இது என்னுடைய
100ஆவது கிளறல்.
எங்கேயோ, ஒரு
குரல் கேட்கிறது...
"இது என்னையா, பெரிய சாதனை, அவனவன் 100 நாளில்
100 கட்டுரைகள் எழுதுகிறான்.
2 வருஷத்தில் 100 என்பதற்காக,
இவ்வளவு பெரிய "Build
up."
நியாயமான கேள்வி.
என்னுடையது ஒன்றும் இமாலய
சாதனை அல்ல என்பது எனக்கு
நன்றாகவே தெரியும்.
இருந்தாலும், காக்கைக்குத்
தன்
குஞ்சு பொன் குஞ்சு
அல்லவா?
அது போல்தான்,
நானும் இந்த நிகழ்ச்சியைச்
சந்தோஷமாக நினைவுகூருகிறேன்.
100 என்பது ஒரு Magic Number.
கில்லி, கிரிக்கெட் ஆனாலும்,
டெஸ்ட் கிரிக்கெட் ஆனாலும்,
சென்சுரி, சென்சுரி தானே?
சான்றோர்கள் வாழ்த்தும்போது
"சதமானம் பவதி, சதாயுஷ் புருஷ:"
என்றுதானே சொல்கிறார்கள்!
இரண்டு ஆண்டுகளுக்கு
முன் ஏதோ தமாஷுக்காக,
நானும் வலைப்பூ-blog எழுத
ஆரம்பித்தேன்.
அது
இவ்வளவு தூரம்
என்னைக் கொண்டுவந்து
சேர்க்கும் என்று நினைக்கவே
இல்லை.
நிறைய பேருக்கு நன்றி.
கடவுளுக்கு,
மனைவிக்கு,
என் குடும்பத்தாருக்கு
(நான்
தமிழில் என்ன
எழுதியிருக்கிறேன் என்று
தெரியாமலேயே என்னைப்
பற்றி தம்பட்டம்
அடித்ததற்காக),
என் நண்பன் ராம்,
"க்ரியா" ஆஷா,
மற்றும் என் நல விரும்பிகள்.
நான் 50 ஆண்டுகள்
"மார்கெட்டிங்"கில் இருந்தாலும்
அதன் முதல் பாடமான
"Know
your customer" -
உங்கள் கஸ்டமர் யார்?
யாருக்காக
எழுதுகிறீர்கள்?
என்பதை முழுவதுமாக
மறந்துவிட்டு
இந்தக் கிளறலைத் தொடர்ந்து
வந்திருக்கிறேன்.
எனக்குப் பிடித்தது,
உங்களுக்குப்
பிடிக்கலாம்,
பிடிக்கும் என்ற நப்பாசையில்தான் எழுதிவந்திருக்கிறேன்.
கிளறலின் முக்கிய நோக்கம்
அநேக பேருக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லாத விஷயங்களைச்
சேகரித்து எனக்குத்
தெரிந்த நடையில் சொல்வது.
தெரிந்த நடையில் சொல்வது.
அது நிறைவேறியதா
என்பதை நீங்கள்தான்
சொல்ல வேண்டும்.
என்பதை நீங்கள்தான்
சொல்ல வேண்டும்.
என்வரை, இந்தக் கிளறல்
பணியை ரசித்து எழுதி
வந்திருக்கிறேன்.
பணியை ரசித்து எழுதி
வந்திருக்கிறேன்.
மறுபடியும்,
உங்கள் எல்லோருக்கும்
நன்றி.
இப்போது, கட்டுரைக்குப்
போகலாமா?
இரண்டு வாராங்களாக,
நரகத்தைப்
பற்றி நிறையவே எழுதியாயிற்று.
நரகத்திற்குப் பிறகு
சுவர்க்கம்தானே?
இருட்டுக்குப் பிறகு
வெளிச்சத்தைத்
சுவர்க்கம்தானே?
இருட்டுக்குப் பிறகு
வெளிச்சத்தைத்
தானே எல்லோரும்
விரும்புவார்கள்.
விரும்புவார்கள்.
டான்டே சுவர்க்கத்திற்குச்
சென்றது போல நாமும்
எப்படி
மோட்சத்தை
அடைய முயற்சி செய்ய
வேண்டும் என்பதுதான்
இந்தக் கட்டுரையின் நோக்கம்.
எச்சரிக்கை: நான் பெரிய ஆன்மீகவாதியில்லை.
சமய
சொற்பொழிவாளர்களில்
ஒருவனும் இல்லை.
என்னுடையது எல்லாம்
கேள்வி ஞானம். ஏற்கனவே
படித்திருந்தால்
time passஆக எடுத்துக்
கொள்ளுங்கள்.
time passஆக எடுத்துக்
கொள்ளுங்கள்.
"மோட்சம்" -
இதுதான் மனிதர்கள்
பெற விரும்பும் உயர்ந்த பலன்.
பெற விரும்பும் உயர்ந்த பலன்.