

















கொசு இனத்திற்கு முக்கியமான 
உணவு பூக்களிலிருக்கும் nectar (தேன்). 
இந்தத்  தேன், glycogen என்ற சக்தியாக மாற்றப்படுகிறது. 
இதன் சக்தி கொசுக்கள் உடனடியாகப் 
பறக்க உதவிசெய்கிறது. 
கொசுக்கள் உடலில் fat-body 
என்ற அவயவம் இருக்கிறது. 
இது சக்கரையை தேக்கிவைக்க 
உதவுகிறது.

ஆண் கொசுக்களுக்கு ஒரு 

திருப்தியான மனசு. 
தேன் கிடைத்தால் அவைகளுக்குப் 
போதும். மேலும்,ஆண் கொசுக்களுக்கு 
மனிதத்  தோலை ஊடுருவச் செய்யும் 
biting mouth part கிடையாது.

பெண் கொசுக்களுக்குக் கடிப்பதற்கான 
வாய் உறுப்புகள் இயற்கையாகவே 
அமைந்துள்ளன. 
அவற்றின்  முக்கியமான 
வேலை, முட்டை இடுவது. 
சில பெண் கொசுக்களின் 
வர்க்கத்திற்கு நல்ல ருசியுள்ள 
fresh blood supplement 
சாப்பிடாவிட்டால் முட்டை இடும் 
சக்தி கிடைப்பதில்லை. 
கொசுக்களின் அவயவங்கள் ரத்தத்தில் 
இருக்கும் lipids என்ற பொருளை 
இரும்புச்  சத்தாகவும், புரதச்  சத்தாகவும் மாற்றுகிறது.

ரத்தம் சாப்பிடாத கொசு 

5லிருந்து 10 வரை முட்டைகள் இடும். 
கொஞ்சம் blood group O கிடைத்தால் 

பெண் கொசு 200 முட்டைகள்

வரை இடும். 

நமக்கு இந்த ரத்த இழப்பு 

ஒரு "கொசுக்கடி". ஆனால் அவற்றுக்கு  

இது ஒரு விருந்து


நாள் முழுவதும் கொசு வேலை 
செய்வதில்லை. சாயந்திரம் 
1லிருந்து 2 மணி நேரம்வரைதான் 
வேலை. 
கோயம்புத்தூர்காரர்களைக் 
கேட்டுப்பாருங்கள். 
5.55க்கு எல்லார் வீட்டிலும், 
எல்லா  வேலையும் "பந்த்" 
ஒரே வேலை - ஜன்னல்களை 
மூடுவதுதான். 
ஏனெனில் 6 மணிக்கு 
கொசு அம்மையார் 
தன் படையுடன் தாக்குவதைத் 
தடுக்க.

அடுத்த தடவை கொசுவைப் 

பார்த்தால் கொஞ்சம் 
மரியாதையாக 
நடந்து கொள்ளுங்கள்.

கொசுவைப் பற்றித்  

தெரிந்துகொண்டது 
போதும் என்று நினைக்கிறேன். 
மேலே படியுங்கள்...

கேள்வி 4
பழைய கேள்வி.
எது முதலில் வந்தது? 
முட்டையா? கோழியா? 












இதற்கு 2 விடைகள் - 
நீங்கள் யாரென்று பொறுத்து.

நீங்கள் ஒரு creationist என்றால் 
கடவுள்தான் இந்த உலகத்தில் உள்ள 
சகல ஜீவராசிகளையும் படைத்திருக்கிறார் 
என்று நீங்கள் திடமாக நம்புகிறீர்கள். 
கடவுள் முட்டையை மாத்திரம் படைப்பதில் 
ஒரு அர்த்தமும் இல்லை. 
அதனால் கோழிதான் முதலில் 
வந்திருக்க வேண்டும். 
அப்படியே முட்டையை முதலில் 
படைத்திருந்தால் அதை பொரிக்கவும் 
கோழிக் குஞ்சைப் பாதுகாக்கவும் 
கோழி இருக்காதே?

நீங்கள் ஒரு Evolutionist என்றால் 
நீங்கள் நம்புவது 
"எல்லா மிருகங்களும் காலப் போக்கில்  
evolvஆகியிருக்கும். 
கோழியும் கோழி மாதிரி ஒரு 
உருவத்திலிருந்து 
evolve ஆகியிருக்கும். 
ஏதோ ஒரு சமயத்தில் இந்த ஜந்து 
ஒரு முட்டையை இட்டிருக்கும். 
அதிலிருந்து கோழி வந்திருக்கும். 
ஆனால் அது கோழி முட்டையாக இருந்திருக்காது. 
ஏனெனில் கோழி என்று 
ஒன்று இல்லாததால். 
அதனால் முதல் கோழி முட்டை 
முதல் கோழியினால்தான் உருவாக்கப்பட்டிருக்கும்.

எந்த வழி நோக்கினாலும் 

கோழிதான் முதலில் வந்தது. 
முட்டை அப்புறம்தான்.

கேள்வி 5 

யானை,சுண்டெலிக்குப் பயப்படுமா?



 















இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. 
யானைகள் எலி போன்ற சிறு 
விலங்குகளை அலட்சியப்படுத்திவிடும். 
ஏனெனில் யானைகளுக்குக் 
கண் பார்வை மந்தம். 

சாதாரணமாக யானைகள் 

மோப்பத்தினால்தான் மற்ற 

மிருகங்களைப் பற்றி உணர்ந்துகொள்ளும். 

எலிகளின் "நறுமணம்"

"யானைகளை ஈர்க்கும் அளவுக்கு 

இல்லை. 





















யானைகள் பயப்படுவது - 

மனிதர்கள், புலிகள்.

"யானை சுண்டெலிக்குப் பயப்படுகிறது" 
என்பது கிரேக்கர்கள் கட்டிவிட்ட 
ஒரு கதை.

இன்னோரு தமாஷான கதை.

ஒரு ஊரில் நிறைய சுண்டெலிகள் 

இருந்தன. அவற்றை  ஒழிக்கப்  
பூனைகளைக் கொண்டுவந்தார்கள். 
பூனைகள் அதிகமாகிவிட, 
நாய்களைக் கொண்டுவந்தார்கள். 
நாய்கள் அதிகமாக, எருமைகளை வளர்த்தார்கள். 
எருமைகள் பெருகிவிட, 
அவற்றை  அடக்க யானைகள் 
கொண்டுவரப்பட்டன. 
யானைகள் அதிகமானதால் 
அவற்றைப் பயமுறுத்தி விரட்ட 
சுண்டெலிகள் கொண்டுவந்தார்கள்.

மேலே சொன்னபடி இவை 

எல்லாம் கதை.
நம்ம ஊர் கதைப்படி 
விநாயக பெருமான் சுண்டெலிமீது 
ஏறி உட்கார்ந்துதானே 
ஊர்வலம் வருகிறார். 
அவர் எப்படி சுண்டெலிக்குப் 
பயப்படுவார்?




















கடைசியாக யானை பற்றி சில தகவல்கள்:














யானைகளுக்கு "Pachyderm" 
என்று பெயர். 
அதாவது thick skinned — 
எருமை கொஞ்சம் மூச்சுவிடலாம். 
ஏனெனில் இதுவரை 
thick skinned  
என்று ஒருவரைத்  திட்ட 
எருமை மாட்டுத்  
தோல் என்றுதான் 
சொல்லிவந்திருக்கிறோம்.

யானை ஒரு நாளைக்கு 

300லிருந்து 500 பவுண்டுவரை 
சாப்பிடுகிறது.

ஒரு யானையின் எடை  

5000 - 14000 பவுண்டுகள். 
யானையின் தும்பிக்கையில் 
40,000 தசைகள் இருக்கின்றன. 
ஒரு சின்ன நாணயத்தைக்கூட 
அது எடுக்க முடியும். 

உலகில் உள்ள எல்லா விலங்குகளிலும் 
யானையின் மூளைதான் பெரியது. 
மனித மூளையைவிட 
4 மடங்கு பெரியது.

இன்னோரு myth யானை 

ஒருபோதும் மறக்காது. 
யானைக்கு எதிரி- மனிதன்தான். 

எல்லாப் பாலூட்டிகளைப் போல் 
அவசியம் ஏற்பட்டால் யானை 
நன்றாகவே நீந்தும்.

கேள்வி 6

மீன் தண்ணீர் குடிக்குமா? 

நிச்சயமாக—













ஆனால் அது நன்னீரை  
எடுத்துக்கொள்ளும் முறை 
OSMOSIS. 













தண்ணீர் மீனுடைய தோலில் 
இருக்கும் சிறு துவாரங்கள் மூலம் 
தண்ணீர் அதன் உடம்பில் கசியும். 

உப்பும் நீரும் சேர்ந்த கலவை 

மீன் தோலில் இருக்கும் 
semi-porous membrance 
மூலம் செல்வதுதான் 
OSMOSIS.

மீன் உப்புத்  தண்ணீரில் இருந்தால், 
கடல் தண்ணீர் மீனின் உடலில் 
இருக்கும் உப்பைவிட அதிகம் உப்பு 
உள்ளதாக இருக்கும். 
OSMOSIS மீன் உடம்பில் இருக்கும் 
தண்ணீரை வெளியே தள்ளிவிடும். 
அதனால் அந்த இழப்பை ஈடுகட்ட 
மீன் அடிக்கடி தண்ணீர் சாப்பிடும்.

நன்னீரில்  இருக்கும் மீனுக்குத் தண்ணீர் 
சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. 
ஏனெனில் நன்னீரில்  மீனில் இருக்கும் உப்பைவிடக்  குறைவான உப்பு இருக்கிறது. 
மீன் வாயைத் திறக்கும்போது 
கொஞ்சம் தண்ணீர் உள்ளே போகும்.

கேள்வி 7
நமக்கு எத்தனை உணர்வுகள் 
(senses) உண்டு?

குறைந்தது 9

நமக்கெல்லாம் தெரிந்தது 
5
பார்ப்பது (sight), 
கேட்பது (hearing), 
ருசிப்பது (taste), 
முகர்வது (smell),  
உணர்வது (touch).

இதை முதலில் தொகுத்தவர் - 

அரிஸ்டாடில்.
மேலே சொன்ன 5 உணர்வுகளைத் 

தவிர இன்னும் நான்கை விஞ்ஞானிகள் 
சொல்கிறார்கள். 

1. Thermoception - 

the sense or absence 
of heat on our skin. 
தோலில் இருக்கும் சூட்டை 
உணர்வது.

2. Equilibrioception - 
Our sense of balance. 
நாம் ஒரு ஸ்திர நிலையில் இருப்பது. 
நம்முடைய உட்காதுகளில் இருக்கும் 
திரவம் கலந்த cavities.

3. Nociception, the perception 
of pain from the skin, joints etc.. 
நம்முடைய தோலிலும் மூட்டுகளிலும் 
உண்டாகும் வலி.

4. Proprioception or 

body awareness. 
நாம் பார்க்காமலேயே நம்முடைய 
தேக உறுப்புகளைப் பற்றின அறிவு.

உதாரணத்திற்கு, கண்கள் மூடிக்கொண்டு 
காலை ஆகாயத்தில் அசையுங்கள். 
கண் மூடியிருந்தாலும் தேகத்திற்கு 
உண்டான உறவை உங்களால் 
உணர முடியும். 
இன்னும் சில விஞ்ஞானிகள் 
மனிதனுக்கு 21 உணர்வுகள் 
இருப்பதாக சொல்கிறார்கள். 
பசி, தாகம், ஆழம், மொழி, 
கலர் etc....

கேள்வி 8
பச்சோந்தி (chameleon) 

பின்னணிக்கு ஏற்ப (
background) நிறத்தை 
மாற்றிக்கொள்ளுமா?
நிச்சயமாக இல்லை. 
ஒருபோதும் செய்யாது. 
அது ஒரு myth. 












பொய் என்றுகூடச்  சொல்லலாம். 
நிறங்களை மாற்றிக்கொள்கிறது 
என்பது உண்மை. 
அதன் emotional stateஐ 
பொறுத்து மாற்றிக்கொள்ளும். 
பயந்தால் பச்சோந்திகள் நிறத்தை மாற்றிக்கொள்ளும். 
இன்னொரு பச்சோந்தியுடன் 
சண்டை போடும்போது 
மாற்றிக்கொள்ளும். 
வெளிச்சம், 
temperature மாற்றங்கள் 
போதும் நிறத்தை மாற்றிக்கொள்ளும்.

பச்சோந்தியின் தோல் பல தரப்பட்ட 
layersகளால் ஆனது. 
இந்த layerல் உள்ள செல்களில் 
வெவ்வேறு கலர் pigments 
இருக்கின்றன. 
பலத்தரப்பட்ட வெளிச்சத்தினால் 
இந்த கலர் மாற்றம் ஏற்படுகிறது.
பச்சோந்தியின் நிற மாற்றங்களை
தெரிந்து கொள்ள விருப்பமுள்ள்வர்கள்
கீழே உள்ள லிங்கை தட்டவும்




மேலே கொடுத்திருக்கும் கேள்விகள் 
ஒரு உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன . 
கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் 
அதற்கு ஒரு வாழ்நாள் போதாது. 
உலகத்தில் உள்ள எத்தனை 
ஜீவராசிகள் இருக்கறதோ, 
உலகத்தில் எத்தனை 
விதமான சப்ஜக்ட்ஸ் இருக்கிறதோ எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள 
கேட்கப்பட வேண்டிய கேள்விகள் — 
infinity, அதாவது முடிவில்லாதது. 
படிக்க ஆர்வம் உள்ளவர்கள் 
உங்கள் ஊர் நூலகத்திலேயோ 
அல்லது 
Internetலேயோ பார்த்துத்  தெரிந்துகொள்ளுங்கள். எக்கச்சக்கமான கட்டுரைகள், 
வீடியோக்கள்.

இந்த sample கட்டுரையின் 

ஆதாரம்: 
David Feldman என்பவர் 
தொகுத்து வெளியிட்ட புத்தகங்கள் 
நூலகங்களில் தேட வேண்டுமானால் 
031.02 என்ற பகுதிக்குச் செல்லுங்கள். 
இந்த மாதிரி நெருடலான கேள்விகளை 
அவர் Imponderable, Improbables 
என்று அழைத்திருக்கிறார்.

"Happy Hunting" என்று 

உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

கிளறல் தொடரும்.




-- 

2 comments:

பாலாஜி said...

பல நேரங்களில், புத்தகங்களில் இந்த மாதிரி கேள்விகள் படித்திருந்தாலும், ஒவ்வொரு முறை படிக்கும் போது ஆச்சரியம் குறைவதில்லை. திருநெல்வேலியின் குப்பையை மட்டுமல்ல, எண்ணங்களையும் கிளறிவிடுவதற்க்கு நன்றி!
அன்புடன்
பாலாஜி

tsnagarajan said...

மிக்க நன்றி,பாலாஜி